திங்கள், 5 ஜூலை, 2010

பதின்ப வயது நினைவுகள்-III..




















எனக்கு ஏன் கவிதாவை கண் மூடித்தனமாக  பிடித்து இருந்தது என்று யோசித்து பார்த்ததில் ஓன்று புரிந்தது.
அவளிடம் இருந்த பெண் தன்மை,சிரிப்பை வெளிபடுத்தும் அழகு,அதிகமாக சிரிக்க வேண்டி இருந்தால்  வாய் பொத்தி சிரிக்கும் நளினம் ...இது போன்ற சில குணங்கள்  அவளை தனித்து காட்டியது.

[அழகான பெண்களை விடவும் பெண் தன்மை அதிகமாக உள்ள பெண்ணை  ஆண் அதிகம் விரும்புகிறான் என்று கோபி புராணம் சொல்லுகிறது.]

கவிதாவின் தோழிகள் ரேவதி மற்றும் பிரேமலதா  என்று இரண்டு பேர். இதில் ரேவதி என்  தூரத்து உறவுகார (சுமார் 15 km ) பெண் தான்.
இவர்கள் மூவரும் சேர்ந்து என்னைப் பற்றி என் காதுக்கு கேட்டும் கேக்காமலும் இருக்கும்  அளவுக்கு கமென்ட் அடிப்பது வழக்கம்.
ரேவதியும்,பிரேமலதாவும் வேண்டும் என்றே என்னிடம் வந்து எதாவது கேட்பார்கள்.கணக்கு  நோட்டு தா என்று கேட்பார்கள்.பொண்ணுகளுக்கு எல்லாம்  கணக்கு நோட்டு தர முடியாது என்று எதாவது நக்கலாக சொல்லி விடுவது என் வழக்கம்.
கவிதா  அந்த காட்சியை பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பாள்.

[தானாக வழிய வந்து பேசும் பெண்ணை விட ..நம்மைப்  பார்த்து கண்களில்  பேசும் பெண்ணையே ஆண் அதிகம் விரும்புகிறான் என்று கோபி புராணம் சொல்லுகிறது.]

பத்தாவது படித்த போது ஒரு முறை  கணித ஆசிரியர் special class  வைத்து  இருந்தார்.அவர் இடையில் எதோ வேலையாக தான் வருவதற்கு நேரம் ஆகும் ..அதுவரை படித்து கொண்டு இருங்கள் என்று சொல்லி சென்று விட்டார்.  அவர் சென்றதும் பசங்கள் அனைவரும் கிரௌண்டில் வந்து கிரிக்கெட் விளையாட  ஆரம்பித்தோம்.அன்று நான் ஒரு sixer (கை நடுக்கத்தில் பந்து தெரியாத்தனமாக பட்டு விட்டது) வேறு அடித்து விட்டேன்.ஒரு செம height -ல் வந்த பந்தை கேட்ச் வேறு பிடித்து விட்டேன்.ஒரு சில பெண்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.

இதை  ரேவதி பார்த்து விட்டு கவிதாவிடம் சென்று நான் விளையாடிய கொடுமையை explain செய்து இருக்கிறாள் என்பதை இளங்கோ மூலம் நான் தெரிந்து கொண்டேன். கொஞ்ச நேரத்தில் ஆசிரியர் வேறு வந்து விட்டார். யார் எல்லாம் படிக்காம கிரிக்கெட் விளையாடியது  என்று கேட்டார் .உண்மையை ஒத்து கொண்டால் தண்டனை ஏதும் இல்லை என்றார். நானும் எதார்த்தமாக எழுந்து நின்று விட்டேன்.
சரி... நான் நிறுத்த சொல்லும் வரை வகுப்புக்கு வெளியே சென்று  தோப்பு கரணம் போடவேண்டும் என்று சொல்லி விட்டார்.
ஒரு பத்து தோப்பு கரணம் போட்டு இருப்போம்.அவர் வகுப்புக்கு உள்ளே  சென்று விட்டால் தோப்பு கரணம் போடுவதை நிறுத்தி விட்டு நின்று கொண்டு இருப்போம். 

கவிதா சன்னலுக்கு அருகில் அமர்ந்து இருந்தாள். நான் தோப்பு கரணம் போடும்  அழகைப் பார்த்து ஒரே சிரிப்பு.நான் தோப்பு கரணம் போடுவதை நிறுத்தி விட்டு நின்று கொண்டு  இருந்தால்..."சார்...ஒரு சிலர் தோப்பு கரணம் போடாம ஏமாத்தறாங்க .." என்று என் காதுக்கு கேக்குமாறு வேறு சொல்லுவாள்.     .


