திங்கள், 21 மார்ச், 2011

சென்னை பதிவர்கள் கவனத்திற்குஇந்த பதிவிற்கு சென்னை பதிவர்களின் ஆதரவை நான் வேண்டுகிறேன்...ஏன் ...எதற்கு என்பதை எல்லாம் பொறுமையாக கடைசி வரை படியுங்கள்..புரியும்...

அமைதியாக பதிவுலகில் பார்வையாளனாய் மட்டும் இருப்போம் என்று இருந்தவனை .....பார்வையாளன் அவர்கள்  இப்படி ஒரு இடுகை எழுதி என்னை உசுபேற்றி விட்டார்.இதோ கெளம்பி விட்டேன் ....அவருக்கு செக் வைக்க....அவருக்கு மட்டும் அல்ல ...தொப்பிதொப்பி போன்ற சிலருக்கும்.... மற்றும் தமிழ் பதிவர்கள் அனைவருக்கும்....


பார்வையாளன்  நினைத்து இருப்பார்...இப்படி ஒரு ஆன்மிக  இடுகை (ஏற்கனவே எழுதியது போல)  இன்பர்மடிக்காக எழுவேன் என்று ...

இது கொஞ்சம் வித்தியாசமான ஆன்மிக பகிர்வு ....என் அனுபவம் சார்ந்தது ...

முதலில் எனக்கும் சென்னைக்கும் உள்ள சொந்த பந்தத்தை சொல்லி விடுகிறேன்.இதில் என்னைப் பற்றி சுய விளக்கம் அதிகமாக இருக்கும்.....சொல்ல வேண்டிய சூழ்நிலை ..ஹி..ஹி  


எனது சொந்த ஊர்  ஈரோடுக்கு அருகில்.நான் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தை சார்ந்தவன். என்னுடைய பதின்ப வயதை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்பினால் இங்கு செல்லவும் .படிக்கும் போது பணத்துக்கு ரொம்ப கஷ்டம் தான். தற்போதாவது விவசாய நிலை பரவாயில்லை.இருந்த போதிலும் குறு நில விவசாயிகளின் நிலை கொஞ்சம் கடினம் தான்.உழைப்பும் அதிகம்.பள்ளியில் கொஞ்சம் நன்றாக படித்த  காரணத்தினால் ....ஒரு ஆசிரியர் நான் பொறியியல் படிப்பதில் பண உதவி செய்தார்.   
பெரும்பாலானவர்களை போல காலேஜ் முடித்தவுடன் ...ஒரு மஞ்ச பையை ( :) )தூக்கி கொண்டு  சென்னை வந்த புதிதில் நாய் படாத பாடு பட்டு தான் ஒரு வேலை வாங்கினேன்..

சென்னையில் நான் 2004 -2009 வரை வசித்து வந்து உள்ளேன்.  கடந்த 1 வருடங்களுக்கு மேலாக கோவை வாசம்.

சென்னையில்   மடிப்பாக்கம்(உள்ளகரம் ஆயில் மில் ) அருகில் ஒரு  2 வருடம் ...காசி தியேட்டர் ஜாபர்கான்பேட்  அருகில் ஒரு 2  வருடம் ....அப்புறம் ராமபுரத்தில் ஒரு 2  வருடம் வாசம் செய்தேன்.

நெறைய பேரை போல எனக்கும் சின்ன வயது முதலே கொஞ்சம் இரக்க மனப்பான்மை  உண்டு ..
நெறைய பேர் கஷ்டபடுவதை காணும் போது எல்லாம் ...நாம் வேலைக்கு சென்று நல்ல நெலமைக்கு வரும் போது ...கஷ்டபடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று நெனைப்பேன் ....

உள்ளகரத்தில் வசித்து  வந்த முதல் இரண்டு வருட காலத்தில் அருகே ஆதம்பாக்கதில் ஒரு உதவும் உள்ளங்கள் இல்லம் என்று ஒரு ஆதரவற்றோர் இல்லம் இருந்தது.(இப்போதும் உள்ளது).
சனி,ஞாயிரு போன்ற நாட்களில் நங்கால்லூர் வேலன் ,வெற்றி வேலன் ,ஆதம்பாக்கம் ஜெய லட்சுமி  போன்ற தியேட்டர்களில் சுற்றினாலும் கூட மாதம்  ஒரு முறை அந்த இல்லத்திற்கு  நான் செல்வதுண்டு .மாதம் 2000 முதல்3000  வரை நன்கொடை கொடுப்பதுண்டு.

