செவ்வாய், 6 ஜூலை, 2010

பதின்ப வயது நினைவுகள்-IV..














நான் படித்த கல்லூரிக்கு  நான் வாழும் சிட்டியில் இருந்து இரண்டு வழிகளில் செல்லலாம்.நசியனூர் சென்று செல்லலாம் அல்லது பெருந்துறை சென்று செல்லலாம்.கல்லூரி முதல் வருடம் நான் நசியனூர் வரை சைக்கிளில் சென்று பின் பஸ் -லில் செல்வது என் வழக்கம். கல்லூரி சென்று ஒரு மூன்று மாதத்துக்கு மேல் கடந்து இருக்கும்.   ஒரு நாள் மாலையில்   நான்  "ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது....."   என்று பாடலை பாடிக் கொண்டே  மெதுவாக சைக்கிளை மிதித்து வீ ட்டுக்கு போய்க் கொண்டு இருந்தேன். 

என் எதிரே  கொஞ்சம் தொலைவில் பார்த்த போதே தெரிந்து விட்டது கவிதா நடந்து வந்து கொண்டு இருந்தாள்,அதுவும் ஸ்கூல் யுனிபார்ம் சுடிதாரில்.
 என்ன இவள் இன்னமும் school -க்கு போய் கொண்டு இருக்கிறாளா என்று ஒரு நொடி தோன்றினாலும்,எனக்கு பதட்டமாக இருந்தது.பேசலாமா,வேண்டாமா என்று மனசுக்குள் ஒரே பதட்டம். கவிதாவும் கொஞ்ச தூரத்துக்கு முன்னமே என்னை கவனித்து விட்டாள்.என்னை பார்த்தாலும் பார்க்காதவாறு  பார்வையை வேறு பக்கம் திருப்ப முயற்சி செய்தாள். அவள் அருகினில் வந்ததும் சைக்கிளை நிறுத்தினேன்.

"என்ன இங்கிருந்து நடந்து வர்ற?" -இது நான்.
"எங்க வயல்   காடு இங்க பக்கத்துல இருக்குது.அங்கிருந்து  வரேன் ."-இது கவிதா.
"ஓ...அப்படியா.."-இது நான்.

கொஞ்சம் தயக்கத்துக்குப் பிறகு...


"நல்லா இருக்கறயா..?" -இது கவிதா.
"இம்..நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்கிற?"-இது நான்.
"இம்..நல்லா இருக்கேன்....."--இது கவிதா.
"என்ன கைல எதோ வச்சு இருக்கே ..."  -இது நான்.

"அதுவா ...சாப்பாடு எடுத்து போன பாக்ஸ்.." ---இது கவிதா.
"அப்புறம் ...colleage  போயிட்டு தானே இருக்கறே ..."-இது நான்.
"இல்லை ..போறதில்லை..."
"ஏன் ....? +2  -வுல  நல்ல மார்க் தானே வாங்கி இருந்தே..?"
"அக்கா கல்யாண செலவுக்கு நெறைய பணம் செலவு ஆகி விட்டது...அது தான்.."
பின் அவள் correspondence- இல் BCA  படிப்பதாகவும் கூறினாள்.பின் அவளுடைய தோழிகள் ரேவதி,பிரேமலதா பற்றி -யும்  விசாரித்தேன்.
எனக்கும் அவளுக்குமான  இந்த  உரையாடல் சில தயக்கங்களுடன் ஒரு இரண்டு நிமிடம் தான் நடந்து இருக்கும்.

