திங்கள், 26 ஜூலை, 2010

மதராசா பட்டினம்























ஹீரோயினுக்காக பார்க்க வேண்டிய  படம் ........







இம் ....அழக்கூடாது ...........
சீன் by சீன் விமர்சனம் எழுத நான் என்ன ஜாக்கி சேகரா ?????????

திங்கள், 19 ஜூலை, 2010

நான் ஏன் கடவுளானேன்.......























சுண்டெலி என் மூலாதாரத்தை 
கடித்ததில் குண்டலினி
ஆக்னா சக்கரத்தை வந்தடைந்தது.....
என்  கார் சக்கரத்தோடு ஆக்னா சக்கரத்தை
நெற்றி பொட்டில் வைத்து பஞ்ச பூதத்தையும்
கடந்தேன் .... அணுவில் நான் இருந்தேன்
என்னில்  'அணு'  இருந்தாள்.....
சர்வமும் நான் ஆக நான் கடவுளாளேன்.......

ஒருநாள் கொட்டாவி விடும் போது
சுண்டெலி எலி பொரிக்கு மாட்டாமல்
ஆக்னாவை கடித்ததில் குண்டலினி
மீண்டும் மூலாதாரத்தில் விழுந்தது ..
ரஞ்சித  மலரை முகர்ந்தால் தவறா ...?
'தந்திர' ஆராய்ச்சி செய்தால் தவறா...?  
இல்லை.....கேமராவை பார்க்காமல்
விட்டதுதான் தவறு என உணர்ந்தேன்...

 
சிறையில் சுண்டெலி என் மூலாதாரத்தை  
கடித்ததில் குண்டலினி
மீண்டும் ஆக்னா சக்கரத்தை வந்தடைந்தது....
நான் கடவுளாளேன்.....


நான் யார் ?














பூ ஆத்திகம்
தலை நாத்திகம்
நாணயம் நான்


காதல் மனைவி .....















விழி அம்புகளால்
காதல் வேல் வீச்சால்
நளினத்தால் கொன்றாள்  அன்று ....
சொல் அம்புகளால்
பூரிகட்டை வீச்சால்
நச்சரிப்புகளால்  கொல்கிறாள் இன்று...
 

வலது இடது























வலது புறம் வங்கக்கடல்
இடது புறம் அரபிக்கடல்
வரை படத்தை பார்த்து சொன்னார் ஆசிரியர் ....
பூமி உருண்டை மீது ஏறி
நின்று பார்த்தேன்.....
வலது இடது எதுவும் இன்றி
பூமி சுற்ற கிழே விழுந்தேன்..
வரை படத்தின் வலது புறமாய்...

பேரிளம் பெண்மை 






















மரணத்தை ஏற்று கொள்வது
ஆண்மை
மரணத்தை புன்னகையுடன் வரவேற்பது
பேராண்மை
அன்புடன் இருந்தால் 
பெண்மை 
அன்பாகவே இருந்தால்
பேரிளம் பெண்மை ...

வெள்ளி, 9 ஜூலை, 2010

கலாச்சார பன்னிகளும்...அக்கா,தங்கச்சி கேள்விகளும்....














[நிம்மதியாக தூங்கி கொண்டிருக்கும் பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய  பன்னி அவர்களே....உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ......உங்களை கலாசார மனிதர்களோடு ஒப்பிட்டு கூறியதை கேவலமாக எடுத்து கொள்ள வேண்டாம் ]   
 
நாப்பிளக்கப் பொய் உரைத்துனவநிதியம் தேடி
நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே....

 -பட்டினத்தார்


http://cablesankar.blogspot.com/2010/07/050710.html

[ஒரு எ ஜோக் -காக தனி காட்டு ராஜா இட்ட பின்னூட்டம்....அதை தொடர்ந்த என் எண்ணங்கள் .............]

பண்பாடு,கலாசாரம் -னு சொல்லிகிட்டே  ஒரு காலத்துல  பன்னி குட்டி போடற மாதிரி 10,20 -நு பெத்து போட்டாங்க நம்ம கலாச்சார
பன்னிகள்  ....

இந்த கலாச்சார குமுட்டைகளோட basic கான்செப்ட் என்னனா ..
செக்ஸ் அசிங்கம் ...
குழந்தை புனிதம்...

அடிப்படை மூலம் அசிகங்கமாம்...குழந்தை புனிதமாம்....

அப்புறம்  உச்சா  போனா   கூட ....உங்க அம்மா ,தங்கச்சி கிட்ட இதை பத்தி பேச முடியுமா -நு ஒரு இத்து போன கேள்வி ..
எனக்கு இந்த மாதிரி கேள்வி கேட்டா  ...கொமட்டுல ஒரு குத்து குத்திட்டு தான் பதிலே சொல்ல அரம்பிக்கனுமுனு ஒரு எரிச்சல் .....
வெக்கம் கெட்ட கலாசார வெண்ணைகளா....நீங்க உங்க வீட்டுல அக்கா,அம்மா  இருந்தா பொண்டாட்டி கூட  செக்ஸ்  வெச்சுக்க மாட்டின்களா.... பெட்ரூம் கதவை சாத்திகர நாகரிகம் ....அத எட்டி பாக்காத நாகரிகம் இது தான் முக்கியம் ..

எவனாவது( எவளாவது ) பொண்டாட்டி(கணவன்கிட்ட)  கிட்ட  செக்ஸ் வெச்சு கிட்டத  பத்தி அக்கா அண்ணன் கிட்ட சொல்வீ ங்களா கலாசார  வெண்ணைகளா? முதல் இந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கடா கலாச்சார குமுட்டைகளா.....

எதுக்கெடுத்தாலும்  அக்கா கிட்ட  இதை படித்து காட்டுவியா ? தங்கச்சிகிட்ட இதை பத்தி பேசுவியா -யானு  ஊசி போன போண்டா கணக்கா ஒரு கேள்வி வேறு ?

ஒரு  ஜோதிட குமுட்டை சொல்லுது ...இந்தியாவோட மக்கள் தொகை அதிகமா இருக்க இந்திய சுகந்திர ஜாதகத்துல ரிஷப லக்கனத்துல    44 பரல்கள் இருக்குதாம் .பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா...

வெக்கமே இல்லாம பன்னியே  நம்மள பார்த்து சிரிக்கற அளவுக்கு பெத்து போட்டதுக்கு சுகந்திர இந்தியாவோட ஜாதகம் தான் காரணமாம்....ஏன் சுகந்தரதுக்கு முன்னாடி இந்தியாவே இல்லையா ?அந்த இந்தியாவுக்கு ஜாதகமே இல்லையா ?

இவங்க ஒருத்தியே கட்டிக்கிட்டு காலம் பூரா எலவு எடுப்பாங்கலாம்....அத கலசாரமுனு சொல்லிட்டு திரிய  வேண்டியது ........  நீங்க  என்னமோ பண்ணிட்டு போங்க ....

கல்யாணத்துக்கு முன்னாடி இவன் ஊர்ல இருக்கர  அரைகுறை கெழவி வரை  ரூட் விட்டு  பார்த்திருப்பான் ....உடனே கல்யாண மான மறுநாளே  உத்தம புத்திரன் மாதிரி நடிப்பு வேறு ....

அப்புறம்  பொண்டாட்டி அழகாவும் வேணுமாம் ....வேலைக்கும் போகனுமாம்....இதுக்கு பேரு தாண்டா வியாபாரம் ....

அப்புறம் இந்த பொண்ணுக இருக்கராளுகளே....அமரிக்கா,சிங்கபூர்,துபாய் -ல IT சொரிஞ்சு விடறவன தான் கல்யாணம்  கட்டிப்பாளுகளாம் ......அட்லீஸ்ட் சென்னை,பெங்களுரு வில் இருந்தே... அமெரிக்கா காரனுக்கு ,இல்லையினா இங்கிலாந்து காரனுக்கு சொரிஞ்சு விடறவன தான் கட்டிப்பாளுகளாம்....

ஈரோடு,கோயம்புத்தூர் ,மதுரை லிருந்து  சொரிஞ்சு  விட்டா ஒரு மதிப்பும் மரியாதையும் கிடையாது ....

அப்புறம் இந்த உறவு  -நு சொல்லிட்டு ஒரு கும்பல் இருப்பாணுக பாரு ....இவனுக ப்ராஜெக்ட் மனஜெர் ,விபச்சார புரோக்கர்  களை விட மோசமான பேர்வழிக ......

பணம் இருந்தா மதிப்பாணுக   ...பணம் இல்லைன நம்மை  நம்பி  செருப்ப கூட நம்ம பக்கத்துல கழட்டி விட மாட்டானுக....     

என்ன பெரிய கல்யாணம் ?புனித உறவு  ?

விபச்சாரிகிட்ட படுக்க புரோக்கர் கிட்ட வியாபாரம் பேசணும்... பொண்டாட்டிகிட்ட படுக்க அவன் அப்பன் கிட்ட போய் வியாபாரம் பேசணும்....
deal  ஓகே ஆனா படுக்கலாம் .......இந்த கேவலத்துக்கு பேரு தான் கல்யாணம்....

[என்னடா இவன் இவ்வளவு கேவலமா பேசறானேன்னு நீனைகரீங்களா ...ஊர்ல நான் பாக்கரதான் எழுதிட்டு இருக்கறேன்...நம்ம நாட்டுல
கல்யாணம் கற பேர்ல நடக்குற விபச்சாரத்த ..மன்னிக்கவும்...வியாபாரத்த பார்த்தா எனக்கு கல்யாணம் என்றாலே அருவருப்பாக உள்ளது....த் ...தூ ]     

 நீங்க கலாசாரம் கற பேர்ல பண்றது சுத்த வியாபாரம் +மன விபச்சாரம்..

 அப்புறம் காதல் கல்யாணம் -நு சொல்லிட்டு ஒரு லூசு கும்பல் சுத்துமே.......இவனுகளுக்கு  20 வயசுல கல்யாணம் பண்ணிக்கனுமாம்..........
ஆமா ...20  வயசுலேயே கல்யாணம் பண்ணிட்டு ...அடுத்து வர போற 50 வருஷம்  என்ன ஆணி புடுங்க போறயா?

முதல்ல 15  வயசு பசங்களுக்கு  பாலியல் கல்வி சொல்லி தர வேண்டும் என்றால் போதும் இந்த கலாச்சார பழமை வாதிகள் ..அதெப்படி ..இதெப்படி..  என் டவுசருல ஓட்டை எப்படி...என்று குதிக்க ஆரம்பித்து விடுவானுக....

பாலியல் தொழிலை  சட்டபூர்வமா ஆக்க வேண்டியது தானே...கல்யாணம் பன்றவன் கல்யாணம் பண்ணிக்கட்டும்....செக்ஸ் மட்டும் தேவை -நு
நினைக்கறவன் பாலியல் தொழிலாளிகிட்ட   போயிட்டு போறான் ......


இப்படி சொன்னாலும் போதும் ..இந்த கலாச்சார பன்னிகள்   நம்மை புழுவை பார்ப்பது போல பார்ப்பானுக.....

எவன் ஒருவன் எவ்வளவுக்கு  எவ்வளவு  போலியாக உள்ளானோ அவன் தான் கலாச்சாரம் ,பண்பாடு என்று உளறிகொண்டும்...ஆபாசத்தை
எதிர்க்கிறேன் என்று  பிதற்றி கொண்டும் உள்ளான்.      


USA  -வுல பிறந்திருக்க  வேண்டும்  ....இச்சே....  தேசமாட இது?

ஒருவனுக்கு ஒருத்தியாம்......கெழவனுக்கு கெழவியாம்  ...இதுதான் இவனுக பண்பாடாம் ...கலாச்சாரமாம்... 

பிடிச்சிருந்தா சேர்ந்து வாழு ......பிரிவினை வந்தா நண்பர்களா பிரிந்து போக வேண்டியது தானே ........கலச்சாரமாம் ....கருமாந்திரமாம் ...    

கலி முத்தி போச்சு ...........கொத்து பரோட்டா ஆறிப் போச்சு ...


Also  Refer:
http://hayyram.blogspot.com/2010/05/blog-post.html
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6036
 
 
     

வியாழன், 8 ஜூலை, 2010

கல்யாண பாலை...






















அன்பும் ஆருயிரும்...
திருமணம் என்ற இருமன
வாழ்வில் இணைந்தது...
பல் போன அரைகுறைகள் ஆசிர்வாதம் செய்தன..
வாழ்க பல்லாண்டு என...
அம்மாவாசை நாளில் பகலில் தேனிலவு  
சென்றன அன்பும் ஆருயிரும்...
போன பஸ் கவிழ்ந்ததில்...
அன்பை விட்டு  ஆருயிர் போனது ...
ஆறு மாதம் கழித்து..
அன்பு கவலை பட்டது...
வேலைக்கு போகத  மனைவி
என்றால்  கடினம்  தான் ...
என்றது கல்யாண பாலை என்ற
விளம்பரத்தை  பார்த்துக் கொண்டு ...

