வியாழன், 17 மார்ச், 2011

பிரபல பதிவரின் பேட்டி


பிரபல பதிவர் தனி காட்டு ராஜாவிடம் நெறைய கேள்விகளை நான்(கோபி ) அனுப்பி இருந்தேன்.அதில் அவர் தனக்கு பிடித்தமான சில கேள்விகளுக்கு மட்டும் பதில் தந்து உள்ளார்.

எத்தனையோ படிக்கறீங்க....இதையும் சகிச்சுக்கிட்டு படிச்சுடுங்க :)  

கேள்வி:உங்கள் நிஜ பெயரே தனி காட்டு ராஜா தானா..? 
பிரபல பதிவர் தனி காட்டு ராஜா: அதெல்லாம் இல்லைங்க....ஊர்ல என்னை பேனர் குப்பன்.....டோமறு மண்டையன் அப்படின்னு எல்லாம் செல்லமா பல பேர்ல  பல பேரு கூப்பிடுவாங்க..இருந்தாலும் கூட    எனக்கு நானே தனி காட்டு ராஜானு பேரு வச்சுக்கிட்டேன்.

கேள்வி:அதெப்படி உங்க ப்ளாக் -க்கு எப்ப வந்தாலும் hits 1000  க்கு மேல இருக்குதே...?
பிரபல பதிவர்:ஹா ..ஹா ...இதுல இருந்தே புரிய வேண்டாமா ...default  hits  1000 -துல இருந்து தான் தொடங்குற மாதிரி செட் பண்ணி வச்சுட்டேன்.. 
 
கேள்வி:உங்க profile  -ல  போட்டோ ஏன் போட வில்லை ..நீங்க உண்மையான ஆம்பிளை தானா..?
பிரபல பதிவர்:Well...Wait a minute... Let me check ...
ஆம்பிளை மாதிரி தான்  தெரியுது ...

நீங்க போட்டோ போட சொல்லி  சுலபமா சொல்லிட்டீங்க....

எங்க ஊர்ல ஒரு டைம் ஒருத்தன் கிட்ட 1000  ரூபாய் கடன் வாங்கிட்டு ....அத அவன் திரும்ப கேக்க வரும் போதெல்லாம் நான் முகத்துல துண்ட போட்டுக்கிட்டு என்ன ஓட்டம் ஓடுனணு உங்களுக்கு  தெரியுமா ...அது தெரிஞ்சு இருந்தா  இந்த கேள்விய கேட்டு இருக்க மாட்டீங்க...

Profile-ல போட்டோ போடுவது சாதாரண விசயமா என்ன..?

கேள்வி:சரி...நீங்க பிரபல பதிவர் என்பதால் உங்களுக்கு சமுதாயத்தில் மரியாதை அதிகமாக கிடைக்கிறதா....? 

பிரபல பதிவர்:ஊர்ல மரியாதை இருந்தா நான் ஏன் இங்க பதிவு எழுத வரேன்.....நேர்ல  நெறைய பேரு என்   கழுத்துல துண்ட போட்டு கேவலமா  பேசி இருக்கராங்களே ...அதெல்லாம் உங்களுக்கு தெரியவா போகுது....எங்க ஊருல 1000 பேருக்கு மேல நான்  hits வாங்கி இருப்பேன்.....ஆனா அந்த hits எல்லாம்  என்னமா வலிக்கும் தெரியுமா...?   

கேள்வி:நீங்க தான் புரட்சி பதிவர் ஆயிற்றே ....களத்தில் இறங்கி புரட்சி செய்தது அனுபவம் உண்டா ...அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...?

பிரபல பதிவர்:அரசியலில் புரட்சி செய்யலாம் என்று எங்க ஊர் M.L.A ஆபீஸ் -க்கு போய் அவரை   நேராக பார்த்து கேட்டேன்..
"நான் கொஞ்சம் ஓபன் டைப்....நீங்கள் 5 கோடி ஊழல் செய்து உள்ளதாக கேள்வி பட்டேன்...அந்த பணத்தை மக்களுக்கு சேவை செய்ய பயன் படுத்துங்கள்" என்று சொன்னேன்..

அப்புறம் நடந்தத   உங்களுக்கு சொல்லனுமா என்ன..?

அன்னைக்கு நைட் உடம்பு வலி பொறுக்க முடியாமல் போர்வைக்குள்ள படுத்துக்கிட்டு எப்படி விக்கி விக்கி அழுதேன் தெரியுமா..?   

