வியாழன், 23 செப்டம்பர், 2010

உயிரியல் WEDS காதலியல் ...III


நான் புதிதாக காட்டிய பூவை 
பார்த்து என்ன பூ என்று கேட்கிறாய்...
நானோ காதல் பூ என்கிறேன் ....
எங்கே பூத்தது என்று கேட்கிறாய்...
என்  இதயத்தில் என்கிறேன்  ....
எப்படி வளர்த்தாய் என்று கேட்கிறாய்...
நம் காதல் நினைவுகள் நீராய் ஊற்றி என்கிறேன் ....
இது காதல் பூவா இல்லை
காதுல பூவா என்று கேட்கிறாய்..
உன் கூந்தலில் சூடிப் பார் ....
அது சொல்லும் ..
"இது உன் காதலனின்  பூ என்று" என்கிறேன் .....

சிவனை பூவால் அர்ச்சனை செய்தால்
அது சிவ யோகத்தை தரும் என்பது
நெறைய பேருக்கு தெரியும் ...
நீ கூந்தலில்  சூடும் ஒவ்வொரு  பூவும்    
காதல் யோகத்தை பெறுவது எனக்கு மட்டுமே தெரியும் ...

என் காதல் நோய்க்கு
மயக்க மருந்து
உன் முத்தம் ...
நிரந்தர தீர்வு
நீ  என்னைக்  காதலித்து
கொண்டே இருப்பதுதான்...

உன் அருகில்  இருக்கும் 
ஒவ்வொரு ஷணமும்
நான் காதல்வாதி என்ற
பெயரில் உயிர் பெறுகிறேன்...
உன்னை பிரியும் ஒவ்வொரு ஷணமும்
எதார்த்தவாதி என்ற பெயரில்
வெற்று ஆசைகளில் உயிர் இழக்கிறேன்...

நீ பேசும் வார்த்தைகளுக்கிடையே
தொடர்ந்து வரும் மௌனம்
கூட நம் காதலையே  பேசுகிறது ..... 

புதன், 22 செப்டம்பர், 2010

உயிரியல் WEDS காதலியல் ...II


என் கனவுகளும் உன் காதலும் 
கொஞ்சி விளையாடுகின்றன .....
என் கனவுகளுக்கு களைப்பு வரும்போதெல்லாம்
நீயோ புன்னகை பூக்கிறாய்...
மீண்டும் என் கனவுகளோ  விளையாட கிளம்பி விடுகின்றன ...
நீ இப்படியே செய்து கொண்டிருந்தால்
நான் எப்போதுதான் அவற்றை என்
வீ ட்டிற்கு அழைத்து செல்வது ...!?

உன் அருகில் நான் வரும்போது கூட
எல்லா மழைதுளிகளும்
உன் மிதே விழுவேன் என அடம் பிடிக்கிறதே...
நல்லவேளை.. மழைத் துளிகளுக்கு உயிர் இல்லை
என்றுதான்  இதுவரை நினைத்து இருந்தேன்...
இப்பொழுதெல்லாம்  பயமாகவே  இருக்கிறது...
உன் மீது விழுந்தவுடன் அவை 
உயிர்த் துளியாக மாறி விடுமோ என்று ..!?


கவிதைக்கு பொய் அழகாமே..!?
உணமைதான் கவிதைக்கு அழகு
உன்னை பற்றி எழுதும் போது...


பிரம்மா எல்லா உயிர்களையும்
படைத்து விட்டு உன்னைப் படைக்கும்
போது தான் காதல் பற்றிய ஞாபகமே
வந்ததாமே ....!?
உயிரில் காதல் தோற்றுவிக்கும்  கலையை
பிரம்மனுக்கே கற்று தந்தவள் நீதானோ !?

பௌர்ணமி நிலவு  பூவாக
மாறிவிட ஆசை படுகிறதாம்..
ஏன் என்று கேட்டால்..
உன் கூந்தலில் ஒரு நாளேனும்
உயிர்ப்போடு வாழ வேண்டும் என்கிறது...