புதன், 7 ஜூலை, 2010

இருட்டுக் கலாச்சாரம்.....














பர்சில் பணம் எவ்வளவு
வைத்திருக்கிறாய் என்று கேட்டாள்...
அவள் விபச்சாரி...
உங்களுக்கு சம்பளம் எவ்வளவு
என்று கேட்டாள்..
அவள் மனைவி..
உன்னால் என்னை வாழ வைக்க
முடியுமா என்று கேட்டாள்
அவள் காதலி...
உடல் அழகாக இருக்கிறதா
என்று பார்த்தான்..
அவன் விபச்சாரன் அல்லது பெயர் வைக்கப்படவில்லை
உடல் அழகுடன் வேலைக்கு
செல்கிறாளா என்று பார்த்தான்
அவன் கணவன்...
எதையும் அனுபவிக்காமல்...
பர்சில் உள்ள பணத்தை கரைக்கும்
முட்டாளின் பெயர் காதலன்...
விபச்சாரியையும் விபச்சாரனயும்  காரி உமிழ்ந்து
அனைவரும் உயர்ந்தவர்கள் ஆனார்கள்.. 
நமது இந்திய இருட்டு  கலாச்சாரத்தில் ..

செவ்வாய், 6 ஜூலை, 2010

பதின்ப வயது நினைவுகள்-IV..














நான் படித்த கல்லூரிக்கு  நான் வாழும் சிட்டியில் இருந்து இரண்டு வழிகளில் செல்லலாம்.நசியனூர் சென்று செல்லலாம் அல்லது பெருந்துறை சென்று செல்லலாம்.கல்லூரி முதல் வருடம் நான் நசியனூர் வரை சைக்கிளில் சென்று பின் பஸ் -லில் செல்வது என் வழக்கம். கல்லூரி சென்று ஒரு மூன்று மாதத்துக்கு மேல் கடந்து இருக்கும்.   ஒரு நாள் மாலையில்   நான்  "ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது....."   என்று பாடலை பாடிக் கொண்டே  மெதுவாக சைக்கிளை மிதித்து வீ ட்டுக்கு போய்க் கொண்டு இருந்தேன். 

என் எதிரே  கொஞ்சம் தொலைவில் பார்த்த போதே தெரிந்து விட்டது கவிதா நடந்து வந்து கொண்டு இருந்தாள்,அதுவும் ஸ்கூல் யுனிபார்ம் சுடிதாரில்.
 என்ன இவள் இன்னமும் school -க்கு போய் கொண்டு இருக்கிறாளா என்று ஒரு நொடி தோன்றினாலும்,எனக்கு பதட்டமாக இருந்தது.பேசலாமா,வேண்டாமா என்று மனசுக்குள் ஒரே பதட்டம். கவிதாவும் கொஞ்ச தூரத்துக்கு முன்னமே என்னை கவனித்து விட்டாள்.என்னை பார்த்தாலும் பார்க்காதவாறு  பார்வையை வேறு பக்கம் திருப்ப முயற்சி செய்தாள். அவள் அருகினில் வந்ததும் சைக்கிளை நிறுத்தினேன்.

"என்ன இங்கிருந்து நடந்து வர்ற?" -இது நான்.
"எங்க வயல்   காடு இங்க பக்கத்துல இருக்குது.அங்கிருந்து  வரேன் ."-இது கவிதா.
"ஓ...அப்படியா.."-இது நான்.

கொஞ்சம் தயக்கத்துக்குப் பிறகு...


"நல்லா இருக்கறயா..?" -இது கவிதா.
"இம்..நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்கிற?"-இது நான்.
"இம்..நல்லா இருக்கேன்....."--இது கவிதா.
"என்ன கைல எதோ வச்சு இருக்கே ..."  -இது நான்.

"அதுவா ...சாப்பாடு எடுத்து போன பாக்ஸ்.." ---இது கவிதா.
"அப்புறம் ...colleage  போயிட்டு தானே இருக்கறே ..."-இது நான்.
"இல்லை ..போறதில்லை..."
"ஏன் ....? +2  -வுல  நல்ல மார்க் தானே வாங்கி இருந்தே..?"
"அக்கா கல்யாண செலவுக்கு நெறைய பணம் செலவு ஆகி விட்டது...அது தான்.."
பின் அவள் correspondence- இல் BCA  படிப்பதாகவும் கூறினாள்.பின் அவளுடைய தோழிகள் ரேவதி,பிரேமலதா பற்றி -யும்  விசாரித்தேன்.
எனக்கும் அவளுக்குமான  இந்த  உரையாடல் சில தயக்கங்களுடன் ஒரு இரண்டு நிமிடம் தான் நடந்து இருக்கும்.

பள்ளியோடு கவிதா போய் விட்டாள் என்று  என் மனதை நான் சமாதான படுத்தி வைத்து இருந்தாலும்,தேய் பிறையாக போய் கொண்டு இருந்த நினைவுகள்  இந்த நிகழ்வுக்கு பிறகு மீண்டும் வளர் பிறை என வளர  ஆரம்பித்தன.
என்னுடைய கல்லூரி முதல் வருடத்திலேயே  மீண்டும் இரண்டு மூன்று முறை அந்த  வழியில் அவளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அப்போதும் ஒரு சில நிமிடங்கள் பேசினேன். அவள் பெரும்பாலும் சைக்கிளில் வருவாள்.என்னைப்  பார்த்தவுடன்  உயிரோட்டமுள்ள என் உயிரை கொல்லும்  ஓர் சிரிப்பு  சிரிப்பாள் .

அவளிடமிருந்து விடை பெறுகிற   சிரிப்பு தான் மழை காலத்தில் மின்னலாக பிறவி எடுக்கிறதோ  என்கின்ற சந்தேகம் இன்றுவரை கூட எனக்கு உண்டு.  

ஒரு சில காரணங்கலால்  அடுத்த இரண்டு வருடங்கள் நான்  நசியனூர் வழியாக செல்லாமல் பெருந்துறை  செல்லும்  வழியில்  செல்ல வேண்டி இருந்தது.  

