வியாழன், 17 ஜூன், 2010

சர்வஅழகுஅதிகாரி நீ !
ஐந்து அடி ஐந்து அங்குலம்
ஐம்பது கிலோ எடை-யில்
வெட்கப் பூ பூக்கும்
வெட்க சிணுங்கி  செடி
நீ !ஹிட்லரை போன்ற சர்வதிகாரிதான் நானும்
எப்படி  சிறையில் இட்டாய் ?
விழியால் என்னை  ஆட்சி செய்யவே பிறந்த
சர்வஅழகுஅதிகாரி நீ !புத்தர் வாழந்த  காலத்தில்  பிறக்கவில்லை ...
மகாவீரர் வாழந்த காலத்திலும் பிறக்கவில்லை...
நான் வாழும் காலத்தில் பிறந்தாய் ...
எனக்கு ஞானம் பிறக்கவில்லை ....நீ கண்களை அனுப்பி வை ...
நான் என் இதயத்தை அனுப்பி வைக்கிறேன் ...
நீ உன்  இதயத்தை அனுப்பி வை ...
நான் என் கண்களை அனுப்பி வைக்கிறேன்..
நாம் இருவரும் வேடிக்கை பார்ப்போம்..
எப்படி இந்த நான்கும் மாறி மாறி காதல் செய்கின்றன என்று ..நான் வேறு யாரையாவது கல்யாணம்
செய்து கொண்டால் என்ன செய்வாய்
என்று கேட்கிறாய்?
என் இதயதிற்கும்  உன் கண்களுக்கும்
கல்யாணம் நடந்த அன்று
உன் புத்தி உறங்கி கொண்டிருந்தது...
இன்றுதான்  விழித்து கொண்டது போலும் .... என் ஒவ்வொரு  மூச்சும்
உன் பெயருக்கு பதில்
'ஓம்' என்று சுவாசித்து இருந்தால்
என்றோ நான் ஞானம் அடைந்திருப்பேன்...
அதனால் என்ன உன் பெயர்
சுவாசித்துதான்  காதல்  ஞானம் பெற்று விட்டேனே !!!உன்னை பார்த்த பின்பு
கடவுள் நம்பிக்கை போனது...
தேவதை நம்பிக்கை வந்தது...
உன்னை நீயே படைத்து   கொண்டாயோ?நாம் இருவரும் பேசிக்கொள்ள
இதயபேசி  ஒன்றை கண்டுபிடித்துள்ளேன்..
அதன் ஒலி அலைகள் காற்றில் பரவாது ...
காதலில் தான் பரவும்...

புதன், 16 ஜூன், 2010

கடவுளின் கடவுளாக........நீ  எல்லாமுமாகா யிருந்தும்
எதோ ஒன்றாக ஏன்  நினைத்தாய் ?

கோடான கோடிகளும் உன்னுள் இறைந்து கிடக்க 
சில சில்லறைகளை  ஏன் பொறுக்கி கொண்டுள்ளாய் ?

உன் உறவின்றி எதுவும் நடவாத போதும்
சில பந்தங்களை மட்டும் உறவென்று ஏன் கொண்டாய் ?

காதல் இன்றி கண நேரமும் நீ இல்லாத போதும்
காதலுக்காக பெண் துணை வேண்டுமென ஏன் கனவு காண்கிறாய்?

ஒவ்வொரு கணமும் காமத்தில் முழ்கி திளைக்க முடிந்தும்
ஒரு சில கணங்களுக்காக மட்டும் ஏன் இன்று  அலைகிறாய் ?

உன் ராஜ்யத்தில் எதிரிகளே இல்லாத போதும்
யாரை வெல்வதற்காக ரௌத்திரம் பழகி கொண்டுள்ளாய் ?

 உன் உள் அமைதி சொல்லாத கோடி சொல்லுமே ...
வெற்று விளம்பரம் மூலம் இன்று  என்ன சொல்ல விளைகிறாய் ?