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

உயிரியல் WEDS காதலியல் ...
உன் கண்களிலோ உயிரை வழிய விடுகிறாய் ..
அதை உள்வாங்கும் என் கண்களோ..
உயிரை காதலாக்கி இதயத்தில் நிரப்புகிறது ..
என் இதயமோ ஒவ்வொரு சுவாசத்திற்கும்
நம் காதலை சொல்லி சொல்லியே துடிக்கிறது...  


உயிர்களுக்கு உயிர் தரும் உன் கண்களிலா ?
கனிகளுக்கு சுவை தரும் உன் உதட்டிலா ?
பூக்களுக்கு வாசம் தரும் உன் கூந்தலிலா ?
நிலவுக்கு வெளிச்சம் தரும் உன் புன்னகையிலா ?
எங்கே தான் நம் காதலை வைத்து உள்ளாய் என்று
கேட்டால் ..   உயிரில் என்கிறாய் ....
சரி..உன் உயிரை எங்கே வைத்து உள்ளாய் என்று
கேட்டால்..  அது தான் உன் உயிரில்  கலந்து விட்டதே என்கிறாய் .....


என்னை விட்டுவிட்டு என் மனம்
உன் பின்னாலேயே  வருகிறதே ....
நான் சொன்னால் தான் கேட்க மாட்டேன்கிறது ...
நீ யாவது அடித்து விரட்ட கூடாதா என்று கேட்டால்..
நீ இல்லாத நேரங்களில் அது தானே என் துணை...
என் துணையை  நான் எப்படி விரட்ட முடியும் என்கிறாய் ....   நீ நட்டு வளர்க்கும் மல்லிகை செடி ...
நீ நித்தம்  குளிக்கும் நீரோடை ...
நீ  தினம் தினம் வணங்கும் கடவுள் ..
அனைவருமே எனக்கு போட்டியாக
உன்னிடம் காதலை சொல்ல துடிக்கிறார்களாம்..!!
நீ என் காதலியா.. இல்லை..
காதல் என்பதே நீ தானோ ?   வெக்கம் கலந்த உன் முத்தம்
என் காதல் ஞானத்திற்கான
திக்' ஷை' .....  


வெள்ளி, 17 செப்டம்பர், 2010

நீ வேண்டும்....


உன் கண்களில் வழியும் உயிரை உணர வேண்டும் ..
உன் சுவாசம் என் சுவாசம்  ஆக வேண்டும்..
உன் கன்னத்தின்  சுவை என் உதட்டில் ஒட்டி கொள்ள வேண்டும்..
உன் காது மடல் மென்மையில் நான் காலம் கடக்க வேண்டும்..
உன் மொழியில்   காதல் மொழி கற்று கொள்ள வேண்டும் .. 
உன் கூந்தல் மட்டும் நம்  போர்வையாய் மாற வேண்டும் .. 
உன் இதயத்திடம்  என் இதயம் உன் பெயர் சொல்லி துடிக்க வேண்டும் ..   
உன் இடையில் என் ஆணவம் வழுக்கி சரிந்து விழ வேண்டும் ..
உன் உயிர் வாசலில் என் உயிர் தொலைந்து போக வேண்டும் ..
உன் கால் கொழுசு  ஓசையில் சங்கீதம் பயில வேண்டும் ..
என் மனம்  கனவாக கலைந்து போக வேண்டும் ..
நான் உயிர் வாழ நீ  வேண்டும் ..

சுனைனா:
போடா போடா புண்ணாக்கு ...நீ போடாத தப்பு கணக்கு.... 

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

ராதா கிருஷ்ணா காதல்...


இந்தப் பதிவு கொஞ்சம் வள வள என்று இருக்கும்...பொறுமை இருந்தால் படித்து பார்க்கவும். கொஞ்சம் சீரியசான காமடி பதிவு,நம் வாழ்க்கையை போலவே.பதிவு கோர்வையாக இருக்காது.


மகாபாரதம் புராணகதை...கிருஷ்ணன் என்ற கதா பாத்திரம் என்பதெல்லாம் பொய்...  என்ற நினைப்பிற்கு அப்பாற்பட்டு நான்   புராணகதையை மையப்படுத்தாமல்  உயிரை மையப்படுத்தி எழுதுகிறேன்.மதத்தை  மையமாக  வைத்து இதை  நான் எழுதவில்லை.எனவே மதம் சம்பந்தபட்ட  விவாதத்தை எழுப்பாமல் இருந்தால் நல்லது. விவாதத்தை எழுப்பினால் ரொம்ப நல்லது. இவை அனைத்தும் என் சுய  புரிதல்(புராணம்) மட்டுமே மற்றும் ஓஷோ வின் கருத்துகளை சார்ந்தும் என்னுடைய 12 வயது  அறிவிற்கு தகுந்தவாறும்   இருக்கும்.
   

