ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

ப்ரியமான விடை

பதிவுலகில் இதுவரை நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை சொல்லி விட்டேன்.

இன்னும் நெறைய கருத்து கந்தசாமி வேலை செய்ய முடியும்.
மனம் தினம் தினம்  ஆயிரம் எண்ணங்களை வெளியேற் றுகிறது.

எல்லாவற்றையும் எழுதி கொண்டு இருந்தால் பைத்தியம் தான் பிடிக்கும் என்று தோன்றுகிறது.

இனிமேல் பதிவுலகில் பார்வையாளனாய் இருக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.
புரட்சி செய்வது என்றால் சமுகத்தில் புரட்சி செய்து அடி வாங்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

அல்லது அமைதியாக ஞானப் பழத்தை  தேடி செல்லலாம் என்று உள்ளேன் .

நான் தேங்க்ஸ் சொல்ல மாட்டேன்...

அதற்கு பதிலாக என் பதிவுகளை படித்தவர்கள் ,பின்னுட்டம் இட்டோர்,வரும் காலத்தில் படிப்போர் ,காறி துப்ப இருப்போர் அனைவருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன்.

ஏன்னா நாளைக்கு நீங்க என்னை நன்றி கெட்டவன் என்று சொல்லிவிட கூடாதே ...அதனால் தான்..... :)


கடசியா ஒரு சந்தேகம் :
இந்த ஞானப் பழமுன்னு சொல்லுராங்களே அதுக்கு கொட்டை இருக்கா ..இல்லையா ?          

ஒருவேளை ஞானப் பழம் எனக்கு கிடைச்சுதுனா ......நான் திரும்ப( ஞானப் பழத்தோட )வந்து உங்களுக்கு விளக்கமா சொல்லுறேன்......அதுவரை....இது எப்படி இருக்கு....ஹா ...ஹா ..ஹா    

பாலியல் தொழிலுக்கு அங்கீகாரம்

120 கோடி மக்கள் தொகை கொண்ட தேசம் இது.
வல்லரசு ஆக துடி துடித்து கொண்டு இருப்பவர்கள் நாம். :))
ஆனால் நல்ல கழிவறை  நெறைய இடங்களில் கிடையாது.
நமது தேசத்தில் 100 சதவிகிதம் சொத்தில் 75   சதவிகித சொத்தை  10 சதவிகதம் பேர் அனுபவிகிரார்கள்.
இந்தியாவின் பணக்காரர்களின் கருப்பு  பணத்தை மீட்டால் ஒவ்வொரு நபருக்கும் 5000  ரூபாய் வருமாம்,இந்தியாவின் கடனை அடைத்தது போக...என்னவொரு கொடுமை.?

 உணவுக்கு அடுத்து முக்கிய தேவை செக்ஸ் தான்.
ஆனால் செக்ஸ் யை  பற்றி பேசினாலே ஒரு மாதிரி பார்க்கும் இந்த தேசத்தில் தான் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம்.
பண்ணிகளை போல எங்கே போனாலும் மக்கள் புழுக்கம். 

கோவிலில் பாலியல் சிற்பங்களை வைத்த நம் முன்னோர்களின் பாலியல் அறிவு எங்கே....
இன்றைய பாலியல் வறட்சி கொண்ட இந்திய தேசம் எங்கே?சரி விசயத்திற்கு வருவோம்.

15 வயதில் ஒரு ஆணுக்கு காம உணர்வு வர ஆரம்பிக்கிறது.

செக்ஸ் தவறு என போதிக்கும் நம்  அப்பனும் அம்மாவும்...இரவு வந்தால் அதை தான் செய்கிரார்கள்.என்ன வொரு போலித்தனம் ?
இது தெரிந்த வுடன் அவர்கள் மிது இருந்த மரியாதை போக ஆரம்பிக்கிறது.

15 வயதில் பாலியல் கல்வி தேவை. இது முதல் தேவை. 

இதற்கே ஒரு வழியையும் காணோம்.

நம் தேசத்தில் எத்தனை வழக்கு அறிஞர்கள்,எத்தனை IAS அதிகாரிகள்.

இதை எல்லாம் பார்க்கும் போது நம்மவர்களின்  அடிப்படை அறிவு குறித்து மிக பெரிய சந்தேகம் வருகிறது.

இருக்கா இல்லையா....?? 

 சரி விசயத்திற்கு வருவோம்.

நான் செக்ஸ்யை பற்றி 13  வயதில் ஒரு நீல படம் ( ஆனால் நீல கலரில் எதுவும் தெரியவில்லை) பார்த்து தெரிந்து கொண்டேன்.

19-21  இந்த வயதில் காமத்தை அடக்குவது என்பது எனக்கு தெரிந்த வரையில் முடியாத காரியம்.
நெறைய பேர் செய்வது சுய இன்பம் தான்.

அமெரிக்காவில் ஒரு இளம் ஆணுக்கு 16 வயதிலேயே செக்ஸ் அனுபவம் கிடைத்து விடுகிறது.
அனால் இங்கே சாராசரியாக 27 வயதில் தான் கிடைக்கிறது.ஏறக்குறைய இளமை முடிந்து நடுத்தர வயது தொடங்கும் போது.

அடிப்படையான ஒரு விஷயம் செக்ஸ். அதை பற்றிய புரிதலும் இல்லை.
இந்த மாதிரி ஒரு போலியான ஒரு சமுகத்தில் வாழ்வதே வெக்க கேடான விசயமாக எனக்கு தோன்றுகிறது.

செக்ஸ் வேணுமானால் கல்யாணம் தான் செய்து கொள்ள வேண்டுமா என்ன?


ஒரே ஒரு மனிதனையேனும்  நான் முதன் முதலில் என் விந்துவை என் மனைவியின் யோனியில் தான் விட்டேன் என்று  சொல்லட்டும். இப்போதே கம்ப்யூட்டர் CPU பேன் -ல் தூக்கு மாட்டி கொள்கிறேன்.

[இளமையில் ஒரு வாரம் ஆனாலே விந்து தானாக வெளியேறி விடும் என்பது தான் மருத்துவ உண்மை] 

ஒரு தேசத்தில் அடிப்படை உணர்வுக்கே வழி இல்லையாம்...வல்லரசு ஆகி கிழிக்கிரார்களாம்.

கல்யாணம் தேவை என்பவர் மட்டும் கல்யாணம் செய்து கொள்ளட்டும்.
செக்ஸ் மட்டும் தேவை என்பவர் ...பாலியல் தேவை இருப்பவர் பாலியல் சேவை வழங்கும் சமுக சேவகியிடம் சென்று கொள்ளட்டும்.

ஒரு முறை பணத்தை எதிர் பார்த்தால்  அவள் பாலியல் சமுக சேவகி. வாழ் நாள் முழுவதும் நம்முடைய பணத்தை எதிர் பார்த்தால் அவள் மனைவி.

கல்யாணத்திலும் சரி ,பாலியல் தொழிலும் சரி...இடையில் புரோக்கர் நாய்கள் தலையிட்டால்  அதுக்கு பெயர் தான் விபச்சாரம்.
விபச்சாரத்தில் பயன் பெறுவது இந்த மட்டமான புரோக்கர் நாய்கள் தான்.


எனக்கு ஒரு மகன் பிறந்தால்...அவனுக்கு 15 வயதில் செக்ஸ் பற்றி, சுய இன்பம் பற்றி தெளிவாக சொல்லுவேன்.
19 வயது ஆனால்...முடிந்தால் கேர்ள் பிரண்டிடமோ அல்லது பாலியல் சமுக சேவகியிடமோ சென்று வருமாறு அறிவுரை சொல்லுவேன்.
மகளாக இருந்தாலும் கூட அவளுக்கு என்ற முறையில் பாதுகாப்பு சாதனத்தை பயன் படுத்த அறிவுரை சொல்லுவேன்.
 இன்று நெட்டை  ஓபன் செய்து செக்ஸ் என்று type செய்தாலே ...கொட்டோ கொட்டு என்று செக்ஸ் வலைத்தளங்கள் கொட்டுகின்றன.
இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பெரும்பாலான நேரத்தை நெட் -டில் தான் செலவு செய்கிரார்கள்.
ஒரு காலத்தில் ப்ரொவ்சிங் சென்டர் போனாலே செக்ஸ் வலைத்தளங்களைதான் நான் பார்வையிடுவேன் .

இதை எல்லாம் ஓரளவேனும் விட்டு வெளி வர முடிந்ததால்தான் ஓரளவேனும் புரிதலோடு என்னால் பேச முடிகிறது.

 இன்னும் போலியாக இந்திய காலசாரம் என்று உளறாமல் இருப்பது புரிதல் உள்ளவர்கள் செய்யும் விஷயம். 
ஒரு நாளில் குறைந்தது ஒரு மணி நேரமேனும் உங்கள் முகமூடியை கழட்டி வையுங்கள்.முதலில் நீங்கள் புரிதலோடு வாழ ஆரம்பித்து பின்பு குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லுங்கள்.
நீங்கள் போலியாக இருந்தால் குழந்தைகள் விரைவில் கண்டு கொள்ளுவார்கள்.