அந்த இல்லத்தில்  100 க்கு பக்கமாக அநாதை குழந்தைகள் உண்டு.அது மட்டும் அல்லாமல்  அவர்களுடைய இன்னொரு branch -ல் (மறை மலை நகரில்)   யார் அதாரவும் அற்ற முதியோர்  30  பேர் இருந்தார்கள். அந்த இல்லத்தை ஓய்வு  பெற்ற நான்கு ஆசிரியர்கள் சேர்ந்து தொடங்கியதாக சொல்லுவார்கள்.
எப்படி உங்களால் இந்த இல்லத்தை நடத்த முடிகிறது என்று கேக்கும் போது எல்லாம் அவர்கள் சொல்லும் பதில் உங்களை போல நல்ல உள்ளம் படைத்த சிலர் உதவுவதால் தான் நடத்த முடிகிறது என்று சொல்லுவார்கள்.
அதுவும் சில நேரங்களில் பணம் ,பொருள் சரியாக கிடைக்காமல் கஷ்டபடுவதுண்டு என்று சொல்லுவார்கள்.
இது போன்ற இல்லங்களில் அவர்கள் உணர்வுகளை வார்த்தையால் சொல்லுவது கடினம் தான். சென்று பார்த்தல் தான் உணர முடியும்.
   
நிற்க ....

அடுத்து  ஒரு நாள் கண் தெரியாத ஒருவர் கத்திபாரா ஜங்ஷன் அருகில் (அப்போது மேம்பாலம் இல்லை) சிரம பட்டு கொண்டு இருக்க....அவருக்கு ரயில்வே ஸ்டேஷன் வரை வழி காட்டினேன்.

ரயில்வே ஸ்டேஷன் வரை அவரிடம் பேசி கொண்டே வந்தேன். அவர் எதோ ஒரு சிறு தொழில் செய்ய( சிறு வயர் கூடை  பின்னுவது )  தொடர்பாக யாரோ ஒருவரை  இரண்டு,மூன்று முறை பார்க்க  சென்று வந்ததாகவும் ...பணம் கிடைக்கவில்லை  என்றும் கூறினார். அவருக்கு எவ்வளவு தேவை படுகிறது என்று கேட்டு ...(ருபாய்  500 என்று நெனைக்கிறேன்) கொடுத்தேன்.

அந்த பணம் கிடைத்ததும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை."நான் இரண்டு மூன்று  நாட்களாக அலைகிறேன் ..பாருங்கள் ...கடவுள் உங்கள் மூலமாக எனக்கு உதவி உள்ளான்.." என்றார்.

நினைத்து  பாருங்கள்.....ஒரு 500   ரூபாய் பணத்திற்காக அவர்கள் படும் சிரமத்தை....
இந்த நிலையிலும் ...அவர்கள் எதாவது தொழில்  செய்து தான் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் அவர்கள் தன்னம்பிக்கையை....        இத்தனைக்கும் மேல் கடவுள் மீது உள்ள நம்பிக்கையை ....இந்த நிலையில் நாம் இருந்தால் நமக்கு கடவுள் மேல் நம்பிக்கை வருமா....??

அதுவும் அவர்கள் கண் தெரியாமல் படும் சிரமங்கள் ஒரு நாள் ..இரு நாளா ??
ஒரு மனிதன் ஒரு 60  வருடம்  வாழ்கிறான் என்று வைத்து கொண்டால் .???

நரகம் என்று மத நூல்கள்  சொல்லுவது  கண்டிப்பாக இதை விட கொடுமையானதாக இருக்காது என்று தான் நினைக்கிறேன். 

இது முதல் கொண்டு ...சரி ...இனி மேல் கண் தெரியாத மனிதர்களுக்கு உதவுவோம்  என்று நினைத்தேன்..

வழக்கம் போல ..சனி ஞாயிறு களில் ...காசி தியேட்டர் ,உதயம் தியேட்டர்,பரங்கி மலை ஜோதி(ஹி ..ஹி..I am  கொஞ்சம் கெட்டவன் ) ,ஆலந்தூர் S.K தியேட்டர் போன்று நண்பர்களோடு சேர்ந்து சுற்றினாலும் கூட...மாதத்தில் ஒரு நாள்,இரு நாள் என கிண்டி ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போவேன்.     

 இங்கே கண் தெரியாத நிலையிலும் ஏதேனும் தொழில் செய்ய முயற்சி செய்பவர்கள் உண்டு.
Credit card கவர்,ரேசன் கார்டு கவர் ,கடலை முட்டாய் விற்பது  போன்று ஏதேனும் லோக்கல் ட்ரெயினிலோ  அல்லது  பிளாட்பாரத்திலோ   இவர்களை பார்க்கலாம்.

இவர்களில் யாரோ ஒரு பத்து பேருக்கு ரூபாய்  300 விதம் மாதம் மாதம் கொடுப்பதுண்டு.
உதவி பெற்ற எல்லோரும் அய்யா ரொம்ப நன்றி என்று சொல்வதுண்டு.
சிலர் ...அய்யா ...இந்த மாதம் material  வாங்க பணம் இல்லாமல் தவித்து கொண்டு இருந்தேன்... ரொம்ப நன்றி என்று உணர்வு 'பூ'ர்வமாக சொல்லுவதுண்டு.

