வியாழன், 12 ஆகஸ்ட், 2010

தனி காட்டு ராஜா-யுக கோபிகா
பிச்சை கேட்டவனுக்கு
பிச்சைகாரன் என்றொரு பிம்பம்
பிச்சை போட்ட கெளரவ  பிச்சைகாரனுக்கு
மேலதிகாரி என்றொரு பிம்பம்

எதிர்பார்த்த பிம்பம் கிடைத்த போது  'காதல்'
அந்த பிம்பம் உடைந்த போது 'மோதல் '

வியபாரி பிம்பத்திற்கு போட்டியாக
கணவன் என்ற பிம்பம்
மனைவி என்ற பிம்பம்

நல்லவன் என்ற பிம்பம்
கெட்டவன் என்ற பிம்பம்
பிரபலப் பதிவர் பிம்பம்
புதுப்  பதிவர்  பிம்பம்


காதலன்,காமுகன்
காதலி ,கள்ளக் காதலி 
மகாத்மா ,பாவாத்மா
யோகி ,போகி
அமைதியானவன் ,ஆணவக்காரன் 
மனைவி ,விபச்சாரி
உலக அழகி ,உள்ளூர் கெளவி
இளைய தளபதி ,முத்துன தளபதி
வேலாயுதம்,வெத்து ஆயுதம் 
தல ,தறு தல
தனி காட்டு ராஜா,புள்ளி ராஜா
கோபாலன் ,கோழி திருடன்
கிருஷ்ணன்,கிறுக்கன்
நரசிம்ம பிரபு ,நெருப்பு நீல மேகம் 
சங்கர பாண்டியன் ,சரக்கு பாண்டியன் 
சுரேந்திரன்,டி.பி .கஜேந்திரன்
சித்தூர் முருகேசன் ,சிங்காநல்லூர் ஆறுமுகம்
சங்கீதா ,ரீட்டா
ராதை ,பேதை
யுக கோபிகா ,கேரளா கோபிகா
தங்கமணி ,ரங்கமணி 
சுனைனா,நமீதா
சூப்பர் பிகர் ,மொக்கை பிகர்
டி.ராஜேந்திரன் ,காபி கடை ராமச்சந்திரன்
பரிசல் ஒட்டி,பஞ்சு அருணாச்சலம்
ஒயர் மேன் சங்கர், ஒன்னாம் நம்பர் வீட்டு சின்ராசு 
ஈரோடு கதிர்வேலு ,தார்ரோடு  தங்கவேலு
வால் பையன் ,சமர்த்துப்  பையன் 
கேப்டன் ,கேன குப்பன்
சாப்ட்வேர் இஞ்சினியர், சாப்பாட்டு   ராமன்
மளிகைகடைக்காரன் ,மாடமாளிகைகாரன் 
சென்னை வாசி ,கோயமுத்தூர் வாசி
சிங்கப்பூர் சிங்காரம் ,சீவலப்பேரி  பாண்டி 
நாத்திகன் ,ஆத்திகன்
பிராமணன் ,சூத்திரன்
கவுண்டர் ,முதலியார்
தமிழன் ,தெலுங்கன் 
பில் கேட்ஸ்,பீலா கேஸ்
இயேசு ,பாஸு
அல்லா ,பில்லா
சிவன்,சரவண பவன்
பிரமச்சாரி ,நித்தியானந்தன்
போலீஸ் ,திருடன்
ஆசிரியர் ,கொள்ளைக்காரன்
விஞ்ஞானி ,கோமாளி

சமுகத்தில்  எங்கும் பிம்பம்
எதிலும் பிம்பம் 

தன் பிம்பத்தை பார்த்து பயம்
வரும் போது கடவுள் பிம்பம் ஆறுதல் ..

பிம்பத்தை உள்வாங்கி பார்த்தேன்
உண்மை பிம்பத்தில் இல்லை ..
பிம்பம் உண்மை இல்லை ..

மனமே .....
நல்ல  பிம்பங்களில் வாழ   பழகிவிடு ...
உயிரை  உணர வேண்டுமெனில்
பிம்பத்தை  கடந்து போகவும் கற்று விடு ...
முன் பின் முரணான குறிப்பு : 
ஹலோ பாஸ் .....எங்க போறீங்க ......வோட் எல்லாம் போடாதீங்க ....எனக்கு தான் இந்த பிரபல பதிவர் பிம்பம் எல்லாம் பிடிக்காதுன்னு  சொல்லிட்டேனே...