 இந்த போலி முகமூடி சமுக  மனிதர்கள் மற்றும் அரசாங்கம் மீது எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை.
 பாலியல் தொழில் சட்டரீதியாக  ஆக்க பட்டு எல்லாரும் பயன் பெற வேண்டும் ...அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும்.

சூடு சொரணை  மற்றும் சுய புத்தி உள்ள படித்த சில இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் இது சாத்தியம் தான்.
காலம் பதில் சொல்லட்டும்.    

இது எப்படி இருக்கு....ஹா ..ஹா ..ஹா     
  

 

காதல் என்ற கன்றாவிகாதல் என்பதில் பொய் இருக்கலாம். ஆனால் காமத்தில் பொய் ஏதும் இல்லை. பசி போல அது ஒரு இயற்கையான உணர்வு. அது அழகானதுதான்... புரியும் விதத்தில் புரிந்து  அனுபவிக்கும் விதத்தில் அனுபவித்தால். ..
தன் காதல் புனிதமானது என்று உளரும் சில அசடுகளை பற்றி ஆராய்வோம்.
ஆரம்ப கால சினிமாவில் காதல் என்பது எதோ புனிதம் போலவும், காமத்தை பற்றி பேசினாலே அவன் கெட்டவன், வில்லன் என்பது போல காட்டுவார்கள்.
பெண்ணை கற்பழிக்க வருபவன் வில்லன். காப்பாற்ற வருபவன் ஹீரோ.
தற்கால சினிமாவில் ஹீரோயின் அறிமுகத்தை பார்க்க வேண்டுமே. எதோ இவள் தான் தேவதை போலவும்...ஹீரோ இதுவரை பெண்களையே பார்த்து இராதவன் போலவும் ...அவளை பார்ப்பான். உடனே காதல் வந்து விடும்.

ஏன் ஹீரோயின் toilet -இல்  உக்கார்ந்து கொண்டு  motion  வராத சில நேரங்களில் முக்கி கொண்டு இருந்திருப்பாளே...அதை காட்ட வேண்டியது தானே...?

சரி இந்த ஹீரோ என்ன பெரிய யோகியா  என்று யோசித்து பார்த்தால்...

எந்த ஒரு மனிதனுக்கும் 15-30  வரை காமம் அதிகமாக இருக்கும். யோகியாலேயே அடக்க முடியாத  காமத்தை இந்த அசட்டு ஹீரோ அடக்கி கொண்டு இருப்பாரம்.
உண்மையில்  இந்த ஹீரோ சுய இன்பம் செய்பவனாக தான் இருக்க வேண்டும். காமத்தை அடக்கி கொண்டு இவர் காதல் மட்டும் செய்து கொண்டே இருப்பாராம். இது நடக்க கூடிய காரியமா?
   
[பாக்கியராஜ் போன்ற சிலர் தான் பாரட்ட தக்கவர்கள் . உண்மையை ஓரளவேனும் சொல்ல முன் வந்தவர்கள்.]

"காமங்கள் வந்து என் காதல் அல்ல
கண்டேனே உன்னை தாயாக"

இந்த பாடல் வரியை எந்த முட்டாள் எழுதினான் என்று தெரியவில்லை.
இது எல்லாம் கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும்.

காமத்தை அனுபவித்த பின் வேண்டுமானால் பெண்   தாயாக  தெரியலாம்.
 என் காதல் புனித காதல்...இதுவரை நான் எந்த பெண்ணையும் மனதால்  நினைத்தது இல்லை.பெண்ணை நினைத்து சுய இன்பம் கண்டது இல்லை என்று மனசாட்சியை  தொட்டு  சொல்லட்டும் .நான் இந்த பதிவை அழித்து விடுகிறேன்.

 காதலி என்ற பெயரில் சில அசடுகள் செய்யும் அலம்பல் இருக்கே...இவளுக மனதில் என்ன நினைத்து கொள்ளுவாள்கள் என்று தெரிய வில்லை.சப்பை பிகர்களை கூட நம்ம ஆள்கள் விட்டு வைப்பதில்லை.

காதல் என்ற பெயரில் அவளுக்கு  செல்போன் recharge  செய்வது,நாய் நாக்கை தொங்க போட்டு கொண்டு காத்து இருப்பதை போல காதலிக்காக பீச் -இல் காத்து கொண்டு இருப்பது.

ஏய்..யா    காதலிப்பதாக சொல்லும் காதல் மன்னனே....இதே உன் மேல் பாசம் வைத்திருக்கும் பாட்டிக்காக நீ வெத்தலை பாக்கு வாங்கி தந்து இருப்பாய...கொஞ்சம் யோசித்து பார்....

இதெல்லாம் காதல் இல்லை.... காமம் படுத்தும் பாடு.....

எனக்கு காமத்தை அனுபவித்த பின் தான் காதலே வருகிறது..

காமத்தில் பேதம் மறைகிறது....அதன் பின் நீங்கள் இயல்பாகவே அன்பானவராக இருந்தால் காதல் வரலாம்.
காமத்தை அனுபவித்த பின் காதல் வரவில்லை என்றால்....அதன் முன்னும் காதல் இல்லை என்று தான் அர்த்தம்.
 காதல் என்ற பெயரில் சில அசடுகளின் களின்
கவிதையை படித்தால் ....தலையை கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மிது முட்டி கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
 
உண்மையில் இருவர் பிரிந்து இருக்கும் போது தான் காதல்  வலுவாக உள்ளது போல தோன்றும்.

இருவர் காதலிகிரார்கள் என்று சொன்னால் அவர்களை தயவு செய்து  உடனே சேர்த்து வைத்து விடுங்கள் . ஆறு மாதத்தில்  அவர்களாகவே பிரிந்து விடுவார்க்ள. :)
 தற்காலத்தில் காதல் என்று சொல்லப்படுவது  வெங்காயம் மாதிரி தான். எதோ பெரியதாக தெரியும். உறிக்க உறிக்க ஒன்றும் இருக்காது.

என் புரிதல் படி 
உண்மையில் காதல் என்பது எதிர் பார்ப்பு அற்றது ...
 காதல் என்பது நம்மிடம் ஏற்கனவே நிறைந்து இருக்கும் உணர்வு.....
காதல் என்பது கொடுக்கல் வாங்கல் உறவு அல்ல ....ஆனால் அவ்வாறு நாம் புரிந்து வாழ்ந்து கொண்டிருப்பது நம் துரதிஷ்டம் ...
இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களிடமும் நாம் காதலாக  வாழ முடியும்..


இது எப்படி இருக்கு....ஹா ..ஹா ..ஹா     

சனி, 23 ஏப்ரல், 2011

பெரியார் என்ன புரட்சி வெங்காயமா?பெரியார் என்று சொல்லப்படும் ராமசாமி அவர்கள் புரட்சி கரமானவராக கருதப்பட்டவர்.
அதுவும் அகங்காரம் பிடித்த பிராமண ஐயர் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.
ஒரு விதத்தில் பார்த்தால் அவர் சமுக புரட்சியாளர் தான்.

வேறு ஒரு கோணத்தில் பார்க்கும் போது, 100 ஆண்டுக்களு முன் சமுகம் அடி முட்டாள் நிலையில் இருந்தது.[தற்போது அதை விட மட்டமானா வேறு நிலையில் உள்ளது என்பது வேறு விஷயம்]  அதை ஒரு அளவுக்கு திருத்த முற்பட்டு முட்டாள் நிலைக்கு கொண்டு வர பாடு பட்டவர் பெரியார்.
நல்ல பண்பாளரும் கூட. 

கடவுள் கொள்கை எப்படி வெங்காயமோ அது போல பெரியாரின் நாத்திக ,கடவுள் மறுப்பு கொள்கைகளும் வெங்காயம் தான்.

கல்லைப்  பார்த்து கடவுள் என்கிரான்  ஒரு முட்டாள். கல் கடவுள் இல்லை என்கிறார்,கடவுளை நம்புகிறவர் காட்டு மிராண்டி என்கிறார் பெரியார்.

இதை சொல்லுவதற்கு பெரிய அறிவு,புரட்சி ஒன்றும் தேவை இல்லை.சிறு வயது குழந்தைகளும் சொல்லும்.
அதை போலவே பெண்ணடிமை,வெங்காய அடிமை .இதை சொல்ல சிறுவர்கள் போதும்.
பிரச்சினை என்ன வென்றால் நம் சமுகம் ஒரு அடி முட்டாள் கூட்டம்..இந்த கதையில் வருவது போல.

யார் எவ்வளவு பேர் வந்து புரட்சி செய்தாலும் ..எதோ நடப்பது போல ஒரு தோற்றம் ஏற்படும்.
கடைசியாக மேலோட்டமாக ஏதாவது நடக்கும் .தற்போது அன்ன ஹாசரே ஊழல் புரட்சி போல.

ஒவ்வொருவனும் தன் முகமுடியை கழட்ட முயல வேண்டும்.

பெரியார் நேர்மையாளர்...முகமூடி போடதாவர்.
அனால் அவர் புரட்சியாளர் என்று எல்லாம் எனக்கு தோன்ற வில்லை.