வர்ணம் ஏதுமற்று வெறுமை எனும் நிறம் கொண்டவனாய் இருந்தும் 
 உன் வர்ணம் உயர்ந்தது  என்று  ஏன் உளறி கொட்டி கொண்டுள்ளாய்?

கடவுளின் கடவுளாக  நீ  எல்லாம்  கடந்திருந்தும்
மனிதநாய்  கடவுளை படைத்தும் ஏன்  குரைத்தும்  கொண்டுள்ளாய்?

பலமுறை அமுதம் பருக நீ  போன போதும்
கானல் நீரையே அமுதம் என நினைத்து ஏன் திரும்ப இங்கு வந்தாய் ?

எல்லாமும் உன்னிடம் இருந்தும்   
எதோ ஒன்றாக நினைத்ததுதான்  நீ செய்த  தவறா?

செவ்வாய், 8 ஜூன், 2010

ஏன் இந்த முரண்பாடு ?http://youthful.vikatan.com/youth/Nyouth/gopalakrishnanpoem070610.asp


அது எப்படி ...
ஒரே பூமியில் ...
தகிக்கும் எரிமலை ..
சில்லிடும் பனிமலை...

அது எப்படி ...
ஒரே நாளில் ..
சூரியன் கொளுத்தும் நண்பகல் ..
நிலவு சில்லிடும் நள்ளிரவு...


அது எப்படி ...
ஒரே நாட்டில் ...
பிச்சை எடுக்கும்  அம்போனி ...
பணம் படைத்த அம்பானி..


அது எப்படி..
ஒரே கடலில்...
சலசலக்கும் கரையோர   அலையோசை ...
மொளனம் பாவிக்கும் ஆழ்கடல் அமைதி ....


அது எப்படி ..
ஒரே செடியில் ..
குத்திடும் முள்ளும் ...
மெல்லிய ரோஜாவும் ...

அது எப்படி ..
ஒரே ஆண்டில் ..
வெயில் கொளுத்தும் கடும் கோடை ...
தென்றல்  வீசும் வசந்த காலம் ....

அது எப்படி ..
உன் ஒருத்தியால் மட்டும் ..
என்னை காதலில் வாழ வைக்கவும் முடிந்தது ...
கல்லறையில் உறங்க வைக்கவும் முடிந்தது ?

புதன், 2 ஜூன், 2010

மரணம் என் காலடியில் ....நான் உறவுகளுக்கிடையே
சிக்கிய நிலையில் மரண நாள் வந்தது ......
ஐய்யோ....என் கண்களில் கண்ணீர் ....

நான் மது,மாது -வில்
சிக்கிய நிலையில் மரண நாள் வந்தது .....
ஐய்யோ....என் மனதில் சொல்ல முடியாத துக்கம் ....

நான் பணம் ,புகழில்
சிக்கிய நிலையில் மரண நாள் வந்தது ......
ஐய்யோ....மரணதுக்கு பிறகு என் புகழ்
என்னாகும் என்று தாங்க முடியாத கவலை ....

நான் சமூக சேவை கொண்ட தியகியாய்
வாழ்ந்த காலத்தில் மரண நாள் வந்தது ......
ஐய்யோ....எனக்கு பிறகு சமூகத்தை காப்பாற்ற
யார் வருவார்களோ என்று ஏக்கம்....

நான் காதலில்(பிரம்மத்தில்) கரைந்து இருந்த
நிலையில் மரண நாள் வந்தது ....
ஐய்யோ.... இப்போது மரணம் என் காலடியில் ......
மரணத்தை என்னிடமிருந்து காப்பாற்ற யார் வருவார்களோ?

செவ்வாய், 1 ஜூன், 2010

ச்..சீ.. இப்படி பேசாதே ..எனக்கு வெக்க வெக்கமா வருது ........"ராதா,நேத்து நைட் பிரம்மா வந்து எனக்கு உரிமையா இருக்கற ஒன்ன கேட்டான்"

"என்ன அது .."

"நீ வெக்கப்பட்டு சிந்தும் அழகத்தான் ..."