அப்புறம் ஒரு நாளைக்கு இந்த கவிதை(!?) எல்லாம் சரித்திரத்தில வரும் ....எனக்கு சிலை வைப்பாங்க .....இதெல்லாம் எனக்கு பிடிக்காது ...ஆமா சொல்லிபுட்டேன் .....

வலை யுலக பெருங்குடி மக்களே ...உங்களுக்கு ஒரு முக்கியமில்லாத அறிவிப்பு  :

 பெரும் மதிப்புக்கும்,மரியாதைக்கும்  உரிய   தனி காட்டு ராஜா(தம்பி ...நீ எந்த காட்டுக்கு ராஜா என்பன  போன்ற கேள்விகள்  கேப்போர் மீது குட்டி சாத்தான்  ஏவி விடப்படும் -எச்சரிக்கை )  அவர்கள் யுக கோபிகா -வின் எண்ணங்கள் என்ற பெயரில் ஒரு ப்ளாக் எழுதினார் (அட ....பொறுக்கி பயலே .. என முனு முனுப்பவர் களுக்கு  வேலாயுதம் பட டிக்கெட் இலவசமாக அனுப்பி வைக்கப்படும் )....

நீங்கள் ஏன் இந்த மாதிரி  ஒரு பெண் பெயரில் ஒரு ப்ளாக் எழுத ஆரம்பித்தீர்கள்  என்று அவரை யாருமே  கேக்காத காரணத்தால் அவராகவே  பின் வருமாறு  உளறுகிறார் ....

தனி காட்டு ராஜா அவர்கள் முதலில் ப்ளாக் -கில் கவிதை என்ற பெயரில் கிறுக்கி கொண்டு இருந்தார் .ஒரு பின்னுட்டம் கூட வராததால் விஜய் படம் பார்த்து விட்டு  தியேட்டரய் விட்டு வெளியே  வரும் போது ஒரு விவரிக்க முடியாத உணர்வு வருமே ...அது போன்ற ஒரு உணர்வை அடைந்தார்....


ஒரு பெண் அவர்கள்  மூன்று  வரியில்  'முரண்'  என்று கவிதை எழுதி இருந்தார்கள் [தம்பி ....அவுங்க கவிதை நல்லா இருந்திருக்கும்  என்று சொல்லுபவர்கள் கடத்தி வரப்பட்டு ...ஒரு நாள் முழுவதும்  T.V  இல் விளம்பரம் மட்டும்  பார்க்குமாறு செய்து  சொன்னதை வாபஸ் பெருமாறு  வற்புறுத்த படுவர் .............எனக்கு தமிழ் -ல  புடிக்காத வார்த்தை உண்மை.....] 
அட.... அதற்கு 20  பின்னுட்டம்......

தனி காட்டு ராஜா   அரசவையை  கூட்டினார்(என்ன ....துடப்பத்துலையா தம்பி? ).சிப்பாய்களுடன்  ஆலோசனை செய்தார்.சோதனை முயற்சியாக கோபிகா உருவானாள்...........

கோபிகா-விற்கு நல்ல வரவேற்பு  தனி காட்டு ராஜா  எதிர் பார்த்தது போலவே......

சமுகத்தில்  எங்கும் பிம்பம்
எதிலும் பிம்பம்  

என்ற உண்மையை உணர்ந்தார் ......தெளிந்தார் ............அந்தப்புரத்தில்   ஞானோதயம் பெற்றார் .......


ஒரு முக்கிய அறிவிப்பு ....சொல்லுபவர் முக்கிய மில்லாத  தனி காட்டு ராஜா

யுக கோபிகாவை  பின்வருமாறு விமர்சனம் செய்து பின்னுட்டம் இட்ட அண்ணன்  "அகம் புறம் " சுரேந்தரன்  அவர்கள் வாழ் வாங்கு  வாழுமாறு  வாழ்த்தி .....இனிமேல் பஸ் -இல் செல்லும் போது டிக்கெட் எடுத்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்  கொள்ளு மாறு வேண்டி  விரும்பி கேட்டு கொள்ளப் படுகிறார்கள் ......