கிருஷ்ணன் ஒரு சிவ ஞான ராஜ யோகி.[அப்படி என்றால் என்ன என்று தெரிய வில்லையா?].கிருஷ்ணன் சிறு வயதில் இருந்தே சிவ பக்தன் கூட.

ஒரு காலத்தில் ஒரு மனிதன் இருந்தான்.அவன் வாழ்கையின் நிலைய்ற்ற தன்மையை உணர்ந்தான்.அவன் தன் சுய முயற்சியால் போராடி யோக கலை மூலமாக ஞானோதயம் பெறுகிறான்.அவன் தான் சிவன்.சிவன் ஒரு ராஜ யோகி .அவன் தன்னுடைய சிஷ்யர்கள் ஏழு பேருக்கு தீக்ஷை தருகிறான்.அவர்களும் தன் சுய முயற்சியால்  ஞானோதயம் பெறுகின்றனர்.இவ்வாறு தான் யோக கலை பரவுகிறது.எல்லா   யோகிகளுக்கும்  சிவன் தான் குரு.[யோகி என்ற வார்த்தையை கேட்டவுடன் நித்தியானந்தா ஞாபகம் நமக்கு வந்தால் அது நாம் வாழும் காலத்தின் துரதிஷ்டம்.......] பதஞ்சலி  யோக சூத்திரத்தில் கடவுள் பற்றி எங்கேயும்  கூறப்படவில்லை.அதில் மனிதன் -யோகம் பற்றி மட்டுமே கூறப்படுகிறது. பதஞ்சலி  யோக சூத்திரத்தை நான் அறியவில்லை .அதன் சாராம்சம் அறிவேன்.
இந்த பிரபஞ்சத்திற்கு கடவுள் என்று யாரும் இல்லை.இந்த பிரபஞ்சத்திற்கு  மையம் என்று எதுவும் இல்லை. அப்படி மையம் என்று எடுத்து கொண்டால் ஒவ்வொரு அணுவும் மையம் தான்.
சிவன் நம்மை  போலவே பிறந்தான்.ஆனால்  அவனின் தேடல் உயிர் தன்மையின் உச்சதிற்கு அவனை எடுத்து சென்றது.அடிப்படை உண்மை இவ்வாறு தான் இருந்திருக்க  வேண்டும்.

 இங்கே யோகம் என்பது எல்லாவற்றையும்  இணைக்கும் முயற்சி .உதாரணத்துக்கு  அம்மா தன் குழந்தை மீது உள்ள அன்பின் மூலம் தானும் தன் மகனும் ஓன்று என்பது போலவே உணர்வாள். அன்னை தெரசா போன்றவர்கள் தன்னை தன் அன்பின் மூலம் பல உயிர்களுடன் இணைத்து கொள்கிரார்கள்.

ஆத்திகர்கள் தன் கடவுள் கொள்கை  மூலம்  ஒரு குறிப்பிட்ட குழுவுடன் இணைந்து கொண்டு மற்றவற்றில் இருந்து பிரிகிறார்கள்.இவர்கள்   யோகத்திற்கு  எதிரானவர்கள் .
நாத்திகர்களும்  தன் கொள்கை மூலம்  ஒரு குறிப்பிட்ட குழுவுடன் இணைந்து கொண்டு மற்றவற்றில் இருந்து பிரிகிறார்கள்.இவர்களும் யோகத்திற்கு  எதிரானவர்கள்.
ஆத்திகர்கள் மூடத்தனம் அதிகம் கொண்டவர்களாகவும் ..நாத்திகர்கள் வெறுப்புணர்வு அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பதை பார்க்கலாம்.
அன்பு,புரிதல் அதிகம் உள்ளவர்கள் யோகதன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்  என்பது என் புரிதல்.

