செவ்வாய், 16 நவம்பர், 2010

கல்யாண விபச்சார கலாசாரம்கலாசாரம் என்பது வெறும் கல்யாணத்தை அடிப்படையாக கொண்டது போலவும் ....கலாசாரம் அழுகிய தக்காளி போல கெட்டு போய் விட்டாதாகவும் வலையுலகில் சில கலாச்சாரவாதிகள்   குதிக்கின்றனர்.

இந்திய கலாச்சாரம்  என்பது முற்றிலும் வேறானது.நான் கலாச்சாரதிற்கு,ஒழுக்கத்திற்கு   எதிரானவன் அல்ல.
கல்யாணம் ,குடும்பம் என்பது அதில் ஒரு அங்கம் தான்.

கலாசாரம் கெட காரணமாக இருப்பதாக கூறப்படும்     லிவிங் டுகெதர் பற்றி விரிவாக இன்னொரு நாள்  விவாதிக்கலாம்.

கல்யாணம் என்ற விபச்சாரத்தை பற்றி பேசுவோம்.
சரியான விதத்தில் கட்டமைக்க பட்ட விபச்சாரத்தின் மறு பெயர் தான் கல்யாணம்.
விபசாரிக்கு ஒரு நைட் -க்கு விலை பேசினால் அவள் ஒரு குறிப்பிட்ட பணத்தை எதிர்பார்ப்பாள்.
கல்யாணத்தில் மனைவி கணவனின் சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பாள்.
அதே போல் ஆண் கல்யாணம் ,விபச்சாரம் இரண்டிலும் பெண்ணிடம் அழகை முக்கியமாக எதிர் பார்பான்.
இது அடிப்படையான எதிர்பார்ப்பு .இன்னும் etc ..உண்டு .   

கல்யாணம்  என்பது அன்பை அடிப்படையாக கொண்டது அல்ல.வியபாரத்தை அடிப்படையாக கொண்டது.
பொதுவாக கல்யாணம் எப்படி நிர்ணயிக்க படுகிறது?

தற்போது தமிழ் விபச்சார(கல்யாண) மாலை என்று சைட் உள்ளது அனைவருக்கும் தெரியும்.
இதில் ஒரு தரப்பு  விபச்சாரிகள்(மண மகள்)  என்ன எதிர் பார்க்கிரார்கள் என்றால்....விபசாரன்(மண மகன்)  USA ,UK -வில்  இருக்க வேண்டும் என்றும்...அப்புறம் அவர்கள் குலம்,மலம் சரியாக பொருந்தி வர வேண்டும் என்று பார்க்கிரார்கள் .இது போல பல தரப்பு எதிர்பார்ப்புகள் உண்டு ....!!!

அமெரிக்காவிற்கும் அன்புக்கும் என்னய்யா  சம்பந்தம் ....?
அடிப்படையில் அன்பால் யாரும் பிணைக்க படவில்லை,கல்யாணத்திலும் சரி ...விபச்சாரதிலும் சரி... அதனால் தான் விவாகரத்து அதிகரித்து விட்டது...

எனக்கு கல்யாணத்தின் மீதும் மரியாதை இல்லை ... விபச்சாரத்தின் மீதும் மரியாதை இல்லை ....எதாக இருப்பினும் அன்பினால் உறவுகள் பிணைக்க பட்டால் மதிக்கிறேன்.

கல்யாணம் ,விபச்சாரம் இரண்டுமே சொறி நாய் சாதி தான் ....இதில் எதை அடித்து விரட்டுவது ?எதை அணைத்து கொள்வது ...? பாவம் நாய்கள் .....வைத்தியம் தான் பார்க்க வேண்டும் ....!!!

நாம சொன்னா எந்த நாய் கேக்க போகுது ? இரண்டு சொறி நாய்களும் லொள் ,லொள்லு  மாத்தி மாத்தி குரைக்க தான் போகுது.
குரைக்கும் நேரம் போக மற்ற நேரங்களில்  எனக்கு நாய்களை பிடிக்கவே செய்கிறது.


Also refer:

http://thanikaatturaja.blogspot.com/2010/07/blog-post_09.html

ஒபாமா-வும் இந்திய அரசியலும்!!