பெரியாரை போல எனக்கும் 100   கோடி சொத்து இருந்தால்...நானும் களத்தில் குதித்து விடுவேன் இன்றே.
பெரியார் புரட்சியாளர் இல்லை.அவரிடம் இருந்த அவர் அப்பா வைத்து சென்றாரே அந்த சொத்து தான் புரட்சியின் முதுகு எலும்பு.

அவரிடம் பணம் இல்லை என்றால் ஈரோட்டில் ஒரு நாய் கூட அவருடைய கொள்கையை காது கொடுத்து கேட்டு இருக்காது.
நானும் ஈரோட்டில் தான் புரட்சி கரமாக பேசி பார்க்கிறேன்...பணம் இல்லாத காரணத்தால் ஒரு நாயும் என்னை தற்போது மதிப்பதில்லை..:))

சரி....கடவுளை மறுப்பதால் ஒருவன் புரட்சி கரமானவன் ஆகி விட முடியாது.
ஒரு மனிதனுக்கு நிலையான சாஸ்வதமான உண்மையை யார் காட்டுகிராரோ அவர் தான் புரட்சியாளர்.


அந்த விதத்தில் பார்த்தால் எனக்கு தெரிந்த வரையில் ஓஷோ,புத்தர்,மகா வீரர்  போன்றவர்கள் தான் மிக பெரிய சமுக புரட்சியாளர்கள்.

முதலில் உன் முகமூடியை கழட்டு..அதே போல் ஒவ்வொருவனும் கழட்டினால் போதும்.புரட்சி வெங்காயம் தேவையே இருக்காது. இதற்கான அடிப்படை நாதம்   ஓஷோ போன்றோரிடம் உள்ளது .


வழியை காட்டுபவன் தான் மிக பெரிய புரட்சி யாளன் .
மற்றவர்கள் பெரியார்,சே குவாரே,கரம்சந்த் காந்தி,சுபாஷ் சந்திர போஸே,பாரதி,அன்ன காசரே போன்றோர் எல்லாம் புரட்சியாளர் போல தெரிபவர்கள் மட்டுமே..மேலோட்டமான புரட்சியாளர்கள்.... அதை புரிந்து கொள்ள முதலில்  நம்  முகமூடியை கழட்ட வேண்டும் ,நேர்மை,புரிதல் போன்றவை வேண்டும்.


பெரியார்,சே குவாரே,கரம்சந்த் காந்தி,சுபாஷ் சந்திர போஸே,பாரதி ,அன்ன காசரே போன்றோர்களை  எனக்கு  பிடிக்கும்.மற்ற படி அவர்களின் புரட்சி வெங்காய கொள்கைகள் எல்லாம் உறிக்க உறிக்க ஒன்றும் இல்லாமல் போகும் வெங்காயம் போன்றது தான்.

 டிஸ்கி:ஓஷோ வின்  கண்களை பாருங்கள்...அவர் எப்படி பட்டவர் என்பதை அவர் கண்கள் சொல்லுகிரதே..

இது எப்படி இருக்கு...ஹா ஹா ஹா  

தனி மனித தாக்குதல் தவறா?சிலர் பதிவுலகில் ஏதேனும் தனி மனிதரை (பதிவரை ) பற்றி தாக்கி எழுதி விட்டால் ....
தனி மனிதரை தாக்குகிரிர்களே ...இது ஞாயமா...தர்மமா என்று தர்மத்தின் தலைவன் கணக்காய் பேசுவார்கள்.

பதிவுலகில்  ராமராஜனை, டி ராஜேந்தரை ,டாகடர் விஜய்,விஜயகாந்த என்று எல்லாம் அவர்களை பற்றி தாக்கி
எழுதுவார்கள்.

அப்ப இவுங்க எல்லாம் தனி மனிதர்கள் இல்லையா?
சினிமா ,அரசியலுக்கு வந்தால் தான் பொது மனிதனா?
பதிவுலகுக்கு வந்தால் பொது மனிதன் இல்லயா ?
பதிவுலக்கு வந்து விட்டாலே  அனைவரும் பொது மனிதர்கள் தான்.

சமுகத்தில் உள்ள ஒவ்வொரும் தனி மனிதர் அதே சமயம் அவரும் பொது மனிதர்.

இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நானும் பொது மனிதன் தான். நீங்களும் பொது மனிதர் தான். விஜய காந்தும் பொது மனிதர் தான்.   

பதிவுலகில் ஒருவர் மற்றவருடன் நட்புடன் தொடர்பு கொள்வது போல ...தாக்கியும் தொடர்பு கொள்ளலாம்.
அது அவரர் விருப்பம்.

நட்புடன் தொடர்பு கொண்டால் நண்பர் கிடைப்பார் . தாக்கி தொடர்பு கொண்டால் எதிரி கிடைப்பார்.
அது அவரவர் விருப்பதை பொருத்தது. 

அதை விட்டு விட்டு ....தனி பதிவரை தாக்காதே...பெண் பதிவரை தாக்காதே ....என்று சொல்லுவது எல்லாம் சிறு பிள்ளைத்தனமாக எனக்கு தோன்றுகிறது.   

வேண்டுமானால்  பதிவர்களின் கருத்துக்கள்  மோதி கொள்ளட்டும்...பதிவர்கள் மோதி கொள்ளாமல் இருக்கலாம்..
அந்தளவுக்கு பக்குவம் நமக்கு உள்ளதா என்பது யோசிக்க வேண்டிய விஷயம் 

இது எப்படி இருக்கு....ஹா ..ஹா ..ஹா    

ஐஸ்வர்யா ராய் என்ற உலக கிழவி


ஐஸ்வர்யா ராய் இன்னும் உலக அழகியா என்ன ...?
சரி இருபத்து ஐந்து வயதில் சரி ஒத்து கொள்ளலாம். நாற்பது வயது  ஆகி விட்டதே . ஆன்டி என்று சொல்லலாம் அல்லது  அழகி க்கு  எதிர்பதம் கெழவி என்பது நன்றகாக உள்ளதால் அவ்வாறு சொல்லலாம்.
எத்தனையோ ஆழகான பெண்கள் இருக்கும் போது ...
இன்னும் சில ஹீரோக்கள் இந்த கெழவி யுடன் நடிபப்தற்கு ஆர்வமாக உள்ளனறாராம் .
என்ன ஒரு ரசனையோ ?


இது எப்படி இருக்கு....ஹா ..ஹா ..ஹா     

ஆண் தான் அழகு


எல்லா இனத்திலும் ஆண் தான் அழகு.
ஆண் சிங்கம் தான் தோற்றத்திலும்,செயலிலும் அழகு.
அதே போல விலங்குகளிலும் ஆண் தான் அழகு.
 ஆண் மயில் தான் அழகிலும் அழகு.
அதே போல பறவைகளில் ஆண் தான் அழகு.
இதே போல தான் மனிதர்களிலும் ஆண் தான் அழகு.
தோற்றத்திலும் சரி,செயலிலும் சரி ஆண் தான் அழகு. 
ஆனாலும் ஆண் அழகனாவே இருந்தாலும் கூட இயற்கையாகவே பெண்ணை ரசிக்கிறான்.

[சித்தப்பு நான் சீரியசா பேசிட்டு இருக்கறேன் ...நீ பாட்டுக்கு சிரிக்கற....:)) ]பெண் பருவ வயதில் தோற்றத்தில் ஆழகாக தெரிவாள்.
நம் நாடு இயல்பாகவே பாலியல் வறட்சி கொண்ட நாடு என்பதால்.....பெண் என்றால் புனிதம்,வெங்காயம்,தேவதை ,மகாலட்சுமி என்று சில அரைகுறைகள் ஏத்தி விடுகின்றனர்.
இந்த பெண்களும் எவனோ சில அரைகுறைகள் இவர்களின் சிறு அழகையும் புகழ்ந்து விட்டால் போதும்.அலட்டல் அதிகமாகி விடும்.

ஒரு யோகியின் கண்களில்,அனுஷ்காவின் கண்களில் உள்ள உயிர் தன்மையை விட அழகான  உயிர் தன்மையை நான் பல நாய்களிடம்,பூனைகளிடம்  கண்களில் கண்டு உள்ளேன்.

பெண்ணிடம் இயல்பாக காமத்தை அனுபவித்த எவனும் பெண் புனிதம்,தெய்வம்,கேவலம்,அசிங்கம்  என்று பிதற்றி கொண்டு இருக்க மாட்டான்.

இந்த பதிவை எழுதும் நோக்கம் எனக்கு இல்லை தான். பதிவுலகில் சரி,நம் சமூகத்திலும் சரி எங்கு போனாலும் லேடீஸ் ஸ்பெஷல் தொந்தரவு தாங்க முடியவில்லை.

பெண்ணை ஒரு பொருட்டாகவே மதிக்காத தன்மை  ஆணுக்கு  வர வேண்டும். அது தான் என் விருப்பம்.