////ரசித்தேன்.. சில கவிதைகள் புரட்சிகரமான சிந்தனைகைளை தாங்கிவந்ததால் இன்று முதல் நீங்கள் புரட்சி தலைவி என்றழைக்கப்படுவீர்கள். இந்த பட்டத்தில் வேறு யாராவது இருப்பாராயின் நீங்கள் இளைய புரட்சி தலைவி என்றழைக்கபடுவீர்கள்... (ஆட்டோவெல்லாம் வேண்டாங்க.. நீங்க யுவகிருஷ்ணாவை அனுப்பிச்சாலே போதும்...)////


யுக கோபிகா -வின் எண்ணங்கள்   -இல் followers  எல்லாம்  பெண்மையை மதிப்பவர்கள் என்று எடுத்து கொள்ளப் படுகிறது......

 எல்லா பதிவிலும் பின்னுட்டமிட்டு  ஊக்குவித்த  LK அவர்கள் பெண்ணியம் போற்றுபவர் என்று பாராட்ட படுகிறார் ....
[தல , அநியாத்துக்கு நல்லவனா இருந்து தனி காட்டு   ராஜா வோட இரண்டு  பதிவ remove  பண்ண வச்சுடிங்கலே......]

 கிண்டி கத்திபார சந்திப்பில்   நேரு சிலைக்கு அருகில்  தனி காட்டு ராஜா -வுக்கு  சிலை  ஒன்று  சிரசாசன நிலையில்(பெண்மையை போற்றி  வழிபடுபவர்  என்பதால் )  வைக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப் படுகிறது ...... ......


சரி அதெல்லாம் விடுங்க ........இந்தமாதிரி வேஷம் போட்ட தனி காட்டு ராஜாவுக்கு  உங்கள் கடுமையான  கண்டனங்கள்.....அல்லது லேசான கண்டனங்கள்  அல்லது மிக லேசான கண்டனங்களை  தெரிவித்து விடுங்கள்.....

கடுமையான கண்டனம் போதாது ...தண்டனை தந்தே ஆக வேண்டும்  என்று விரும்புவோர்  கிழ்க்கண்ட தண்டனைகளில்  ஒன்றை பரிந்துரை  செய்யலாம் ...


1.தன்னை தானே  தனி காட்டு ராஜா  என்று கூறி கொல்வதால்  காட்டுக்கு சென்று  தனி காட்டு ராணி யான  பெண் சிங்கத்தை "கிச்சு கிச்சு " மூட்டி சிரிக்குமாறு  செய்ய வேண்டும் .

2. காட்டில் புலியை  பார்த்து  அதன் முகத்துக்கு  நேராக  முகம் பார்க்கும் கண்ணாடியை  காட்டி  "புலிக்கு   பிறந்தது  பூனையாகுமா? " என்று ஒரு கேள்வியை  கேக்க வேண்டும் .

3.சிம்பு -வின்  அனைத்து பஞ்ச் டைலாக் -கையும்  ஜெர்மன்  மொழியில்   மொழி பெயர்த்து  கண்டனம் தெரிவிக்கும்  வலை பதிவர்களுக்கு  அனுப்பி வைக்க வேண்டும் .

4.கொசு ஒன்றை உயிருடன்  பிடித்து  அதன் காதில்  " நான் ஒரு பிரபலமில்லாத வலை பதிவர் ...எனது பெயர் அரை குறை விகடனில்  வந்துள்ளது " என்று 1008  முறை  கூற வேண்டும் ....ஒரு வேலை கொசு இறந்து விட்டால்  மீண்டும்   வேறு ஒரு கொசுவை   உயிருடன்  பிடித்து முதலில்  இருந்து  சொல்ல வேண்டும் .

5.கேபிள் சுதாகர் என்ற பிரபலமில்லாத  வலை பதிவரின் கேபிளை  திருடி வந்து வீட்டில் ஒளித்து வைத்து கொள்ள வேண்டும் .அவர் விவரம் தெரிந்துகேட்டால் கூட கேபிளை கொடுத்து விட கூடாது .