முன்றாம் வருடம் படித்து கொண்டு  இருந்த போது  திடிரென்று ஒரு நாள் என் மனதில் ஒரு எண்ணம்.இன்று நசியனூர் வழியாக சென்று பார்த்தால் என்ன என்று தோன்றியது.
வியாழக்கிழமை(20-02-2003)  கொஞ்சம் எனக்கு ராசியான நாள் என்று  கருதியதால் அன்று சைக்கிளில் சென்றேன்.அப்போது கடவுளிடம்(!!!) வேண்டுதல் வைத்தேன்.எனக்கொரு எண்ணம் ...கவிதா இப்போது இந்த வழியாக வந்தால் எப்படி  இருக்கும்  என்று  நினைத்து கொண்டும்  "கத்தாலம் காட்டு வழி ..கள்ளி பட்டி ரோட்டு வழி..." என்ற பாடலை பாடிக் கொண்டும்  சைக்கிளை மிதித்த வண்ணம்  போய் கொண்டு இருந்தேன்.

நிஜமாகவே கவிதா TVS-50  வண்டியில் வந்து கொண்டு இருந்தாள். என்னை பார்த்ததும் அதே சிரிப்பு.அவள் பின் புறம்  அவளின் அம்மா அமர்ந்து இருந்ததால் ஒன்றும் பேசமுடியவில்லை.  சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து அவளை சந்திக்க நேர்ந்ததால் அன்று ஒரே  'நித்தி' யானந்தம் என் மனதில்.

அப்பொழுதே தீர்மானித்து விட்டேன். Final Year முழுவதும் அவளை சந்திப் பதற்காகவே இந்த வழியே  வருவது என...

அவளை சந்திக்கும்  நாட்களில்  அவளின் அம்மாவோ,அவளின் அப்பவோ அவளோடு இருப்பார்கள்.அப்போதெல்லாம் நான் புன்னகைக்க மறந்தாலும் அவள் புன்னகை சிந்த மறந்தது இல்லை.

மீண்டும் ஒரு நாள் முதல் தடவை பேச வாய்ப்பு கிடைத்தது போலவே நடந்து வந்து கொண்டு இருந்தாள்.    

அன்று அவளிடம் பேசிப் பார்த்ததில் எனக்கு  ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.அவளுக்கு காதல் என்று ஒன்றெல்லாம் என் மீது கிடையாது என்பது தான் அது.[இதே நேரம் வங்காள விரிகுடா கடலில்  எழும்பிய  அலைகள் அனைத்தும் ஒரு 10 நொடி அப்படியே நின்று விட்டது.... தமிழ் நாடு முழுவதும் ஒரு 10 நொடி காற்று வீசாமல் அப்படியே நின்று விட்டது...]

மீண்டும் இரண்டு மூன்று முறை பேசிப் பார்த்ததில் அதை  உறுதி செய்து கொண்டேன்.[கோபாலா ...கோபாலா  ...உனக்கு..... கோவிந்தா ....கோவிந்தா]

[பொதுவா பொண்ணுகளுக்கு  தேவை ஒரு உணர்வுரீதியான சப்போர்ட் ...
அது அண்ணனாகவும் இருக்கலாம்....தம்பியாகவும்  இருக்கலாம்.....நண்பனாகவும் இருக்கலாம்  ....காதலனாக தான் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை என்று கோபி புராணம் கூறுகிறது ]    

+2  வில் சேர்ந்து எடுத்து இருந்த குரூப் போட்டோவை  கிழித்து எறிந்தேன் எரிச்சலில்.கவிதைகள் பல எழுதி வைத்து இருந்த நோட்டு புத்தகத்தை கிழித்து எறிந்தேன்.      
ஓரிரு முறை என் மனதில் அவளை கண்டபடி கெட்ட +கேவலமான வார்த்தைகளால்  கூட  திட்டி என் மனதை தேற்றி கொண்டேன். [போனால் போகட்டும் போடா.....]    

பொதுவாக எல்லோரையும் நக்கல் விடுவதும்,  பருத்தி வீரன் போல  பண்பாடு போன்றவற்றில் நம்பிக்கை அற்று இருந்தாலும்,காமமும்  காதலும்   ஓன்று தான் என்று சொல்லி கொண்டு திரிந்தாலும்  என் மனதில் ஒரு ஆழமான வலி ஏற்பட்டது அவளாளே ..
அப்போது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது..ஏன் உண்மை காதலர்கள்[காதல் புனிதம் ...காமம்  அசுத்தம் என உளறி கொட்டும் உலகம் புரியாத அப்பாவிகள் ...] தற்கொலை செய்வதற்கு கூட தயங்குவதில்லை என்று....  

காலத்தின்  கட்டாயம் காரணமாக  படிப்பு முடிந்ததும் பிழைப்புக்காக  சென்னை வந்து விட்டேன்.
நான் சென்னை வந்த பின்  ஒரு வருடத்தில் அவளுக்கு கல்யாணம் என்று கேள்விப் பட்டேன்.


அதற்கு அடுத்து ஒரு வருடம் கழித்து  ஒருநாள்,எங்கள்  வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்று வரலாம் என்று பார்த்ததில் எங்கள்  வீட்டில் ஒரு வண்டியையும்  காணோம்.  என் சித்தப்பா பெண்ணின் சைக்கிளை  (லேடீஸ் சைக்கிள்) வாங்கி கொண்டு சென்றேன். அது தான் நான் லேடீஸ் சைக்கிள்  ஒட்டுவது முதல் தடவை.கடைக்கு சென்று விட்டு  திரும்ப வருகைளில், கவிதா கூட இந்த மாதிரி  சைக்கிளில்  தானே வருவாள் என்ற நினைவோடும்   'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு'   என்ற பாடலை பாடிக் கொண்டும்  நான் சைக்கிளை  மிதித்து கொண்டு வருகையில்....எதிரே வந்த பைக்கின்  பின்புறத்தில் ஒரு பெண்ணின் புன்னகை என்னைப் பார்த்தவுடன்.. .
கவிதா கணவனுடன்............  
  

கோபாலா ...கோபாலா  ...உனக்கு..... கோவிந்தா ....   கோவிந்தா ....
கோபாலா ...கோபாலா  ...உனக்கு..... கோவிந்தா ....   கோவிந்தா ...



காதல் ஒன்றும் புனிதமானது இல்லை என்பது தான் காலம் எனக்கு கற்று கொடுத்த பாடம்....
http://naayakan.blogspot.com/2010/02/blog-post_09.html

திங்கள், 5 ஜூலை, 2010

பதின்ப வயது நினைவுகள்-III..




















எனக்கு ஏன் கவிதாவை கண் மூடித்தனமாக  பிடித்து இருந்தது என்று யோசித்து பார்த்ததில் ஓன்று புரிந்தது.
அவளிடம் இருந்த பெண் தன்மை,சிரிப்பை வெளிபடுத்தும் அழகு,அதிகமாக சிரிக்க வேண்டி இருந்தால்  வாய் பொத்தி சிரிக்கும் நளினம் ...இது போன்ற சில குணங்கள்  அவளை தனித்து காட்டியது.