 ஒரு முறை ஒருவருக்கு இது போல கொடுக்க போக ..."யார் உதவியும் எனக்கு தேவை இல்லை...எனக்கு சுயமாக வேலை உள்ளது " என்று கோபமாக   சொல்லி விட்டார். எனக்கோ  அவர் மீது மரியாதை கூடி விட்டது.
இந்த நிலையிலும் என்ன ஒரு தன்னம்பிக்கை...!! 

ஒரு சில கண் தெரியாதோர் ..காலை முதல் மாலை வரை வியாபாரம் செய்து பார்ப்பார்கள்.வருமானம் ஏதும் கிடைக்க வில்லை என்றால் ...மாலை வேலையில் பிச்சை கேக்க  தொடங்குவார்கள் .....எவ்வளவு பெரிய கொடுமை??   

நிற்க....(அல்லது உட்காருங்க)...

அடையாரில்  மத்திய கைலாஷ் அருகே மாத டிரஸ்ட் உள்ளதை நீங்கள் அறியலாம்.இங்கே ஓரிரு முறை சென்று உள்ளேன்.
இங்கே புற்று நோய்க்கு வைத்தியம் செய்ய  இயலாமல் சிரமப்படும் ஏழைகளுக்கு இவர்கள் உதவி செய்து
வருகிறார்கள்.டிரஸ்ட் நிர்வாகி பெயர் மறந்து விட்டது. இங்கே அமெரிக்கன் (மேனேஜர் போன்றவர் ....ரொம்ப வித்தியாசமான பெயர்...தமிழர் தான்) என்பவர் இங்கே என்ன என்ன மாதிரி சேவை நடை பெறுகிறது போன்றவற்றை கனிவாக விளக்குகிறார்.
இங்கே ஒரு முறை சென்ற போது ....அமெரிக்கன் ஒரு அப்பாவியான பேச்சு உள்ள ஒரு மனிதரை காட்டினார்.அவர் அன்றாட கூலி.வேலைக்கு சென்றால் தான் சாப்பாடு.இந்த நிலையில் புற்று நோய் என்றால் ...

பரவாயில்லை ....எனக்கு அவரை அறிமுகபடுத்திய போது ஏறக்குறைய குணமடைந்து விட்டார். 
இது போல எத்தனையோ பேரை குணப்படுத்துவதில் இவர்கள் உதவி வருகிறார்கள்.
புற்று நோயின் கொடுமை ...உங்கள் அருகில் உள்ள  யாருக்காவது வந்து இருந்து பார்த்தல் புரியும் ...என் பெரியம்மாவுக்கு வந்து இருந்தது...கிகிச்சை பலன் இல்லாமல் கடைசியில் இறந்து விட்டார்...   

நிற்க....
 
காசி தியட்டர் அருகில் தங்கி இருந்த போது ஒரு ஆயா(பாட்டி ) .இவரது மகன் லாரி ஆசிடேண்டில்  ஊனமுற்றவர்.தினசரி வருமானத்துக்கு சிரமம். வீடு ரொம்ப சிறிய வீடு.இந்த மனிதர் தன் அம்மாவை பார்த்து கொள்வதில்லை.
இந்த ஆயா நானும் என் நண்பர்கள் தங்கி இருந்த  வீட்டிற்கு துணி துவைக்க வருவார்.
வீடு இல்லாததால் தெருவில் தான் ஏதேனும் இடத்தில படுத்து கொள்ளவார்.
சென்னையில் கொசு கடியில் ....வயதான காலத்தில் தனியே படுத்து இருப்பது எவ்வளவு கடினம்.
சாப்பாடு கூட கடையில் தான்.
 நான் கோயம்புத்தூர் வந்தாலும் இந்த சென்னை பந்தம் இன்னும் விட வில்லை.இன்னும் நான் மாதம் மாதம் இந்த ஆயாவிற்கு  1000 Money order மூலம்   அனுப்பி வருகிறேன்.
இந்த ஆயா "என் பிள்ளை செத்து விட்டான்...நீதான் எனக்கு பிள்ளை என்று  சொல்லுவதுண்டு ..நான் செத்து போனால் வந்து ஒரு மாலை வாங்கி போட்டு விடு ....அது தான் பெரிய புண்ணியம் "என்று அடிக்கடி போனில் பேசும் போது        சொல்லுவதுண்டு...

 நிற்க....


இதை விட மோசமான நிலையில் இன்னொரு ஆயா உண்டு .
கிண்டி ரயில்வே ஸ்டேஷன்-ல்  பிச்சை எடுத்து கொண்டு இருந்து.
அனால் அதன் தோற்றத்தை பார்த்தால்,அப்பாவியாய் ,நெற்றியில் விபுதி இருக்கும்.
அதற்கு ஓரிரு முறை பாவம் என 100 ரூபாய்  கொடுக்க.....
அந்த ஆயா என்னிடம் நன்றாக பேச ஆரம்பித்தது.
அந்த ஆயா வுடைய மகன்கள் இருவர் ...ஒருவர் வெளி நாட்டில்....ஒருவர் இங்கே தான் அருகில் ...வந்தவாசி என்று 
நினைக்கிறேன்....இந்த ஆயாவுக்கு காச நோய் என்று தாம்பரம் ஹோஸ்பிடலில் விட்டு சென்றவர்தான் ...அதன் பின் வரவே இல்லையாம்...
இந்த ஆயாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடட்டுமா என்று  ஒரு முறை கேட்டேன்.ஒரு முறை இது போல் இல்லத்தில் இருந்ததாகவும்....காச நோய் என்பதால் யாரும் அருகில் வந்து கவனித்து கொள்ள மாட்டேன்
என்கிறார்கள் என்றார்.
இந்த ஆயாவிற்கு காச நோய்க்கு மாத்திரை வாங்கவே அதிகம் பணம் செலவாகி விடும்.
நான் சென்னையை விட்டு கிளம்பும் சமயத்தில்  அரக்கோணம் அருகே பரவேஸ்வரமங்கலத்தில் தங்கி கொள்ள ஒரு தாம்பர மருத்துவர் உதவியால் ஒரு சிறு ரூம்  கிடைத்தது .அதற்கு  முன் பிளாட்பாரம் தான்.
 இந்த ஆயாவிற்கு மாதம் 1000 ரூபாய் இந்த முகவரிக்கு தான் தற்சமயம் அனுப்பி கொண்டு உள்ளேன். 
வார வாரம் வியாழக்கிழமை  இந்த ஆயா மைலாப்பூர் சாய் பாபா கோவிலுக்கு செல்வது வழக்கம்.

இந்த ஆயா ...சில சமயம் சாய் பாபா கோவிலுக்கு சென்று விட்டு  எனக்கு போன் செய்வார்

சாய் பாபாவுக்கு   நீ கொடுத்த பணத்தில் நெய் விளக்கு ஏற்றி விட்டு ...நீ நல்லா இருக்கனும் என்று வேண்டி கொண்டதாகவும் ...தான் சீக்கிரம் செத்து போய் விட வேண்டும் என்று வேண்டி கொள்வதாகவும்  சொல்வார்...

அது மட்டும் இல்லாமல் ....காச நோய் என்பதால் 24  மணி நேரமும் இரும்பல் நிற்காமல் வருவதாகவும் ....இரவு நேரங்களில்  இரும்பும்  போது ...சிறு நீர் வெளியேறி மிகுந்த சிரமமாக உள்ளதாக சொல்வார்..தூக்கம் என்பதே ஒரு மணி நேரம் ...இரண்டு மணி நேரம் மட்டுமே பகலில்  என்றும் சொல்வார்.

எவ்வளவு சிரமம் .....   கடைசி காலத்தில் ....75 வயதுக்கு மேலே... உறவுகள்  அற்ற நிலையில்....

நிற்க....

தற்சமயம் இந்த இரு ஆயாகளுக்கு மட்டும் உதவி வருகிறேன்...கோயம்புத்தூர் -ல்  இருந்து  .வேறு ஏதும் செய்வதில்லை....
எனக்கும் சில குடும்ப பொறுப்புகள் அதிகரித்து விட்டன.இன்னும் சில  அனுபவங்கள் இருந்தாலும் .. என் அனுபவத்தை பகிர்வது இந்த பதிவின் நோக்கம் அல்ல. 
நாம் அனைவருமே  இது போல் சிரமபடுபவர்களை கண்டு தான் வருகிறோம்.ஆனால் தனி ஒரு மனிதனாக உதவி செய்வது என்பது அனைவருக்குமே ரொமபவும் கடினம். 
தனி மனிதனாக உதவி செய்தல் என்பது கடலில் கரைத்த ஜாங்கிரி போல.

மக்கள் சேவையே ...மகேசன் சேவை என்று தான் எல்லா மதங்களும் சொல்லுகின்றன,நாத்திக மதம் உட்பட. 

நான் மேற்கண்ட அனுபவத்தின் மூலம் சொல்ல வருவது...பதிவர்களாகிய நாம் அனைவரும் இணைந்து இது போன்று சிரமப்படும் பலருக்கு ஏதாவது செய்யலாமே...:)

இதில் நான் முக்கியமாக ஒரு விசயத்தை சொல்லி கொள்கிறேன்.என்னை விட அனுபவத்தில்,அறிவில் சிறந்த பதிவர்கள் மிக மிக அதிகம்.(என் வயது 27 மட்டுமே.) .அதனால்தான்  இந்த விசயத்தை பதிவுலகுக்கு எடுத்து வருகிறேன்.   எதோ ஒரு தீர்வு கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில். 

எத்தனை எத்தனை பேர்கள் ....சிறு வயதில் படிப்புக்காக  பண உதவி தேவை படும் ஏழை சிறுவர்கள்...இயற்கை சீற்றத்தின் போது ....உதவி தேவை படுவோர்....இலங்கை ராணுவத்தால் பாதிக்க பட்ட மீனவர் குடும்பங்களுக்கு  உதவி.etc...நம் நாட்டில் பிரச்சினைகளுக்கா பஞ்சம் ???

