வியாழன், 21 அக்டோபர், 2010

அதென்ன.. ராஜ யோகம்?நாம் கொசுவிடமும் ,சிங்கத்திடமும்  ஒரே மாதிரி நடந்து கொள்கிறோமா என்றால் இல்லை என்பது தான் பதில்.
கொசு ஒரு வித உந்து சக்தியுடன் செயல் படுகிறது .சிங்கமும் ஒரு வித சக்தியுடன் செயல் படுகிறது.
கொசு -வின்   சக்தி ரொம்ப குறைவாக இருப்பதால் நாம் ஈசி யாக  நசுக்கி போட்டு விடுவோம் .
ஆனால் சிங்கத்தை பார்த்தால்......அப்புறம் எந்திரனில் வில்லன் ரோபோ ஒரு டயலாக் விடுவாரே  "ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ....வசி....ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ " அந்த நிலைமை தான்.

இந்த பிரபஞ்சமே மிகப் பெரிய ஆற்றல் கோளமாக இருந்தது என்றும் ,பின் வெடித்து சிதறியதாக Big bang தியரி சொல்லுகிறது .ஆற்றல் அழிவதில்லை ...ஒரு ஆற்றல் பிறிதொரு ஆற்றலாக  மாறுகிறது என்று  நம்ம ஐன்ஸ்டின்   கொள்ளு தாத்தா கூட சொல்லி உள்ளார்.

நம்ம பாரதி தாத்தா கூட "எங்கு எங்கு காணினும் சக்தியடா " என்று சொல்லி உள்ளார்.

சக்தி என்பது பல்வேறு நிலைகளில் செயல் படுவதை நாம் காணலாம்.கொசு இயங்க தேவையான ஆற்றல்,மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ,பூமி இயங்க தேவையான ஆற்றல் ,சூரியன் ,நச்சத்திர, பிரபஞ்ச ஆற்றல் என்று ஆற்றல் பல்வேறு ரூபங்களில் செயல் படுகிறது .

இந்த ஆற்றல் வெறும் ஆற்றலாக     மட்டும் செயல் புரிவதில்லை .சூரியன் என்ற வெப்பம் பூமியை உமிழ்ந்தது .பின் பூமி என்ற வெப்ப ஆற்றல் ...குளிர்ந்து பலவேறு ஆற்றலாக மாற்றம் அடைந்து ....பல்வேறு நிலை மாற்றம் பெற்று இன்று உள்ள பூமி ,வலை தளம் என்ற நிலைக்கு நாம் வந்து உள்ளோம்.

பூமிக்குள் இருந்த ஆற்றல் பல்வேறு நிலை மாற்றத்தின் பின் நாம் உருவானோம்...  அப்படி என்றால் பூமி தான் நாமா?
சரி ...பூமி   சூரியனில் இருந்து உருவானது ..அப்படி எனில் நம் முன்னோர் சூரியனா ? சூரியன் எங்கிருந்து வந்தது ...பிரபஞ்சம் என்றால் ...பிரபஞ்ச ஆற்றல் நாமா ?

பூமிக்கு சிந்திக்கும் சக்தி கிடையாது என்றால் ....மண்ணில் இருந்து பிறந்த நாம் எப்படி சிந்திக்கிரோம்....???

இந்து மதத்தில் பூமியை  குறிக்கும் கடவுளாக வினாயகரை சொல்லுவதும் ....அவருடைய வயிறு தான் பூமி என்று சொல்லுவதாக சுகி.சிவம்  புத்தகத்தில் படித்து உள்ளேன் .அர்த்தம் உள்ளதாகவே தோன்றுகிறது.

ஆற்றல் வெறும் ஆற்றலாக மட்டும் செயல் படாமல் .....மிக ஆழ்ந்த உள் உணர்வுடன் செயல் படுவதாக தோன்றுகிறது.

பிரபஞ்சம் சக்தியாக செயல் படுகிறது ....சக்தியால் அடிப்படையில் இணைக்கப்பட்டு உள்ளது .உடலால் ,மனத்தால் ,புத்தியால் ,மத வேறுபாட்டால் ,இன ,மொழி என எத்தனயோ பிரிப்பதாக இருந்தாலும் ....உண்மையில் பிரிவினைக்கு அப்பார்பட்ட இணைப்பு உள்ளது.

அதை நாம் சரியாக விழிப்புணர்வுடன் புரியாமல் .........

இப்படி தான் இணைகிரோம்.....
நாங்க மதுரைகாரங்க , தமிழ் சினிமாவையே நாங்க தான் தாங்கி பிடிக்கிறோம் என்பார்  ஒருவர்.
உடனே இன்னொருத்தார் நான் ஈரோட்டு காரன் என்பார் . நாங்க எல்லாம் பகுத்தறிவு சிங்கமப்பா என்பார்.
உடனே தம்பி உங்க ரெண்டு பெற விட அல்வா குடுப்பதில் எங்கள மிஞ்ச முடியாது என்பார் திருநெல்வேலி காரார்.
[எத்தனை நாளைக்கு தான் இருட்டு கடையில் அல்வா செய்விர்கள் திருநெல்வேலி  ராசாக்களே.....இனிமே வெளிச்ச கடையில் அல்வா கிண்டுங்கள் ...]

இடத்தால் ஏற்படும் பிரிவினை சாதாரணமானது தான் .ஆனால் சாதி ,மதம்   போன்ற வற்றால் ஏற்படும் பிரிவினை பற்றி  சொல்ல தேவை இல்லை.

சக்தி நிலையில் மிக சாதாரண நிலை ஓன்று இருக்கும் எனில் ...மிக உச்ச நிலையில் செயல் படும் சக்தி கண்டிப்பாக இருக்க வேண்டும்.
கோவம்,அதிகாரம் ,பண பல சக்தி,ஆள் பல சக்தி, ஆணவ சக்தி  என்று எத்தனயோ சக்திகள் நம் உள்ளே உள்ளது. 

காதல் ஒரு அற்புதமான  சக்தி. காதலால் பிரபஞ்சத்தோடு ஒன்ற முடியும்.

பிரிவினைக்கு அப்பாற்பட்டு சக்தியால் ஒன்றும் யோகம் தான் ராஜ யோகம்.

புதன், 13 அக்டோபர், 2010

என் சுவாசக் காற்றே ...உன் சுவாச காற்றை 
நான் சுவாசித்ததில் என்னுள்ளே
காதல் உணர்வுகள் தீ பற்ற தொடங்கின ...

அந்த காதல் தீ  என்
உயிரை   விழிக்கச்  செய்தது ...

தீ யின் ரௌத்ரம்  என் எண்ணங்களை எரித்து  
மனம் என்ற ஒன்றை சாம்பல் ஆக்கியது...

உன்  அணைப்பில்
என் உணர்வும் உன் உணர்வும் இரண்டற
கலந்த காதல்  ஈரத்தில் தீ  அணைந்தது....

நம் இருவரை சுற்றிலும்
காதல் கானம் இசைத்தது....

அந்த நாதம்  நான் நீ
நீ நான் என்று  உணரவைக்க....

பிரபஞ்சம் நான் ஆயிற்று ....

வியாழன், 7 அக்டோபர், 2010

என் ஆசிரியை காதலி ...!!!நீ காதல் பாடம் எடுக்கும் போது எல்லாம்
நீ தான் என் ஆசிரியை ...நானோ  கடைசி வரிசை மாணவன் ..... 

ஒவ்வொரு முறையும் என்னை கேள்விகள் கேட்டு கேட்டே
பார்வையால் பார்த்துப் பார்த்தே ....
காதல் பாடத்தில் என்னை தேர்ச்சி பெறச் செய்தாய் ....

மலையில் யோகம் புரியும் குன்றுகளை
மேகங்கள் தழுவிக்   காதல் சொல்லவதை உணர   கற்று கொடுத்தாய்..

மழை தன் காதலன் கடலுடன்
கலந்து கரைந்து போவதை உணர  கற்று கொடுத்தாய்..

அருவி இடைவிடாது  பாடும் காதல் பாடலை
கேட்டு உணர கற்று கொடுத்தாய்....

இப்பிரபஞ்சத்தில் காதல் அணுக்கள் பரவி இருக்கும்
இடத்தை எல்லாம் உணர   கற்று கொடுத்தாய் ....

காதல் மொழி பேசுவதல்ல ....மௌனம் தான் காதல் மொழி
என்று மௌனமாக உணரக் கற்று கொடுத்தாய் ....

உயிர்கள் அனைத்திலும் காதல் என்ற விதை உள்ளது ....
எனக்கோ நீ தான் நீர் ஊற்றி வளர வைத்தாய் .... 

