வியாழன், 1 ஜூலை, 2010

பதின்ப வயது நினைவுகள்..
















முன் குறிப்பு:
என்னை மதித்து(!!! நான் நம்ப மாட்டேன்....அகம் புறம் சுரேந்திரன்  ப்ளாக்-ல நான் போட்ட தொடர்  பின்னூட்டத்தினால் வந்த பின் விளைவு.. )  இந்த தொடர் பதிவு எழுத அழைத்த அகம் புறம் சுரேந்திரன்  அவர்களுக்கு  நன்றி.
இவன ஏன்டா  தொடர் பதிவு எழுத அழைத்தொமுனு  அவர் நொந்து கொள்ளாத அளவுக்கு என் நினைவுகளை எழுத முயற்சி செய்கிறேன்.
ஒரே ஒரு பதிவு மட்டும் எழுதி விட்டு  இதை நான்  தொடர் வண்டியில்  அமர்ந்து எழுதியதால் இது ஒரு தொடர்பதிவு என்று முடித்து விடலாமா  என்று ஒரு யோசனை ( யோசனை ரொம்ப மொக்கை என்று தோன்றியது).
சுய தம்பட்டம் கொஞ்சம் அதிகமா இருந்தா  நான் எதோ Dr.விஜய் SSLC  யோட ரசிகர்னு நெனச்சுகாதீங்க(ஆமா ...ஒருத்தராவது தொடர்ந்து வந்து படிபீங்களா...??)
இதை படித்து யாருக்காவது தலைவலியோ,தற்கொலை எண்ணமோ வந்தால்  என்னை எழுத தூண்டிய அண்ணன் சுரேந்திரன் அவர்களே  தார்மிக பொறுப்பு ஏற்றுக் கொள்ள கடமை பட்டு உள்ளார்.


இந்த நினைவில் வரும் பல பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

ஒரு சிட்டி -ல (சென்னைய விட கொஞ்சம் சின்னது ...அவ்வளவுதான் ) கோவாலு -நு ஒரு அப்பாவி(!) பையன் இருந்தானாம்.அது ஈரோடு -க்கு பக்கத்துல , இருக்கற விவசாய தொழில் நடக்கும்  ஒரு சிட்டி. 

படிக்கும் காலத்தில்   எப்படியும் முதல் ரேங்கோ இரண்டாவது  ரேங்கோ எடுத்து விடுவது வழக்கம்(இம்....சிரிக்க கூடாது ...இது என்னோட கதை தான்.)

ஏழாம் வகுப்பில்தான் என்னுடைய close friend பிரபு வோடு   பழக்கம்  ஏற்பட்டது.
எட்டாம் வகுப்பு  வந்தபோது எனக்கு  ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.அவள் பெயர் தன தேவி -யின் homely   யான முக அமைப்பு எனக்கு பிடித்து இருந்தது.தன தேவி என் மனதின் ஓரமாக வாழ்ந்து வந்தாள்.தனதேவி ஒன்பதாம் வகுப்போடு படிப்பை விட்டு நின்று விட்டாள்.

 எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பிற்கு  வந்த போது தான் இன்னும் மூன்று பசங்களோடு நட்பு  ஏற்பட்டது.அந்த நட்பு இன்று வரை தொடர்ந்து கொண்டு உள்ளது.

வெங்கட்,இளங்கோ,கதிர் இவர்கள் தான் அந்த மூன்று பேரும். ஒன்பதாம் வகுப்பில் நான் அமர்ந்த போது என் அருகில் அமர்ந்து இருந்தது பிரபு,அவன் அருகில் இளங்கோ.நாங்கள் மூவரும் கடைசி பெஞ்சுக்கு முந்தைய பென்ச்.இளங்கோ பத்தாம் வகுப்பு போக பிடிக்காமல் அதே பெஞ்சில் அமர்ந்து இருந்தவன்.எந் நேரமும் பெஞ்சில் தாளம் போட்டு கொண்டே இருந்தான்.நானும் பிரபுவும் சேர்ந்து அவனை மிருதங்க சக்கரவர்த்தி  என்று அழைக்க ஆரம்பித்தோம்.பின்னாளில் அது சக்கரவர்த்தி என்று சுருங்கி பின் சர்க்கரை என்று அழைக்க ஆரம்பித்தோம்.இன்று வரை இது தான் அவன் பட்ட பெயர்.

பிரபுவை 'குண்டா'   என்று அழைப்போம் .என்னை சட்டி (ஹி..ஹி...சட்டித் தலையா என்பதன் சுருக்கம் ) என்று அழைப்பார்கள்.
வெங்கட் -இவனும் பத்தாவது போக பிடிக்காமல் ஒன்பதாம் வகுப்பில் எங்களோடு சேர்ந்து கொண்டவன்.இவன் தைகிரியமாக சேட்டை செய்ய கூடியவன், தெனவெட்டாக   பேச  கூடியவன்.நானும் அதற்கு தகுதாற் போல நக்கல் நையாண்டியாக பேசுவதால் எங்களுக்குள்ளே  ஒரு frequency மேட்ச் இருந்து வருகிறது.

வெங்கட் ஒன்பதாம் வகுப்பில் ஒரு முறை ஒரு பெண்ணை போடி என்று அழைத்து விட்டான்.['வாடி' என்று அழைத்தால் தானே தப்பு?].
அந்த பெண் chemistry  டீச்சரிடம்  கம்ப்ளைன்ட் செய்து விட ...இவனை கொஞ்சம் கவனித்து பின் chemistry லேப் -யில்   அவனை உட்கார  விடாமல் அப்படியே ரொம்ப   நேரம் நிற்க வைத்து விட்டார்கள்.அவன் கடைசி வரை "நான் அப்படி சொல்லவே இல்லை " என்று சாதித்து கொண்டு  இருந்தான். கடைசியாக நானும் பிரபுவும் சென்று அவன் அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டான் என்று certificate கொடுக்க [வகுப்பில் எனக்கு   அமைதியான நன்றாக படிக்கும் நல்ல பையன்(!!) என்ற இமேஜ் பனிரெண்டாம்  வகுப்பு படித்து முடிக்கும் வரை form  ஆகி இருந்தது.] அவனை விட்டு விட்டார்கள்.

தனபால் ,மோகன்,ரவிக்குமார்(பறவை ) ,கொங்கு குணா,பங்காளி(மொண்ணை என்றும் பெருமையுடன் அழைக்கப்படும் )  பிரகாஷ்,ஹரிபிரசாத்(மாமா),குருபிரசாத்(ஆஸ்பத்திரி),ஜெயபால்,
தனசேகரன்(வள்ளுவர்),தினேஷ்,சதீஷ்ராஜா  அனைவரும் பதின்ப வயது நண்பர்கள் தான்.


பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் காலம் வரை ,  அருகில் ஒரு அம்மன் கோவில் இருக்கும்  மற்றும் அதற்கு அருகில்  ஒரு கிணறு + தோட்டம் ஓன்று இருக்கும் .அங்கே தான் lunchbox எடுத்து கொண்டு லஞ்ச் சாப்பிட ஒரு 10  பேருக்கு மேல் செல்வோம்.    


ஒருமுறை செந்தில் என்ற ஒரு பையன்  "டே ...இன்னைக்கு leave  போடணுமே  என்ன பண்ணலாம்?" என்று கேட்டான்.உடனே வெங்கட் அவனை கிணத்தில் பிடித்து தள்ளி விட்டான்.

                                                                      -நினைவுகள் தொடரும்...

2 கருத்துகள்: