செவ்வாய், 2 நவம்பர், 2010

நான் உன்னைக் காதலிக்கிறேன்..
வானில் நஷ்சத்திரங்கள் 
ஒவ்வொன்றும் காதலைச்
சொல்ல ஏற்றுக் கொல்லாத
பௌர்ணமி நிலவு ....
சூரியன் காதலைச் சொல்ல
வருவதைக் கண்டதும்
ஓடி ஒளிவதேன்....
இதன் பெயர் தான் காதல் வெக்கமோ ?   
 உன் கவிதை எல்லாம் பொய் என்றாய் ....
ஆமாம் ...நீ சொல்வது உண்மைதான் என்றேன் ...
எப்படி சொல்லுகிறாய்  என்று  கேட்டாய்....

காதலின் நிழல் தானே என் கவிதையெல்லாம்  .....
நிழல் பொய் தானே என்றேன் .....
 நீ மல்லிகை  பூக்களை
தொட்டு பறிக்கும் போது ஒவ்வொன்றும்
 "நான் உன்னைக் காதலிக்கிறேன் "
என்று சொல்லத் துடிக்கிறது ....
நீயோ அதன் உயிரைக்  கிள்ளி
சரமாக்கி கூந்தலில்  சூடிக் கொள்கிறாய் ....
நீ காதல் நெஞ்சுக்காரி என்றுதான்
நினைத்து இருந்தேன்...
இப்படிக்  கல்நெஞ்சக்காரியாய்
இருக்கிறாயே  ?!
வெறுமையை சுவாசித்தேன் ..
வெறுமை எனது உணர்வாயிற்று  ..
உன் கண்களை கண்டேன் ..
நீயோ உன்  சந்திர காந்தப்  பார்வையால் ...
என் வெறுமையை  காதலால் நிரப்பினாய் ...!!நான் பெண்ணாய் பிறந்திருந்தால்
நீ யாக இருந்திருப்பேன்...
நான் ஆணாக பிறந்ததால் ...
காதல்  அடையாளம் காட்டியது ...
உன்னை நானாக ......

23 கருத்துகள்:

 1. நீ காதல் நெஞ்சுக்காரி என்றுதான்
  நினைத்து இருந்தேன்...
  இப்படிக் கல்நெஞ்சக்காரியாய்
  இருக்கிறாயே ?!

  Nice! :)

  பதிலளிநீக்கு
 2. கவிதை வரிகள் அனைத்தும் அருமை நண்பரே... ! உங்களுக்கு என்னோட தீபாவளி நல்வாழ்த்துக்கள்... !

  பதிலளிநீக்கு
 3. //Nice! :) //

  Tank U ஜீ... [ஜீ... பேரு கெத்தா இருக்கே....]

  பதிலளிநீக்கு
 4. //கவிதை வரிகள் அனைத்தும் அருமை நண்பரே... ! உங்களுக்கு என்னோட தீபாவளி நல்வாழ்த்துக்கள்... !//

  ஈரோட்டு சொக்க தங்கத்துக்கு தீபாவளி நல்வாழ்த்துகள் .....:)
  இந்த பதிவை அழகாக்கிய அனுஷ்காவிற்கு தீபாவளி நல்வாழ்த்துகள் .....:)
  அப்புறம் .....என் சுனைனாவிற்கு ஸ்பெஷல் தீபாவளி நல்வாழ்த்துகள் ...... :-))

  அனைத்து உயிர்களுக்கும் ...உறவுகளுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.....:)

  பதிலளிநீக்கு
 5. காதலின் நிழல் தானே என் கவிதையெல்லாம் .....
  நிழல் பொய் தானே என்றேன் ./

  ரொம்ப நல்லாருக்கு

  பதிலளிநீக்கு
 6. //ரொம்ப நல்லாருக்கு//

  ம்... ம்....
  நன்றி R.K....

  பதிலளிநீக்கு
 7. ///ஓடி ஒளிவதேன்....
  இதன் பெயர் தான் காதல் வெக்கமோ ?
  //

  உண்மைலேயே அழகான கற்பனைங்க..!!!

  பதிலளிநீக்கு
 8. //காதலின் நிழல் தானே என் கவிதையெல்லாம் .....
  நிழல் பொய் தானே என்றேன் .....
  /

  ஐயோ , எப்படிங்க இப்படியெல்லாம் ,,,,

  பதிலளிநீக்கு
 9. //உண்மைலேயே அழகான கற்பனைங்க..!!! //

  அப்படியா ..?

  //ஐயோ , எப்படிங்க இப்படியெல்லாம் ,,,, //

  சும்மா ...சும்மா .....:)

  நன்றி Radio Jockey ....

  பதிலளிநீக்கு
 10. நல்ல அருமையான கவிதை வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 11. //நல்ல அருமையான கவிதை வாழ்த்துகள்.... //

  நன்றி தல ...

  பதிலளிநீக்கு
 12. தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 13. உலகிலுள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

  உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. //வானில் நஷ்சத்திரங்கள்
  ஒவ்வொன்றும் காதலைச்
  சொல்ல ஏற்றுக் கொல்லாத
  பௌர்ணமி நிலவு ....
  சூரியன் காதலைச் சொல்ல
  வருவதைக் கண்டதும்
  ஓடி ஒளிவதேன்....
  இதன் பெயர் தான் காதல் வெக்கமோ ?//

  என்ன ஒரு கற்பனை!!! சான்ஸே இல்ல..

  பதிலளிநீக்கு
 15. //நான் பெண்ணாய் பிறந்திருந்தால்
  நீ யாக இருந்திருப்பேன்...
  நான் ஆணாக பிறந்ததால் ...
  காதல் அடையாளம் காட்டியது ...
  உன்னை நானாக ......//

  இதுவும் அருமை. கவிஞர்.தனிகாட்டு ராஜா வாழ்க!

  (சுனேனா இருக்க வேண்டிய இடத்துல அனுஷ்கா??)

  பதிலளிநீக்கு
 16. //[ஜீ... பேரு கெத்தா இருக்கே....]//
  அப்பிடியா சொல்றிங்க? :)

  பதிலளிநீக்கு
 17. //அப்பிடியா சொல்றிங்க? :) //

  [co="blue"]ம்..அப்படியேதான் ..ஜீ..:)[/co]

  பதிலளிநீக்கு
 18. //என்ன ஒரு கற்பனை!!! சான்ஸே இல்ல.. //
  //இதுவும் அருமை. கவிஞர்.தனிகாட்டு ராஜா வாழ்க!//

  [co="blue"] இந்த தனிகாட்டு ராஜா பயல பாராட்டாதீங்க ...அப்புறம் அவனுக்கு அவனே அரசவை கவிஞர் -நு பட்டத்த போட்டுக்கிட்டு சினிமாவுக்கு பாட்டு எழுத போறேனு கெளம்பி போய்டுவான் ...அப்புறம் தமிழ் நாடு தாங்காது :-))[/co]

  //(சுனேனா இருக்க வேண்டிய இடத்துல அனுஷ்கா??)//

  [co="blue"] அட ..அதுதாங்க ....காதலுக்கு கண்கள் இல்லை-னு சொல்லுவங்களே.....யார புறக் கண்ணில் பார்த்தாலும் எனக்கு அகக் கண்ணில் சுனைனாவாவே தெரியுறாங்க ......:-))[/co]

  பதிலளிநீக்கு