என் விழிகளுக்கு காதல் பார்வை தந்தாய்.....
என் பார்வையில் நீ காதலி   இல்லை ....
காதல் என்பதே நீ தான் ......

கண்ணாடியில் உன் உருவத்தைக் காட்டினேன் ...
அது காதலைப்  பிரதிபலித்தது .......

செவ்வாய், 5 அக்டோபர், 2010

மௌனம் எனது தாய்மொழி...வண்டி வண்டியாய் கனவுகள் ....

சில கனவுகள் என்றும்  நிறைவேராதவை ...    
அவைகள் என்னை பார்த்து சிரித்தன ....

சில கனவுகள் லட்சிய கனவுகள்
அவைகள் என்னை  தாகத்தோடு பார்த்தன ....

சில கனவுகள் பேராசை கனவுகள்
அவைகள் என்னை தவிப்போடு பார்த்தன ...

ஒவ்வொரு கனவையும் பிரித்து அவரவர் ஊருக்கு 
அனுப்பி வைத்தேன் ...

சில கனவுகள் என்னை விட்டு பிரிய மறுத்து அழுதன ...
"உங்களை ராஜ கம்பளம் விரித்து வரவேற்க
நெறைய பேர் காத்து கொண்டு உள்ளார்கள்.. "
போய் வாருங்கள் என்றேன் ...
எனக்கு விடை கொடுத்தன..

கனவுகளை விட்டுவிட்டு புத்தியிடம்
அடைக்கலம் கேட்டேன் ...

என்னை புன்னகைத்தபடி வரவேற்றான் ...
பயணம் நன்றாகவே இருந்தது ...

கொஞ்ச நாட்களில் புரிந்தது ...
புத்திக்கு நெறைய எதிரிகள் என ...

எனக்கு புத்தியை  பிடித்துதான்  இருந்தது...
புத்தி சுகமாக வாழ வைத்தான் ....

ஆனால் தன்னை சுற்றி எங்கும் வறட்சி 
என்றதை  நம்ப மறுத்தான் ....

நீ கொஞ்ச நேரம் உறங்கு என்று  சொன்னேன் ...
நான் உறங்கி விட்டால் உனக்கு ஏது பாதுகாப்பு
என்று புத்திசாலிதனமாக  கேட்டான்.....

என்னால் என்னை பாதுகாத்து கொள்ள முடியும் என்றேன் ...
நான் இல்லாவிட்டால் நீ ரொம்ப கஷ்டபடுவாய்
என்று சொல்லி உறங்க சென்றான் .....

மனம் என்ற கனவு விழி ...
புத்தி என்ற நனவு விழி ...
இரண்டும் மூட.....
பிரபஞ்சம் என்ற
தாயின் கருவறையில்.....
உறங்கச் சென்றேன் ...
மௌனம்  எனது தாய் மொழி ஆயிற்று........

வெள்ளி, 1 அக்டோபர், 2010

நான் கடல் ...நீ அலை ...


நித்தம் நித்தம் ஆர்ப்பரிப்பு ...
மோனத்தில் இருந்து தான் பிறந்தேன் ...
எங்கே இருந்து  தோன்றுகிறது இத்தனை ஆர்ப்பரிப்பு ..
பேரலையாய் எழுந்த என்னுளே ...
நித்தம் நித்தம்  எத்தனை எத்தனை சிற்றலைகள் ...

சந்தோஷ அலை ,துக்க அலை ...
காதல் அலை ,காம அலை ..
ஆசை அலை ,பொறாமை அலை.. 
நட்பு அலை ,எதிர்ப்பு  அலை.. 
பாச  அலை ,வெறுப்பு அலை... 

ல்லா வித ஆர்ப்பரிப்புக்கும்  கரையில்
மரணம் என்று உணர்ந்தபோது  நடுங்கினேன் ....
கரையில் நான் காணமல் தான் போய் விட்டேன் 
என நினைத்து இருந்தேன்....

ஒரு கணத்தில் ...

அலை என்ற ஒன்று கடலின் தோற்றமே என உணர்ந்தேன்...
அலை பிறக்கவும் இல்லை ...இறக்கவும் இல்லை ...
நித்தம் பல கோடி அலைகள் என்னுளே ....
கடல் நித்திய யவ்வனம்...அலை  கணநேர யவ்வனம்...
நான் கடல் ..மனமே நீ அலை ..அலை..அலை..