அமிரின் மொவுனம் பேசியதே படத்தின் ஹீரோ இருப்பானே அந்த மாதிரி.
என் இயல்பு கூட இதை ஒட்டியது தான் என்றாலும் நான் ஒன்றும் ஹீரோ எல்லாம் கிடையாது.    ஒரு முறை இப்படி தான்...ஒரு பெரிய q  வரிசை ரயில்வே ஸ்டேஷ்சனில் நின்று கொண்டு இருந்தது.நானும் q -வில்  நின்று கொண்டு இருந்தேன். இரண்டு நார்த் இந்தியன்  இளம் பெண்கள் என்னிடம் வந்து (அது ஏன் என்னை பார்த்து அப்படி கேக்கணும்) இரண்டு டிக்கெட்  எடுத்து தருமாறு கேட்டனர்.

q  வை  follow  பண்ணி வந்து டிக்கெட் வாங்கு என்று சொன்னேன்.இதை அவர்கள் எதிர் பார்கவில்லை.
கொஞ்சம் டென்ஷன் ஆன மாதிரி தெரிந்தது.
 இருந்தாலும்   அவர்கள் q வில் வரவில்லை...எனக்கு பின்னே இருந்த ஒரு தாய் குலத்தை மதிக்கும் ஒரு புண்ணியவான் டிக்கெட்  எடுத்து தந்தான்.

இந்த பெண்களின் அலம்பல் எல்லா இடத்திலும் உள்ளது.

தாய்மை தான் பெண்களின் மிக உயர்ந்த புனித தன்மையாம்.
எல்லா விலங்குகளுமே தான் தாய்மை அடைகின்றன.
ஆனால் எந்த விலங்குமே அதை வைத்து  பிளாக் மெயில் செய்வது இல்லை.

தாய்மை என்பது பூச்சி முதல் டைனோசர் வரை உள்ள ஒரு இனப்பெருக்க நிகழ்வு.
தாய்-மகன் உறவு என்பது எல்லாம் இயல்பான நிகழ்வுகள்.
இதில் புனிதமும் இல்லை கேவலமும் இல்லை.

எனக்கு தெரிந்து யோக தன்மை பெற்ற ஆண் தான் ஆணாகவே உள்ளேன்.
[ இங்கே யோகம் என்பது நீங்கள் நினைப்பது போல யோக ஆசனம்   செய்வது இல்லை.]

என் தனிப்பட்ட அனுபவ  பார்வையில் ஆணை விட பெண் பல மடங்கு மட்டமானவளாகவே உள்ளாள்.

ஆணிடம் காமம் சார்ந்த தவறுகள் மட்டுமே கொஞ்சம்  அதிகமாக இருக்கும்.
ஆணுக்கு பெண்ணிடம் தேவை காமம் தான்.எனவே காமம் சார்ந்த சில தவறுகள்  ஆணிடம் இருக்கலாம்.
 இதைப்  பெரிது படுத்தி  பெண் தன்னை உத்தமி போல காட்டி கொள்ள முயற்சி செய்வாள்.

உண்மையில் பெண்ணுக்கு தான் காமம் அதிகம். பெண்ணின் காமத்தை அடக்குவது என்பது ஆணுக்கு சவாலான விஷயம்.

 புராணத்தில் திரோபதி  என்ற பெண் இருப்பாளே  இவள் கல்யாணம் செய்யும் முன்பே யாரோ ஒருவனுடன் தொடர்பு இருந்து  ஒருவனை பெற்று இருப்பாள்.
அது மட்டும் இல்லாமல் இவளுக்கு ஐந்து கணவன் மார்கள் .

ஆதி காலத்தில் ..பெண் களுக்கு பல கணவன்கள் உண்டு. அதற்கு ஒரு உதாரணம் தான் திரோபதி.இன்றும் பெண்ணிடம் அடக்க முடியாத காமம் உண்டு.அனால் போலியான நம் சமுகம்  வேலி போட்டு வைத்து உள்ளது.    


உண்மையில் மறைமுகமாக பெண் ஆணை அடக்கி ஆளவே பார்க்கிறாள்.
கல்யாணம் என்பதே சிங்கத்தை  கழுதையாக மாற்றும் ஒரு அமைப்பு தான்.
பெண்ணின் வேலையே சிங்கத்தை தன் போலவே கழுதையாக மாற்றி கொண்டு இருப்பது தான்.
கல்யாணம் செய்து கொண்ட ஆண் கடைசியில் கழுதை யாகவே மாறி விடுகிறான். என்ன ஒரு பரிதாபம் :) ஆண் என்பவன் சிவனை போல இருக்க வேண்டும். சக்தி தான் சிவனை தேடி வரவேண்டும்.அது தான் ஆணுக்கு அழகு.
ஆனால் இங்கோ நிலைமை தலை கீழாக உள்ளது. ஆண் தான் பெண்ணை தேடி அலைகிறான்.

பெரும்பாலான படைப்புகள் அனைத்தும் தாஜ்மகால் முதல்  விமானம் வரை ஆணால் தான் படைக்கபட்டன.
என் வரையில்... காமம் கடந்த ஆணுக்கு பெண் ஒரு பொருட்டாக தெரிவதில்லை..பாலியல் வறட்சி கொண்ட இந்திய தேசத்தில் ஜவுளி கடை பெண் பொம்மை  கூட  அழகாக தெரிவதில் வியக்க ஏதும் இல்லை.


பெண் என்பவள் ஆணை தெரிந்தோ தெரியாமலோ பிடிக்கும் நோய். சில ஆண்களுக்கு குணமாகி விடுகிறது.
பல ஆண்களுக்கு குணமாவதில்லை.
ரொம்பவும் அரிதாகவே பெண் என்பவள் ஆணின் நோய் போக்கும் மருந்தாக உள்ளாள்.
அப்படி பட்ட பெண்களை நான் கண்டதில்லை...:)  

சமுகத்தில் எங்கேயும்   கழுதைகளே  இன்று  இருப்பதால்.....எனக்கு பயமாக உள்ளது ...நானும் காலப் போக்கில் கழுதையாக மாறி விடுவேனோ என்று ....:)   


டிஸ்கி : இதோ முதல் படத்தில் உள்ள அந்த ஆண் சிங்கத்தின் படத்தை பாருங்கள் ...சூரியன் அஸ்தமன நேரத்தில் உள்ளது. நீங்கள் அதற்கு  கல்யாண ஆசை காட்டி விட்டிர்கள் என்றால்  நாளை விடியும் போது  அது கழுதையாக மாறி விடும்.

இது எப்படி இருக்கு....ஹா ..ஹா ..ஹா 

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

அம்மணக் கலாச்சாரம்


ஒரு ஊரில் ஒரு பிரபல  தையல் கடைக்காரன் இருந்தான்..அவன் மக்களின் போலி தனத்தை கண்டு பிடிக்க விரும்பினான்.

அரசனிடம் சென்று அரசே இதுவரை யாருமே தைக்காத ஒரு சிறந்த ஆடையை தங்களுக்கு தைத்து தர விரும்புகிறேன் என்றான் .அரசனும் சரி என்றான்.

பத்து நாள் கழித்து வந்தான்.இதோ என் கையில் உள்ள ஆடை யார் யார் உண்மை பேசுகிரார்களோ அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றான்.

அரசனை உடை மாற்றும் அறைக்கு   கூட்டி   சென்று ...சும்மா வெறும் கையை  வைத்து கொண்டு அவருக்கு உடையை மாட்டி விடுவது போல பாவனை செய்தான்.

அரசனோ ..உடை கண்ணுக்கு தெரியா விட்டாலும்..உடை தெரியவில்லையே   என்று சொன்னால் தான் பொய்யன் என்று உலகம் சொல்லி விடுமே என்று ...ஹி ..ஹி அருமையான உடை ...எவ்வளவு விலை என்று கேட்டு வைத்தான்.


அறையை விட்டு வெளியே வந்தார் அரசர். அவரை பார்த்த சக தர்மினியும் ஆடை என் சேலைக்கு மேட்ச் ஆக உள்ளது என்றாள்.
நெறைய கணவர்கள் பொண்டாட்டி பொய் சொல்ல மாட்டாள் என்று நம்புவது   போல இவரும் நம்பி விட்டார். நம் கண்ணுக்கு தான் ஆடை தெரியவில்லை போல என்று.    
அரசர் நகர் வலம் புறப்பட்டார். எல்லா மக்களும் அரசரின் ஆடை அருமை என்று பேசி கொண்டனர். அட அப்படி சொல்ல வில்லை என்றால் தான் நாம்  பொய் சொல்லுபவன் ஆகி விடுவோமே என்பதால்.   

நகர் வலம் தொடர்ந்தது.


அந்த வழியாக விளையாடி கொண்டு இருந்த சில சிறுவர்கள் இதை பார்த்தனர்.
அய்....அரசர் அம்மணமாக நகர்வலம் வருகிறார் என்று கத்தி கொண்டு ஓடினர்.
அரசருக்கு அப்போது தான் புத்தியில் உரைத்தது.

இந்த கதை சாரு நிவேதிதாவின் சினிமா சினிமா என்ற புத்தகத்தில் நான் படித்தது.
இந்த கதையை படித்த போது  எனக்கு நம்முடைய காலாசாரம் தான் ஞாபகத்துக்கு வந்தது.

இந்த கதை கலாசாரத்துக்கு மட்டும் பொருந்துவதில்லை.நம்முடைய   சமுதாய போலித்தனத்துக்கு இதை விட  சிறந்த உதாரணம் காட்ட முடியாது :)

 Also Refer :http://thanikaatturaja.blogspot.com/2010/11/blog-post_8153.html


இது எப்படி இருக்கு....ஹா ..ஹா ..ஹா      

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சூப்பர் ஸ்டாரின் அடுத்த அதிரடி படங்கள்

சூப்பர் ஸ்டார் பட்டம் ஒன்னும் எனக்கே சொந்தம் இல்லை என்று ரஜினி சொல்லி உள்ளார். தற்போதய நடிகர்களில் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு தகுதியானவர் என்றால் தல அஜித் தான்.ஆனால் அவரே அமைதியாக அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு தகுதியானவர் என்று கை காட்டியவர் யார் தெரியுமா..:))
தலைவரின் அடுத்த படங்கள் வரிசையாக :) 


                                        
                                            தலைவரின் இன்னொரு பக்கம் :)தனி காட்டு ராஜா:  தலைவரே உங்ககிட்ட என்ன இருக்கோ இல்லையோ ....உங்ககிட்ட தல அஜித்த விடவே தன்னம்பிக்கை அதிகமாக இருக்கு...
அதுக்காகவே உங்களை பாராட்டலாம் :)) 

Src :படங்கள் forward செய்ய பட்ட மெயிலிருந்து

புதன், 6 ஏப்ரல், 2011

நமிதா பி(ரா)ச்சாரம்நமிதா : என்ன மச்சான்ஸ்,நமிதா-நு  தலைப்ப பார்த்ததுமே...ஓடி வந்துடீங்களா...

கீழ இருக்கர லிங்க கிளிக் பண்ணுங்க....உங்க தொகுதி வேட்பாளர பத்தி தெரிஞ்சுக்கோங்க...விழிப்புணர்வ பரப்புங்க.....   
 தலைப்பு டிஸ்கி: நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பு இல்லை...

திங்கள், 21 மார்ச், 2011

சென்னை பதிவர்கள் கவனத்திற்குஇந்த பதிவிற்கு சென்னை பதிவர்களின் ஆதரவை நான் வேண்டுகிறேன்...ஏன் ...எதற்கு என்பதை எல்லாம் பொறுமையாக கடைசி வரை படியுங்கள்..புரியும்...

அமைதியாக பதிவுலகில் பார்வையாளனாய் மட்டும் இருப்போம் என்று இருந்தவனை .....பார்வையாளன் அவர்கள்  இப்படி ஒரு இடுகை எழுதி என்னை உசுபேற்றி விட்டார்.இதோ கெளம்பி விட்டேன் ....அவருக்கு செக் வைக்க....அவருக்கு மட்டும் அல்ல ...தொப்பிதொப்பி போன்ற சிலருக்கும்.... மற்றும் தமிழ் பதிவர்கள் அனைவருக்கும்....


பார்வையாளன்  நினைத்து இருப்பார்...இப்படி ஒரு ஆன்மிக  இடுகை (ஏற்கனவே எழுதியது போல)  இன்பர்மடிக்காக எழுவேன் என்று ...

இது கொஞ்சம் வித்தியாசமான ஆன்மிக பகிர்வு ....என் அனுபவம் சார்ந்தது ...

முதலில் எனக்கும் சென்னைக்கும் உள்ள சொந்த பந்தத்தை சொல்லி விடுகிறேன்.இதில் என்னைப் பற்றி சுய விளக்கம் அதிகமாக இருக்கும்.....சொல்ல வேண்டிய சூழ்நிலை ..ஹி..ஹி  


எனது சொந்த ஊர்  ஈரோடுக்கு அருகில்.நான் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தை சார்ந்தவன். என்னுடைய பதின்ப வயதை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்பினால் இங்கு செல்லவும் .படிக்கும் போது பணத்துக்கு ரொம்ப கஷ்டம் தான். தற்போதாவது விவசாய நிலை பரவாயில்லை.இருந்த போதிலும் குறு நில விவசாயிகளின் நிலை கொஞ்சம் கடினம் தான்.உழைப்பும் அதிகம்.பள்ளியில் கொஞ்சம் நன்றாக படித்த  காரணத்தினால் ....ஒரு ஆசிரியர் நான் பொறியியல் படிப்பதில் பண உதவி செய்தார்.   
பெரும்பாலானவர்களை போல காலேஜ் முடித்தவுடன் ...ஒரு மஞ்ச பையை ( :) )தூக்கி கொண்டு  சென்னை வந்த புதிதில் நாய் படாத பாடு பட்டு தான் ஒரு வேலை வாங்கினேன்..

சென்னையில் நான் 2004 -2009 வரை வசித்து வந்து உள்ளேன்.  கடந்த 1 வருடங்களுக்கு மேலாக கோவை வாசம்.

சென்னையில்   மடிப்பாக்கம்(உள்ளகரம் ஆயில் மில் ) அருகில் ஒரு  2 வருடம் ...காசி தியேட்டர் ஜாபர்கான்பேட்  அருகில் ஒரு 2  வருடம் ....அப்புறம் ராமபுரத்தில் ஒரு 2  வருடம் வாசம் செய்தேன்.

நெறைய பேரை போல எனக்கும் சின்ன வயது முதலே கொஞ்சம் இரக்க மனப்பான்மை  உண்டு ..
நெறைய பேர் கஷ்டபடுவதை காணும் போது எல்லாம் ...நாம் வேலைக்கு சென்று நல்ல நெலமைக்கு வரும் போது ...கஷ்டபடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று நெனைப்பேன் ....

உள்ளகரத்தில் வசித்து  வந்த முதல் இரண்டு வருட காலத்தில் அருகே ஆதம்பாக்கதில் ஒரு உதவும் உள்ளங்கள் இல்லம் என்று ஒரு ஆதரவற்றோர் இல்லம் இருந்தது.(இப்போதும் உள்ளது).
சனி,ஞாயிரு போன்ற நாட்களில் நங்கால்லூர் வேலன் ,வெற்றி வேலன் ,ஆதம்பாக்கம் ஜெய லட்சுமி  போன்ற தியேட்டர்களில் சுற்றினாலும் கூட மாதம்  ஒரு முறை அந்த இல்லத்திற்கு  நான் செல்வதுண்டு .மாதம் 2000 முதல்3000  வரை நன்கொடை கொடுப்பதுண்டு.

அந்த இல்லத்தில்  100 க்கு பக்கமாக அநாதை குழந்தைகள் உண்டு.அது மட்டும் அல்லாமல்  அவர்களுடைய இன்னொரு branch -ல் (மறை மலை நகரில்)   யார் அதாரவும் அற்ற முதியோர்  30  பேர் இருந்தார்கள். அந்த இல்லத்தை ஓய்வு  பெற்ற நான்கு ஆசிரியர்கள் சேர்ந்து தொடங்கியதாக சொல்லுவார்கள்.
எப்படி உங்களால் இந்த இல்லத்தை நடத்த முடிகிறது என்று கேக்கும் போது எல்லாம் அவர்கள் சொல்லும் பதில் உங்களை போல நல்ல உள்ளம் படைத்த சிலர் உதவுவதால் தான் நடத்த முடிகிறது என்று சொல்லுவார்கள்.
அதுவும் சில நேரங்களில் பணம் ,பொருள் சரியாக கிடைக்காமல் கஷ்டபடுவதுண்டு என்று சொல்லுவார்கள்.
இது போன்ற இல்லங்களில் அவர்கள் உணர்வுகளை வார்த்தையால் சொல்லுவது கடினம் தான். சென்று பார்த்தல் தான் உணர முடியும்.
   
நிற்க ....

அடுத்து  ஒரு நாள் கண் தெரியாத ஒருவர் கத்திபாரா ஜங்ஷன் அருகில் (அப்போது மேம்பாலம் இல்லை) சிரம பட்டு கொண்டு இருக்க....அவருக்கு ரயில்வே ஸ்டேஷன் வரை வழி காட்டினேன்.

ரயில்வே ஸ்டேஷன் வரை அவரிடம் பேசி கொண்டே வந்தேன். அவர் எதோ ஒரு சிறு தொழில் செய்ய( சிறு வயர் கூடை  பின்னுவது )  தொடர்பாக யாரோ ஒருவரை  இரண்டு,மூன்று முறை பார்க்க  சென்று வந்ததாகவும் ...பணம் கிடைக்கவில்லை  என்றும் கூறினார். அவருக்கு எவ்வளவு தேவை படுகிறது என்று கேட்டு ...(ருபாய்  500 என்று நெனைக்கிறேன்) கொடுத்தேன்.

அந்த பணம் கிடைத்ததும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை."நான் இரண்டு மூன்று  நாட்களாக அலைகிறேன் ..பாருங்கள் ...கடவுள் உங்கள் மூலமாக எனக்கு உதவி உள்ளான்.." என்றார்.

நினைத்து  பாருங்கள்.....ஒரு 500   ரூபாய் பணத்திற்காக அவர்கள் படும் சிரமத்தை....
இந்த நிலையிலும் ...அவர்கள் எதாவது தொழில்  செய்து தான் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் அவர்கள் தன்னம்பிக்கையை....        இத்தனைக்கும் மேல் கடவுள் மீது உள்ள நம்பிக்கையை ....இந்த நிலையில் நாம் இருந்தால் நமக்கு கடவுள் மேல் நம்பிக்கை வருமா....??

அதுவும் அவர்கள் கண் தெரியாமல் படும் சிரமங்கள் ஒரு நாள் ..இரு நாளா ??
ஒரு மனிதன் ஒரு 60  வருடம்  வாழ்கிறான் என்று வைத்து கொண்டால் .???

நரகம் என்று மத நூல்கள்  சொல்லுவது  கண்டிப்பாக இதை விட கொடுமையானதாக இருக்காது என்று தான் நினைக்கிறேன். 

இது முதல் கொண்டு ...சரி ...இனி மேல் கண் தெரியாத மனிதர்களுக்கு உதவுவோம்  என்று நினைத்தேன்..

வழக்கம் போல ..சனி ஞாயிறு களில் ...காசி தியேட்டர் ,உதயம் தியேட்டர்,பரங்கி மலை ஜோதி(ஹி ..ஹி..I am  கொஞ்சம் கெட்டவன் ) ,ஆலந்தூர் S.K தியேட்டர் போன்று நண்பர்களோடு சேர்ந்து சுற்றினாலும் கூட...மாதத்தில் ஒரு நாள்,இரு நாள் என கிண்டி ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போவேன்.     

 இங்கே கண் தெரியாத நிலையிலும் ஏதேனும் தொழில் செய்ய முயற்சி செய்பவர்கள் உண்டு.
Credit card கவர்,ரேசன் கார்டு கவர் ,கடலை முட்டாய் விற்பது  போன்று ஏதேனும் லோக்கல் ட்ரெயினிலோ  அல்லது  பிளாட்பாரத்திலோ   இவர்களை பார்க்கலாம்.

இவர்களில் யாரோ ஒரு பத்து பேருக்கு ரூபாய்  300 விதம் மாதம் மாதம் கொடுப்பதுண்டு.
உதவி பெற்ற எல்லோரும் அய்யா ரொம்ப நன்றி என்று சொல்வதுண்டு.
சிலர் ...அய்யா ...இந்த மாதம் material  வாங்க பணம் இல்லாமல் தவித்து கொண்டு இருந்தேன்... ரொம்ப நன்றி என்று உணர்வு 'பூ'ர்வமாக சொல்லுவதுண்டு.

 ஒரு முறை ஒருவருக்கு இது போல கொடுக்க போக ..."யார் உதவியும் எனக்கு தேவை இல்லை...எனக்கு சுயமாக வேலை உள்ளது " என்று கோபமாக   சொல்லி விட்டார். எனக்கோ  அவர் மீது மரியாதை கூடி விட்டது.
இந்த நிலையிலும் என்ன ஒரு தன்னம்பிக்கை...!! 

ஒரு சில கண் தெரியாதோர் ..காலை முதல் மாலை வரை வியாபாரம் செய்து பார்ப்பார்கள்.வருமானம் ஏதும் கிடைக்க வில்லை என்றால் ...மாலை வேலையில் பிச்சை கேக்க  தொடங்குவார்கள் .....எவ்வளவு பெரிய கொடுமை??   

நிற்க....(அல்லது உட்காருங்க)...

அடையாரில்  மத்திய கைலாஷ் அருகே மாத டிரஸ்ட் உள்ளதை நீங்கள் அறியலாம்.இங்கே ஓரிரு முறை சென்று உள்ளேன்.
இங்கே புற்று நோய்க்கு வைத்தியம் செய்ய  இயலாமல் சிரமப்படும் ஏழைகளுக்கு இவர்கள் உதவி செய்து
வருகிறார்கள்.டிரஸ்ட் நிர்வாகி பெயர் மறந்து விட்டது. இங்கே அமெரிக்கன் (மேனேஜர் போன்றவர் ....ரொம்ப வித்தியாசமான பெயர்...தமிழர் தான்) என்பவர் இங்கே என்ன என்ன மாதிரி சேவை நடை பெறுகிறது போன்றவற்றை கனிவாக விளக்குகிறார்.
இங்கே ஒரு முறை சென்ற போது ....அமெரிக்கன் ஒரு அப்பாவியான பேச்சு உள்ள ஒரு மனிதரை காட்டினார்.அவர் அன்றாட கூலி.வேலைக்கு சென்றால் தான் சாப்பாடு.இந்த நிலையில் புற்று நோய் என்றால் ...

பரவாயில்லை ....எனக்கு அவரை அறிமுகபடுத்திய போது ஏறக்குறைய குணமடைந்து விட்டார். 
இது போல எத்தனையோ பேரை குணப்படுத்துவதில் இவர்கள் உதவி வருகிறார்கள்.
புற்று நோயின் கொடுமை ...உங்கள் அருகில் உள்ள  யாருக்காவது வந்து இருந்து பார்த்தல் புரியும் ...என் பெரியம்மாவுக்கு வந்து இருந்தது...கிகிச்சை பலன் இல்லாமல் கடைசியில் இறந்து விட்டார்...   

நிற்க....
 
காசி தியட்டர் அருகில் தங்கி இருந்த போது ஒரு ஆயா(பாட்டி ) .இவரது மகன் லாரி ஆசிடேண்டில்  ஊனமுற்றவர்.தினசரி வருமானத்துக்கு சிரமம். வீடு ரொம்ப சிறிய வீடு.இந்த மனிதர் தன் அம்மாவை பார்த்து கொள்வதில்லை.
இந்த ஆயா நானும் என் நண்பர்கள் தங்கி இருந்த  வீட்டிற்கு துணி துவைக்க வருவார்.
வீடு இல்லாததால் தெருவில் தான் ஏதேனும் இடத்தில படுத்து கொள்ளவார்.
சென்னையில் கொசு கடியில் ....வயதான காலத்தில் தனியே படுத்து இருப்பது எவ்வளவு கடினம்.
சாப்பாடு கூட கடையில் தான்.
 நான் கோயம்புத்தூர் வந்தாலும் இந்த சென்னை பந்தம் இன்னும் விட வில்லை.இன்னும் நான் மாதம் மாதம் இந்த ஆயாவிற்கு  1000 Money order மூலம்   அனுப்பி வருகிறேன்.
இந்த ஆயா "என் பிள்ளை செத்து விட்டான்...நீதான் எனக்கு பிள்ளை என்று  சொல்லுவதுண்டு ..நான் செத்து போனால் வந்து ஒரு மாலை வாங்கி போட்டு விடு ....அது தான் பெரிய புண்ணியம் "என்று அடிக்கடி போனில் பேசும் போது        சொல்லுவதுண்டு...

 நிற்க....


இதை விட மோசமான நிலையில் இன்னொரு ஆயா உண்டு .
கிண்டி ரயில்வே ஸ்டேஷன்-ல்  பிச்சை எடுத்து கொண்டு இருந்து.
அனால் அதன் தோற்றத்தை பார்த்தால்,அப்பாவியாய் ,நெற்றியில் விபுதி இருக்கும்.
அதற்கு ஓரிரு முறை பாவம் என 100 ரூபாய்  கொடுக்க.....
அந்த ஆயா என்னிடம் நன்றாக பேச ஆரம்பித்தது.
அந்த ஆயா வுடைய மகன்கள் இருவர் ...ஒருவர் வெளி நாட்டில்....ஒருவர் இங்கே தான் அருகில் ...வந்தவாசி என்று 
நினைக்கிறேன்....இந்த ஆயாவுக்கு காச நோய் என்று தாம்பரம் ஹோஸ்பிடலில் விட்டு சென்றவர்தான் ...அதன் பின் வரவே இல்லையாம்...
இந்த ஆயாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடட்டுமா என்று  ஒரு முறை கேட்டேன்.ஒரு முறை இது போல் இல்லத்தில் இருந்ததாகவும்....காச நோய் என்பதால் யாரும் அருகில் வந்து கவனித்து கொள்ள மாட்டேன்
என்கிறார்கள் என்றார்.
இந்த ஆயாவிற்கு காச நோய்க்கு மாத்திரை வாங்கவே அதிகம் பணம் செலவாகி விடும்.
நான் சென்னையை விட்டு கிளம்பும் சமயத்தில்  அரக்கோணம் அருகே பரவேஸ்வரமங்கலத்தில் தங்கி கொள்ள ஒரு தாம்பர மருத்துவர் உதவியால் ஒரு சிறு ரூம்  கிடைத்தது .அதற்கு  முன் பிளாட்பாரம் தான்.
 இந்த ஆயாவிற்கு மாதம் 1000 ரூபாய் இந்த முகவரிக்கு தான் தற்சமயம் அனுப்பி கொண்டு உள்ளேன். 
வார வாரம் வியாழக்கிழமை  இந்த ஆயா மைலாப்பூர் சாய் பாபா கோவிலுக்கு செல்வது வழக்கம்.

