புதன், 22 செப்டம்பர், 2010

உயிரியல் WEDS காதலியல் ...II


என் கனவுகளும் உன் காதலும் 
கொஞ்சி விளையாடுகின்றன .....
என் கனவுகளுக்கு களைப்பு வரும்போதெல்லாம்
நீயோ புன்னகை பூக்கிறாய்...
மீண்டும் என் கனவுகளோ  விளையாட கிளம்பி விடுகின்றன ...
நீ இப்படியே செய்து கொண்டிருந்தால்
நான் எப்போதுதான் அவற்றை என்
வீ ட்டிற்கு அழைத்து செல்வது ...!?

உன் அருகில் நான் வரும்போது கூட
எல்லா மழைதுளிகளும்
உன் மிதே விழுவேன் என அடம் பிடிக்கிறதே...
நல்லவேளை.. மழைத் துளிகளுக்கு உயிர் இல்லை
என்றுதான்  இதுவரை நினைத்து இருந்தேன்...
இப்பொழுதெல்லாம்  பயமாகவே  இருக்கிறது...
உன் மீது விழுந்தவுடன் அவை 
உயிர்த் துளியாக மாறி விடுமோ என்று ..!?


கவிதைக்கு பொய் அழகாமே..!?
உணமைதான் கவிதைக்கு அழகு
உன்னை பற்றி எழுதும் போது...


பிரம்மா எல்லா உயிர்களையும்
படைத்து விட்டு உன்னைப் படைக்கும்
போது தான் காதல் பற்றிய ஞாபகமே
வந்ததாமே ....!?
உயிரில் காதல் தோற்றுவிக்கும்  கலையை
பிரம்மனுக்கே கற்று தந்தவள் நீதானோ !?

பௌர்ணமி நிலவு  பூவாக
மாறிவிட ஆசை படுகிறதாம்..
ஏன் என்று கேட்டால்..
உன் கூந்தலில் ஒரு நாளேனும்
உயிர்ப்போடு வாழ வேண்டும் என்கிறது...

2 கருத்துகள்:

 1. நல்லவேளை.. மழைத் துளிகளுக்கு உயிர் இல்லை
  என்றுதான் இதுவரை நினைத்து இருந்தேன்...
  இப்பொழுதெல்லாம் பயமாகவே இருக்கிறது...
  உன் மீது விழுந்தவுடன் அவை
  உயிர்த் துளியாக மாறி விடுமோ என்று

  Nice one....well done

  பதிலளிநீக்கு