6.தமிழ்  வலையுலக குடும்பத்தின் பாமிலி சாங்  ஒன்றை தாயார் செய்து  அதை அனைத்து தமிழ் வலை யுலக குடும்பத்துக்கு  அனுப்பி வைக்க வேண்டும் . இதன் மூலாம் ஏர்போர்ட் ,ரயில்வே ஸ்டேஷன்  போன்றவற்றில்  நீங்கள்  பாமிலி சாங் பாடுவதன் மூலம் அனைவரும்  ஓன்று சேர்ந்து கொள்ளலாம் .

7.கடவுள் இருக்கிரார இல்லையா  என்று எதாவது ஒரு மன நல காப்பாகத்துக்கு சென்று விவாதம் செய்ய வேண்டும் .விவாதத்தில்  வெற்றி பெற்றால்  முடிவான விளக்கத்தை  அனைத்து வலை பதிவர் மற்றும் கடவுளுக்கு அனுப்பி வைக்கவும் . தோற்று விட்டால்  மன நல காப்பாகத்தில் தானும் ஒரு அங்கமாக சேர்ந்து விடவும் .....


-தனி காட்டு ராஜா (எ) கோபி

புதன், 11 ஆகஸ்ட், 2010

நிர்வாண விளையாட்டு

காதல்கொண்ட காமப் பார்வையில்
நிர்வாணம் விளையாட்டுதான்..
கிருஷ்ணன்களுக்கு

வெற்று காமப் பார்வையில்
நிர்வாணம் வக்கிரம்தான் ..
துரியோதனன்களுக்கு

வக்கிரப் பார்வையில்
நிர்வாணப்படுத்துதல்தான் வெற்றி..
துச்சாதனன்களுக்கு..லட்சியம் 
காதலா ?
லட்சியமா  ?
எது முக்கியம் என்று கேட்டாய்....
நான் லட்சியம் தான் முக்கியம் என்றேன் .....

என்னை பார்த்து  முறைத்து விட்டு சென்றவளே
உன் லட்சியம் என்ன
என்று என்னைக்  கேட்டிருக்கலாம்..
நானும்  சொல்லி இருப்பேன்..  
உன்னைக் காதலித்து கொண்டே இருப்பதுதான்
என்  லட்சியம் என்று .....


பொய்க் காதலன்  நான் ...
'நான்' இருந்த போது
காதல் இல்லை....
காதலில்   இருந்த போது
'நான்' இல்லை .....
'நான் உன்னைக் காதலிக்கிறேன்'  
என்ற பொய் வார்த்தைகளை என்னிடமிருந்து
ஏன் எதிர் பார்க்கிறாய் ?

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

குடும்ப குத்து விளக்குகள்
Click on the image to view in original size....
ஏற்கனவே இட்ட படங்கள் Remove செய்ய பட்டு விட்டன ............

இது ஆறு(பீரு) தல் படம் .........

வந்து பாத்துட்டு  ஏமாந்து போயிற கூடங்கர நல்ல நோக்கம் தான் (??)

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

நாக ராஜ சோழன் M.A, 


பழனிச்சாமி  வயலில் வேலை செய்யும்
நேரம் போக மற்ற நேரங்களில்
கோட்டு,சூட்டு   டை-யுடன்  தான்
தென்படுகிறாராம் இப்பொதெல்லாம் ....

கலைஞர்  சாம்பிராணி  என்பவரின்
பேரக் குழந்தைகள்  கூட
தமிழ் வழி கல்வி தான் படிகிரனவாம்....
தமிழில் படித்தால் தான்   வேலை வாய்ப்பாம்
இலச்ச கணக்கில் சம்பளமாம் இப்பொதெல்லாம்....

நகரங்களில் இருந்த  எல்லா மக்களும்
கிராமங்களுக்கு வருவதால்
கிராமங்களில்  இட நெருக்கடி 
ஏற்பட்டு உள்ளதாம் இப்பொதெல்லாம் ....

விவசாய புரட்சி ஏற்பட்டதில்  இருந்து
விவசாயம் பார்க்கும் பையன்களை
தான் கல்யாணம் செய்து கொள்வேன்..... 
என்று  பெண்கள் தூங்காமலே
கனவு கான்கிரார்களாம் இப்போதெலாம்...