[அழகான பெண்களை விடவும் பெண் தன்மை அதிகமாக உள்ள பெண்ணை  ஆண் அதிகம் விரும்புகிறான் என்று கோபி புராணம் சொல்லுகிறது.]

கவிதாவின் தோழிகள் ரேவதி மற்றும் பிரேமலதா  என்று இரண்டு பேர். இதில் ரேவதி என்  தூரத்து உறவுகார (சுமார் 15 km ) பெண் தான்.
இவர்கள் மூவரும் சேர்ந்து என்னைப் பற்றி என் காதுக்கு கேட்டும் கேக்காமலும் இருக்கும்  அளவுக்கு கமென்ட் அடிப்பது வழக்கம்.
ரேவதியும்,பிரேமலதாவும் வேண்டும் என்றே என்னிடம் வந்து எதாவது கேட்பார்கள்.கணக்கு  நோட்டு தா என்று கேட்பார்கள்.பொண்ணுகளுக்கு எல்லாம்  கணக்கு நோட்டு தர முடியாது என்று எதாவது நக்கலாக சொல்லி விடுவது என் வழக்கம்.
கவிதா  அந்த காட்சியை பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பாள்.

[தானாக வழிய வந்து பேசும் பெண்ணை விட ..நம்மைப்  பார்த்து கண்களில்  பேசும் பெண்ணையே ஆண் அதிகம் விரும்புகிறான் என்று கோபி புராணம் சொல்லுகிறது.]

பத்தாவது படித்த போது ஒரு முறை  கணித ஆசிரியர் special class  வைத்து  இருந்தார்.அவர் இடையில் எதோ வேலையாக தான் வருவதற்கு நேரம் ஆகும் ..அதுவரை படித்து கொண்டு இருங்கள் என்று சொல்லி சென்று விட்டார்.  அவர் சென்றதும் பசங்கள் அனைவரும் கிரௌண்டில் வந்து கிரிக்கெட் விளையாட  ஆரம்பித்தோம்.அன்று நான் ஒரு sixer (கை நடுக்கத்தில் பந்து தெரியாத்தனமாக பட்டு விட்டது) வேறு அடித்து விட்டேன்.ஒரு செம height -ல் வந்த பந்தை கேட்ச் வேறு பிடித்து விட்டேன்.ஒரு சில பெண்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.

இதை  ரேவதி பார்த்து விட்டு கவிதாவிடம் சென்று நான் விளையாடிய கொடுமையை explain செய்து இருக்கிறாள் என்பதை இளங்கோ மூலம் நான் தெரிந்து கொண்டேன். கொஞ்ச நேரத்தில் ஆசிரியர் வேறு வந்து விட்டார். யார் எல்லாம் படிக்காம கிரிக்கெட் விளையாடியது  என்று கேட்டார் .உண்மையை ஒத்து கொண்டால் தண்டனை ஏதும் இல்லை என்றார். நானும் எதார்த்தமாக எழுந்து நின்று விட்டேன்.
சரி... நான் நிறுத்த சொல்லும் வரை வகுப்புக்கு வெளியே சென்று  தோப்பு கரணம் போடவேண்டும் என்று சொல்லி விட்டார்.
ஒரு பத்து தோப்பு கரணம் போட்டு இருப்போம்.அவர் வகுப்புக்கு உள்ளே  சென்று விட்டால் தோப்பு கரணம் போடுவதை நிறுத்தி விட்டு நின்று கொண்டு இருப்போம். 

கவிதா சன்னலுக்கு அருகில் அமர்ந்து இருந்தாள். நான் தோப்பு கரணம் போடும்  அழகைப் பார்த்து ஒரே சிரிப்பு.நான் தோப்பு கரணம் போடுவதை நிறுத்தி விட்டு நின்று கொண்டு  இருந்தால்..."சார்...ஒரு சிலர் தோப்பு கரணம் போடாம ஏமாத்தறாங்க .." என்று என் காதுக்கு கேக்குமாறு வேறு சொல்லுவாள்.     .


என்னை பத்தி எதாவது கமன்ட்  அடிக்கடி அடித்து கொண்டே இருப்பாள். சில சமயம் அது என் காதுகளில் விழும் .நானாக சென்று எதுவும் அவளிடம் பேசியதில்லை. என்னுடைய பனிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பு பெண்களிடம் அதிகமாக பேசிப் பழகியதில்லை.வெறும் ஒன்று இரண்டு வார்த்தைகள் மட்டும் தான்...அதுவும் தேவை என்றால் மட்டும்.

[பெண்களிடம் எந்த அளவுக்கு நெருங்கி பழகாமல் இருக்கிறோமோ அந்த அளவுக்கு அவர்களின் மீது கவர்ச்சி  வளர்கிறது என்று கோபி புராணம் சொல்லுகிறது.]

பள்ளிக்கு நான் சைக்கிளில் வருவது தான் வழக்கம்.நான் பள்ளிக்கு வரும்  வழியில் ஒரு கால்வாய்(வாய்கால்) ஓடி கொண்டு இருந்தது. கவிதாவின் வீடு வரும் வழிக்கு கொஞ்சம் அருகில்  இருந்தது.கால்வாயில் தண்ணிர் ஓடும் காலங்களில்  ரோட்டின் இருபுறமும் வயல் மற்றும் கரும்பு தோட்டம் இருக்கும்.
இந்த ஏரியாவில் மயில்கள் அதிகமாக நடமாடும்.

ஒருமுறை லேடீஸ் சைக்கிளில்  மயில்  ஓன்று சென்று கொண்டு  இருக்குதே  என்று என் சைக்கிளை வேகமாக மிதித்து  அருகில்  சென்று பார்த்தால் ............
அது 'கவிதா'. 
சில சமயம் கவிதாவும் லேடீஸ் சைக்கிளில் வருவாள்.நான் அவளை பார்த்தால் .. சைக்கிளில் வேகமாக சென்று  ............................
முந்தி சென்று விடுவேன்.[இதுக்கு நீ இதை சொல்லாமலே இருக்கலாமே!?.]

