வியாழன், 27 மே, 2010

இந்த கதைக்கு இதுதான் தலைப்பு -IV




சுற்றும் முற்றும்  திரும்பி பார்த்தோம் ....அப்துலை காண வில்லை ...
"டே...அங்க பார்ரா .." ஜோசப் கை காட்டிய திசையில் பார்த்தேன் ..
அப்துல் அலைகளோடு  விளையாடி கொண்டிருந்தான் ...ஜோசப் அவனை நோக்கி நடந்து சென்றான் . 

சரியாக அந்த சமயம் பார்த்து  சங்கர் செல்போன் மணியடித்து .
சங்கர் அதை பார்த்து விட்டு சொன்னான் ...டே வீட்லுல இருந்து கால் ..
சங்கர் செல்போனை காதில் வைத்து கொண்டு  தனியே ஒதுங்கினான்.

நான் தனியாக என்ன செய்வது என்று தெரியாமல் அலைகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன் ..

ஒரிரு நிமிடங்கள் கடந்து இருக்கும்...
ஒரு பேரிரைச்சல்   போல சத்தம் கேட்க்க ஆரம்பித்தது ...

யாரும் கண்டு  கொண்டதாக தெரியவில்லை ...நான் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன் ...  
அடுத்து ஒரு நிமிடம் கடந்து இருக்கும் ....இரைச்சல் அதிகமாக   கேட்க ஆரம்பித்தது ...

அப்போது தான் என்  நினைவுக்கு காலையில் எதோ ஒரு தீவில் பூகம்பம்  என்றும் ...ஆயிரகணக்கான மக்கள் பலி என்ற செய்தி பார்த்தது ஞாபகத்திற்கு வந்தது ....
ஒரு வேலை இது .....
நினைக்கும்    போதே என் உடல் நடுங்க தொடங்கியது..

இரைச்சல் படு பயங்கரமாக கேட்க ஆரம்பித்தது..
அனைவரும் கடலை நோக்கி கண்களில் ஒருவித அச்சத்துடன் பார்த்தனர் .

ஒரு பெண் கண்களை பயத்தில் மூடி கொண்டு தன் கணவனின் தோளில் சாய்வதை பார்த்தேன் ..அந்த பெண்ணை பார்த்தவுடன் என் அம்மாவின் முகம் ஒரு கணம் ஞாபகத்திற்கு வந்து போனது.

சில குழந்தைகள் எதை பற்றியும் கவலை படாமல் கடல் அலை மேல் கால் வைத்து விளையாடி கொண்டிருந்தனர்..

ஒரு சிலர் ஓட ஆரம்பித்தனர்.

சிலர் ஓவென பெருங்குரலெடுத்து கத்த  ஆரம்பித்தனர்.

என் நினைவில் சங்கர்,ஜோசப்,அப்துல் வர சுற்றும் முற்றும் பார்த்தேன் ..

ஒரே கூச்சல் ,அமளி ..யார் எங்கே ....ஒன்றுமே புரியவில்லை ...

மீண்டும் கடலை பார்த்தேன் ...

என் வாழ் நாளிலே பார்த்திராத அதிசய காட்சி அது .....ஒருவேளை நான்  மரண பயம் மட்டும் இல்லாமல் என்னை உணர்ந்த யோகியாய்   இருந்திருந்தால் அந்த காட்சியை ரசித்திருப்பேன்...

ஆனால்  அந்த காட்சியை பார்த்த நொடி என் கால்கள் தரையில் நிற்க முடியாமல் நடுங்கின .கண்கள் வெளிற ஆரம்பித்தன.

வானளாவிய உயர்ந்த அலைகள் பேரிரைச்சலுடன்  கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது ..
அந்த காட்சியை  பார்பதற்கு எதோ 20 ,25  டைடல் பார்க் கட்டிடங்களை ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கி வைத்து வானத்தை  தொட கடல் முயற்சி செய்வது போல இருந்தது .எவனோ அரக்கன் ஒருவன்  பாயை சுருட்டுவது போல கடலை சுருட்டுகிறானோ என்று கூட தோன்றியது.

அந்த கடல் பேரலை முன்னே நான் எங்கோ எறும்பாக இருப்பது   போல இருந்தது .
அப்போது தான் என் ஞாபகத்துக்கு வந்தது ...நான் காலையில்  பாத்ரூம் -ல் உயிர்  வாழ்ந்த  லட்சகணக்கான எறும்புகளை  வாளி நிறைய நீர்   எடுத்து ஊற்றி கொன்றதை .
"அந்த எறும்புகளுக்கு வாளி நீர்  கடல் நீர் போல் அல்லவா இருந்திருக்கும் .."
"ஐய்யோ ....அந்த எறும்புகளும் நான் நெஞ்சம் பதைபதைப்பது போல் அல்லவா துடி துடித்திருக்கும் .."

 அடுத்த நொடி .. யார் இறந்தாலும் சரி நான்  எப்படியும் தப்பி  விடுவேன் என்று என் மனசு நினைத்தது.

"குஞ்சரமடை வெத்துவேட்டு"  ஜோசியக்காரன்  " நீ புண்ணியம் செய்தவன் .உனக்கு ஆயுசு 75"  என்று ஒரு முறை சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.


 அடுத்த நொடி.... பேரலை எனக்கு  முன்னே  பத்து அடிக்கு அருகில் வரும் போது தான்  ..என் நெற்றி பொட்டில் அறைந்தது போல உண்மை நிதர்சனம் புரிய ஆரம்பித்தது ..பிரபஞ்சத்தின் முன் நானும் எறும்பும் ஒன்று தானோ  என்று ஒரு கணம் தோன்றியது .
பிரபஞ்சத்தின் முன்னே நான் ஆண்மை அற்று போனவனாய் அந்த நொடி அடங்கினேன் ..


அடுத்த நொடி ..






கரையில் பல அடையாளங்களாய் உணரப்பட்ட நான் ...
இப்போது உடல், மனம் அற்ற நிலையில் ...எல்லா அடையாளங்களும் மூழ்கி போய்...
வெற்று மொளனமாய்  .. சாட்சியாய் ..ஆழ்கடல் அமைதியாய்...வெறும் நான் நானாய் ....

புதன், 26 மே, 2010

இந்த கதைக்கு இதுதான் தலைப்பு -III





"என்னடா மாப்ள ...வீடு 'கதவை தொற..காற்று வரட்டும்' கணக்கா தொறந்து கிடக்குது .."

"அப்துல் வந்து இருப்பான்டா.."

"அது தானே பார்த்தேன் ...உன் ரூம்ம தொறந்து போட்டுருந்தா கூட ஒரு நாயும்  வராதே.."

"அது எனக்கும் தெரியும் மச்சான் .."

"மாப்ள... evening எங்கயாவது போலாமாடா..மெரினா பீச்.."

"வானம்  மேக மூட்டமா  இருக்கேடா..மாயாஜால் போலாமா.."

"மாப்ள.. மாயாஜால் போனா  250  ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கனுமடா .."

"சரி ..அப்ப பீச்சுக்கே போலாம் .."

அப்துல் தூங்கி கொண்டு இருந்தான் ...நாங்கள் மூவரும்   ஒரு குட்டி தூக்கம்   போட்டோம் .
 நாலு மணிக்கு கெளம்ப ஆயத்தம் ஆனபோது அப்துலும் எங்களோடு சேர்ந்து கொண்டான்.



மெரினா பீச் வந்து சேர்ந்த போது மாலை ஐந்து மணி.

"என்னடா  சனிக்கிழமை கூட எறும்பு கூட்டம் மாதிரி இவ்வளவு கூட்டம் மொஞ்சுது..இத்தனைக்கும்  வானம் மழை வர்ற மாதிரி இருந்தும் .." இது ஜோசப்.

"நான் வரணு யாருக்கும்  சொல்லாமையே இவ்வளவு  கூட்டமா .."-இது சங்கர்

 எம். ஜி.ஆர்   சமாதி யில் சிலர் இன்னமும் அவர் கட்டியிருந்த வாட்ச் ஒடுவதாக சொல்லி காது வைத்து கேட்டு கொண்டிருந்தனர் .
அதை பார்த்து விட்டு சொன்னேன் .."இவனுக எல்லாம் எப்படா    திருந்துவாணுக..."

"நீ தூங்கறப்ப எப்ப குறட்டை  போடறதை  நிறுத்தரையோ அப்பா இவங்களும் திருந்தீருவாக .."  -இது ஜோசப்
"டே..ஜோசப் இன்னா வரைக்கும் அமைதியா தானே வந்தே ....நான் கடனா வாங்கிட்டு உனக்கு குடுக்காத 30 ரூபாய் கீது உன் ஞாபகத்துக்கு வந்துட்டுச்சா ..." 
"5  ரூபாய் கொடுத்தா கூட அது உன்கிட்ட இருந்து  திரும்ப வராதுன்னு எனக்கு தெரியும் ....."

கொஞ்ச தூரம் பேசிக்கொண்டே நடந்த போது..

"டே..அங்க பார்றா ... மோகன சிலை மாதிரி அவ  நடந்து வர்ற அழகை .."-இது கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில்  நான்.

சங்கர் நான் கை காட்டிய திசையில் பார்த்துகொண்டு  பின்னந்தலையில் ஒரு அடி வைத்து   கேட்டான் .

"டே மச்சா ..இப்ப ஒரு கவிதை மாதிரி ஒரு வோர்ட் சொன்னயே  அதை திரும்ப சொல் "

"நான் சாதாரணமா தானே சொன்னேன்.. "

"அதை தான் சொல் .."

"மோகன சிலை மாதிரி..."

"கொய்யால...எங்கடா இதை படிச்ச.."

"எப்பவோ எங்கயோ படிச்ச ஞாபகம் .."

"ஆமா எதோ  ப்ளாக் ஒன்னு கிரியேட் பண்ணிட்டு  கவிதை கற பேர்ல எல்லாரையும்  டார்சர் பண்ணறயாமே?"