 நான் ஒரு பிளான் சொல்லுகிறேன் ...அது சரி வருமா என்று நீங்களே சொல்லுங்கள்.

இது சென்னையை  மையமாக வைத்து சொல்லுகிறேன்.

பதிவர்கள் சார்பாக ஒரு TRUST ஆரம்பிப்போம்.ஒரு online பேங்க் account கூட போதும் என்று நினைக்கிறேன்.
 
 டிரஸ்ட் நிர்வாகிகள் -ஒரு 10 முதல் 20 பேர் 

உதாரணத்துக்கு சென்னை பதிவர்களில் சிலர் ....முன்னணி பதிவர்கள் ,மூத்த பதிவர்கள்,சமுக நலனில் மிகுந்த அக்கறை கொண்ட சிலர் , தொப்பி தொப்பி ,பார்வையாளன்  போன்றோர்.

டிரஸ்ட் மெம்பெர்ஸ் :விருப்பமுள்ள அனை(ணை)த்து பதிவர்கள் ....

மாதம் மாதம் ஒரு 300 ருபாய் மெம்பெர்ஸ்( மாதம் 300  எனபது நம் அனைவராலும் முடியும் தொகை தானே.... இது ஒரு பிளான் மட்டும்....அனைத்தும் நம்  முடிவே)அனைவரும் கொடுப்பதாக வைத்து கொள்வோம்.  ஒரு 100 பேர் மெம்பெர்ஸ் என்று வைத்து கொண்டால் கூட  மாதம் 30000 ஆயிற்றே.....

டிரஸ்ட் நிர்வாகிகள் யாருக்கு உதவுவது போன்ற வற்றை பார்த்து கொள்வார்கள்.மாதம் ஒரு நாளில் கொஞ்ச நேரம் இதற்காக செலவளித்தால்  போதும்.போனில் பேசி கொண்டாலே போதும்

டிரஸ்ட் மெம்பெர்ஸ் (நம்மை   போன்ற கத்து குட்டிகள் ) மாதம் ஒரு 300 அனுப்பினால் போதும்(அது தான் ஆட்டோ டெபிட் வசதி உள்ளதே ..).


இது சுலபமான ஒரு விஷயம்.நாம்  அனைவரும்  ஈகோ இல்லாமல் ஒன்றினைந்தால் போதும்.

 மனமிருந்தால் மார்க்கமுண்டு ...:)  


பின் குறிப்பு:
பார்வையாளன்(இது ஆன்மிக பதிவு தானே தல? :) ),தொப்பி தொப்பி(தல ..உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளேன் ) இருவரும் இந்த விசயத்தை கொஞ்சம் பரவலாக எடுத்து செல்ல வேண்டும் எனபது எனது வேண்டுகோள்.
இது வெற்றி அடையும் பட்சத்தில்...இது நம் தமிழ்   பதிவுலக்குகே கிடைத்த வெற்றி....
நம் டிரஸ்ட் வெற்றி கரமாக செயல் படும் பட்சத்தில் உதவிகரம் நீட்ட பல பேர் வருவார்கள்.  

பின்பின் குறிப்பு:    
என்னுடைய பழைய பதிவுகள் அனைத்தும் சமுகத்தின் மீது இருந்த கோபத்தை வெளிப்படுத்துவது மட்டுமே.
நாம் நமக்குள்ளே ஓன்று கூடாமல் ....சும்மா பேசி கொண்டு உள்ளோமே என்பதன் வெளிப்பாடு மட்டுமே. 

பதிவை படிக்கும் அனைவரும் தங்கள்  அனுபவம் மற்றும்  அறிவுரையை பின்னுட்டமாக சொல்லி செல்லுங்கள்.    

வியாழன், 17 மார்ச், 2011

பிரபல பதிவரின் பேட்டி


பிரபல பதிவர் தனி காட்டு ராஜாவிடம் நெறைய கேள்விகளை நான்(கோபி ) அனுப்பி இருந்தேன்.அதில் அவர் தனக்கு பிடித்தமான சில கேள்விகளுக்கு மட்டும் பதில் தந்து உள்ளார்.

எத்தனையோ படிக்கறீங்க....இதையும் சகிச்சுக்கிட்டு படிச்சுடுங்க :)  

கேள்வி:உங்கள் நிஜ பெயரே தனி காட்டு ராஜா தானா..? 
பிரபல பதிவர் தனி காட்டு ராஜா: அதெல்லாம் இல்லைங்க....ஊர்ல என்னை பேனர் குப்பன்.....டோமறு மண்டையன் அப்படின்னு எல்லாம் செல்லமா பல பேர்ல  பல பேரு கூப்பிடுவாங்க..இருந்தாலும் கூட    எனக்கு நானே தனி காட்டு ராஜானு பேரு வச்சுக்கிட்டேன்.