பள்ளியோடு கவிதா போய் விட்டாள் என்று  என் மனதை நான் சமாதான படுத்தி வைத்து இருந்தாலும்,தேய் பிறையாக போய் கொண்டு இருந்த நினைவுகள்  இந்த நிகழ்வுக்கு பிறகு மீண்டும் வளர் பிறை என வளர  ஆரம்பித்தன.
என்னுடைய கல்லூரி முதல் வருடத்திலேயே  மீண்டும் இரண்டு மூன்று முறை அந்த  வழியில் அவளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அப்போதும் ஒரு சில நிமிடங்கள் பேசினேன். அவள் பெரும்பாலும் சைக்கிளில் வருவாள்.என்னைப்  பார்த்தவுடன்  உயிரோட்டமுள்ள என் உயிரை கொல்லும்  ஓர் சிரிப்பு  சிரிப்பாள் .

அவளிடமிருந்து விடை பெறுகிற   சிரிப்பு தான் மழை காலத்தில் மின்னலாக பிறவி எடுக்கிறதோ  என்கின்ற சந்தேகம் இன்றுவரை கூட எனக்கு உண்டு.  

ஒரு சில காரணங்கலால்  அடுத்த இரண்டு வருடங்கள் நான்  நசியனூர் வழியாக செல்லாமல் பெருந்துறை  செல்லும்  வழியில்  செல்ல வேண்டி இருந்தது.  

முன்றாம் வருடம் படித்து கொண்டு  இருந்த போது  திடிரென்று ஒரு நாள் என் மனதில் ஒரு எண்ணம்.இன்று நசியனூர் வழியாக சென்று பார்த்தால் என்ன என்று தோன்றியது.
வியாழக்கிழமை(20-02-2003)  கொஞ்சம் எனக்கு ராசியான நாள் என்று  கருதியதால் அன்று சைக்கிளில் சென்றேன்.அப்போது கடவுளிடம்(!!!) வேண்டுதல் வைத்தேன்.எனக்கொரு எண்ணம் ...கவிதா இப்போது இந்த வழியாக வந்தால் எப்படி  இருக்கும்  என்று  நினைத்து கொண்டும்  "கத்தாலம் காட்டு வழி ..கள்ளி பட்டி ரோட்டு வழி..." என்ற பாடலை பாடிக் கொண்டும்  சைக்கிளை மிதித்த வண்ணம்  போய் கொண்டு இருந்தேன்.

நிஜமாகவே கவிதா TVS-50  வண்டியில் வந்து கொண்டு இருந்தாள். என்னை பார்த்ததும் அதே சிரிப்பு.அவள் பின் புறம்  அவளின் அம்மா அமர்ந்து இருந்ததால் ஒன்றும் பேசமுடியவில்லை.  சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து அவளை சந்திக்க நேர்ந்ததால் அன்று ஒரே  'நித்தி' யானந்தம் என் மனதில்.

அப்பொழுதே தீர்மானித்து விட்டேன். Final Year முழுவதும் அவளை சந்திப் பதற்காகவே இந்த வழியே  வருவது என...

அவளை சந்திக்கும்  நாட்களில்  அவளின் அம்மாவோ,அவளின் அப்பவோ அவளோடு இருப்பார்கள்.அப்போதெல்லாம் நான் புன்னகைக்க மறந்தாலும் அவள் புன்னகை சிந்த மறந்தது இல்லை.

மீண்டும் ஒரு நாள் முதல் தடவை பேச வாய்ப்பு கிடைத்தது போலவே நடந்து வந்து கொண்டு இருந்தாள்.    

அன்று அவளிடம் பேசிப் பார்த்ததில் எனக்கு  ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.அவளுக்கு காதல் என்று ஒன்றெல்லாம் என் மீது கிடையாது என்பது தான் அது.[இதே நேரம் வங்காள விரிகுடா கடலில்  எழும்பிய  அலைகள் அனைத்தும் ஒரு 10 நொடி அப்படியே நின்று விட்டது.... தமிழ் நாடு முழுவதும் ஒரு 10 நொடி காற்று வீசாமல் அப்படியே நின்று விட்டது...]

