ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

ப்ரியமான விடை

பதிவுலகில் இதுவரை நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை சொல்லி விட்டேன்.

இன்னும் நெறைய கருத்து கந்தசாமி வேலை செய்ய முடியும்.
மனம் தினம் தினம்  ஆயிரம் எண்ணங்களை வெளியேற் றுகிறது.

எல்லாவற்றையும் எழுதி கொண்டு இருந்தால் பைத்தியம் தான் பிடிக்கும் என்று தோன்றுகிறது.

இனிமேல் பதிவுலகில் பார்வையாளனாய் இருக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.
புரட்சி செய்வது என்றால் சமுகத்தில் புரட்சி செய்து அடி வாங்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

அல்லது அமைதியாக ஞானப் பழத்தை  தேடி செல்லலாம் என்று உள்ளேன் .

நான் தேங்க்ஸ் சொல்ல மாட்டேன்...

அதற்கு பதிலாக என் பதிவுகளை படித்தவர்கள் ,பின்னுட்டம் இட்டோர்,வரும் காலத்தில் படிப்போர் ,காறி துப்ப இருப்போர் அனைவருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன்.

ஏன்னா நாளைக்கு நீங்க என்னை நன்றி கெட்டவன் என்று சொல்லிவிட கூடாதே ...அதனால் தான்..... :)


கடசியா ஒரு சந்தேகம் :
இந்த ஞானப் பழமுன்னு சொல்லுராங்களே அதுக்கு கொட்டை இருக்கா ..இல்லையா ?          

ஒருவேளை ஞானப் பழம் எனக்கு கிடைச்சுதுனா ......நான் திரும்ப( ஞானப் பழத்தோட )வந்து உங்களுக்கு விளக்கமா சொல்லுறேன்......அதுவரை....இது எப்படி இருக்கு....ஹா ...ஹா ..ஹா