கேள்வி:அதெப்படி உங்க ப்ளாக் -க்கு எப்ப வந்தாலும் hits 1000  க்கு மேல இருக்குதே...?
பிரபல பதிவர்:ஹா ..ஹா ...இதுல இருந்தே புரிய வேண்டாமா ...default  hits  1000 -துல இருந்து தான் தொடங்குற மாதிரி செட் பண்ணி வச்சுட்டேன்.. 
 
கேள்வி:உங்க profile  -ல  போட்டோ ஏன் போட வில்லை ..நீங்க உண்மையான ஆம்பிளை தானா..?
பிரபல பதிவர்:Well...Wait a minute... Let me check ...
ஆம்பிளை மாதிரி தான்  தெரியுது ...

நீங்க போட்டோ போட சொல்லி  சுலபமா சொல்லிட்டீங்க....

எங்க ஊர்ல ஒரு டைம் ஒருத்தன் கிட்ட 1000  ரூபாய் கடன் வாங்கிட்டு ....அத அவன் திரும்ப கேக்க வரும் போதெல்லாம் நான் முகத்துல துண்ட போட்டுக்கிட்டு என்ன ஓட்டம் ஓடுனணு உங்களுக்கு  தெரியுமா ...அது தெரிஞ்சு இருந்தா  இந்த கேள்விய கேட்டு இருக்க மாட்டீங்க...

Profile-ல போட்டோ போடுவது சாதாரண விசயமா என்ன..?

கேள்வி:சரி...நீங்க பிரபல பதிவர் என்பதால் உங்களுக்கு சமுதாயத்தில் மரியாதை அதிகமாக கிடைக்கிறதா....? 

பிரபல பதிவர்:ஊர்ல மரியாதை இருந்தா நான் ஏன் இங்க பதிவு எழுத வரேன்.....நேர்ல  நெறைய பேரு என்   கழுத்துல துண்ட போட்டு கேவலமா  பேசி இருக்கராங்களே ...அதெல்லாம் உங்களுக்கு தெரியவா போகுது....எங்க ஊருல 1000 பேருக்கு மேல நான்  hits வாங்கி இருப்பேன்.....ஆனா அந்த hits எல்லாம்  என்னமா வலிக்கும் தெரியுமா...?   

கேள்வி:நீங்க தான் புரட்சி பதிவர் ஆயிற்றே ....களத்தில் இறங்கி புரட்சி செய்தது அனுபவம் உண்டா ...அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...?

பிரபல பதிவர்:அரசியலில் புரட்சி செய்யலாம் என்று எங்க ஊர் M.L.A ஆபீஸ் -க்கு போய் அவரை   நேராக பார்த்து கேட்டேன்..
"நான் கொஞ்சம் ஓபன் டைப்....நீங்கள் 5 கோடி ஊழல் செய்து உள்ளதாக கேள்வி பட்டேன்...அந்த பணத்தை மக்களுக்கு சேவை செய்ய பயன் படுத்துங்கள்" என்று சொன்னேன்..

அப்புறம் நடந்தத   உங்களுக்கு சொல்லனுமா என்ன..?

அன்னைக்கு நைட் உடம்பு வலி பொறுக்க முடியாமல் போர்வைக்குள்ள படுத்துக்கிட்டு எப்படி விக்கி விக்கி அழுதேன் தெரியுமா..?   

கேள்வி:நீங்கள் தீவிரமாக நாத்திகம் பேசுகிரிர்களே....உங்கள் மனைவி இதை  எப்படி எடுத்து கொள்கிரார்...?

பிரபல பதிவர்:என் பொண்டாட்டியோட ரெண்டாம் கல்யாணத்துக்கு  நான் போனபோது அவள் சொன்னதை நான் இங்கு நினைவு
கூறுகிறேன்...."நீங்கள் நாத்திகம் பேசுங்கள் ....ஆத்திகம் பேசுங்கள் ...அதை பற்றி எனக்கு கவலை இல்லை" என்று சொல்லி விட்டாள்...  


கேள்வி:பிரபல பதிவர் யாக இருப்பதால் எதவாது நன்மை நீங்கள் கண்டதுண்டா...? 
 
பிரபல பதிவர்:அட போப்பா...காலங்காத்தலா விழித்தவுடனே  எந்திரிச்சு toilet  போரப்பவே...இன்னைக்கு எவன் எவன் நம்ம திட்ட போறானோ -நு யோசிக்க வேண்டி இருக்கு..

கேள்வி:எப்படி உங்கள் எதிர் கருத்துகள் வரும்போது கையாளுவீர்கள?

பிரபல பதிவர்:எரிச்சல் எரிச்சலாதான்  வரும் ....இருந்த போதிலும்..."இது போன்ற நிகழ்வுகளை நான் புன்னகையுடன் கடந்து போகிறேன்" அப்படின்னு ஒரு statement விட்டு விடுவேன் ....நான் ரொம்ப பக்குவ பட்ட பதிவர் என்று நெறைய பேர் நினைத்து விடுவார்கள் ...    