"இம் .....நீ என்ன சொன்ன .."

"கடனா கூட தர முடியாதுன்னு  கறறா சொல்லிட்டேன்  .."

"ஆமா ..அத வச்சு பிரம்மா என்ன பண்ண போறாராமா ..?"

"அந்த அழக வச்சு பூமி மாதிரி இன்னொரு உயிருள்ள அழகான் கிரகத்த   படைக்க போறானாம் ....
சரி ..நேத்து உன்ன பாக்க யாரவது மூணு பொண்ணுக வந்தாகளா  .."

"இல்லையே ..ஏன் கேக்கற ...?"

"தேவலோகத்துல இருக்கற  ரம்பா,மேனகா,ஊர்வசி  இவங்கள்ல யார் அழகுன்னு சண்டை வந்துடுச்சாம் ....  இந்திரன் இருக்கானே ...அவன் சொல்லி இருக்கான் ...இந்த பிரபஞ்சத்துலையே    நீ தான் அழகு-னு..அவங்க மூணு பேரும் உன்ன பாக்க கெளம்பி வந்துட்டு இருக்காகளாம்.."

"தேவலோகத்துல நடந்தது  உனக்கு எப்படி தெரியும் ? "

"அதுதான் என்ன பாக்க வந்த பிரம்மா சொன்னான் ..."

"அநியாத்துக்கு பொய் பேசறயேடா.."

"நான் சொன்னது என்னவோ பொய்தான்...ஆனா நான் சொன்னதெலாம் உண்மையா நடந்தா  கூட நான் ஆச்சரிய படமாட்டேன்.."

"சரி ..எங்க வீட்டுல எல்லோரும் ஒரு கல்யாணத்துக்கு கோயமுத்தூர் போறாங்க...நாளைக்கு  நான் தனியா தான் இருப்பேன்..வீட்டுக்கு  வரியா..? "


 "இம் ...சரி ..."தேவதை வீட்டில் ..

கதவை திறந்ததவுடன் அவளை முழுவதுமாய் ஒரு முறை பார்த்து விட்டு   நான் கேட்டேன் ..அது என்ன எப்பவுமே  குளிச்சு முடிச்சுட்டு இப்பதான் பூத்த  ரோஜா மாதிரியே இருக்கையே..?

"நெசமாலுமே இப்பதான் குளித்து முடிச்சுட்டு  வர்றன்டா .."   என்று சொல்லி புன்னகை செய்தாள்.

நான் குனிந்து   கீழே தேட அரம்பித்தேன்..

"என்ன தேடுறாய் ..."

"நீ சிரிச்சப்ப  எதோ முத்து செதறுன மாதிரி சத்தம்  கேட்டுது ..அதுதான் தேடி பார்த்தேன் ..."

"சரி தேடு ...ஒரு  நிமிசத்துல நான் வர்றேன் ."

நான் நிமிர்ந்து பார்த்தேன் ..அவளை காணவில்லை ...

சில நொடிகளில் என் முன்னே தண்ணீர்  டம்ளருடன் நின்றாள்.

"தேடி களைச்சிருப்பே  ..இந்த தண்ணிய குடி ... "

" டம்ளர் தண்ணி இனிப்பா இருக்காதே..எனக்கு  இது வேண்டாம் "

"அப்படினா  "டி"  போட்டு எடுத்து   வரட்டுமா  ? "  

"எனக்கு இயல்பாவே இனிப்பா  இருக்கற  தண்ணிதான் வேணும் "

"அது எங்க கிடைக்குதாம் ?"

 "உன் இதழ்ல .."

"ச்..சீ.. இப்படி பேசாதே ..எனக்கு வெக்க வெக்கமா வருது .."

"சரி இங்க வா ...உனக்கு ஒன்னு காட்டுகிறேன் ..." என்று என்னை அவர்கள்
வீ ட்டின்  தோட்ட பகுதிக்கு அழைத்து சென்றாள்..

அங்கே சிறு சேறு கொண்ட குளம் இருந்தது ...

