வியாழன், 17 ஜூன், 2010

சர்வஅழகுஅதிகாரி நீ !
ஐந்து அடி ஐந்து அங்குலம்
ஐம்பது கிலோ எடை-யில்
வெட்கப் பூ பூக்கும்
வெட்க சிணுங்கி  செடி
நீ !ஹிட்லரை போன்ற சர்வதிகாரிதான் நானும்
எப்படி  சிறையில் இட்டாய் ?
விழியால் என்னை  ஆட்சி செய்யவே பிறந்த
சர்வஅழகுஅதிகாரி நீ !புத்தர் வாழந்த  காலத்தில்  பிறக்கவில்லை ...
மகாவீரர் வாழந்த காலத்திலும் பிறக்கவில்லை...
நான் வாழும் காலத்தில் பிறந்தாய் ...
எனக்கு ஞானம் பிறக்கவில்லை ....நீ கண்களை அனுப்பி வை ...
நான் என் இதயத்தை அனுப்பி வைக்கிறேன் ...
நீ உன்  இதயத்தை அனுப்பி வை ...
நான் என் கண்களை அனுப்பி வைக்கிறேன்..
நாம் இருவரும் வேடிக்கை பார்ப்போம்..
எப்படி இந்த நான்கும் மாறி மாறி காதல் செய்கின்றன என்று ..நான் வேறு யாரையாவது கல்யாணம்
செய்து கொண்டால் என்ன செய்வாய்
என்று கேட்கிறாய்?
என் இதயதிற்கும்  உன் கண்களுக்கும்
கல்யாணம் நடந்த அன்று
உன் புத்தி உறங்கி கொண்டிருந்தது...
இன்றுதான்  விழித்து கொண்டது போலும் .... என் ஒவ்வொரு  மூச்சும்
உன் பெயருக்கு பதில்
'ஓம்' என்று சுவாசித்து இருந்தால்
என்றோ நான் ஞானம் அடைந்திருப்பேன்...
அதனால் என்ன உன் பெயர்
சுவாசித்துதான்  காதல்  ஞானம் பெற்று விட்டேனே !!!உன்னை பார்த்த பின்பு
கடவுள் நம்பிக்கை போனது...
தேவதை நம்பிக்கை வந்தது...
உன்னை நீயே படைத்து   கொண்டாயோ?நாம் இருவரும் பேசிக்கொள்ள
இதயபேசி  ஒன்றை கண்டுபிடித்துள்ளேன்..
அதன் ஒலி அலைகள் காற்றில் பரவாது ...
காதலில் தான் பரவும்...

10 கருத்துகள்:

 1. காதலின் பரிணமங்கள் அழகு.......
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி அன்புடன் மலிக்கா..

  பதிலளிநீக்கு
 3. //நாம் இருவரும் பேசிக்கொள்ள
  இதயபேசி ஒன்றை கண்டுபிடித்துள்ளேன்..
  அதன் ஒலி அலைகள் காற்றில் பரவாது ...
  காதலில் தான் பரவும்... //

  Very Nice...

  பதிலளிநீக்கு
 4. எப்படி பாஸ் ..இப்டிலாம் கலக்குறீங்க.. நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு
 5. தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
  திருப்பூர் மணி....

  பதிலளிநீக்கு
 6. தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி விஜய்...

  பதிலளிநீக்கு