பின் கடவுள் என்பது எவ்வாறு உருவானது.?
சுய சிந்தனை ,தேடல் அற்ற  சின்ன பசங்க சிவனுக்கு பக்க வாத்தியம் ஊத ஆரம்பித்து விட்டனர்.இவர்கள் ஆத்திகர்கள்.
சுய சிந்தனை ,தேடல் அற்ற வேறு வகையான  சின்ன பசங்க   சிவனையும் ,சிவனுக்கு  பக்க வாத்தியம் ஊதுபவர்களை தீட்டி தீர்க்க ஆரம்பித்தனர்.கடவுளை காட்டு,உப்புமாவை  காட்டு என்று விவாதம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.இவர்கள் நாத்திகர்கள்.
இந்த இரு வகையான சின்ன பசங்க  ஒரு போதும் உயிர் தன்மையின் உச்சத்தை தொடுவதில்லை.

சிவன் , கிருஷ்ணன் இருவரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்று நான் பார்க்கவில்லை.அவர்கள் இருவரும் இந்திய நாட்டில் பிறந்த அதி முக்கியமான யோகிகள்.
சிவன் முதல் யோகி. கிருஷ்ணன் சிவ வம்சத்தில் வந்த மிக முக்கியமான யோகி.
அவர்கள் இருவருமே சமுகத்தால் கடவுளாக உயர்த்த பட்டனர்.

 இந்த பிரபஞ்சத்தில் யாரையும் நான்  அவதார புருஷனாகவோ....அண்டர்வேர் புருஷனாகவோ  நினைக்கவில்லை.
ஆனால் இந்திய நாட்டில் சிவன், கிருஷ்ணன் இருவரும் குறிபிடதக்கவர்கள் . .எந்த காலத்திலும் நான் சிவனுக்கு மட்டுமே தலை வணங்குவேன்.[இருந்துட்டுப் போ ...இப்ப அதுக்கு என்ன ?].சிவனே என் குரு.[ம்...இது சிவனுக்கு தெரியுமா?]

எவ்வளவு பெரிய மகான் என்றாலும் என்னை பொறுத்த வரை மாக்கானே, ஞானோதயம் அடையாதவரை. [இதை நான் ஈகோ- வால் சொல்ல வில்லை .என் உயிரில்  இருந்து சொல்லுகிறேன்."நான் யாருடைய    ஈகோ-வுக்கும் தலை வணங்க மாட்டேன் .ஆனால் ஒவ்வொரு உயிரையும் உயிராக பார்க்கிறேன்" என்ற அர்த்தத்தில் சொல்ல வருகிறேன் ]

சரி இனி கதையின் நாயகி-நாயகன்  ராதா-கிருஷ்ணன் இருவருக்கு வருவோம்.
கிருஷ்ணனை  ஆண்மையின் உச்சம் என்று சொல்லலாம் .ராதை-யை  பெண்மையின் உச்சம் என்று சொல்லாம்.இயல்பாகவே  கிருஷ்ணனும் ராதை-யும்  காதலில் விழுகின்றனர் . தங்கள் உயிரின் முழுமை தன்மையை  பரி பூரணமாக   உணர்கின்றனர்.
அங்கே  கிருஷ்ணன்   என்ற ஆண் அடையாளமும் ராதை  என்ற பெண் அடையாளமும் முழுமை(சிவம்) யில்  கரைந்து விடுகிறது.  கிருஷ்ணன்  ராதையிடம் பிருந்தாவனத்தில்   ராஜ லீலா-வின் போது  உணர்ந்த முழுமையை தன்னுடைய பனிரெண்டாவது   வயதில் கோவர்த்தன மலை மீது பரிபூரனமாக பெறுகிறான் .இதன் பெயர் தான் தன்னை உணர்தல்.ஞானோதயம்.
[இதெல்லாம் உனக்கு எப்படி தெரியுமா ?-கோவை வட்ட செயலாளர் வண்டு முருகன் என்னிடம் சொன்னார் ]

கிருஷ்ணன் ஒரு காமுகன்,etc என்று ஒரு சிறு பயல் [என்னை விட ] வோர்ட் பிரஸ் தளத்தில் எழுதி இருந்ததை  படித்தேன்.
அவன் கோபியர்களின் ஆடைகளை எடுத்து  ஒளித்து வைத்து கொள்வானாம் .அதனால் காமுகன் என்று அந்த சிறுவர் சொல்லி இருந்தார்.
  கிருஷ்ணன் ரொம்ப ரசனை  உடையவன் .பெண்களுக்கு அவன் மேல் கோவம் இருந்து இருந்தால் அவனை அங்கேயே  அடித்து துவைத்து இருப்பார்கள்.அவனும் அடுத்த முறை அது போல் விளையாடி இருக்க   மாட்டான் .
அவன் தான் அவ்வாரு செய்வான் என்று தெரியுமே.ஏன் கோபியர்கள் ஆடைகளை குள கரையில் போட்டு செல்ல வேண்டும்.? கோபியர்கள் கிருஷ்ணனின் விளையாட்டை விரும்பி இருக்க வேண்டும்.
கிருஷ்ணனோ தன் சிறு வயதில் தான் அவ்வாரு செய்தான்.
ஒவ்வொரு வயதிலும் வெவ்வேறு  விளையாட்டு(வில்லன்களை கொள்ளுதல், நிறைய கல்யாணம் , குருசேத்தரம்  போர்,பகவத் கீதை etc ] செய்தான் .அவன் வெறும் காமுகனாக மட்டும் இருந்தால் எப்படி இத்தனை விளையாட்டுகளை செய்ய முடியும்.

நிர்வாணத்தின் தன்மை பற்றி அவன் வெகுவாக உணர்ந்து இருந்தான் .அதனால் தான் அவன்  பாஞ்சாலி துகிலுரிய  பட்ட போது உதவுகிறான் .[அப்போதே சுடிதார்,etc கண்டுபிடித்து இருந்தால் ...பாரத போரே வந்து  இருக்காது .பகவத் கீதை வந்து இருக்காது...நீங்களும் இந்த மொக்கை பதிவை படிக்க வேண்டி இருந்து இருக்காது..ஒரு வேலை இதன்  பெயர் தான் விதியோ ?]
 
கிருஷ்ணனை பெண்கள் மட்டும் இல்லை அனைத்து தரப்பினரும் [கொள்கை  வாதி என்ற உயிர்  கொலை செய்யும் சிறு பயல்களை தவிர ] விரும்பினர்.
கிருஷ்ணன் ஈகோ  அட்றவன்.அவனால் முழுமையாக எல்லோரிடமும் இருக்க முடிந்தது . நாம் தான் அப்படி இல்லயே. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மதிப்பீடு வைத்து கொண்டு அலைகிறோம்.

கிருஷ்ணன் முழுமையானவன்.என்றும் அவன் காதலில் இருந்தான்.[நம் தமிழ் சினிமாவில்  காட்டப்படும் மொக்கை காதலுக்கும்  கிருஷ்ணனின் காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .] 
ராதை முழுமையானவள்.
கிருஷ்ணன் ராதை -யை  தன்னுடைய 12  வயதில் பிரிந்து செல்கிறான்.ராஜ லீலா -வின் போது ராதை கிருஷ்ண-னின் புல்லாங்குழலை  வாசித்தபடி ஆழ்ந்த நடனத்தில் இருக்கிறாள்.அப்போது அவளை விட்டு பிரிந்து செல்கிறான்.[இதே தமிழ் சினிமாவாக இருந்தால் இந்நேரம் ஒரு ஒப்பாரி சாங் போட்டு விடுவார்கள்]  அதன் பின் அவளை பார்பதற்கு ஒரு முறை கூட அவன் வரவில்லை.அதன் பின்  ஒரு முறை கூட புல்லாங்குழலை  கிருஷ்ணன் வாசிக்கவே இல்லை .[நீ என்ன பின்னாடி இருந்து பார்த்தாயா ?]   
ராதை -யும் கிருஷ்ணனை தேடி செல்ல வில்லை.வேறு ஒருவரை மணந்து கொண்டாள்.[இங்கே தான் நெறைய கொள்கை வாத சிறு பயல்கள்   ராதையை ஒழுக்கமற்றவள் என்று திட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.தினம் தினம் எத்தனையோ பேர்கிட்ட ஏத்து வாங்கற பயலுக  இப்படி தானே திட்டி தீர்த்துக்க முடியும்.]
கிருஷ்ணன் -ராதையின் காதல் வடிவம் கடந்து இருந்தது.
கிருஷ்ணனை பல மணம் செய்து கொண்டவன் என்று யேசுவோர் பலர். [ அமையற ஒன்னும் டார்சர் கேஸ் -சா இருந்தா  வேற என்ன பாராட்டவா முடியும் ?]

கிருஷ்ணனால் பெண்மையை  வடிவம் கடந்து உணர முடிந்தது.அதனால்  எல்லா பெண்களிடமும் காதலோடு வாழ முடிந்தது.

கணவன் மனைவி என்ற பெயரில் நாம் என்ன காதலா செய்கிறோம் .வியாபாரம் தானே செய்து கொண்டு இருக்கிறோம். முதலில் இந்த சாதி வெறி பிடித்த சிறு பயல்களை  எல்லாம் பிடித்து மாட்டு வண்டியில் ஏற்றி  ஒஸாமா பின்லேடனிடம் அனுப்பி வைக்க வேண்டும். கல்யாணத்தில் சாதி மட்டுமா வருகிறது,பணம்,பதவி ,வீடு,etc....இதன் அடிப்படையில் செய்யும் கல்யாணத்தில் காதல் எங்கே வரும்?ஒரு வேலை மனைவி அருகில் இல்லாத நேரத்தில் தான் காதலே வரும் என்று நெனைக்கிறேன்.
 [இதெல்லாம் தனி காட்டு ராஜாவுக்கு நடக்காதுனு  நெனைக்கிறேன் ...ஆனால்  நடந்துருமோனு பயமா இருக்குது...USA -வுல பொறந்து இருக்கனும்.....தெரியாத்தனமா போயும்போயும் ஈரோடு மாதிரி ஒரு மொக்கை ஊருலயா  பிறக்கணும் ?பெங்களூர் ok.சென்னை ஈரோடு மாதிரி மொக்கை யான ஊர். சமீபத்தில் பீச் -ல கூட இந்த  காவல் துறை நண்பர்கள் தொல்லை சாஸ்தீயாம் ..வருங்காலத்தில் Living together லைப் தான் சக்கை போடு போடும் என நெனைக்கிறேன்.இதற்கு நான்  முழு ஆதரவு   தருகிறேன்.]


ராமன் ஒரு தட்டையான One dimensional மனிதன்.பாதுகாப்பான வியாபார சிந்தனை அதிகம் உள்ள பெண்கள் ராமன் போன்ற ஆணை விரும்புவர்.
கிருஷ்ணன் Multi dimensional மனிதன்.காதல் உணர்வு நிரம்பிய பெண்கள் கிருஷ்ணன் போன்ற ஆணை விரும்புவர்.
நான் அறிந்த வரையில் ஆண்களில் 99% பேர் ஆழ் மனதில் கிருஷ்ணன்.மேல் மனதில்(சமுகத்தில்)  ராமன்.

உதாரணதுக்கு ஆண்களில் உள்ள கிருஷ்ணன் % [என் கண்டுபிடிப்பு .....ஹி..ஹி.. ]

ரஜினி  98 %
கமல்   97 %
அஜித்   99 %
தனி காட்டு ராஜா 99.99% [ 100 % போட்டுக்கிட்டு தற்பெருமை பேசிட்டு திரியறவன்  நான் கிடையாது..அதுக்கு வேற ஆள பாருங்க ....] 
விஜய் 80 %
வெண்ணிற ஆடை மூர்த்தி 5 %

ராம ராஜன்   -மைனஸ் 20 %
விஜய  டி.ராஜேந்திரன் - மைனஸ் 90 % [என்னை பொறுத்த வரையில்] .........ஆனால பெண்கள்  மத்தியில் 98 % [ தலைவரின்  தங்கச்சி சென்டிமெண்டில் மயங்காத பெண்களே கிடையாதாமே   தமிழ் நாட்டில் .........
அது என்ன இவரு ஹீரோயின தொடவே மாட்டாராமே .......எனக்கொரு  சந்தேகம் ...கேட்டா  கோவிச்சுக்க கூடாது.....சிம்பு -வ பத்திதான் .....]  
ஒவ்வொரு பெண்ணும் ராதை தான் .என்ன % தான் பெண்ணுக்கு பெண் மாறு படும். 

சீதை கூட ராதை போன்றவள் தான் காதல் உணர்வில் .ராமன் மேல் தான் எனக்கு சந்தேகமாக உள்ளது.அவன்  ஆழ் மனதில் சந்தேகப் பேர்வழி -யாக  இருந்திருப்பான் என்று தோன்றுகிறது. 

பெண்களில் உள்ள ராதை (அன்பு உணர்வு,பெண்மை ,etc) % கண்டுபிடிப்பு ....[ஹி ..ஹி ..இதுவும் என் கண்டு பிடிப்பு தான் ]

 ஒவ்வொருவருக்கும் அவர்கள் அம்மா -100 % [அன்புணர்வில் ராதை ...]

கீழ்க்கண்டவர்களில்  முதல்  ஆறு பேர்    என்னிடம் காதலை  சொன்னார்கள் ...அவர்கள் என்னிடம் நடந்து கொண்ட விதத்தை வைத்து என் கண்டு பிடிப்பு....

என் அருமை பெருமை பற்றி யார் சொன்னார்களோ  தெரியவில்லை ?தினம் தினம் போன் மேல போன் ..

[கீழ் கண்டவர்கள்  அழகில் மட்டும்  ராதைகள்....  ]

சுனைனா [99 .99 %]
பாவனா [99 .98 %]
அனுஷ்கா[99 .97%]
அசின் [99 .96 %]
தமன்னா[99 .95 %]
நமீதா [ 99 % ]

கோவை சரளா [50 % ]
சொர்ணாக்கா -மைனஸ் 75 %
     

என்னை பொறுத்தவரை ஒழுக்கம்  உயிரில் இருந்து வர வேண்டும் .பிற உயிர்   சார்ந்து இருக்க  வேண்டும். செத்து போன  கொள்கைகளில் இருந்து வர கூடாது.சில சமயம் புரிதல் அதிகம் உள்ளவனை கொள்கை வாதி என  நினைத்து கொள்கிறார்கள்.[தனி காட்டு ராஜாவுக்கும் கொள்கைக்கும் உள்ள சம்பந்தம் சூப்பர் ஸ்டார்க்கும் டான்ஸ்-க்கும்  உள்ள சம்பந்தம் போல வெகு தூரம் .]

காதல் என்பது வடிவம் கடந்தது.காதல்  ராதை-கிருஷ்ணன் போல முழுமை பெற்றது.
என்னை கேட்டால்[அது தான் யாருமே கேக்கறதில்லையே] ...கிருஷ்ண ஜெயந்தியை காதலர் தினமாக கொண்டாடலாம் என்று சொல்லுவேன்.
எதோ இளவயதில் தான் காதல் வரும் என்பது போல ஒரு மாயை தற்போது நிலவி வருகிறது.
அமீபா  முதல்   டினோசார் வரை எல்லா உயிருக்கும் எல்லா வயதிலும் காதல் நிலவும் என்று தோன்றுகிறது.உங்களுக்கு என்ன தோன்றுகிறது.[ வேற வேலை நெறைய இருக்கு என்றா ?] 

ஓஷோவின் -கிருஷ்ணா-கிருஷ்ணா - (ஐந்து பாகங்கள்)  புத்தகங்களை  படித்து பாருங்கள் .நன்றாக இருக்கும்....

 
 

        

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

பதிவுலகில் நான்..பதிவுலகில் நான் என்ற தொடர் பதிவிற்கு அழைத்த வலையுலக  நண்பர் மார்கண்டேயன் -க்கு  .. நன்றி.....நன்றி.....

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

தனி காட்டு ராஜா

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

பெயர் என்பதே பொய் தானே ....உண்மை பெயர் என்று ஏதாவது உண்டா ?