மீண்டும் இரண்டு மூன்று முறை பேசிப் பார்த்ததில் அதை  உறுதி செய்து கொண்டேன்.[கோபாலா ...கோபாலா  ...உனக்கு..... கோவிந்தா ....கோவிந்தா]

[பொதுவா பொண்ணுகளுக்கு  தேவை ஒரு உணர்வுரீதியான சப்போர்ட் ...
அது அண்ணனாகவும் இருக்கலாம்....தம்பியாகவும்  இருக்கலாம்.....நண்பனாகவும் இருக்கலாம்  ....காதலனாக தான் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை என்று கோபி புராணம் கூறுகிறது ]    

+2  வில் சேர்ந்து எடுத்து இருந்த குரூப் போட்டோவை  கிழித்து எறிந்தேன் எரிச்சலில்.கவிதைகள் பல எழுதி வைத்து இருந்த நோட்டு புத்தகத்தை கிழித்து எறிந்தேன்.      
ஓரிரு முறை என் மனதில் அவளை கண்டபடி கெட்ட +கேவலமான வார்த்தைகளால்  கூட  திட்டி என் மனதை தேற்றி கொண்டேன். [போனால் போகட்டும் போடா.....]    

பொதுவாக எல்லோரையும் நக்கல் விடுவதும்,  பருத்தி வீரன் போல  பண்பாடு போன்றவற்றில் நம்பிக்கை அற்று இருந்தாலும்,காமமும்  காதலும்   ஓன்று தான் என்று சொல்லி கொண்டு திரிந்தாலும்  என் மனதில் ஒரு ஆழமான வலி ஏற்பட்டது அவளாளே ..
அப்போது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது..ஏன் உண்மை காதலர்கள்[காதல் புனிதம் ...காமம்  அசுத்தம் என உளறி கொட்டும் உலகம் புரியாத அப்பாவிகள் ...] தற்கொலை செய்வதற்கு கூட தயங்குவதில்லை என்று....  

காலத்தின்  கட்டாயம் காரணமாக  படிப்பு முடிந்ததும் பிழைப்புக்காக  சென்னை வந்து விட்டேன்.
நான் சென்னை வந்த பின்  ஒரு வருடத்தில் அவளுக்கு கல்யாணம் என்று கேள்விப் பட்டேன்.


அதற்கு அடுத்து ஒரு வருடம் கழித்து  ஒருநாள்,எங்கள்  வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்று வரலாம் என்று பார்த்ததில் எங்கள்  வீட்டில் ஒரு வண்டியையும்  காணோம்.  என் சித்தப்பா பெண்ணின் சைக்கிளை  (லேடீஸ் சைக்கிள்) வாங்கி கொண்டு சென்றேன். அது தான் நான் லேடீஸ் சைக்கிள்  ஒட்டுவது முதல் தடவை.கடைக்கு சென்று விட்டு  திரும்ப வருகைளில், கவிதா கூட இந்த மாதிரி  சைக்கிளில்  தானே வருவாள் என்ற நினைவோடும்   'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு'   என்ற பாடலை பாடிக் கொண்டும்  நான் சைக்கிளை  மிதித்து கொண்டு வருகையில்....எதிரே வந்த பைக்கின்  பின்புறத்தில் ஒரு பெண்ணின் புன்னகை என்னைப் பார்த்தவுடன்.. .
கவிதா கணவனுடன்............  
  

கோபாலா ...கோபாலா  ...உனக்கு..... கோவிந்தா ....   கோவிந்தா ....
கோபாலா ...கோபாலா  ...உனக்கு..... கோவிந்தா ....   கோவிந்தா ...



காதல் ஒன்றும் புனிதமானது இல்லை என்பது தான் காலம் எனக்கு கற்று கொடுத்த பாடம்....
http://naayakan.blogspot.com/2010/02/blog-post_09.html

6 கருத்துகள்:

  1. நல்ல அனுபவம்..

