திங்கள், 1 நவம்பர், 2010

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ..

பனிச்  சாரலில் ...
மலை மேகங்களில் ...
அருவிகளில்...
காட்டாறுகளில்...
என எங்கு எங்கோ எல்லாம்
பார்வை யிட்ட காதல் ...
உன் ஈர விழி
மின்னல் தெறிக்கும்  புன்னகை
மலர்ந்தும் மலராத வெக்கத்தை  பார்த்து
படைப்பின் பரிபூரணம்  நீ தான்
என்றுணர்ந்து  உன்னிடம் தஞ்சம் புகுந்தது .....

நானும் காதலை எங்கு எங்கோ
தேடி ...
பரிபூரண காதலை உன்னிடம்
கண்டு  காதலுற்றேன் ....

நீ ஓடையில்
குளித்து விட்டு
ஈரம் சொட்ட வருவதும் ....

காதல்.....
பௌர்ணமி  நிலாச் சாரலில்
நனைந்து கொண்டே
நம் இருவருக்குமிடையே வருவதும் ...

பேரழகு ...

பௌர்ணமி நிலவு
இரவைக்  காதலாக்குகிறது .....

உன் ஈர  விழிப் பார்வை
அந்தக்  காதலை அழகாக்குகிறது..... 
பௌர்ணமி நிலவுக்கு
என் மனதைக் கொடுத்தேன் ..
சில கவிதைகளை பரிசாக
அள்ளித் தந்தது ....

உன்னிடம்  என் மனதைக்
கொடுத்தேன் .....
காதலைப்  பரிசாக
அள்ளித் தந்தாய்.....

6 கருத்துகள்:

 1. //பௌர்ணமி நிலவு
  இரவைக் காதலாக்குகிறது .....

  உன் ஈர விழிப் பார்வை
  அந்தக் காதலை அழகாக்குகிறது.....//

  really nice!! :)

  பதிலளிநீக்கு
 2. //பௌர்ணமி நிலவு
  இரவைக் காதலாக்குகிறது .....

  உன் ஈர விழிப் பார்வை
  அந்தக் காதலை அழகாக்குகிறது.....//

  வர வர கவிதைகளின் மெருகு கூடிக்கொண்டே போகிறதே? யாரவது சிக்கிட்டாய்ங்களா ;-)

  பதிலளிநீக்கு
 3. //வர வர கவிதைகளின் மெருகு கூடிக்கொண்டே போகிறதே? //

  அதுவா .....நான் கவிதை எழுதி விட்டு ...ஒவ்வொரு கவிதையாய் எடுத்து nail பாலிஷ் போல கவிதை பாலிஷ் போட்டு விடுவேன்....கவிதை -யின் மெருகு கூடி விடும் ...நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க :)

  //யாரவது சிக்கிட்டாய்ங்களா ;-)//

  சுனைனா -வ எனக்கு பிடிக்குது ...ஆனா சுனைனா என்னைக் கண்டு கொள்வதில்லை...
  அனுஷ்காவுக்கு என்னை பிடிக்குது ....ஏனோ நான் அனுஷ்காவை கண்டு கொள்வதில்லை .....இது தான் விதி என்பதா :)

  பதிலளிநீக்கு