கேள்வி:நீங்கள் ஏன் காமடி பதிவுகளை எழுதுவதில்லை?

பிரபல பதிவர்:என் அரசியல்,கவிதை போன்றவைகளே காமடியாத்தான் இருக்கிறது என்று என் உள் மனது உண்மையை சொல்லுவதால் ...காமடிக்கு என்று தனியே நான் முயற்சி செய்வது இல்லை...  

கேள்வி:உங்களுக்கு  வாசகர் கடிதம் வருவது உண்டா?

பிரபல பதிவர்:10 க்கு 9கடிதம் என்னை கேவலமாக  திட்டி தான் வரும் ....எதோ ஒன்னு ரெண்டு என்னை புகழ்ந்து வருவதை மட்டும் வெளி யிட்டு விடுவேன்.....
இதை பார்த்த சில விவரம் அறியாத பயல்கள் ....அட டா ...நமக்கு வாசகர் கடிதம் ஏதும் வர மாட்டிங்குதே  என் ஏங்குவது உண்டு... 

கேள்வி:பெண் பதிவர்கள் கமெண்ட் உங்கள் பதிவுகளுக்கு அதிகம் வருகிறதே...அதன் ரகசியம் என்ன?

பிரபல பதிவர்:அது வேறு ஓன்றும் இல்லை ...பெண்களுக்கு பொதுவாக ஒரு வீக்நஸ் உண்டு ... பெண்களை நீங்கள் அக்கா ,சகோதரி என்று சொல்லி விட்டால் போதும் ...உருகி விடுவார்கள்...அது மட்டும் இல்லாமல் நீங்கள் தங்கச்சி என்று சொல்லி விட்டால் போதும் ...அண்ணா...அண்ணா என்று அழைத்தே நம்மை கரைத்து விடுவார்கள.

அவர்களுக்கு என்ன தெரியவா போகிறது நான் பிட்டு படம் பார்த்து கொண்டு தான் பதிவு எழுதுவேன்  என்ற உண்மை.

என் பொண்டாட்டிக்கு கூட என்னைப்   பிடிக்காது...ஹா ..ஹா.. அது மட்டும் இல்லாமல் பொண்டாட்டி தொந்தரவில் இருந்து தப்பிக்க தான் நான் பதிவே எழுதுகிறேன் என்ற   உண்மை வலையுலக பெண்களுக்கு தெரியவா போகிறது?

கேள்வி:நீங்கள் பதிவுலகின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்  என்று உள்ளீர்கள்?

பிரபல பதிவர்:பதிவு எழுதுவதை நிறுத்தி விடலாமா என்று யோசித்து கொண்டு உள்ளேன்..


   

சனி, 12 மார்ச், 2011

பதிவுலக சுய இன்பம்

 
 
நான் யார் தெரியுமா .....என்னை பத்தி உங்களுக்கு தெரியாது .......

உன்னை மாதிரி எத்தனையோ பேர பாத்தவன்டா நான்....

நான் ஓபன் டைப்...இதுவரிக்கும் பேன்ட் ஜிப்பே போட்டது இல்லை ... :)
 
வேணுமுனா என் போன் number தருகிறேன் ....வா  ஒண்டிக்கு ஒண்டி  மோதிப்  பாத்துடலாம்....(மறக்காம   அட்டை கத்திய எடுதுட்டு வந்துரு ...)

profile -ல  போட்டோ போட்டவன் ....toilet  சுவர் போஸ்டர்ல போட்டோ உள்ளவன்   இவனுக மட்டும் தான் ஆம்பிளை ....

பொண்ணுகள பத்தி தப்பா பேசுறியா நீ ....தாயார இரு .....உன்னை public பாத்ரூம் -ல  போட்டு பூட்டி வைக்க போறேன் ..அப்புறம் பார்க்கிறேன் ...நீ எப்படி பதிவு எழுதுரீனு ....

என்னது  தண்ணி தொட்டில பிரச்சினையா ....எடுடா லேப் -டாப் .....போடுடா ஒரு பதிவ ....

என்னது மீனவர் பிரச்சினையா ....எடுடா லேப் -டாப்..

என்னது spectrum  பிரச்சினையா ....எடுடா லேப் -டாப்..

என்னது சுனாமியா .....எடுடா லேப் -டாப்..

என்னது consitipation யா....எடுடா லேப் -டாப்..

ஹய்.... தேர்தல் வந்துருச்சா ...எடுடா லேப் -டாப் ...

அண்ணே ...லேப் -டாப் -க்கு இன்னைக்கு ஜன்னி வந்துருசுச்சு ...

சரி ..இன்னைக்கு நான் நமிதாவ நெனைச்சுகிட்டு Masterpate பண்ண போறேன் .....நீ யார நெனச்சுக்க போற ...

நான் வந்து...... அனுஷ்கா ....