+2  படிக்கும் போதே  மாணவர்கள்
ஜாவா கற்று விடுவதால்
கணிப்பொறி வல்லுனர்கள் என்று பீலா விட்டவர்கலுக்கு 
பொறி கடலை விற்பவர்களை விட
மரியாதை குறைவு தானம் சமூகத்தில் இப்போதெலாம் ....   

மருதுவக் கல்லூரி பொறியியல் கல்லூரி
முதல்வர்களே மாணவர் வீ ட்டுக்கே வந்து
எங்கள் கல்லூரியில் வந்து சேருங்கள்..
என்று அழைப்பு விடுகிரார்களாம் இப்போதெலாம்....  

தனியார்  மருத்துவ மனைகளை விட
அரசாங்க மருத்துவ மனை களின்  வசதி
பல மடங்கு உயர்ந்து விட்டதாம்...
அரசாங்க மருத்துவர்களை  மக்கள் 
தெய்வத்தை விட மேலாகா மதிக்கிறார்களாம் இப்போதெல்லாம் ...

கைக்குட்டை ,துண்டு போட்டு
யாரும் பஸ்சில் சீட்டு பிடிப்பதில்லையாம்
எல்லோரும் Q -வில்  நின்று
ஏறுவதை பார்த்து எறும்பு கூட
அதிசயபடுகிறதாம்   இப்போதெல்லாம்...


USA ,சிங்கப்பூர் போன்ற நாடுகளில்
இருந்து  படிக்க,வேலை வாய்ப்பு தேடி
வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து
வருவதால் இதை குறைக்க என்ன வழி
என்று  முடிவெடுக்க முடியாமல்  
திணறிக்கொண்டு இருக்கிறதாம்  அரசு இப்போதெல்லாம்..  

சென்னை யில் டைடல் பார்க்கை
வாய் திறந்து பார்த்த காலம் போய்
கிராமங்கள் தோறும் "டைட்டானிக் பார்க்"
IT  பார்க்குகள்  மாட்டு கொட்டகை போல் பெருகி
விட்டதாம் இப்போதெல்லாம் ....  

 பள்ளிகளுக்கு  நோட்டு புத்தகம் வாங்கி தந்து
"சிறு உதவி"  என்று தன்னடக்கமாக கூறும்
தர்மவான்களுக்கு மதிப்பில்லையாம் ....
 ஏழை என்று  யாரும் இல்லையாம் இப்போதெல்லாம் ..


வேலாயுதம் பட போஸ்டர்  பாத்து எனக்கு பிடித்த
பைத்தியம் தெளிய 10 வருடம் ஆகிவிட்டது ....
அதற்குள் இத்தனை மாற்றங்களா ?

இதை எல்லாம் பார்த்தவுடன் மறுபடியும்  பைத்தியம்
பிடித்து விடுமோ என்று  அச்சத்தில்
இந்த மாற்றத்திற்கு எல்லாம் யார் காரணம்  என்று
பக்கத்து தெரு பஞ்சவர்ணத்திடம்  கேட்டான் ..........
நம் நாட்டின் தற்போதைய  தலைவர் 
"நாக ராஜ சோழன்   M.A," -வும்
அவரது துணைவியார்   "வல்லரசு"  -வும்  தான்  என்றாள்......

ஓடி போய் காலண்டரை பார்த்தேன்
1-04-2020  என்று காட்டியது .........
காலண்டரில் இருந்த பழனி மலை முருகன்
கோவணத்துடன் என்னை பார்த்து சிரித்தார் ........
பின் குறிப்பு :ங்..கொய்யால ...சுனைனா படத்துக்கும்  உன் கவிதைக்கும் என்னடா சம்பந்தம் -நு  கேக்க தோணுதா ?
அது வேற ஒன்னுமில்லங்க ....இந்தியா வல்லரசு ஆனா உன்ன நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்   அந்த பொண்ணு சொல்லுச்சு ...அது தான் .....

[பாஸ் ....மௌச(mouse )  உருவாதீங்க .... ....அடிக்கறதா இருந்தா  பிளாட்டினத்தால   என் ப்ளாக்-க   அடிங்க .....ஏன்னா....நாம வல்லரசு இந்தியனு காட்ட வேண்டாமா ...]