பள்ளிபருவம்  இறுதி கட்டத்தை நோக்கி  நெருங்கி  வந்தது.ஒரு சில நாட்களில்   கவிதாவை விட்டு பிரிய போகிறோம் என்ற நினைப்பு வருத்தத்தை தந்து கொண்டு இருந்தது.
 +2 குரூப் போட்டோ எடுக்கும் நாளும் வந்தது.முதல் வரிசையில் பெண்கள் நின்றார்கள்.அதற்கு அடுத்த வரிசையில் ஒரு பெஞ்சின் மீது பெண்கள் நிற்க ஆரம்பித்தார்கள்.அதற்கு அடுத்த வரிசையில் சரியாக கவிதாவின் பின் புறமாக நான் நின்றேன்[கரெக்டாக டைம் பார்த்து யாருக்கும் சந்தேகம் வராதவாறு செய்த அகில உலக சாதனை ].ஜெயந்தியின் பின் புறம் தனபால் நின்றான் என்பது  கூடுதல் செய்தி.

+2 வில் -நான் எதிர் பார்த்ததை விட நல்ல மதிப்பெண் பெற்று ஈரோட்டிலேயே  இன்ஜினியரிங் colleage -ல் சேர்ந்தும் விட்டேன்.கவிதாவையும் நான் ஏறக்குறைய மறந்து  விட்டு இருந்தேன்.வழக்கம் போல colleage-ல்  உள்ள அழகான பெண்களை ரசித்து கொண்டு இருந்தேன். 
நான் அமைதியாக இருந்தாலும்  விதி தானாக வாலண்டியராக வந்து  மீண்டும்  கவிதாவை  சந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது......

                                                                           -நினைவுகள் தொடரும்.. 

வெள்ளி, 2 ஜூலை, 2010

பதின்ப வயது நினைவுகள்-II..


















கிணத்தை  விட்டு வெளிய வந்தவனை பார்த்து வெங்கட் கேட்டான் .
"ஏண்டா ...கால் ஸ்லிப் ஆச்சு உனக்கு ?".
அடுத்த நாள் headmaster  வகுப்புக்கு வந்து விட்டார்.யாரு எல்லாம் அந்த தோட்டத்துக்கு சாப்ட போறது ...எந்திரிச்சு   நில்லுங்க ...என்றார் .
நானும்  நிற்பதை பார்த்து விட்டு ....ஏன்பா நீயுமா...?[நான் தான் நல்லவனுங்களே... ] என்று கேட்டார்.
இனிமேல் யாரும் அங்கே செல்ல கூடாது என்றார்.அவர் சொன்னதற்கு மதிப்பு கொடுத்து   ஒரு வாரம்  அங்கே செல்லாமல் இருந்தோம்.
பத்தாம் வகுப்புக்குபிறகு  வெங்கட்டும் ,இளங்கோவும்  Third  குரூப்-ல்  சேர்ந்து விட்டாலும் ,அனைவரும் lunch  நேரத்தில் சந்தித்து கொள்வது வழக்கம்.


ஒன்பதாம் வகுப்பில் வந்து அமர்ந்ததும் பார்த்த முதல் நாளே ஒரு பெண்ணை என் மனதிற்கு  பிடித்து போனது .

அவள் அப்படி ஒன்றும் அழகில்லைதான். ஆனால் அவள் தன் பார்வையால்   தான் காணும்  எல்லாவற்றையும்  அழகாக்கி  கொண்டு இருந்தாள்.
அவள் சிரித்து விட்டு போனால் வானத்தில் மின்னும்  சில விண்மீன்கள் மறைந்து விடும். நான் நினைப்பது உண்டு ...அந்த விண் மீன்கள் தான் இவளின் சிரிப்பாக  அவதார மெடுத்தனவோ என்று .

அவள் வெக்கப்பட்டு  வாய் பொத்தி சிரிக்கும் அழகை  கண்டால் ,இந்த பூலோகம் முழுவதும் சுற்றி அதன் அழகை  ரசிக்க முடியாததற்கு  மாற்றாகாதான்  இவள் சிரிக்கிறாளோ என்று தோன்றும்.

கவிதை என்ற பெயர் வழக்கத்தில் இல்லாததால் அவளை கவிதா என்று அழைத்தார்கள்.அவளை  ஒரு பார்வை பார்த்தாலே   கவித(தா)ருவாள்.
 நான் அமர்ந்திருக்கும் பெஞ்சுக்கு நேர் பெஞ்சில் பெண்கள் சைடில் அவள்  அமர்ந்து இருப்பாள்.வகுப்பிற்கு   வாத்தியார் வராத சமயங்களில் அவளை தான் ரசித்து  கொண்டு இருப்பேன்.என்னுடைய நல்ல பையன் என்ற இமேஜ் இதற்கு  பெரிதும் துணையாக இருந்தது

நான் படித்த போது ஒன்பதாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை தாவணி அணிவது பழக்கமாக இருந்தது. ஆனால் பனிரெண்டாம் வகுப்பு வந்த போது பெண்கள் அனைவரும்  யூனிபார்ம்  சுடிதார் அணிய வேண்டும் என மாற்றி விட்டனர்.தாவணியில் கவிதா ரொம்பவே அழகு. நான் அவளை ரசித்து கொண்டு இருப்பதை   இளங்கோ இரண்டு மூன்று முறை பார்த்து விட்டு கேட்டான்."டே ...நீ கவிதாவை சைட் அடிக்கற ....இம் ...இருக்கட்டும் ".

 அவளை பார்த்து கொண்டு இருக்கும்  சமயங்களில் எல்லாம்  அவள் தன் தோழிகளுடன்  அப்படி என்னதான் பேசுவாள் என்று தெரியாது ,சிரித்து சிரித்து பேசிக் கொண்டே இருப்பாள். சில சமயம் தாவணி லேசாக விலகி இருப்பது கூட தெரியாமல் பேசிக் கொண்டே இருபாள்.நான் கலைக்கண் பார்வையோடு ரசித்தேன் என்று இந்த தொடருக்காககவோ ...அல்லது இமேஜ் காகவோ பொய் சொல்ல விரும்பவில்லை.

 [காமமும் காதலும் ஒன்றுடன் ஓன்று இரண்டற கலந்தது என்று நான் நினைத்தாலும்,சமுதாயத்தால்  காமம்  என்று சொல்லப்படும் சில நினைவுகளை நான் பதிவுக்கு கொண்டு வரவில்லை . இதோடு தொடர்புடைய யாரவது படிக்க நேர்ந்தால் அவர்களுக்கு  ஏற்று கொள்ளும் மன பக்குவம் எந்த அளவு இருக்கும் என்று தெரியாததுதான் இதற்கு காரணம்.].