சரி ....விடுங்க ...மகான்,மாக்கன் என   யாருடைய கொள்கை,புண்ணாக்கு எதையும் ஏற்றுக்  கொள்ளாதவன் ,சுய புத்தியின் வழியே செல்பவன்  என்ற அடிப்படையிலும்  என்னுடைய பெயரின் முதல் எழுத்து "கோ" என்பதால்  கோ என்றால் அரசன் அல்லது  ராஜா என்ற பொருளில் எனக்கு நானே  தனி காட்டு ராஜா என பெயரிட்டு கொண்டேன்.

3 .நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

தமிழ் வலைப்பதிவு சென்று ஒரு முறை காலடி எடுத்து  வைத்து பார்த்தேன்."எவன்டா  அறிவு கெட்ட பயல் ...
மானிட்டர் மேல கால வைக்கிறது என்று அலுவலகத்தில் கத்தினார்கள் ...."அது முதல்   தமிழ் வலை பதிவில் காலடி எடுத்து வைப்பதில்லை. 

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?
தினமும் காலை ஆறு மணிக்கு ஒவ்வொரு தெருவாக சென்று  "வலைப்பதிவு படிக்கலையா ....வலைப்பதிவு ....தனி காட்டு ராஜா  வலைபதிவு....சூடான ..சுவையான செய்திகளுக்கு......தமிழகத்தின் நம்பர் 1  வலைப்பதிவு " என்று கூவுவேன் .

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சொந்த விஷயம் என்றால் என் பதின்ப வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.
ஏன் என்றால் நம்ம வலைபதிவு அண்ணன் சுரேந்திரன் எழுதுமாறு  கேட்டு கொண்டார்.
விளைவு என்றால் எனக்கு ஒன்றும் இல்லை ...வேண்டுமானால் பதிவை படித்தவர்களுக்கு தலை வலி வந்து
இருக்கலாம். 

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகத் தான் இதை ஆரம்பித்தேன்.   பதிவின் மூலம் சம்பாதித்து இந்தியாவின்  கடனை அடைத்து  நம் நாட்டை வல்லரசு ஆக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம்.இது தான் என் பொழுது போக்கு.     

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?
இரண்டு. இரண்டுமே தமிழ் தான் .நான் எல்லாம் இங்கிலீஷ் -ல எழுத ஆரம்பிச்சா நாடு தாங்காது.
தனி காட்டு ராஜா
யுக கோபிகாவின் எண்ணங்கள்

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன் ?

இயல்பாகவே சமுகத்தின் மீது  இருக்கும் கோபம் தான் சில பதிவுகளில்  பின்னுட்டமாக வெளி படும்.
மற்ற படி தனி பட்ட கோபம் ,பொறாமை என்று  எதுவும் கிடையாது.
முக்கியமாக பெண்கள் பதிவு என்றால் ஓடிப்  போய் பின்னூட்டம் இடும் வலை பதிவர்களை கண்டு ஆரம்பத்தில் எரிச்சல் பட்ட துண்டு.
சிலர் அருமை என்று பின்னுட்டம் போட்டு விட்டு தான் பதிவையே படிப்பார்களோ என்று சந்தேகம் கூட   உள்ளது. [இது யுக கோபிகா என்னிடம் சொன்னது ]
இதே ஆண்கள் புதுப் பதிவு ஆரம்பித்தால் ....இம்....ஒரு பின்னுட்டம் கூட தேறாது. 
 
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

அகம் புறம் வலை பதிவர் சுரேந்திரன் அவர்கள்.
அவரைப் பற்றி- நல்லவரு ,வல்லவரு ,நாலுந் தெரிஞ்சவர் ......[5,6 தெரியாதவர்] 
அந்த பாராட்டை பற்றி -தெரியாத்தனமா  பாராட்டிவிட்டார் என்று நெனைக்கிறேன். 

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

என்னை பத்தியா....?
ம்.....வல்லவனுக்கு வல்லவன்  ...முரட்டு காளை...போக்கிரி ராஜா ...
ம்..... நான் ரொம்ப சீரியசான ஆளு .....ரொம்ப கண்டிப்பானவன் .....
ம் ...அப்புறம் ....நான்  Straight forward.... backward....left...right..reverse.....
மேல சொன்னதெல்லாம் வில்லன் களுக்கு .....
மற்ற படி நான் "நாட்டுக்கு ஒரு  நல்லவன்" குழந்தை மற்றும் பெண்களுக்கு!!!