இந்த ஆயா ...சில சமயம் சாய் பாபா கோவிலுக்கு சென்று விட்டு  எனக்கு போன் செய்வார்

சாய் பாபாவுக்கு   நீ கொடுத்த பணத்தில் நெய் விளக்கு ஏற்றி விட்டு ...நீ நல்லா இருக்கனும் என்று வேண்டி கொண்டதாகவும் ...தான் சீக்கிரம் செத்து போய் விட வேண்டும் என்று வேண்டி கொள்வதாகவும்  சொல்வார்...

அது மட்டும் இல்லாமல் ....காச நோய் என்பதால் 24  மணி நேரமும் இரும்பல் நிற்காமல் வருவதாகவும் ....இரவு நேரங்களில்  இரும்பும்  போது ...சிறு நீர் வெளியேறி மிகுந்த சிரமமாக உள்ளதாக சொல்வார்..தூக்கம் என்பதே ஒரு மணி நேரம் ...இரண்டு மணி நேரம் மட்டுமே பகலில்  என்றும் சொல்வார்.

எவ்வளவு சிரமம் .....   கடைசி காலத்தில் ....75 வயதுக்கு மேலே... உறவுகள்  அற்ற நிலையில்....

நிற்க....

தற்சமயம் இந்த இரு ஆயாகளுக்கு மட்டும் உதவி வருகிறேன்...கோயம்புத்தூர் -ல்  இருந்து  .வேறு ஏதும் செய்வதில்லை....
எனக்கும் சில குடும்ப பொறுப்புகள் அதிகரித்து விட்டன.இன்னும் சில  அனுபவங்கள் இருந்தாலும் .. என் அனுபவத்தை பகிர்வது இந்த பதிவின் நோக்கம் அல்ல. 
நாம் அனைவருமே  இது போல் சிரமபடுபவர்களை கண்டு தான் வருகிறோம்.ஆனால் தனி ஒரு மனிதனாக உதவி செய்வது என்பது அனைவருக்குமே ரொமபவும் கடினம். 
தனி மனிதனாக உதவி செய்தல் என்பது கடலில் கரைத்த ஜாங்கிரி போல.

மக்கள் சேவையே ...மகேசன் சேவை என்று தான் எல்லா மதங்களும் சொல்லுகின்றன,நாத்திக மதம் உட்பட. 

நான் மேற்கண்ட அனுபவத்தின் மூலம் சொல்ல வருவது...பதிவர்களாகிய நாம் அனைவரும் இணைந்து இது போன்று சிரமப்படும் பலருக்கு ஏதாவது செய்யலாமே...:)

இதில் நான் முக்கியமாக ஒரு விசயத்தை சொல்லி கொள்கிறேன்.என்னை விட அனுபவத்தில்,அறிவில் சிறந்த பதிவர்கள் மிக மிக அதிகம்.(என் வயது 27 மட்டுமே.) .அதனால்தான்  இந்த விசயத்தை பதிவுலகுக்கு எடுத்து வருகிறேன்.   எதோ ஒரு தீர்வு கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில். 

எத்தனை எத்தனை பேர்கள் ....சிறு வயதில் படிப்புக்காக  பண உதவி தேவை படும் ஏழை சிறுவர்கள்...இயற்கை சீற்றத்தின் போது ....உதவி தேவை படுவோர்....இலங்கை ராணுவத்தால் பாதிக்க பட்ட மீனவர் குடும்பங்களுக்கு  உதவி.etc...நம் நாட்டில் பிரச்சினைகளுக்கா பஞ்சம் ???

 நான் ஒரு பிளான் சொல்லுகிறேன் ...அது சரி வருமா என்று நீங்களே சொல்லுங்கள்.

இது சென்னையை  மையமாக வைத்து சொல்லுகிறேன்.

பதிவர்கள் சார்பாக ஒரு TRUST ஆரம்பிப்போம்.ஒரு online பேங்க் account கூட போதும் என்று நினைக்கிறேன்.
 
 டிரஸ்ட் நிர்வாகிகள் -ஒரு 10 முதல் 20 பேர் 

உதாரணத்துக்கு சென்னை பதிவர்களில் சிலர் ....முன்னணி பதிவர்கள் ,மூத்த பதிவர்கள்,சமுக நலனில் மிகுந்த அக்கறை கொண்ட சிலர் , தொப்பி தொப்பி ,பார்வையாளன்  போன்றோர்.

டிரஸ்ட் மெம்பெர்ஸ் :விருப்பமுள்ள அனை(ணை)த்து பதிவர்கள் ....

மாதம் மாதம் ஒரு 300 ருபாய் மெம்பெர்ஸ்( மாதம் 300  எனபது நம் அனைவராலும் முடியும் தொகை தானே.... இது ஒரு பிளான் மட்டும்....அனைத்தும் நம்  முடிவே)அனைவரும் கொடுப்பதாக வைத்து கொள்வோம்.  ஒரு 100 பேர் மெம்பெர்ஸ் என்று வைத்து கொண்டால் கூட  மாதம் 30000 ஆயிற்றே.....

டிரஸ்ட் நிர்வாகிகள் யாருக்கு உதவுவது போன்ற வற்றை பார்த்து கொள்வார்கள்.மாதம் ஒரு நாளில் கொஞ்ச நேரம் இதற்காக செலவளித்தால்  போதும்.போனில் பேசி கொண்டாலே போதும்

டிரஸ்ட் மெம்பெர்ஸ் (நம்மை   போன்ற கத்து குட்டிகள் ) மாதம் ஒரு 300 அனுப்பினால் போதும்(அது தான் ஆட்டோ டெபிட் வசதி உள்ளதே ..).


இது சுலபமான ஒரு விஷயம்.நாம்  அனைவரும்  ஈகோ இல்லாமல் ஒன்றினைந்தால் போதும்.

 மனமிருந்தால் மார்க்கமுண்டு ...:)  


பின் குறிப்பு:
பார்வையாளன்(இது ஆன்மிக பதிவு தானே தல? :) ),தொப்பி தொப்பி(தல ..உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளேன் ) இருவரும் இந்த விசயத்தை கொஞ்சம் பரவலாக எடுத்து செல்ல வேண்டும் எனபது எனது வேண்டுகோள்.
இது வெற்றி அடையும் பட்சத்தில்...இது நம் தமிழ்   பதிவுலக்குகே கிடைத்த வெற்றி....
நம் டிரஸ்ட் வெற்றி கரமாக செயல் படும் பட்சத்தில் உதவிகரம் நீட்ட பல பேர் வருவார்கள்.  

பின்பின் குறிப்பு:    
என்னுடைய பழைய பதிவுகள் அனைத்தும் சமுகத்தின் மீது இருந்த கோபத்தை வெளிப்படுத்துவது மட்டுமே.
நாம் நமக்குள்ளே ஓன்று கூடாமல் ....சும்மா பேசி கொண்டு உள்ளோமே என்பதன் வெளிப்பாடு மட்டுமே. 

பதிவை படிக்கும் அனைவரும் தங்கள்  அனுபவம் மற்றும்  அறிவுரையை பின்னுட்டமாக சொல்லி செல்லுங்கள்.    

வியாழன், 17 மார்ச், 2011

பிரபல பதிவரின் பேட்டி


பிரபல பதிவர் தனி காட்டு ராஜாவிடம் நெறைய கேள்விகளை நான்(கோபி ) அனுப்பி இருந்தேன்.அதில் அவர் தனக்கு பிடித்தமான சில கேள்விகளுக்கு மட்டும் பதில் தந்து உள்ளார்.

எத்தனையோ படிக்கறீங்க....இதையும் சகிச்சுக்கிட்டு படிச்சுடுங்க :)  

கேள்வி:உங்கள் நிஜ பெயரே தனி காட்டு ராஜா தானா..? 
பிரபல பதிவர் தனி காட்டு ராஜா: அதெல்லாம் இல்லைங்க....ஊர்ல என்னை பேனர் குப்பன்.....டோமறு மண்டையன் அப்படின்னு எல்லாம் செல்லமா பல பேர்ல  பல பேரு கூப்பிடுவாங்க..இருந்தாலும் கூட    எனக்கு நானே தனி காட்டு ராஜானு பேரு வச்சுக்கிட்டேன்.

கேள்வி:அதெப்படி உங்க ப்ளாக் -க்கு எப்ப வந்தாலும் hits 1000  க்கு மேல இருக்குதே...?
பிரபல பதிவர்:ஹா ..ஹா ...இதுல இருந்தே புரிய வேண்டாமா ...default  hits  1000 -துல இருந்து தான் தொடங்குற மாதிரி செட் பண்ணி வச்சுட்டேன்.. 
 
கேள்வி:உங்க profile  -ல  போட்டோ ஏன் போட வில்லை ..நீங்க உண்மையான ஆம்பிளை தானா..?
பிரபல பதிவர்:Well...Wait a minute... Let me check ...
ஆம்பிளை மாதிரி தான்  தெரியுது ...

நீங்க போட்டோ போட சொல்லி  சுலபமா சொல்லிட்டீங்க....