"யார் சொன்னா.."

"ஜோசப் தான் .."

"சரி வேற என்ன சொன்னான்? "

 "உன் தொல்லை தாங்காம அதை படிச்சு பார்த்தானாம் .எதோ பிச்சகாரி பழைய சிக்கன் பிரியாணி சாப்பிட்டு  சேராம வாந்தி எடுத்தது   மாதிரி இருந்ததாமே .."

"இம் .."         ' ம்.. control  urself' -இது என் உள் மனம்.

 "ஆமா ..உன் ப்ளாக் பேர் என்னடா மச்சா .. "

"தனி காட்டு ராஜா"

"கொய்யால ...எந்த காட்டுகட  நீ ராஜா ...ராஜா காலமெலாம் போயி 150 வருஷம் ஆச்சு தெரியுமா? "

'ம்.. control  urself' -இது என் உள் மனம்.

"அது ஒன்னு மில்லடா மாப்ள ...எங்க சொந்த ஊருல  ஒரு மூணு சென்ட் இடம் (காடு) நான் வாங்கினேன் ...அத என் பேருல நான் register பண்ணிட்டேன்.அதுல இருந்து நான் "தனி காட்டு ராஜா".

"இத சொல்ல உனக்கு வெக்கமா இல்ல .."

"வெக்கபட்டு என்ன ஆக போவுது சொல்லு .."

"சரி ..நீ உலகம் புரிஞ்சவன்  தான் ...ஒத்துகறேன் .."

"சரி எவனாவது உன் போஸ்ட்டுக்கு   கமெண்ட் போடறானா..."

"அட நீ வேற ...ஒரு பயலும் மதிக்க கூட மாட்டேன்கறாணுக மாப்ள  .."

"சரி அப்ப ப்ளாக்க  close  பண்ணீற வேண்டியது தானே மச்சான் .."

'ம்.. control  urself' -இது என் உள் மனம்.

"எனக்கு கமென்ட் போடாட்டியும் பரவாயில்லை ....பொண்ணுக பேர்ல ப்ளாக் நேம்  பார்த்துட்டா   போதும் ...முதல் போஸ்ட்டுக்கே  கமென்ட் போட ஆரம்பித்து விடறாணுக..அத தான் மாப்ள  என்னால தாங்கிக்க முடியல .."

"அவுங்க நல்லா எழுதி இருப்பாங்க  மச்சா ..உன்னை மாதிரி இல்லை .." 

'ம்.. control  urself' -இது என் உள் மனம்.

"நீயும் எதாவது பொண்ணு  பேர்ல ப்ளாக் ஆரம்பிக்க    வேண்டியது தானே மச்சா.."

"நான் ஆம்பள சிங்கம்டா .."

"இப்ப எந்த   ஜூ -ல மச்சா  உன்னை வச்சு இருக்காக..."

'ம்.. control  urself' -இது என் உள் மனம்.

"சரி காதல் கவிதை எல்லாம் எழுத தபு சங்கர் மாதிரி அருமையான கவிஞர்கள் இருக்காகளே ..நீ ஏன் மச்சா ரிஸ்க் எடுத்துகறே.. "

"அவருடைய பசிக்கு அவர் சாப்பிடறார் ....என் பசிக்கு நான் சாப்பிட வேணாமா ."

"பரவாயில்லைடா மச்சா  ..சமாளிக்கற ...."

இப்படியாக பேச்சு போய்கொண்டிருந்த போது..எங்கள் பேச்சை கேட்டு கொண்டிருந்த ஜோசப் கேட்டான் ..

"டே ..அப்துல் எங்கடா ..."

                                                                                                                                              -தொடரும்

செவ்வாய், 25 மே, 2010

இந்த கதைக்கு இதுதான் தலைப்பு -II




நான் எதிர் பார்த்தது போல் அல்லாமல்  சங்கர்  சிஸ்டத்தில்  எதோ pdf டாகுமென்ட் படித்துக் கொண்டிருந்தான் . என்னை பார்த்தவுடன்   கேட்டான் .

"என்னடா மச்சான் இந்த பக்கம் ..." -இது சங்கர்.

"சும்மா என் கேர்ள் பிரன்ட்ட பார்க்க இந்த பக்கமா வந்தேன் மாப்ள ,அப்படியே உன்னையும் பார்த்துட்டு போலாமுனு வந்தேன்."-இது நான்.

"மச்சான் சொல்லேறேனு  கொவுசுச்காத...உனக்கு   வெக்கமே கிடையாதாட ?"

"என்னடா இப்படி கேக்கற ..?"

"நீ colleage  படிக்கறப்பவே இரண்டு ,மூணு பொண்ணுககிட்ட வழிஞ்சு பார்த்த ...எவளுமே உன்ன மதிக்கல ...இப்ப மட்டும் எப்படி ?"

"அது வந்து..."

"சரி..உன் கேர்ள் ப்ரண்ட   பார்க்க ஜோசப் எதுக்கு ..?"

"அது வந்து..."

"சரி விடு.. மச்சா...சைடுல வேற  வேலை ஏதும் பார்க்கலையே ..?"

 "என்ன மாப்ள.. ரூம்ல நீ மட்டும் இருக்கற ...அப்துல் எங்க?"

"அவன் கடைக்கு போயிருக்கான். "

"உன் ரூம்ல மீசைய   ஒழுங்கா  ட்ரிம் பண்ண தெரியாத   சண்டியன் ஒருத்தன் இருப்பானே மாப்ள..அவன் எங்க..?"

"அவன் இப்ப மீசைய எடுத்துட்டாண்டா.."

"அவன மீசையோட பார்த்தாவே   சகிக்காதேடா...எதுக்கும் வண்டலூர் பக்கமா போக வேண்டாமுன்னு நான் சொன்னதா சொல்லு ..ஆமா ஏன் மீசைய எடுத்தான் ..."

"அவனோட  lover -க்கு மீச பிடிக்காதாமா..."

"சரி அவளுக்கு பிடிக்கலனா  ...அவளோட மீசைய எடுத்துக்க சொல்ல வேண்டியது தானே ..."

"புரியுதாட மச்சான் ...உனக்கு  ஒரு லவ்வர்    இல்லன்னு கடுப்பலதானே   இப்படி சொல்லற ..."

"பொதுவா சொன்னேன் ..."

"சரி மச்சான் ...சாப்பட போலாமா ...."

"எங்கடா மாப்ள  ...அஞ்சப்பருக்கா ...."

"சரி நீ pay  பன்றதா இருந்தா சொல்லு ...அங்கேயே போலாம் ..."

"அங்க A /C  மட்டும் தான் கூலா இருக்கும் மாப்ள ...ஆந்தரா மெஸ்-க்கு போலாம் வா ...."

"எனக்கு தெரியுமடா  மச்சான் ...நீ பர்சுல 100 ரூபாய்க்கு  மேல வச்சு இருக்க மாட்டேனு ....."

வீட்டை லாக் செய்து விட்டு  அருகில் இருந்த ஆந்தரா மெஸ்ஸை நோக்கி மூவரும் நடந்தோம் .

50 ரூபாய்க்கு ஒரு unlimited meals   -யை  ஒரு கட்டு கட்டிவிட்டு   வீ ட்டுக்கு -க்கு  மூவரும் பேசிக்கொண்டே நடை போட்டோம் .
வீடு திறந்து கிடந்தது....
                                                                                                                     -பயணம் தொடரும் ..

திங்கள், 24 மே, 2010

மின்னல் தாக்கி வாலிபர் பலி .




சென்னை ,மே -24 -கடந்த ஒரு வாரமாக தமிழ் நாடு முழுவதும்  மழை பரவலாக  பெய்து வருவது அனைவரும் அறிந்ததே .நேற்று (மே 23 ) சென்னை-யில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்  கூடிய பலத்த மழை பெய்தது . ராமபுரம் பகுதியில் வசித்து வரும் வாலிபர்  ராஜா (எ) ராஜேந்திரன் வயது (21 ),டி.எல் .எப்  ஐ .டி   பார்க்கையும்  ,எஸ்.ஆர். எம்  யுனிவர்சிட்டியையும் இணைக்கும் சாலையில் இரவு பத்து மணி வாக்கில்  மயங்கி கிடந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் மழை ஓய்ந்து இருந்ததாக  தெரிகிறது. அந்த வழியாக சென்ற சிலர் பெரு முயற்சி செய்து அவருடைய மயக்கத்தை தெளிவித்தனர்.மயக்கம் தெளிந்தவுடன் என்ன நடந்தது என்று அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள்   விசாரித்தனர் . அவர் மழை ஓய்ந்த வேலையில் சாலையில் நடந்து வரும் போது அவர் எதிரே ஒரு இளம் பெண் நடந்து வந்ததாக கூறினார் .அந்த பெண்ணின் கண்களை நேருக்கு நேர் பார்த்ததாகவும் ..அப்போது அந்த கண்களில் இருந்த  மின்னல் ஒளி பட்டவுடன் அந்த வாலிபர் மயங்கி
விழுந்ததாக கூறினார்.அந்த நொடி முதல் அந்த வாலிபர் கண் ஒளி மின்னல் பட்டு காதலில் பலி யானதாக தெரிகிறது .இது தொடர்பாக ராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 'கண் ஒளி மின்னல் ' பெண்ணை தேடி வருகின்றனர் .மேலும் இவ்வழக்கு பற்றி சென்னை உதவி கமிசனர்  கூறுகையில் இச் சம்பவத்திற்கு காரணமான பெண் பிடிபடும் வரையில் அழகாக தென்படும் சந்தேகத்திற்கு இடமான  பெண்களின் கண்களை வாலிபர்கள் பார்க்க வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார்.இச்சம்பவம் ராமபுரம் பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கதைக்கு இதுதான் தலைப்பு ..




 காலையில் பத்து மணிக்கு விழிப்பு வந்த போது  மூன்று நாள்களுக்கு முன்னாடியே   நானும் ஜோசப்மும் முடிவு செய்த விஷயம் முதலில் ஞாபகத்துக்கு வந்தது .