எங்கள் வகுப்பில் சிவரஞ்சனி என்று ஒரு அழகான பெண்.எல்லோருக்கும் [நான் உட்பட]  அவள் மீது ஒரு கண் இருக்கும்.ஆனால் இளங்கோ -வுக்கோ  இரண்டு கண்ணும் அவள் மீது தான் இருக்கும்.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஜெயந்தி என்ற ஒரு பேரழகி எங்கள் வகுப்புக்கு வந்தாள். அவள் பேரழகி மட்டும் அல்ல ...படிப்பிலும் படு சுட்டி(எங்கள் வகுப்பிலிருந்து medical colleage சென்ற ஒரே பெண் ).இப்போது ஜெயந்தி,வித்யா என்று இரண்டு போட்டிகள்.இது மட்டும் அல்லாமல் தனபாலும்  நன்றாக படிப்பான்.பத்தாம் வகுப்பின் இறுதி தேர்வில் ஜெயந்தி முதல் மதிப்'பெண்'.நான் இரண்டாவது.     

அப்போதெல்லாம் என்னை 'நினைத்தேன் வந்தாய் ' விஜய் என்றும் ரம்பா,தேவயானி  போல வித்யாவையும் ,ஜெயந்தியையும்  வைத்து வெங்கட்டும்,பிரபுவும்  கலாய்ப்பது  உண்டு.

தனபால் ஜெயந்தியை காதலித்தும் அதற்கு அவள் No சொன்னதும் தனி கதை .கொங்கு குணா கூட ஜெயந்திக்கு ரூட் விட்டு பார்த்தது கூடுதல் சிறப்புச்  செய்தி.

பதினோராம் வகுப்பில் சேர்ந்த போது வித்யா,ஜெயந்தி,தனபால் மூவரும் Maths+biology தேர்வு செய்தார்கள்.நான் Maths+computerscience தேர்வு செய்தேன்,கவிதாவும் கூட அதையே தான் தேர்வு செய்து இருந்தாள். எல்லோரும் ஒரே வகுப்பில் இருந்தாலும்  Biology/Computerscience  period  மட்டுமே மாறும்.

பதினோராம்  வகுப்பில் இனிமேல் நமக்கு போட்டி கிடையாது ...நாம் தனி காட்டு ராஜா தான் என்று நினைத்துக் கொண்டு இருந்த போது  சாரதா மணி என்ற ஒரு பெண் வந்து சேர்ந்தாள் .இவளிடமும் அழகான அம்சம் எதோ ஓன்று இருந்தது.நன்றாக படிக்கவும் செய்வாள் .இவளும்  என் மனதிற்கு பிடித்த பெண்.

மேனகா என்ற ஒரு தகிரியமான பெண். நன்றாக படிக்கவும் செய்வாள்.இளங்கோ வணிகவியல் குருப்பில் படித்தாலும் , 'மேனகா  ஒரு நல்ல பெண்' என்று சொல்லிக் கொண்டு இருப்பான்.

மைனாவதி என்று ஒரு அழகான பெண்.மைனாவுக்கு நெறைய பேர் வலை விரித்து பார்த்தார்கள் . மோகனுக்கு மைனா மீது ஒரு கண்.கடைசியாக  அவனே சொன்ன தகவல் படி, மைனா  வேறு யாரோ ஒருவருடைய கூட்டில்  சிக்கிக் கொண்டது என்று.  

 
"ஒவ்வொரு பெண்ணும் ஓர் அழகு....அந்த பெண்ணுக்குள்ளே  நூறு அழகு"  என்று ஒரு பாடல் வரி வரும் ...அது உண்மை என்று தான் எனக்கும் தோன்றுகிறது.

அம்மா வாக ஒரு பெண் ஓர் அழகு ...
சகோதரியாக ஒரு  பெண் ஓர் அழகு ...
தோழியாக ஒரு  பெண் ஓர் அழகு ...
அனுஷ்காவிடம் உள்ள பேரழகு  ஓர் அழகு..
நமீதாவிடம் உள்ள மலைக்க வைக்கும் இரண்டழகு ஓர் அழகு ..
பார்த்து கொண்டே இருக்கலாம் என்று தோன்றும் சுனைனா  ஓர் அழகு..
என்னைக் காதலிக்க விட்டாலும் ...எல்லா அம்சமும் கொண்ட 'பெண் என்றால் இவள் தான் பெண்' என சொல்ல வைக்கும் பாவனா ஓர் அழகு ..

கவிதா அழகுக்கு எல்லாம் அழகு...வெட்கப்பட்டு  சிரிக்கும்   கணத்தில்.... 
 
அழகாய் தோன்றும்  அனைத்துப் பெண்களையும் ரசித்தாலும் [இதெல்லாம் ஒரு பொழப்பா-னு என் நண்பன் ஒருவன் அடிக்கடி கேட்ப்பான் ],என் மனதின் மையத்தில்  தாமரை மலர் போல  மலர்ந்து இருந்தாள் கவிதா என் பதின்ப வயது கால கட்டத்தில்....  
                                                                            -நினைவுகள் தொடரும்..  

வியாழன், 1 ஜூலை, 2010

பேய்களும் படைக்கும்...
















ஆப்பிள் மரத்தில்...
ஆப்பிள் என் வயிற்றில்...
ஆப்பிள் நான் ஆனது ....

ரோஜா கூந்தலில்...
ரோஜா குரோமோசோமில்...
இருவரும் உரமாக ரோஜாவுக்கே...

படைப்பின் படைப்பு ..
புரிய தேவை இல்லை..
புரிந்தது உணர்வது சுகமென...
பேயோனின்   'படை'ப்பு
புரிந்தது   புரியதேவையில்லை ..
என்ன  உணர்வது?

பதின்ப வயது நினைவுகள்..
















முன் குறிப்பு:
என்னை மதித்து(!!! நான் நம்ப மாட்டேன்....அகம் புறம் சுரேந்திரன்  ப்ளாக்-ல நான் போட்ட தொடர்  பின்னூட்டத்தினால் வந்த பின் விளைவு.. )  இந்த தொடர் பதிவு எழுத அழைத்த அகம் புறம் சுரேந்திரன்  அவர்களுக்கு  நன்றி.
இவன ஏன்டா  தொடர் பதிவு எழுத அழைத்தொமுனு  அவர் நொந்து கொள்ளாத அளவுக்கு என் நினைவுகளை எழுத முயற்சி செய்கிறேன்.
ஒரே ஒரு பதிவு மட்டும் எழுதி விட்டு  இதை நான்  தொடர் வண்டியில்  அமர்ந்து எழுதியதால் இது ஒரு தொடர்பதிவு என்று முடித்து விடலாமா  என்று ஒரு யோசனை ( யோசனை ரொம்ப மொக்கை என்று தோன்றியது).
சுய தம்பட்டம் கொஞ்சம் அதிகமா இருந்தா  நான் எதோ Dr.விஜய் SSLC  யோட ரசிகர்னு நெனச்சுகாதீங்க(ஆமா ...ஒருத்தராவது தொடர்ந்து வந்து படிபீங்களா...??)
இதை படித்து யாருக்காவது தலைவலியோ,தற்கொலை எண்ணமோ வந்தால்  என்னை எழுத தூண்டிய அண்ணன் சுரேந்திரன் அவர்களே  தார்மிக பொறுப்பு ஏற்றுக் கொள்ள கடமை பட்டு உள்ளார்.


இந்த நினைவில் வரும் பல பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

ஒரு சிட்டி -ல (சென்னைய விட கொஞ்சம் சின்னது ...அவ்வளவுதான் ) கோவாலு -நு ஒரு அப்பாவி(!) பையன் இருந்தானாம்.அது ஈரோடு -க்கு பக்கத்துல , இருக்கற விவசாய தொழில் நடக்கும்  ஒரு சிட்டி. 

படிக்கும் காலத்தில்   எப்படியும் முதல் ரேங்கோ இரண்டாவது  ரேங்கோ எடுத்து விடுவது வழக்கம்(இம்....சிரிக்க கூடாது ...இது என்னோட கதை தான்.)

ஏழாம் வகுப்பில்தான் என்னுடைய close friend பிரபு வோடு   பழக்கம்  ஏற்பட்டது.
எட்டாம் வகுப்பு  வந்தபோது எனக்கு  ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.அவள் பெயர் தன தேவி -யின் homely   யான முக அமைப்பு எனக்கு பிடித்து இருந்தது.தன தேவி என் மனதின் ஓரமாக வாழ்ந்து வந்தாள்.தனதேவி ஒன்பதாம் வகுப்போடு படிப்பை விட்டு நின்று விட்டாள்.

 எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பிற்கு  வந்த போது தான் இன்னும் மூன்று பசங்களோடு நட்பு  ஏற்பட்டது.அந்த நட்பு இன்று வரை தொடர்ந்து கொண்டு உள்ளது.

வெங்கட்,இளங்கோ,கதிர் இவர்கள் தான் அந்த மூன்று பேரும். ஒன்பதாம் வகுப்பில் நான் அமர்ந்த போது என் அருகில் அமர்ந்து இருந்தது பிரபு,அவன் அருகில் இளங்கோ.நாங்கள் மூவரும் கடைசி பெஞ்சுக்கு முந்தைய பென்ச்.இளங்கோ பத்தாம் வகுப்பு போக பிடிக்காமல் அதே பெஞ்சில் அமர்ந்து இருந்தவன்.எந் நேரமும் பெஞ்சில் தாளம் போட்டு கொண்டே இருந்தான்.நானும் பிரபுவும் சேர்ந்து அவனை மிருதங்க சக்கரவர்த்தி  என்று அழைக்க ஆரம்பித்தோம்.பின்னாளில் அது சக்கரவர்த்தி என்று சுருங்கி பின் சர்க்கரை என்று அழைக்க ஆரம்பித்தோம்.இன்று வரை இது தான் அவன் பட்ட பெயர்.

பிரபுவை 'குண்டா'   என்று அழைப்போம் .என்னை சட்டி (ஹி..ஹி...சட்டித் தலையா என்பதன் சுருக்கம் ) என்று அழைப்பார்கள்.
வெங்கட் -இவனும் பத்தாவது போக பிடிக்காமல் ஒன்பதாம் வகுப்பில் எங்களோடு சேர்ந்து கொண்டவன்.இவன் தைகிரியமாக சேட்டை செய்ய கூடியவன், தெனவெட்டாக   பேச  கூடியவன்.நானும் அதற்கு தகுதாற் போல நக்கல் நையாண்டியாக பேசுவதால் எங்களுக்குள்ளே  ஒரு frequency மேட்ச் இருந்து வருகிறது.

வெங்கட் ஒன்பதாம் வகுப்பில் ஒரு முறை ஒரு பெண்ணை போடி என்று அழைத்து விட்டான்.['வாடி' என்று அழைத்தால் தானே தப்பு?].
அந்த பெண் chemistry  டீச்சரிடம்  கம்ப்ளைன்ட் செய்து விட ...இவனை கொஞ்சம் கவனித்து பின் chemistry லேப் -யில்   அவனை உட்கார  விடாமல் அப்படியே ரொம்ப   நேரம் நிற்க வைத்து விட்டார்கள்.அவன் கடைசி வரை "நான் அப்படி சொல்லவே இல்லை " என்று சாதித்து கொண்டு  இருந்தான். கடைசியாக நானும் பிரபுவும் சென்று அவன் அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டான் என்று certificate கொடுக்க [வகுப்பில் எனக்கு   அமைதியான நன்றாக படிக்கும் நல்ல பையன்(!!) என்ற இமேஜ் பனிரெண்டாம்  வகுப்பு படித்து முடிக்கும் வரை form  ஆகி இருந்தது.] அவனை விட்டு விட்டார்கள்.

தனபால் ,மோகன்,ரவிக்குமார்(பறவை ) ,கொங்கு குணா,பங்காளி(மொண்ணை என்றும் பெருமையுடன் அழைக்கப்படும் )  பிரகாஷ்,ஹரிபிரசாத்(மாமா),குருபிரசாத்(ஆஸ்பத்திரி),ஜெயபால்,
தனசேகரன்(வள்ளுவர்),தினேஷ்,சதீஷ்ராஜா  அனைவரும் பதின்ப வயது நண்பர்கள் தான்.


பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் காலம் வரை ,  அருகில் ஒரு அம்மன் கோவில் இருக்கும்  மற்றும் அதற்கு அருகில்  ஒரு கிணறு + தோட்டம் ஓன்று இருக்கும் .அங்கே தான் lunchbox எடுத்து கொண்டு லஞ்ச் சாப்பிட ஒரு 10  பேருக்கு மேல் செல்வோம்.    


ஒருமுறை செந்தில் என்ற ஒரு பையன்  "டே ...இன்னைக்கு leave  போடணுமே  என்ன பண்ணலாம்?" என்று கேட்டான்.உடனே வெங்கட் அவனை கிணத்தில் பிடித்து தள்ளி விட்டான்.

                                                                      -நினைவுகள் தொடரும்...