எங்க ஊர்ல ஒரு டைம் ஒருத்தன் கிட்ட 1000  ரூபாய் கடன் வாங்கிட்டு ....அத அவன் திரும்ப கேக்க வரும் போதெல்லாம் நான் முகத்துல துண்ட போட்டுக்கிட்டு என்ன ஓட்டம் ஓடுனணு உங்களுக்கு  தெரியுமா ...அது தெரிஞ்சு இருந்தா  இந்த கேள்விய கேட்டு இருக்க மாட்டீங்க...

Profile-ல போட்டோ போடுவது சாதாரண விசயமா என்ன..?

கேள்வி:சரி...நீங்க பிரபல பதிவர் என்பதால் உங்களுக்கு சமுதாயத்தில் மரியாதை அதிகமாக கிடைக்கிறதா....? 

பிரபல பதிவர்:ஊர்ல மரியாதை இருந்தா நான் ஏன் இங்க பதிவு எழுத வரேன்.....நேர்ல  நெறைய பேரு என்   கழுத்துல துண்ட போட்டு கேவலமா  பேசி இருக்கராங்களே ...அதெல்லாம் உங்களுக்கு தெரியவா போகுது....எங்க ஊருல 1000 பேருக்கு மேல நான்  hits வாங்கி இருப்பேன்.....ஆனா அந்த hits எல்லாம்  என்னமா வலிக்கும் தெரியுமா...?   

கேள்வி:நீங்க தான் புரட்சி பதிவர் ஆயிற்றே ....களத்தில் இறங்கி புரட்சி செய்தது அனுபவம் உண்டா ...அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...?

பிரபல பதிவர்:அரசியலில் புரட்சி செய்யலாம் என்று எங்க ஊர் M.L.A ஆபீஸ் -க்கு போய் அவரை   நேராக பார்த்து கேட்டேன்..
"நான் கொஞ்சம் ஓபன் டைப்....நீங்கள் 5 கோடி ஊழல் செய்து உள்ளதாக கேள்வி பட்டேன்...அந்த பணத்தை மக்களுக்கு சேவை செய்ய பயன் படுத்துங்கள்" என்று சொன்னேன்..

அப்புறம் நடந்தத   உங்களுக்கு சொல்லனுமா என்ன..?

அன்னைக்கு நைட் உடம்பு வலி பொறுக்க முடியாமல் போர்வைக்குள்ள படுத்துக்கிட்டு எப்படி விக்கி விக்கி அழுதேன் தெரியுமா..?   

கேள்வி:நீங்கள் தீவிரமாக நாத்திகம் பேசுகிரிர்களே....உங்கள் மனைவி இதை  எப்படி எடுத்து கொள்கிரார்...?

பிரபல பதிவர்:என் பொண்டாட்டியோட ரெண்டாம் கல்யாணத்துக்கு  நான் போனபோது அவள் சொன்னதை நான் இங்கு நினைவு
கூறுகிறேன்...."நீங்கள் நாத்திகம் பேசுங்கள் ....ஆத்திகம் பேசுங்கள் ...அதை பற்றி எனக்கு கவலை இல்லை" என்று சொல்லி விட்டாள்...  


கேள்வி:பிரபல பதிவர் யாக இருப்பதால் எதவாது நன்மை நீங்கள் கண்டதுண்டா...? 
 
பிரபல பதிவர்:அட போப்பா...காலங்காத்தலா விழித்தவுடனே  எந்திரிச்சு toilet  போரப்பவே...இன்னைக்கு எவன் எவன் நம்ம திட்ட போறானோ -நு யோசிக்க வேண்டி இருக்கு..

கேள்வி:எப்படி உங்கள் எதிர் கருத்துகள் வரும்போது கையாளுவீர்கள?

பிரபல பதிவர்:எரிச்சல் எரிச்சலாதான்  வரும் ....இருந்த போதிலும்..."இது போன்ற நிகழ்வுகளை நான் புன்னகையுடன் கடந்து போகிறேன்" அப்படின்னு ஒரு statement விட்டு விடுவேன் ....நான் ரொம்ப பக்குவ பட்ட பதிவர் என்று நெறைய பேர் நினைத்து விடுவார்கள் ...    

கேள்வி:நீங்கள் ஏன் காமடி பதிவுகளை எழுதுவதில்லை?

பிரபல பதிவர்:என் அரசியல்,கவிதை போன்றவைகளே காமடியாத்தான் இருக்கிறது என்று என் உள் மனது உண்மையை சொல்லுவதால் ...காமடிக்கு என்று தனியே நான் முயற்சி செய்வது இல்லை...  

கேள்வி:உங்களுக்கு  வாசகர் கடிதம் வருவது உண்டா?

பிரபல பதிவர்:10 க்கு 9கடிதம் என்னை கேவலமாக  திட்டி தான் வரும் ....எதோ ஒன்னு ரெண்டு என்னை புகழ்ந்து வருவதை மட்டும் வெளி யிட்டு விடுவேன்.....
இதை பார்த்த சில விவரம் அறியாத பயல்கள் ....அட டா ...நமக்கு வாசகர் கடிதம் ஏதும் வர மாட்டிங்குதே  என் ஏங்குவது உண்டு... 

கேள்வி:பெண் பதிவர்கள் கமெண்ட் உங்கள் பதிவுகளுக்கு அதிகம் வருகிறதே...அதன் ரகசியம் என்ன?

பிரபல பதிவர்:அது வேறு ஓன்றும் இல்லை ...பெண்களுக்கு பொதுவாக ஒரு வீக்நஸ் உண்டு ... பெண்களை நீங்கள் அக்கா ,சகோதரி என்று சொல்லி விட்டால் போதும் ...உருகி விடுவார்கள்...அது மட்டும் இல்லாமல் நீங்கள் தங்கச்சி என்று சொல்லி விட்டால் போதும் ...அண்ணா...அண்ணா என்று அழைத்தே நம்மை கரைத்து விடுவார்கள.

அவர்களுக்கு என்ன தெரியவா போகிறது நான் பிட்டு படம் பார்த்து கொண்டு தான் பதிவு எழுதுவேன்  என்ற உண்மை.

என் பொண்டாட்டிக்கு கூட என்னைப்   பிடிக்காது...ஹா ..ஹா.. அது மட்டும் இல்லாமல் பொண்டாட்டி தொந்தரவில் இருந்து தப்பிக்க தான் நான் பதிவே எழுதுகிறேன் என்ற   உண்மை வலையுலக பெண்களுக்கு தெரியவா போகிறது?

கேள்வி:நீங்கள் பதிவுலகின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்  என்று உள்ளீர்கள்?

பிரபல பதிவர்:பதிவு எழுதுவதை நிறுத்தி விடலாமா என்று யோசித்து கொண்டு உள்ளேன்..


   

சனி, 12 மார்ச், 2011

பதிவுலக சுய இன்பம்

 
 
நான் யார் தெரியுமா .....என்னை பத்தி உங்களுக்கு தெரியாது .......

உன்னை மாதிரி எத்தனையோ பேர பாத்தவன்டா நான்....

நான் ஓபன் டைப்...இதுவரிக்கும் பேன்ட் ஜிப்பே போட்டது இல்லை ... :)
 
வேணுமுனா என் போன் number தருகிறேன் ....வா  ஒண்டிக்கு ஒண்டி  மோதிப்  பாத்துடலாம்....(மறக்காம   அட்டை கத்திய எடுதுட்டு வந்துரு ...)

profile -ல  போட்டோ போட்டவன் ....toilet  சுவர் போஸ்டர்ல போட்டோ உள்ளவன்   இவனுக மட்டும் தான் ஆம்பிளை ....

பொண்ணுகள பத்தி தப்பா பேசுறியா நீ ....தாயார இரு .....உன்னை public பாத்ரூம் -ல  போட்டு பூட்டி வைக்க போறேன் ..அப்புறம் பார்க்கிறேன் ...நீ எப்படி பதிவு எழுதுரீனு ....

என்னது  தண்ணி தொட்டில பிரச்சினையா ....எடுடா லேப் -டாப் .....போடுடா ஒரு பதிவ ....

என்னது மீனவர் பிரச்சினையா ....எடுடா லேப் -டாப்..

என்னது spectrum  பிரச்சினையா ....எடுடா லேப் -டாப்..

என்னது சுனாமியா .....எடுடா லேப் -டாப்..

என்னது consitipation யா....எடுடா லேப் -டாப்..

ஹய்.... தேர்தல் வந்துருச்சா ...எடுடா லேப் -டாப் ...

அண்ணே ...லேப் -டாப் -க்கு இன்னைக்கு ஜன்னி வந்துருசுச்சு ...

சரி ..இன்னைக்கு நான் நமிதாவ நெனைச்சுகிட்டு Masterpate பண்ண போறேன் .....நீ யார நெனச்சுக்க போற ...

நான் வந்து...... அனுஷ்கா ....

சரி நாளைக்கு உலக பிரச்சினையை பத்தி அலசுவோம் .....Good Night...bye ..

டிஸ்கி : ஒன்னும் கிடையாது ...ஹா ..ஹா  :)