Click on the images to view in full size
இந்த படங்களை forward  செய்தவன் நண்பன் பிரபு[அவனக்கு யார் forward செய்தாங்களோ ..........:) ]

வெள்ளி, 12 நவம்பர், 2010

ராதே ... IIமழைக் காலத்தில் கிழிறங்கி
மலை முகட்டைத்   தொட்டுக் 
குளிர்விக்கும்
மழை மேகம் போல ...

ஊடலுக்கு பின்
மழை மேகமாய்
சில நேரங்களில்
நீயும் ....
சில நேரங்களில்
நானும் ...

கார்மேக வானத்தை கண்டு
அகவும் மயில் போலவே...
ஊடலுக்கு பின்பான
நம் வார்த்தைகள்...

மழை ஒய்ந்த பின்
கூவும் குயில் போலவே ... 
கூடலுக்கு பின்பான
நம் வார்த்தைகள் ...
இருட்டு வானில்
எண்ணற்ற நட்சத்திரங்களை போலவே
நீ வருவதற்கு முன்பாக
மனம் முழுவதும் காதல் எண்ணங்கள்  பல ... 

நீ வந்த பின்போ
பவுர்ணமி நிலவு
வானை  ஆக்கிரமிப்பதை போலவே
என் மனம் முழுவதும் நீ ...
 
 
 
 
எனக்கு ...
காதல் மலர் தாமரை
காதல் மொழி மௌனம்
காதல் என்பது நீ .
 

வியாழன், 11 நவம்பர், 2010

ராதே ...

 
கடலில் வாழும் இரு
மீன் குஞ்சுகள்
கடலின்  அகலம் ஆழம்
பற்றி தர்க்கம்  செய்வதைப்  போல ....

நீயும் நானும் காதலில்
வாழ்ந்து கொண்டே
காதலைப்  பற்றி அவ்வப்போது 
தர்க்கம் செய்து கொண்டேதான்
இருக்கிறோம் ...கடலில் வாழும்
மீன் கரையில்
நீரின் சுவாசம் கிடைக்காத போது
உயிர்  துறப்பதை  போலவே

கரையில்  வாழும் நானும்
காதலின் சுவாசம்
கிடைக்காத  போது
உயிர் துறக்கிறேன் ...

நானும் நீயும்
காதல் அனுபவத்தில் கலந்த பின் ...

உன் உடலும் என் உடலும்
என் மனமும் உன் மனமும்
உன் உணர்வும் என் உணர்வும்
என் உயிரும் உன் உயிரும்

கபடி விளையாட்டில்
ஆடுகளத்தின் பக்கம் மாறி மாறி
விளையாடுவதை போல

காதல் ஆடுகளத்தில்
விளையாடிக்  கொண்டே உள்ளன ...


நான் உன்னை பார்க்காத நேரங்களில்
நீ என்னைப் பார்த்த போது .....

உன் ஓர விழிப் பார்வையால்  
என் கண்களைப் பார்த்த போது ....

புன்னகைக்க சொல்லி  காதல் சொல்லியும்
நீ மறுத்த போது ...

நான் உன்னை ஒளிந்திருந்து கவனிப்பது
தெரியாமல் பூக்களுடன் காதல் மொழி பேசிய போது ...

நீயோ  காதலை ஒளித்து வைக்கிறாய் ...
நானோ அதை தேடாமலே கண்டு பிடித்து விடுகிறேன் ...    

புதன், 10 நவம்பர், 2010

வெள்ளை ரோஜா -சிகப்பு ரோஜாஎன் மீது உனக்கு
காதல் எப்படி வந்தது
என்று கேக்கிறாய் ......

மொட்டாக இருந்த
ஒன்று பூவாக  மலர்ந்த
அதிசயம் போலவே ....

உன் மீதான என் காதல் 
மலர்ந்ததும் அதிசயமே !!!
மழைக் காலத்தில் ...
உன்  பார்வை தரிசனம்
கிடைக்கும் மின்னல்
மழையையும்.....
தரிசனம்  கிடைக்காத  மின்னல்
இடியையும்  பூமிக்கு   
அனுப்பி வைக்கிறதோ...?
நீ நட்டு வளர்க்கும்
ரோஜா செடியில் மட்டும்
எப்படி ஒரே நேரத்தில்
வெள்ளை ரோஜா
சிகப்பு ரோஜா
என்று அதிசயப்பட்டேன் .....

உன் காதல் பார்வையில்  ஒன்று
உன் வெக்க பார்வையில்  ஒன்றென
என் இதயத்தில் பூத்த
இரு காதல் ரோஜாக்கள் மூலம்
அதிசயத்தின் காரணம் புரிந்து கொண்டேன் !!

செவ்வாய், 2 நவம்பர், 2010

நான் உன்னைக் காதலிக்கிறேன்..
வானில் நஷ்சத்திரங்கள் 
ஒவ்வொன்றும் காதலைச்
சொல்ல ஏற்றுக் கொல்லாத
பௌர்ணமி நிலவு ....
சூரியன் காதலைச் சொல்ல
வருவதைக் கண்டதும்
ஓடி ஒளிவதேன்....
இதன் பெயர் தான் காதல் வெக்கமோ ?   
 உன் கவிதை எல்லாம் பொய் என்றாய் ....
ஆமாம் ...நீ சொல்வது உண்மைதான் என்றேன் ...
எப்படி சொல்லுகிறாய்  என்று  கேட்டாய்....

காதலின் நிழல் தானே என் கவிதையெல்லாம்  .....
நிழல் பொய் தானே என்றேன் .....
 நீ மல்லிகை  பூக்களை
தொட்டு பறிக்கும் போது ஒவ்வொன்றும்
 "நான் உன்னைக் காதலிக்கிறேன் "
என்று சொல்லத் துடிக்கிறது ....
நீயோ அதன் உயிரைக்  கிள்ளி
சரமாக்கி கூந்தலில்  சூடிக் கொள்கிறாய் ....
நீ காதல் நெஞ்சுக்காரி என்றுதான்
நினைத்து இருந்தேன்...
இப்படிக்  கல்நெஞ்சக்காரியாய்
இருக்கிறாயே  ?!
வெறுமையை சுவாசித்தேன் ..
வெறுமை எனது உணர்வாயிற்று  ..
உன் கண்களை கண்டேன் ..
நீயோ உன்  சந்திர காந்தப்  பார்வையால் ...
என் வெறுமையை  காதலால் நிரப்பினாய் ...!!நான் பெண்ணாய் பிறந்திருந்தால்
நீ யாக இருந்திருப்பேன்...
நான் ஆணாக பிறந்ததால் ...
காதல்  அடையாளம் காட்டியது ...
உன்னை நானாக ......

திங்கள், 1 நவம்பர், 2010

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ..

பனிச்  சாரலில் ...
மலை மேகங்களில் ...
அருவிகளில்...
காட்டாறுகளில்...
என எங்கு எங்கோ எல்லாம்
பார்வை யிட்ட காதல் ...
உன் ஈர விழி
மின்னல் தெறிக்கும்  புன்னகை
மலர்ந்தும் மலராத வெக்கத்தை  பார்த்து
படைப்பின் பரிபூரணம்  நீ தான்
என்றுணர்ந்து  உன்னிடம் தஞ்சம் புகுந்தது .....

நானும் காதலை எங்கு எங்கோ
தேடி ...
பரிபூரண காதலை உன்னிடம்
கண்டு  காதலுற்றேன் ....

நீ ஓடையில்
குளித்து விட்டு
ஈரம் சொட்ட வருவதும் ....

காதல்.....
பௌர்ணமி  நிலாச் சாரலில்
நனைந்து கொண்டே
நம் இருவருக்குமிடையே வருவதும் ...

பேரழகு ...

பௌர்ணமி நிலவு
இரவைக்  காதலாக்குகிறது .....

உன் ஈர  விழிப் பார்வை
அந்தக்  காதலை அழகாக்குகிறது..... 
பௌர்ணமி நிலவுக்கு
என் மனதைக் கொடுத்தேன் ..
சில கவிதைகளை பரிசாக
அள்ளித் தந்தது ....

உன்னிடம்  என் மனதைக்
கொடுத்தேன் .....
காதலைப்  பரிசாக
அள்ளித் தந்தாய்.....