வெள்ளி, 17 செப்டம்பர், 2010

நீ வேண்டும்....


உன் கண்களில் வழியும் உயிரை உணர வேண்டும் ..
உன் சுவாசம் என் சுவாசம்  ஆக வேண்டும்..
உன் கன்னத்தின்  சுவை என் உதட்டில் ஒட்டி கொள்ள வேண்டும்..
உன் காது மடல் மென்மையில் நான் காலம் கடக்க வேண்டும்..
உன் மொழியில்   காதல் மொழி கற்று கொள்ள வேண்டும் .. 
உன் கூந்தல் மட்டும் நம்  போர்வையாய் மாற வேண்டும் .. 
உன் இதயத்திடம்  என் இதயம் உன் பெயர் சொல்லி துடிக்க வேண்டும் ..   
உன் இடையில் என் ஆணவம் வழுக்கி சரிந்து விழ வேண்டும் ..
உன் உயிர் வாசலில் என் உயிர் தொலைந்து போக வேண்டும் ..
உன் கால் கொழுசு  ஓசையில் சங்கீதம் பயில வேண்டும் ..
என் மனம்  கனவாக கலைந்து போக வேண்டும் ..
நான் உயிர் வாழ நீ  வேண்டும் ..

சுனைனா:
போடா போடா புண்ணாக்கு ...நீ போடாத தப்பு கணக்கு.... 

10 கருத்துகள்:

 1. சரி, சரி, (கல்யாணம் ஆகலேன்னா ) வீட்டுல பொண்ணு பக்கச் சொல்லீருவோம் . . . அத விட்டுட்டு ஏன் இந்த மாதிரி . . .

  பதிலளிநீக்கு
 2. தல கிறுக்கு உனக்கு இருக்கு,
  இப்ப எண்ணாத மனக்கணக்கு!

  பதிலளிநீக்கு
 3. /**உன் இடையில் என் ஆணவம் வழுக்கி சரிந்து விழ வேண்டும்**/

  இது கூட O.K பாஸ்..

  ஆனால்,

  /**உன் கூந்தல் மட்டும் நம் போர்வையாய் மாற வேண்டும்**".. இது கொஞ்சம் டூ மச். !!!!!

  உண்மையாகவே அற்புதம். அந்த சுனைனா படத்தையும், கடைசி கமெண்டையும் போடாமல் இருந்து இருக்கலாம். அவை கொஞ்சம் செயற்கையாக உள்ளது. :)

  பதிலளிநீக்கு
 4. //சரி, சரி, (கல்யாணம் ஆகலேன்னா ) வீட்டுல பொண்ணு பக்கச் சொல்லீருவோம் . . . அத விட்டுட்டு ஏன் இந்த மாதிரி . .//

  நண்பா...கல்யாணம் ஆனா பின்னாடி இந்த மாதிரி கவிதை யாய் வாழ எங்கே நேரம் ... .
  உப்பு,புளி,மிளகாய் என்று வீட்டு பிரச்சினையில் கவிதை எழுத எங்கே நேரம் ....
  எதோ என் நல்ல நேரம் ....என் ஜாதகத்துல நெறைய தோஷம் இருக்காம் .....
  சுகந்தரமா தனி காட்டு ராஜாவா சுத்திட்டு இருக்கேன்.....
  இருந்தாலும் உங்க நல்ல மனசுக்கு நன்றி நண்பா......

  பதிலளிநீக்கு
 5. //தல கிறுக்கு உனக்கு இருக்கு,
  இப்ப எண்ணாத மனக்கணக்கு! //

  "போடா போடா புண்ணாக்கு ...நீ போடாத தப்பு கணக்கு.... " என்பதயே நீங்களும் சொல்லுகிர்களே தல ...
  எனக்கு சப்போர்ட் யா பேச யாருமே இல்லையா ?

  பதிலளிநீக்கு
 6. "அசின்” போட்டோ மிஸ் ஆகி சுனேனா போட்டோ வந்திருச்சோ?? சரி.. நான் வெயிட் பண்றேன். சீக்கிரம் மாத்திருங்க.

  அப்புறம் நான் கமெண்ட் பண்றேன்.. ”அட அசின் வந்திருச்சு வாங்க..........”னு. சரியா?

  பதிலளிநீக்கு
 7. //அந்த சுனைனா படத்தையும், கடைசி கமெண்டையும் போடாமல் இருந்து இருக்கலாம். அவை கொஞ்சம் செயற்கையாக உள்ளது. :) //

  ஆசை வெக்கம் அறியாதாமே சரவணா ......

  பதிலளிநீக்கு
 8. //வால்பையன் சொன்னது…

  தல கிறுக்கு உனக்கு இருக்கு,
  இப்ப எண்ணாத மனக்கணக்கு!//

  :))))))

  பதிலளிநீக்கு
 9. //"அசின்” போட்டோ மிஸ் ஆகி சுனேனா போட்டோ வந்திருச்சோ?? சரி.. நான் வெயிட் பண்றேன். சீக்கிரம் மாத்திருங்க.
  அப்புறம் நான் கமெண்ட் பண்றேன்.. ”அட அசின் வந்திருச்சு வாங்க..........”னு. சரியா? //

  நீங்க வம்சம் படத்து அசின சொல்லறீங்களா ?
  எங்க சுனேனா என் கவிதைல மயங்கி ..என்னை லவ் பண்ணி விடுமோனு எல்லோருக்கும் பொறாமை ...
  நாளைக்கே நான் சென்னை -க்கு ட்ரைன் ஏற போறேன் ... சுனேனா -வை கை பிடிச்ச பின்னாடி தான் சொந்த ஊருக்கே திரும்ப போறேன் ....

  பதிலளிநீக்கு
 10. ////வால்பையன் சொன்னது…

  தல கிறுக்கு உனக்கு இருக்கு,
  இப்ப எண்ணாத மனக்கணக்கு!//

  :)))))) ////

  என்னை பார்த்து சிரி சிரி -நு சிரிக்கிற எல்லோருக்கும் ஒன்னு மட்டும் சொல்லிகறேன்....
  "நாளைக்கே நான் சென்னை -க்கு ட்ரைன் ஏற போறேன் ... சுனேனா -வை கை பிடிச்ச பின்னாடி தான் சொந்த ஊருக்கே திரும்ப போறேன் .... "

  [எ ...மிஸ்டர் ...காமடி கீமடி பண்ணலையே என்பன போன்ற பின்னுட்டங்கள் தடை செய்ய படும் ....]

  பதிலளிநீக்கு