செவ்வாய், 8 ஜூன், 2010

ஏன் இந்த முரண்பாடு ?http://youthful.vikatan.com/youth/Nyouth/gopalakrishnanpoem070610.asp


அது எப்படி ...
ஒரே பூமியில் ...
தகிக்கும் எரிமலை ..
சில்லிடும் பனிமலை...

அது எப்படி ...
ஒரே நாளில் ..
சூரியன் கொளுத்தும் நண்பகல் ..
நிலவு சில்லிடும் நள்ளிரவு...


அது எப்படி ...
ஒரே நாட்டில் ...
பிச்சை எடுக்கும்  அம்போனி ...
பணம் படைத்த அம்பானி..


அது எப்படி..
ஒரே கடலில்...
சலசலக்கும் கரையோர   அலையோசை ...
மொளனம் பாவிக்கும் ஆழ்கடல் அமைதி ....


அது எப்படி ..
ஒரே செடியில் ..
குத்திடும் முள்ளும் ...
மெல்லிய ரோஜாவும் ...

அது எப்படி ..
ஒரே ஆண்டில் ..
வெயில் கொளுத்தும் கடும் கோடை ...
தென்றல்  வீசும் வசந்த காலம் ....

அது எப்படி ..
உன் ஒருத்தியால் மட்டும் ..
என்னை காதலில் வாழ வைக்கவும் முடிந்தது ...
கல்லறையில் உறங்க வைக்கவும் முடிந்தது ?

7 கருத்துகள்:

 1. அது எப்படி ..
  உன் ஒருத்தியால் மட்டும் ..
  என்னை காதலில் வாழ வைக்கவும் முடிந்தது ...
  கல்லறையில் உறங்க வைக்கவும் முடிந்தது ?///

  கல்லறையிலிருந்து கவிதையா? அவ்!!!!!

  பதிலளிநீக்கு
 2. ////கல்லறையிலிருந்து கவிதையா? அவ்!!!!! ////

  அவள் என்னை விட்டு பிரிந்து சென்றதும் நான் உயிரற்று கல்லறையில் உறங்கும் நிலைக்கு சென்று விட்டதாக பொருள் கொள்ளவும் ....
  [எப்படி எல்லாம் சாமாளிக்க வேண்டி இருக்குது ...ஷ்....சப்பா.... ]

  தங்கள் கருத்துக்கு நன்றி ...

  பதிலளிநீக்கு
 3. ***சுய விளம்பரம் ***:

  அண்ணனோட கவிதை யூத்புல் விகடன் -நுல Publish பண்ணி இருக்காக ...[நான் ரொம்ப ஷாக் ஆயிட்டேன் ...]

  http://youthful.vikatan.com/youth/Nyouth/gopalakrishnanpoem070610.asp

  பதிலளிநீக்கு
 4. தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி கருணாகரசு ...

  பதிலளிநீக்கு
 5. தல பாலோயர்ஸ் ஆஃப்சன் வையுங்க!

  பதிலளிநீக்கு
 6. //தல பாலோயர்ஸ் ஆஃப்சன் வையுங்க! //
  இத்தனை பதிவு போட்ட நீங்களே வால் -நு சொல்லிக்கும் போது என்ன போய் தல- நு விளிக்கலாமா ?
  இதுவரைக்கும் என்ன follow பண்ண ஒருத்தரும் வரததால ....எனக்கு இப்படி ஒரு option இருக்கறதே மறந்து போச்சு .....[இந்த புது template -இல் followers option வொர்க் ஆக மாட்டிங்குது ... i will try again...]
  நன்றி வால் பையன்....

  பதிலளிநீக்கு