என்னை பத்தி எதாவது கமன்ட்  அடிக்கடி அடித்து கொண்டே இருப்பாள். சில சமயம் அது என் காதுகளில் விழும் .நானாக சென்று எதுவும் அவளிடம் பேசியதில்லை. என்னுடைய பனிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பு பெண்களிடம் அதிகமாக பேசிப் பழகியதில்லை.வெறும் ஒன்று இரண்டு வார்த்தைகள் மட்டும் தான்...அதுவும் தேவை என்றால் மட்டும்.

[பெண்களிடம் எந்த அளவுக்கு நெருங்கி பழகாமல் இருக்கிறோமோ அந்த அளவுக்கு அவர்களின் மீது கவர்ச்சி  வளர்கிறது என்று கோபி புராணம் சொல்லுகிறது.]

பள்ளிக்கு நான் சைக்கிளில் வருவது தான் வழக்கம்.நான் பள்ளிக்கு வரும்  வழியில் ஒரு கால்வாய்(வாய்கால்) ஓடி கொண்டு இருந்தது. கவிதாவின் வீடு வரும் வழிக்கு கொஞ்சம் அருகில்  இருந்தது.கால்வாயில் தண்ணிர் ஓடும் காலங்களில்  ரோட்டின் இருபுறமும் வயல் மற்றும் கரும்பு தோட்டம் இருக்கும்.
இந்த ஏரியாவில் மயில்கள் அதிகமாக நடமாடும்.

ஒருமுறை லேடீஸ் சைக்கிளில்  மயில்  ஓன்று சென்று கொண்டு  இருக்குதே  என்று என் சைக்கிளை வேகமாக மிதித்து  அருகில்  சென்று பார்த்தால் ............
அது 'கவிதா'. 
சில சமயம் கவிதாவும் லேடீஸ் சைக்கிளில் வருவாள்.நான் அவளை பார்த்தால் .. சைக்கிளில் வேகமாக சென்று  ............................
முந்தி சென்று விடுவேன்.[இதுக்கு நீ இதை சொல்லாமலே இருக்கலாமே!?.]

பள்ளிபருவம்  இறுதி கட்டத்தை நோக்கி  நெருங்கி  வந்தது.ஒரு சில நாட்களில்   கவிதாவை விட்டு பிரிய போகிறோம் என்ற நினைப்பு வருத்தத்தை தந்து கொண்டு இருந்தது.
 +2 குரூப் போட்டோ எடுக்கும் நாளும் வந்தது.முதல் வரிசையில் பெண்கள் நின்றார்கள்.அதற்கு அடுத்த வரிசையில் ஒரு பெஞ்சின் மீது பெண்கள் நிற்க ஆரம்பித்தார்கள்.அதற்கு அடுத்த வரிசையில் சரியாக கவிதாவின் பின் புறமாக நான் நின்றேன்[கரெக்டாக டைம் பார்த்து யாருக்கும் சந்தேகம் வராதவாறு செய்த அகில உலக சாதனை ].ஜெயந்தியின் பின் புறம் தனபால் நின்றான் என்பது  கூடுதல் செய்தி.

+2 வில் -நான் எதிர் பார்த்ததை விட நல்ல மதிப்பெண் பெற்று ஈரோட்டிலேயே  இன்ஜினியரிங் colleage -ல் சேர்ந்தும் விட்டேன்.கவிதாவையும் நான் ஏறக்குறைய மறந்து  விட்டு இருந்தேன்.வழக்கம் போல colleage-ல்  உள்ள அழகான பெண்களை ரசித்து கொண்டு இருந்தேன். 
நான் அமைதியாக இருந்தாலும்  விதி தானாக வாலண்டியராக வந்து  மீண்டும்  கவிதாவை  சந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது......

                                                                           -நினைவுகள் தொடரும்.. 

4 கருத்துகள்:

  1. பொண்ணு பின்னாடி சுத்தினாலும் எப்படியோ படிச்சு பாஸ் பண்ணிடீங்க. அதுவரைக்கும் சந்தோசம்.

    :)

    பதிலளிநீக்கு
  2. என்ன தல பண்றது .........மனசுன்னு ஒன்னு இருந்துனா ...அது பொண்ணுக பின்னாடி சுத்தி வரத் தானே செய்யுது ...

    பதிலளிநீக்கு
  3. பதின்ம நினைவுகள் பலே.

    கரெக்டாக டைம் பார்த்து யாருக்கும் சந்தேகம் வராதவாறு செய்த அகில உலக சாதனை.//

    அமர்க்களம்..

    பதிலளிநீக்கு
  4. தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி அன்புடன் மலிக்கா....

    பதிலளிநீக்கு