வியாழன், 11 நவம்பர், 2010

ராதே ...

 
கடலில் வாழும் இரு
மீன் குஞ்சுகள்
கடலின்  அகலம் ஆழம்
பற்றி தர்க்கம்  செய்வதைப்  போல ....

நீயும் நானும் காதலில்
வாழ்ந்து கொண்டே
காதலைப்  பற்றி அவ்வப்போது 
தர்க்கம் செய்து கொண்டேதான்
இருக்கிறோம் ...கடலில் வாழும்
மீன் கரையில்
நீரின் சுவாசம் கிடைக்காத போது
உயிர்  துறப்பதை  போலவே

கரையில்  வாழும் நானும்
காதலின் சுவாசம்
கிடைக்காத  போது
உயிர் துறக்கிறேன் ...

நானும் நீயும்
காதல் அனுபவத்தில் கலந்த பின் ...

உன் உடலும் என் உடலும்
என் மனமும் உன் மனமும்
உன் உணர்வும் என் உணர்வும்
என் உயிரும் உன் உயிரும்

கபடி விளையாட்டில்
ஆடுகளத்தின் பக்கம் மாறி மாறி
விளையாடுவதை போல

காதல் ஆடுகளத்தில்
விளையாடிக்  கொண்டே உள்ளன ...


நான் உன்னை பார்க்காத நேரங்களில்
நீ என்னைப் பார்த்த போது .....

உன் ஓர விழிப் பார்வையால்  
என் கண்களைப் பார்த்த போது ....

புன்னகைக்க சொல்லி  காதல் சொல்லியும்
நீ மறுத்த போது ...

நான் உன்னை ஒளிந்திருந்து கவனிப்பது
தெரியாமல் பூக்களுடன் காதல் மொழி பேசிய போது ...

நீயோ  காதலை ஒளித்து வைக்கிறாய் ...
நானோ அதை தேடாமலே கண்டு பிடித்து விடுகிறேன் ...    

2 கருத்துகள்:

 1. //நீயோ காதலை ஒளித்து வைக்கிறாய் ...
  நானோ அதை தேடாமலே கண்டு பிடித்து விடுகிறேன் ...//

  கடைசி லைன் பன்ச்ச்! :-)

  பதிலளிநீக்கு
 2. //கடைசி லைன் பன்ச்ச்! :-)//

  [co="blue"]ம்...அப்படியா ...:)

  டாக்டரு விஜய் பேச்சுல வெப்பாரு பன்ச்!
  படம் பாக்குறவன் காதுல வைக்கணும் பஞ்சு :-))

  தனிகாட்டு ராஜா கவிதையில வைக்கிறாறு பன்ச்
  அத படிகரவுங்க மனசு ஆகுது பஞ்சா :-)

  சரியான பெருமை பீத்தகலையனா இருப்பான் போல இருக்கே -நு நெனைக்க கூடாது :-))[/co]

  பதிலளிநீக்கு