அது வேறு ஒன்றுமில்லை ...இந்த சனி கிழமை மாலையில் சங்கருடன் சேர்ந்து கொண்டு நானும் ஜோசப்மும்  மூன்று பேராக மெரீனா பீச்சுக்கு செல்லலாம் என்பதுதான்.

கடந்த ஆறு மாத காலத்தில் மெரீனா பீச்சை சுத்தமாக மறந்து இருந்ததால்  நான் தான் இதை ரெக்கமென்ட் செய்திருந்தேன்.
படுக்கையை விட்டு எழுந்து வெளியே வந்த போது ஜோசப்  பாத்ரூமுக்கு அருகில் நின்று கொண்டு எதோ தனக்கு தானே புலம்பி கொண்டிருந்தான்.


"என்னடா காலங்காத்தால ஜபம்  சொல்லிட்டு இருக்கிறாய்"  -இது நான்.

 "டே, பத்து மணி உங்க ஊர்ல காலங்காத்தாலயா ?" -இது ஜோசப்

"சரிஅத விடு ...விசயத்த சொல்லு .."

"நேத்து மாதிரியே இன்னைக்கும் பாத்ரூம் புல்லா எறும்பா ஊறுதடா" 

"நேத்து மாதிரியே   வாளி நெறைய தண்ணியா மொண்டு ஊத்த வேண்டியது தானே..."

"அத்தன எறும்ப கொல்லறதுக்கு பாவமா இருக்குடா .."

"அநியாத்துக்கு நல்லவனா இருக்கயேடா....நாம தாண்ட பாத்ரூம்க்கும் சேர்த்து வாடகைய இந்த owner  பயலுக்கு அழுவரம்.....எறும்பா தருது ?"

சரி தண்ணிய மொண்டு வா ...மத்தத நான் பார்த்துகறேன் ..

பாத்ரும் முழுவதுமாக தண்ணிய ஊற்றி விட்டு ,அன்றைய நாளை ஒரு நல்ல காரியம் செய்த திருப்தியுடன்  தொடங்கினேன்.

 ஒரு பனிரெண்டு மணி இருக்கும் .
"டே,அப்படியே சங்கர் ரூம்க்கு போயிட்டு  அவனோட பீச்சுக்கு போலாமா" -இது நான்

"நீ மெரீனா பீச்சுகு போலாமுன்னு   தாண்டா மூணு  நாளுக்கு முன்னாடி சொன்ன ....இப்ப  என்னடானா   அவனோட பீச்சுக்கு போலாமானு கேக்கற .." -இது ஜோசப்

"டே ,இப்ப நான் மனுஷனா இருக்கறது   என் கையல இல்ல ...உன் வாயில தான் இருக்கு ...கொஞ்சம் பார்த்து ...."

"சரி விடு ....சங்கர் கிட்ட கேட்டாயா ...அவன் இன்னைக்கு பிரீயானு ....."

"அந்த வெட்டி பய சனி கிழமையானா...நெட்டுல உக்கார்ந்து நமீதா,அனுஷ்கா படத்த பார்த்து ஜொள்ளு விட்டுகிட்டு தான் இருக்கும்.
நாம நேரா அவன் ரூமுக்கே போலாம் வா  "  .

ஆதம்பாக்கத்திலிருந்து  என் பைக்கில் இருவரும் கிளம்பினோம் .வழியில்  திருப்பம் இல்லாவிடில் கூட பைக்கை நிறைய இடங்களில் திருப்பினேன்.
[கதையில் ஒரு திருப்பமும் இல்லை  என யாராவது  கேட்டால்...நான் தான் பைக்கை நிறைய இடங்களில் திருப்பினேனே  என்று சொல்ல தான்] .
"இவன் எல்லாம் ஏன் தான் பைக் ஓட்டுறேன் பேர்வழி  என்று ரோட்டுல போறவன் வர்றவன் உயிரை எடுக்கிறானோ" என்பன போன்ற கமண்ட்டுகள் காதில் விழுந்தாலும் அதை எல்லாம் சட்டை செய்யாமல் வேளச்சேரி விஜயா நகருக்கு அருகில் இருந்த சங்கர்  ரூமுக்கு வந்து சேர்ந்தோம் .
                                                                                                                      -பயணம் தொடரும் ...

திங்கள், 17 மே, 2010

கோலம் ....












நான் போட்ட கோட்டை
தாண்டி செல்வாயா  என்று கேட்டாய்..
ஆமாம் என்று சொன்னேன்  ..
பேசாமல் எழுந்து சென்று விட்டாய்..

சிறிது நேரம் கழித்து வந்தாய் ..
நான் போட்ட கோலத்தை
தாண்டி செல்வாயா  என்று கேட்டாய்..
இல்லை என்றேன் ..
மீண்டும் பேச ஆரம்பித்து விட்டாய் ..