    //பெருந்துறை சென்று செல்லலாம்//

    ஐ அங்க என் நண்பன் இருக்கிறான் :)

    பதிலளிநீக்கு
  2. nalla eluthureenga ... Naanum oru thodar eluthinen oru aravamillaa Kattil .... endru. mudinthaal patithu ungal karuththai sollungal

    பதிலளிநீக்கு
  3. நன்றி Karthick.
    எத்தனையோ பன்றோம் ...இதை பண்ண மாட்டோமா .... கண்டிப்பா படிக்கறேன் ....

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா9:55 AM, ஜூலை 17, 2010

    அன்புள்ள தனிக்காட்டு ராஜவிற்க்கு அன்பு அண்ணன் சுரேந்திரன் எழுதிக்கொள்வது..
    நலம் நலமறிய ஆவல். இதுவரை தம்பியை தனிக்காட்டு ராஜாவை நக்கலும் நையாண்டிபும் பிடித்த ஒரு உருவமாகவே பார்த்துவிட்ட எனக்கு தம்பியின் பதின்ப பருவ நிகழ்வுகளை படித்த போது இப்படிப்பட்ட ஒரு தம்பியையா நான் தப்பாக நினைத்துவிட்டேன் என்று மனதிற்க்குள் ஒரு சின்ன வலி ஏற்பட்டது. உன்னுடைய பள்ளிப்பருவத்தில் பெண்களால் உனக்கு வந்த துன்பத்தை படித்திபோது ஒரு வினாடி அசையாமல் நின்று விட்டேன். வாழ்க்கையின் பல்வேறு சுமைகளை சுமந்து கரையேறி உன்னதமான இலட்ச்சியத்திற்க்காக தன் இளமைபிராயத்தை பகிர்ந்துகொண்ட தம்பின் வாழ்க்கையில் தான் எவ்வளவு பெரிய சோதனை மற்றும் வேதனை..
    தம்பி தளர்ந்துவிடாதே.. அண்ணன் அழைக்கிறேன் வா.. கவிதா உன்னைக்கைவிட்டாலும் கவிதை உன்னைக்கைவிடாது.. எழுந்து வா.. எழுத வா..

    என்ன தம்பி அப்படிப்பார்க்கிறாய்... ஓ தலையில் உள்ளக்காயத்தை பார்க்கிறாயா.. நேற்று ஈரோடு சென்றிருந்த வேளையில் என்னை அடையாளம் கண்டுகொண்ட இருவர் ‘நீ தானே அவன எழுதச்சொன்னது என்று நையப்புடைத்துவிட்டனர்..

    பதிவுலகில் எழுதவந்தபிறகு இதெல்லாம் நமக்கு சகஜம்தானே.. எதற்க்கும் தம்பி உசாராக இரு..

    என்றும் அன்புடன் உன் அன்பு அண்ணன்..

    க. சுரேந்திரன்.

    பதிலளிநீக்கு
  5. //அண்ணன் அழைக்கிறேன் வா.. .//

    உங்களை பத்தி எனக்கு தெரியாதா ....இப்படி பேசி அழைச்சிட்டு போயி பாக்கெட்டுல நான் வச்சு இருக்கற 10 ரூபாயயும் புடுங்கிட்டு விட்டுவிங்க...


    //என்ன தம்பி அப்படிப்பார்க்கிறாய்... ஓ தலையில் உள்ளக்காயத்தை பார்க்கிறாயா.. நேற்று ஈரோடு சென்றிருந்த வேளையில் என்னை அடையாளம் கண்டுகொண்ட இருவர் ‘நீ தானே அவன எழுதச்சொன்னது என்று நையப்புடைத்துவிட்டனர்..//

    ஆமா ..ஆமா..அந்த ரெண்டு பேருல ஒருத்தன் சொன்னான் ....எவ்வளவு அடிச்சாலும் தாங்கரீங்கலாமே....ரொம்ப நல்லவருனு சொன்னான்.....

    பதிலளிநீக்கு