சரி நாளைக்கு உலக பிரச்சினையை பத்தி அலசுவோம் .....Good Night...bye ..

டிஸ்கி : ஒன்னும் கிடையாது ...ஹா ..ஹா  :)

புதன், 2 மார்ச், 2011

ராத்திரி நேரத்து கலாச்சாரம்..


சிவா என்ற சொல்லுக்கு  இல்லாத ஒன்று அல்லது எது இல்லையோ அது என்று பொருள் .அதாவது வெற்றிடம்  அல்லது ஆகாயம் என்பது பொருள்.
 புத்தரும் இதையே தான் சொன்னார் .நீங்கள் யார் என்று கேட்டபோது ...நான் அனாத்மா.அதாவது நான் என்று எதுவுமில்லை.அதாவது ஆத்மா என்று கூட எதுவுமில்லை.

சிவராத்திரி என்பது  இந்து மதம் மட்டும் கொண்டாடும் விழாவாக உள்ளது .இது சரியானது அல்ல .
மதத்துக்கு இங்கு வேலையே இல்லை .
சிந்து சமவெளியை ஒட்டி தோன்றிய  கலாசாரம்தான்  இந்திய கலாசாரம்.
இந்திய தேசத்தவர் அனைவரும் இந்துக்களே.  
உண்மையில் இந்திய கலாசாரத்தில் உள்ள அனைவரும் தன் விழிப்புணர்வை மேம்படுத்தி கொள்ள இந்த நாள் ஒரு நல்ல வாய்ப்பு.


நீங்கள் மண்ணுக்கு அடையாளம் கொடுக்கலாம் .வரையறை செய்யலாம்.  (நிலம் ,தேசம் ,என் வீடு ,என் உடல் )

மண்(உடல் ) அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் விலங்கு.

வெறும் நீர் (மனம் ) அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர் ..மனிதன் .

காற்றின்
அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர் ..லட்சிய வாதி , ..சாதனையாளன்,விஞ்ஞானி...etc

நெருப்பின்
அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர்... விஜயகாந்த்  :)) [பொதுநல வாதி,தியாகி]

ஆகாயத்தை  அடையாளமாக கொண்டு வாழமுடியாது ..ஆகாயத்தை அடிமை படுத்த முடியாது ...
 வேண்டுமானால்   தன்னை  ஆகாயத்தோடு (ஆதாயத்தோடு அல்ல :)   ..அடையாள படுத்தி கொள்பவனை யோகி எனலாம்.

எல்லோருக்கும் ஒரே ஆகாயம்  தான் ....

இந்த பிரபஞ்சத்தில் நெறைய சூரியன் இருக்கலாம் ....பூமி போல நெறைய உயிர் வாழும் கிரகங்கள் இருக்கலாம் ...
ஆனால் ஒரே
ஆகாயம் தான் ...இதை ஒன்று என்று கூட சொல்ல முடியாது  .மற்ற ஒன்று இருந்தால்  தான் ஒன்று என்று வேறு படுத்த கூட  முடியும் .

இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் .கடவுள் ஒரு குறிபிட்டவர்களுக்கு (மதம் ) மட்டும் சொந்தகாரர் இல்லை என்று .


இதை தான் இல்லாத ஒன்று ...சிவா என்று சொன்னார்கள் நம் இந்திய காலாச்சாரத்தில்..[ நமக்கு தெரிந்த கலாசாரம்....ராத்திரி நேரத்து கலாச்சாரம் ....I mean ஒருவனுக்கு ஒருத்தி ] 

சிவராத்திரி அன்று சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்துக்கு நேர் 7ம்   வீட்டிலும்(கும்பம் ) ,சந்திரன்  தன் சொந்த வீடான கடகத்தில் இருந்து நேர் 7 ம் வீட்டிலும்(மகரம் ) இருக்கும்.[நன்றி :ஸ்வாமி ஓம்கார்]

மனம் (சந்திரன்) மெதுவாக நகர்ந்து ஆத்மா (சூரியனிடம் ) ஒடுங்குகிறது இந்த இரவு .
சிவராத்திரிக்கு அடுத்த நாள் அம்மாவாசை .
இது இந்த வருடம் 3-03-2011 இரவு நடக்கிறது . 


இந்த இரவு நாம் தளர்வாக உடலை வைத்து கொண்டு மனதை கவனித்தபடி விழிப்புடன் இருந்தால் நல்லது.

கோவிலுக்கு செல்வது ஒரு விதத்தில் நல்லது .செல்லாமல் இருப்பது மிக நல்லது .
இதை நாம் காலியான இடம் ,மொட்டை மாடி போன்ற காற்றோட்டமான இடத்தில செய்வது மிக மிக  நல்லது. 

நாமும் விழிப்புணர்வு பெற ராத்திரி நேரத்து கலாச்சாரத்தை முயற்சிப்போம்  :)

சிவ ராத்திரி தின வாழ்த்துக்கள் ...:)