சனி, 23 ஏப்ரல், 2011

தனி மனித தாக்குதல் தவறா?



சிலர் பதிவுலகில் ஏதேனும் தனி மனிதரை (பதிவரை ) பற்றி தாக்கி எழுதி விட்டால் ....
தனி மனிதரை தாக்குகிரிர்களே ...இது ஞாயமா...தர்மமா என்று தர்மத்தின் தலைவன் கணக்காய் பேசுவார்கள்.

பதிவுலகில்  ராமராஜனை, டி ராஜேந்தரை ,டாகடர் விஜய்,விஜயகாந்த என்று எல்லாம் அவர்களை பற்றி தாக்கி
எழுதுவார்கள்.

அப்ப இவுங்க எல்லாம் தனி மனிதர்கள் இல்லையா?
சினிமா ,அரசியலுக்கு வந்தால் தான் பொது மனிதனா?
பதிவுலகுக்கு வந்தால் பொது மனிதன் இல்லயா ?
பதிவுலக்கு வந்து விட்டாலே  அனைவரும் பொது மனிதர்கள் தான்.

சமுகத்தில் உள்ள ஒவ்வொரும் தனி மனிதர் அதே சமயம் அவரும் பொது மனிதர்.

இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நானும் பொது மனிதன் தான். நீங்களும் பொது மனிதர் தான். விஜய காந்தும் பொது மனிதர் தான்.   

பதிவுலகில் ஒருவர் மற்றவருடன் நட்புடன் தொடர்பு கொள்வது போல ...தாக்கியும் தொடர்பு கொள்ளலாம்.
அது அவரர் விருப்பம்.

நட்புடன் தொடர்பு கொண்டால் நண்பர் கிடைப்பார் . தாக்கி தொடர்பு கொண்டால் எதிரி கிடைப்பார்.
அது அவரவர் விருப்பதை பொருத்தது. 

அதை விட்டு விட்டு ....தனி பதிவரை தாக்காதே...பெண் பதிவரை தாக்காதே ....என்று சொல்லுவது எல்லாம் சிறு பிள்ளைத்தனமாக எனக்கு தோன்றுகிறது.   

வேண்டுமானால்  பதிவர்களின் கருத்துக்கள்  மோதி கொள்ளட்டும்...பதிவர்கள் மோதி கொள்ளாமல் இருக்கலாம்..
அந்தளவுக்கு பக்குவம் நமக்கு உள்ளதா என்பது யோசிக்க வேண்டிய விஷயம் 

இது எப்படி இருக்கு....ஹா ..ஹா ..ஹா    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக