புதன், 2 ஜூன், 2010

மரணம் என் காலடியில் ....நான் உறவுகளுக்கிடையே
சிக்கிய நிலையில் மரண நாள் வந்தது ......
ஐய்யோ....என் கண்களில் கண்ணீர் ....

நான் மது,மாது -வில்
சிக்கிய நிலையில் மரண நாள் வந்தது .....
ஐய்யோ....என் மனதில் சொல்ல முடியாத துக்கம் ....

நான் பணம் ,புகழில்
சிக்கிய நிலையில் மரண நாள் வந்தது ......
ஐய்யோ....மரணதுக்கு பிறகு என் புகழ்
என்னாகும் என்று தாங்க முடியாத கவலை ....

நான் சமூக சேவை கொண்ட தியகியாய்
வாழ்ந்த காலத்தில் மரண நாள் வந்தது ......
ஐய்யோ....எனக்கு பிறகு சமூகத்தை காப்பாற்ற
யார் வருவார்களோ என்று ஏக்கம்....

நான் காதலில்(பிரம்மத்தில்) கரைந்து இருந்த
நிலையில் மரண நாள் வந்தது ....
ஐய்யோ.... இப்போது மரணம் என் காலடியில் ......
மரணத்தை என்னிடமிருந்து காப்பாற்ற யார் வருவார்களோ?

7 கருத்துகள்:

 1. மீளாத(மரண) இடுகை ...

  சுரேந்திரன் -னா,ஒருவேளை நீங்க இதை படிச்சா உன்கிட்ட இருந்து இதை படிகறவங்கள காப்பாற்ற யார் வருவார்களோ -னு கமென்ட் போடா கூடாது ---ஆமா சொல்லிபுட்டேன் ...

  பதிலளிநீக்கு
 2. //மரணத்தை என்னிடமிருந்து காப்பாற்ற யார் வருவார்களோ?//....வித்தியாசமான சிந்தனை.

  பதிலளிநீக்கு
 3. தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி Priya ...

  பதிலளிநீக்கு
 4. மரணத்தை மரணமே காப்பற்றிக்கொள்ளும். [எப்புடி]

  பதிலளிநீக்கு
 5. //மரணத்தை மரணமே காப்பற்றிக்கொள்ளும்.//
  யோசிக்க வைக்கரீங்க....
  நன்றி அன்புடன் மலிக்கா...

  பதிலளிநீக்கு