'யேய்..என்ன தாமரை குளமா...' -என்றேன்.

"ஆமா.... அங்க பாரு இன்னைக்கு மலர்ந்த  தாமரைய ...."

நான் ராதா-வின் பாதத்தை பார்த்து கை காட்டி ....இதா என்று கேட்டேன் .

என் கையை பிடித்து தாமரை இருந்த திசையில் திருப்பி சொன்னாள் .
"குளத்துக்கு நடுவே வெள்ளையா தெரியுதே ...அதுக்கு பேரு தான் தாமரை.."

"ஆமா ..எல்லாரும் ரோஜா,மல்லிகை வளர்ப்பாங்க ...நீ ஏன் தாமரை வளர்க்கிற?"

"நீ ஒரு நாள் சொன்னாயே..பூக்களில் தாமரை  பிடிக்கும் என்று ...அதனால்தான் ..."

"ஒ ...அப்படியா ..."

"சரி ..இப்ப சொல்லு ...தாமரை உனக்கு ஏன் பிடிக்கும் .."

"அதுவா வந்து ....தத்துவமா இருக்கும் ...பரவாயில்லையா .."

"தத்துவமா தானே இருக்கும் ...மொக்கையா இருக்காதே...சரி சொல்லு .. "  

"தாமரை பாத்தினா ..சேத்துக்குள்ள  இருந்து  மலர்ந்தாலும் ....அது களங்கமில்லாம   எப்படி நிக்குது பார்த்தாயா .....ஒரு ஆண்,பெண் காதல் கூட காமம் -கற சேத்துல மலர்ந்தாலும் அது களங்கமில்லாதது .."

"அப்படினா காமம் இல்லாம காதல் கிடையாதுனு சொல்லறயா ..."

"ராதா..காமமும் காதலும் சேறும் மலரும் போல ...ஒன்னு இல்லாம இன்னொன்னு சாத்தியம்   இல்லை ...
காமம் கூட காதல் இல்லாமல் சாத்தியம் ....ஆனால் காதல் காமம் இல்லாமல் சாத்தியம்  இல்லை ... "

"நீ ஓஷோ புத்தகம் படிக்கறப்பவே தெரியும் ..இந்தமாதிரி வில்லங்கமா பேசுவேனு..சரி ...என்னை எதுக்காக உனக்கு  பிடிக்கும் ? "

"உன்னை பிடிக்கும் ..அவ்வளவுதான் ..."

"பிடிக்கும்னா என் அழகா ...குணமா ..?"

 "உன்னை மொத்தமாக பிடிக்கும் ....அவ்வளவுதான்....ராதா, எதயும் பிரித்து பிரித்து பார்க்காதே  ......எல்லாவற்றையும்  சேர்த்து பார் ...காதல் என்றால் புனிதம் ...காமம் என்றால் கேவலம்.. என்பதெலாம் நாம் பிரித்து பார்த்து புரிந்து கொள்வது ......இரண்டும் ஒன்றுடன் ஓன்று கலந்தது ... புனிதம்,கேவலமுனு ஒன்னும் இல்ல ....

 "ஒஹ் ...ஒ ..அதனாலதான் என்ன நேரா பார்க்கறப்ப   கண்ண பார்க்கற..நான் எங்காவது திரும்பினா என் கழுத்துக்கு கீழ பார்க்கறையா ?"
 
 "அடி பாவி ...நான் எங்க எங்க  எப்ப எப்ப பார்க்கறேனு எல்லாமே உனக்கு தெரிஞ்சு இருக்கா ..? உனக்கு ஒண்ணுமே தெரியாது -னு இல்ல  இத்தன  நாளா நெனச்சேன் .... சரி ..என்கிட்டே உனக்கு என்ன பிடிக்கும் .."

"உன் அளவுக்கு தத்துவமா பேச வராது......இருந்தாலும் சொல்லறேன் .....உன்கிட்ட இருக்கற  ஒரு அலட்சியம் .....தகுதி பார்க்காம  எல்லாரையும் ஒரே மாதிரி பார்ப்பது ...முக்கியமா என்கிட்டே நீ காட்டுற பரிவா.. காதலா..அன்பா ...கேலியா ...கிண்டலா-னு உணர முடியாத ஒரு பீலிங் ...அப்புறம் ..எந்த தப்பு பண்ணுனாளும்...அடி விழாதுன்னு தெரிஞ்சா ...தப்ப மறைக்காமா  ஒத்துக்கற நேர்மை(!)..."

"ஒஹ் ..ஒ"

"சரி ..நாம நம்ம வயசுக்கு அதிகமாவே பேசிட்டோம் ...வா நான் சமைக்கேறேன் ...நீ சாப்பிடுவாயாமா ..."

"இம் ..சரி ..உனக்கு சமைக்க தெரியுமா...  "

"கொஞ்சம் கொஞ்சம் .."

 "மீதிய யார் சமைப்பாங்கலாம்?"

"இம்...சரி ..பெருங்காயம் நறுக்கி தறையா?"

"அதுலதான் ஏற்கனவே பெரிய காயம் இருக்குதே  ...  மறுபடியும்   அத காயபடுத்த  எனக்கு மனசு  இல்ல .."

"சமையலறை பக்கம் வந்தறாத .....கம்முனு   டி.வி  பாரு .."

 கடிகாரத்தில் முட்கள்  நகர்ந்து கொண்டிருந்தன .

"சமையல் ரெடி...வா சாப்பிடலாம்.. "

[சமையலை சாப்பிட்டவுடன் நான் துடி துடித்து இறந்து விட்டேன்  என்று முடித்து விடலாமா என்று கூட ஒரு நொடி தோன்றியது ....இது உண்மை கதை போல் உள்ளதே என்று தோன்றியதால் ...ஒரு வேளை தப்பு தவறி இந்த கொடுமையை  பெண்கள் படிக்க நேர்ந்தால் மனது கஷ்டபடுமே என்பதால் ...]

"வழக்கமா  கண்களால் பார்த்தே என்னை கொல்லுவே..... இன்னைக்கு சமையலா ...?"

"ஆனாலும் உனக்கு கொஞ்சம் கிண்டல்தான் ..."


"சரி ..நீயும் கொஞ்சமா சாப்பாட்ட போடு ...ஆனா ஒரு கண்டிசன் .."

"என்ன அது ..?"

"சாப்பாடு நல்லா இருந்தா நானா சாப்பிடுவேன் ....நல்லாயில்லைனா  நீதான் ஊட்டி விடனும் "

"எனக்கு தெரியும் ... எப்படி இருந்தாலும்  நீ நல்லா இல்லைன்னு தான் சொல்ல போற ..."

"அப்படி தெரியுதுனா ..முதல் வாயே நீ தான் ஊட்டி விடனும் .. "

"சரி இரு ..ஸ்பூன் எடுதுட்டு  வர்றேன்.. "

 "ஸ்பூன்-ல ஊட்டி விடரதுனா எனக்கு சாப்பாடே வேண்டாம் .."

"அப்படினா .."

"கையால ஊட்டி விடு .."

 "ச்..சீ.. இப்படி பேசாதே ..எனக்கு வெக்க வெக்கமா வருது .."

 "சரி ..அப்படினா முதல் மூன்று தடவை மட்டும்  நீ ஊட்டிவிடு.."

"இம் ...சரி .."
சாப்பிட்டு முடித்தவுடன் சொன்னேன் ...
"ராதா,நெசமாலுமே உன் சமையல் அருமை ... நீ பார்பதற்கு மட்டும்  கவிதை  இல்லை ..உன்னோட ஒவ்வொரு அசைவுமே அழகு கவிதை தான் .."

"ஆமா ...என்ன இவ்வளவு  பாரட்டரையே  ...உன் அம்மாவை ஒரு நாலாவது பாராட்டி இருக்கறையா  ..?"

"சின்ன வயசுல நாம அம்மாவ பாராட்டரமா ...நாம வளர்ந்தாலும் அவங்களுக்கு நாம சின்ன பிள்ளை தானே ..."

"சரி நமக்கு கல்யாணமான ...யார உனக்கு அதிகமா பிடிக்கும்.   அம்மாவா...நானா ?"

"ராதா, கேள்வியே முட்டாள்தனமா இருந்ததா ..பதில் எப்படி சொல்ல முடியும் ?"

"என்கிட்டே மாட்டிக்கமா நல்லா சமாளிக்கற ..சரி ...கல்யாணத்துக்கு போனவங்க ..வந்தாலும் வந்துடுவாங்க ...நீ கெளம்பு ..."

"குடுக்கறத குடுத்தா நான் கெளம்பிட்டே இருக்கேன்.."  

"ரெண்டு அடி கொடுத்து  அனுப்பட்டுமா ..?"

"இம் ..சரி ..நீ கண்ணால அடிச்சீனா வலிக்கும் ...அதனால இதழால அடி ...நான் வாங்கிக்கறேன்.."


"ச்..சீ.. இப்படி பேசாதே ..எனக்கு வெக்க வெக்கமா வருது .."

"ரெண்டு அடி கொடுக்கறேனு  சொன்னே ...ஒன்னாவது கொடுக்கணும் ..."


நான் ராதாவிடம்  மெல்ல நெருங்க ..."சார் ..ஈரோடு  ஸ்டேசன் வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் .." -என் காதில் ஒரு குரல் விழுந்தது.
நினைவுகள் களைந்து ..மெல்ல சன்னல் ஓரமாக பார்த்தேன் ...காவேரி பாலம் மீது ட்ரைன் ஓடி கொண்டிருந்தது.
இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து விடும் என்றேன் .
முப்பது  வருடங்கள் கழித்து ஈரோடு வருகிறேன்.இப்போது எனக்கு  வயது 50
.
ராதா எப்படி இருப்பாள் ? என்ன ஆனாள்?

ராதாவும்  நானும் காதலில் வாழ்ந்தது அவள் அப்பாவுக்கு தெரிந்து விட்டது .
அவள் அப்பாவிடம் சென்று அவளை கல்யாணம் செய்து கொள்வதாக கேட்டேன்.  
அவர் எதோ பிராமணனாம்..நான் எதோ இடையர்(மாடு மேய்ப்பவர்) குலத்தை சேர்ந்தவனாம்.
நான் பூணுல்  போட்டவண்டா   என்றார் .

"முதுகு சொரியறதுக்கு சொளகரியமா இருக்குமுனு நீ அதை போட்டு இருக்கே   ...சரி அதுக்கென்ன ?"-என்றேன்.

அவருடைய ஈகோ கடுமையாக தாக்ககபட்டதால் கதவை அறைந்து   மூடியவர்தான் ...
நானும்  கதவை தட்டவில்லை ...
அடுத்த 15  நாட்களில் ராதாவுக்கு  கல்யாணம் என்று கேள்விபட்டேன் .
நானும் என் அம்மாவுடன் வீட்டை காலி செய்து விட்டு டெல்லியில் நண்பன் ஒருவன் உதவியுடன் குடியேறிவிட்டேன்.
சரி ...இப்ப எதுக்கு ஈரோடு வந்தேன் என்றால் ...தொழில் நிமித்தமாகதான் ...
சரி ..நான் காதலில் வாழ்ந்த  ஊர்க்கு சென்று ராதாவை தேடி பார்கலாமா என்று ஒரு நொடி தோன்றியது ...
என் மனது சொன்னது ........
"இல்லை ...அவள் உன் இதயத்தில் வாழ்கிறாள் ....ஊரில் அல்ல ......."


"ச்..சீ.. இப்படி பேசாதே ..எனக்கு வெக்க வெக்கமா வருது .."
இந்த வாசகம் மட்டும் ஈரோட்டை  விட்டு கிளம்பும் வரை என் இதயத்தில் ஒலித்து கொண்டே இருந்தது...