பரிகாரம்


















அன்றொரு நாள்..
உன் திவ்விய அழகை
ஓவியமாக தீட்டிக் கொண்டிருந்தேன்..
கண்களை வரைய  நினைத்தேன்..
மெய் மறந்தேன் ..
தூரிகை கிழே விழுந்தது ..

வேறொரு நாள்   ..
உன்  மோகன  அழகை
சிற்பமாக வடித்து கொண்டிருந்தேன்..
கண்களை செதுக்க ஆரம்பித்தவுடன் 
மெய் மறந்தேன் ..
உளி  கிழே விழுந்தது .. 

மற்றொரு நாள் ..
உன் செளந்தரிய வதனத்தை
பற்றி கவிதை எழுதி கொண்டிருந்தேன் ..
உன் கண்களை பற்றி சொல்ல
நினைத்த போது மெய் மறந்தேன் ..
பேனா கிழே விழுந்தது ..  

இன்று உன்னிடம் கேட்டேன் ..
உன் கண்கள் என் நினைவை
விட்டு செல்ல பரிகாரம் தெரிந்தால் சொல்லேன் என்று
நீ சொல்கிறாய்..
உன் இதயம் என் நினைவை விட்டு   செல்ல பரிகாரம் தெரிந்தால் சொல் ..
நானும் சொல்கிறேன் என்று .......

பதி















                           
கிருஷ்ணனை போல எனக்கும்
'பதி'னாறாயிரம் மனைவிகள் வேண்டும் ..
அவர்கள் அனைவரும் நீயாய் இருக்க வேண்டும் .. 

தேவையில்லாத குறிப்பு: தபு சங்கர் கவிதை யை தழுவி ,எங்கள் ஊர் குட்டி சுவரில் குந்தி(உட்கார்ந்து ) கொண்டு எழுதியது....

வெள்ளி, 14 மே, 2010

படைப்பாளி (எ) படைவியாதிகள்.............




















நெறைய பேர் படைப்பாளி ,படைப்பாளி என்று சொல்லி கொள்(ல்)கிறார்களே ,அப்படி என்ன இவர்கள் படைக்கிறார்கள்??

ஒருவேளை இவர்களுக்கு உடலில் படை வியாதி
இருக்குமோ? அதனால் தான் அப்படி சொல்லி
கொள்கிறார்களோ?

சில இலக்கிய எழுத்து வியாதிகள்,
சினிமா இயக்குனர்கள் ,கவிஞர்கள் இவர்கள்
தங்களை படைபாளிகள் என்று கூவி கொள்கிறார்கள்...
உண்மையில் எழுத்து வியாதிகள்,சினிமா இயக்குனர்கள் ,
கவிஞர்கள் இவர்கள் வாழ்க்கை நிகழ்வுகளை
பதிவு செய்கிறார்கள் ...என்ன.. கொஞ்சம் அறிவுபூர்வமாக,உணர்வுபூர்வமாக
பதிவு செய்பவர்கள் பிரபலம் அடைகிறார்கள் ..


இந்த எழுத்து வியாதிகளுக்கு பேனா,பேப்பர் உருவாக்க தெரியுமா? இல்லை எதையாவது புதிதாக கண்டு பிடித்தார்களா ?

இந்த சினிமா இயக்குனர்கள் ,நிகழ்வுகளை பதிவு செய்ய முக்கியமாக இருக்கும்
காமரா -வை இவர்கள் கண்டு பிடித்தார்களா ?

இவர்கள் மற்றவர்களின் உருவாக்கத்தை பயன்படுத்தி
நிகழ்வுகளை பதிவு செய்கிறார்கள் ,அவ்வளவுதான்.......


யோசித்து பார்த்தால் நாம் அனைவருமே படைப்பாளி தான் ...
குப்பனும் ஒரு பெண்ணும் (மனைவி யாக கூட இருக்கலாம்) சேர்ந்து ஒரு குழந்தையை படைக்கிறார்கள்...

சாதாரண குப்பன்,சுப்பன், கோபாலன்
அனைவருமே படைப்பாளி தான்.
அப்படி பார்த்தால் ஒரு எறும்பு கூட படைபாளிதான்..
ராக்கெட் டெக்னாலஜி -ய கண்டு புடிச்சவன் கூட
தன்னை படைப்பாளி என்று சொல்லி கொள்வதாக தெரியவில்லை ........

அப்புறம் இந்த வெண்ணைகள் மட்டும் தன்னை படைப்பாளி என்று கூவி கொள்வதேன்??
கலை படைப்பாளி என்று சொல்லி கொண்டு மாதம் ஒரு பாராட்டு விழா வேறு!!!
இலக்கிய படைப்பாளி என்று சொல்லி கொண்டு ,இவங்கலுக்கு ஒரு பாராட்டு விழா வேறு!!!


இயல்பாகவே உள்ள படைப்பை கூர்ந்து பாருங்கள் .....
எவ்வளவு உயிர் தன்மையுடன் உள்ளது ...
ஆனால் நம்முடைய (மனிதனுடைய) உருவாக்கத்தை பாருங்கள்... உயரமான கட்டிடத்தை பாருங்கள் ....எங்கே ஜீவன் உள்ளது??

உண்மையான உயிர் தன்மையுடன் உங்களால் படைக்க (குழந்தை உருவாக்கத்தை தவிர) முடிந்தால் மட்டுமே உங்களை படைப்பாளி என்று சொல்லி கொள்ளுங்கள் ............


எதை சொன்னாலும் ஒரு கதை சொல்லி முடிக்கணும்னு எங்க ஊர்ல உள்ள பெரியவங்க (வயசுல மட்டும் ) சொல்லி இருக்காக ..........
அப்பதான் அதை கேக்கறவங்க உருப்படாம போவாங்க -நு சொன்னாங்க ...


ஒரு ஊர்ல பணக்காரன் ஒருத்தன் நாய் வாங்கினானம் வளர்த்தரதுக்கு .
அதுக்கு "இராணுவ வீரன் " -நு பேரு வெச்சானாம் ....


ஆனா அந்த நாய் செத்து போச்சாம்...










ஏன்? அது ஏன்?












































நீதி: நாயுக்கு பேரு முக்கியம் இல்ல ...சோறு தான் முக்கியம் .... புரிஞ்சா சரி ...புரியலனா சாரி ....

புதன், 12 மே, 2010

ஹைக்கூ..



















        

ஒரு முழு மதிக்குள்
இரு முன்றாம் பிறை ...
உன்  நெற்றி
புருவங்கள் ...

திங்கள், 10 மே, 2010

நீ பேசு ...........




















காதல் கவிதை ஒன்று சொல்லேன் என்று

செல்லமாய் என்னை கெஞ்சுகிறாய் ......

நான் எப்படி சொல்வேன்....

நான் காதலில் உள்ளபோது கவிதை தோன்றாது ......

கவிதை தோன்றும் கணமே

காதல் மறைந்து போகிறதே.......

அப்புறம் எப்படி அது காதல் கவிதை யாகும் ??

வேண்டுமானால் ஒன்று செய்

நீ பேசு ...........

வெள்ளி, 7 மே, 2010

கடவுளை பற்றி தர்க்கம் செய்யும் முன் ஒரு வேண்டுகோள் ....















தர்க்கம் என்ற கத்தியை வைத்து கொண்டுள்ள மூடர்களே,குருட்டு நம்பிக்கை மட்டுமே ஆயுதமாக கொண்டுள்ள மூடர்களே,


கடவுளை பற்றி தர்க்கம் செய்யும் முன் ஒரு வேண்டுகோள் .........


இதுவரை எவன் ஒருவனாவது "சுமார் 20 ஆண்டுகள் என் சுய தேடல் மூலம் நான் அறிந்த எல்லா வழிகலிலும் முயன்று பார்த்து விட்டேன் .....கடவுளை என்னால் உணர முடியவில்லை .....கடவுள் என்ற கோட்பாடு பொய்யாகதான் இருக்க வேண்டும் " என்று கருத்து சொல்லி உள்ளானா??


தர்க்க அறிவு கொண்ட முட்டாள்கள் ,பிழைப்புக்காக எதாவது வேலை செய்ய வேண்டியது ....மற்ற நேரங்களில் நெறைய புத்தகங்களை உருட்ட வேண்டியது .........மண்ட கணம் அதிகம் ஆன மாதிரி தெரியும் போது...blog –இல் பதிவு போட ஆரம்பிக்க வேண்டியது ...........


குருட்டு நம்பிக்கை கொண்ட முட்டாள்கள் பற்றி என்னை விட தர்க்க அறிவு கொண்ட முட்டாள்களுக்கு தான் அவரிகளின் மூட தனங்கள் பற்றி அதிகமாக தெரியும் ............




தாயன்பு பற்றி தர்க்கம் செய்து உணர முயற்சி செய்யும் மூடர்களே ...........


தாயை தர்க்கம் என்ற கத்தியால் குத்தி கிழித்து பார்த்து பின் ,இது வெறும் சதை ,தாய் என்ற ஒன்றே இல்லை என தர்க்கம் செய்யும் மூடர்களே,

No No …. அந்த இசம் இந்த இசம் பக்கத்து வீட்டு ஆன்டி இசம் என இசம் கொண்ட மூடர்களே ........

"வெங்காயம் மிக பெரியது" என தினமும் 5 முறை சொல்லி கொள்ளும் குருடர்களே....

கல்லுக்கு அபிசேகம் செய்து அதில் உணர்வை தேடும் கல் நெஞ்சர்களே....
தனக்கு மட்டும் தான் .....உள்ளது என சொல்லி கொள்ளும் ஆணவகாரர்களே ...

கூட்டத்தை தவிர்த்து சுய தேடல் என்றால் என்ன என்று உங்கள் யாருக்கும் தெரியாதா ..........????














முக்கிய  குறிப்பு :இது படிபவர்களை,மத உணர்வாளர்களை புண் படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது ...அப்படி புண் படவில்லை எனில் ..எங்காவது சுவரில் உங்கள் கால்களை இடித்து புண் படுத்தி கொள்ளவும் ....

