வெள்ளி, 12 நவம்பர், 2010

ராதே ... IIமழைக் காலத்தில் கிழிறங்கி
மலை முகட்டைத்   தொட்டுக் 
குளிர்விக்கும்
மழை மேகம் போல ...

ஊடலுக்கு பின்
மழை மேகமாய்
சில நேரங்களில்
நீயும் ....
சில நேரங்களில்
நானும் ...

கார்மேக வானத்தை கண்டு
அகவும் மயில் போலவே...
ஊடலுக்கு பின்பான
நம் வார்த்தைகள்...

மழை ஒய்ந்த பின்
கூவும் குயில் போலவே ... 
கூடலுக்கு பின்பான
நம் வார்த்தைகள் ...
இருட்டு வானில்
எண்ணற்ற நட்சத்திரங்களை போலவே
நீ வருவதற்கு முன்பாக
மனம் முழுவதும் காதல் எண்ணங்கள்  பல ... 

நீ வந்த பின்போ
பவுர்ணமி நிலவு
வானை  ஆக்கிரமிப்பதை போலவே
என் மனம் முழுவதும் நீ ...
 
 
 
 
எனக்கு ...
காதல் மலர் தாமரை
காதல் மொழி மௌனம்
காதல் என்பது நீ .
 

8 கருத்துகள்:

 1. உங்கள் கவிதைகளை நிதானமாகப் படித்துவிட்டு மறுமொழியிடுன்கின்றேன்

  பதிலளிநீக்கு
 2. [ma]மிகவும் ரசித்து படித்தேன் [/ma]
  [co="blue"][ma]நன்றி தல ....[/ma][/co]

  பதிலளிநீக்கு
 3. //உங்கள் கவிதைகளை நிதானமாகப் படித்துவிட்டு மறுமொழியிடுன்கின்றேன் //

  [co="blue"]நிதானம் பிரதானம்...:)
  நன்றி நண்பா ...[/co]

  பதிலளிநீக்கு
 4. //எனக்கு ...
  காதல் மலர் தாமரை
  காதல் மொழி மௌனம்
  காதல் என்பது நீ//

  குட் :-)

  பதிலளிநீக்கு
 5. enna nadakkuthu inga..Radhe pathi ivaru kavithai eluthuvaaraam..athukku Radha comment poduvaangalaam gud nu solli..

  பதிலளிநீக்கு
 6. //enna nadakkuthu inga..Radhe pathi ivaru kavithai eluthuvaaraam..athukku Radha comment poduvaangalaam gud nu solli.. //


  [co="blue"]
  ராசா ,பஞ்சு அருணாச்சலம் -நு ஒருத்தரு சினிமா பீல்ட்ல இருக்கராரே அவரு என்ன பஞ்சு முட்டாய் விற்கரவறா?
  நாற்காலிகிட்ட போய் உனக்கு தான் நாலு கால் இருக்கே....நட -நு சொன்னா நடக்குமா?
  சுருளி ராஜன் சொல்லி ஒருத்தர் இருக்காரே..... அவருகிட்ட போய் சுருளி பட்டாசு கேட்டா கொடுப்பாரா ??

  பெயரில் என்ன இருக்கிறது ..?
  ராதா என்றால் காதலை தருபவள் என்று அர்த்தம் .....
  உங்கள் காதலியின் பெயர்
  சுப்பாயி என்று இருந்தால் கூட...நீங்கள் ராதா என்று அழைக்கலாம் .....
  ராசா ...உன் ஊர் கோயம்பத்துரா...?

  [/co]

  பதிலளிநீக்கு