வியாழன், 6 மே, 2010

சுறா- ஒரு உண்மை ரசிகனின் பாராட்டு ..........




















click on the image to read comments

நான் பிராமணன்...


















 பிழைப்பிற்காக    தினமும் பத்து  மணி நேரத்திற்கு மேல் 
உழைக்கிறேன் ...அப்போதெல்லாம் நான் வைசியன் ...
தமிழ் நாடு அரசு தாழ் தள  பேருந்தில் புட் போர்ட் அடித்துகொண்டே
பயணம் செய்யும் பொது நான் சத்திரியன்  ...
நான் பயன் படுத்திய கழிவறையை நானே 
சுத்தம் செய்யும் வேலையில் நான் சூத்திரன் ...
நான் உன்னோடு காதலில் கரைந்து விட்ட தருணங்களில்    
நான் பிராமணன்...
நாள் முழுவதும் பிராமணனாக இருப்பதையே   நான் விரும்புகிறேன்  ...

புதன், 5 மே, 2010

காதல் யோகம் ....

 

கடற்கரை மணலில் விளையாடி கொண்டிருந்த 
காதலர்களை பார்த்து கொண்டே நான் சொன்னேன் .... 
அந்த காதலி தன் காதலனிடம் காதலை வெளிபடுத்தும்  
அழகினை பார் என்று ...
நீ கேட்டாய்....
நான் மௌனமாக காதலை வெளிபடுத்துவதை
நீ உணரவில்லையா என்று............


ஷாஜகான் தன் காதலியின்  நினைவாக  தாஜ்மஹால் எழுப்பினான் ....
அவன்தான் மிக சிறந்த காதலன் என்றேன்....
நீ சொன்னாய்....
நினைவை விட்டு பிரிந்தால் தானே நினைவு சின்னம் எழுப்ப முடியும்......
உன் நினைவே நானாக  வைத்திருக்கும்
நீ தான் மிக சிறந்த காதலன் என்று .........


நாம் இருவரும் வேறு வேறு சாதி ஆயிற்றே என்று
ஒரு நாள் புலம்பிய போது..
நீ சொன்னாய்....
காதலில் கரைந்தவர்களும்  பிரம்மத்தில்   கரைந்தவர்களும்
மட்டுமே பிராமணர்கள் ....மற்ற அனைவருமே வைசியர்கள்..
நாம் இருவருமே பிராமணர்கள் என்று......


நான் இதுவரை எந்த பரிசுமே உனக்கு தந்ததிலையே
என்று ஒரு நாள் வருத்தபட்ட   போது..
நீ சொன்னாய்....
காதலின் முன் எந்த பரிசும் அற்பம் தானே
காதலே நீ தந்த பரிசு ...
என் செல்ல முட்டாள்  காதலா என்று......


நீ பாதி நான் பாதி 
என்று ஒரு நாள் நான் அரற்றிய போது ....
நீ கேட்டாய்....
நானும் நீயும் இரண்டற கலந்த பின் ....
நானும் நீயும் வேறல்லாத பொழுது
நீ பாதி நான் பாதி  என்று எப்படி சொல்ல முடியும் என்று  ...


பக்தி யோகம்,கர்ம  யோகம்,ஞான யோகம்,ராஜ யோகம்
என நால்வகை யோகங்களை பற்றி சொன்னபோது ....
நீ சொன்னாய் .........
நாம் இருவரும் காதல் யோகத்தையும்  இதனோடு
இணைத்து கொள்ள யோகிகளிடம்  சிபாரிசு செய்வோம் என்று.......

நாம் இருவரும் அடுத்த ஜென்மத்திலும் காதலர்களாக
சேர வேண்டும் என்றேன்......
நீ சொன்னாய் .........
நானும் நீயும் இந்த ஜென்மத்தில் ஒன்றாக 
சேர்ந்த  பின் ஜென்மம் ,காலம் அனைத்தும் மறைந்து போனதை
நீ உணரவில்லையா என்று............

மரணம் என்ற ஒன்றை வாழும் போதே உணர்ந்தால்  
எப்படி  இருக்கும் என்றேன்........
நீ சொன்னாய் .........
காதலில் விழுந்த பின் சுய அடையாளம் கரைதல் எனும்
மரணம் நிகழ்வதை நீ உணரவில்லையா என்று ........


கிருஷ்ணனும் ராதையும் தான் 
மிக சிறந்த காதலர்கள்   என்றேன் ........
நீ கேட்டாய்  ........
காதலில் வாழும் எல்லோருமே   
கிருஷ்ணனும் ராதையும் தான்  ...
இதில் யாரை  மிக சிறந்தவர்கள்   என்கிறாய் என்று .......


இந்த மாதிரி ஒரு காதலி கிடைத்த
நான் கொடுத்து வைத்தவன் தான் என்றேன் ...........
சிறிது புன்முறுவல் செய்து விட்டு
நீ சொன்னாய் ...........
காதலில் கரைந்த அனைவருமே கொடுத்து வைத்தவர்கள்தான்.....
நாம் இருவருமே காதல் யோகிகள் தான் .................