கேள்வி:நீங்கள் தீவிரமாக நாத்திகம் பேசுகிரிர்களே....உங்கள் மனைவி இதை  எப்படி எடுத்து கொள்கிரார்...?

பிரபல பதிவர்:என் பொண்டாட்டியோட ரெண்டாம் கல்யாணத்துக்கு  நான் போனபோது அவள் சொன்னதை நான் இங்கு நினைவு
கூறுகிறேன்...."நீங்கள் நாத்திகம் பேசுங்கள் ....ஆத்திகம் பேசுங்கள் ...அதை பற்றி எனக்கு கவலை இல்லை" என்று சொல்லி விட்டாள்...  


கேள்வி:பிரபல பதிவர் யாக இருப்பதால் எதவாது நன்மை நீங்கள் கண்டதுண்டா...? 
 
பிரபல பதிவர்:அட போப்பா...காலங்காத்தலா விழித்தவுடனே  எந்திரிச்சு toilet  போரப்பவே...இன்னைக்கு எவன் எவன் நம்ம திட்ட போறானோ -நு யோசிக்க வேண்டி இருக்கு..

கேள்வி:எப்படி உங்கள் எதிர் கருத்துகள் வரும்போது கையாளுவீர்கள?

பிரபல பதிவர்:எரிச்சல் எரிச்சலாதான்  வரும் ....இருந்த போதிலும்..."இது போன்ற நிகழ்வுகளை நான் புன்னகையுடன் கடந்து போகிறேன்" அப்படின்னு ஒரு statement விட்டு விடுவேன் ....நான் ரொம்ப பக்குவ பட்ட பதிவர் என்று நெறைய பேர் நினைத்து விடுவார்கள் ...    

கேள்வி:நீங்கள் ஏன் காமடி பதிவுகளை எழுதுவதில்லை?

பிரபல பதிவர்:என் அரசியல்,கவிதை போன்றவைகளே காமடியாத்தான் இருக்கிறது என்று என் உள் மனது உண்மையை சொல்லுவதால் ...காமடிக்கு என்று தனியே நான் முயற்சி செய்வது இல்லை...  

கேள்வி:உங்களுக்கு  வாசகர் கடிதம் வருவது உண்டா?

பிரபல பதிவர்:10 க்கு 9கடிதம் என்னை கேவலமாக  திட்டி தான் வரும் ....எதோ ஒன்னு ரெண்டு என்னை புகழ்ந்து வருவதை மட்டும் வெளி யிட்டு விடுவேன்.....
இதை பார்த்த சில விவரம் அறியாத பயல்கள் ....அட டா ...நமக்கு வாசகர் கடிதம் ஏதும் வர மாட்டிங்குதே  என் ஏங்குவது உண்டு... 

கேள்வி:பெண் பதிவர்கள் கமெண்ட் உங்கள் பதிவுகளுக்கு அதிகம் வருகிறதே...அதன் ரகசியம் என்ன?

பிரபல பதிவர்:அது வேறு ஓன்றும் இல்லை ...பெண்களுக்கு பொதுவாக ஒரு வீக்நஸ் உண்டு ... பெண்களை நீங்கள் அக்கா ,சகோதரி என்று சொல்லி விட்டால் போதும் ...உருகி விடுவார்கள்...அது மட்டும் இல்லாமல் நீங்கள் தங்கச்சி என்று சொல்லி விட்டால் போதும் ...அண்ணா...அண்ணா என்று அழைத்தே நம்மை கரைத்து விடுவார்கள.

அவர்களுக்கு என்ன தெரியவா போகிறது நான் பிட்டு படம் பார்த்து கொண்டு தான் பதிவு எழுதுவேன்  என்ற உண்மை.

என் பொண்டாட்டிக்கு கூட என்னைப்   பிடிக்காது...ஹா ..ஹா.. அது மட்டும் இல்லாமல் பொண்டாட்டி தொந்தரவில் இருந்து தப்பிக்க தான் நான் பதிவே எழுதுகிறேன் என்ற   உண்மை வலையுலக பெண்களுக்கு தெரியவா போகிறது?

கேள்வி:நீங்கள் பதிவுலகின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்  என்று உள்ளீர்கள்?

பிரபல பதிவர்:பதிவு எழுதுவதை நிறுத்தி விடலாமா என்று யோசித்து கொண்டு உள்ளேன்..


   

11 கருத்துகள்:

 1. //superb..

  Thats why I always ask u to wirte more...//

  [co="blue"]நன்றி தல :) [/co]

  பதிலளிநீக்கு
 2. //நான் இந்த விளையாட்டுக்கு வரல... //

  [co="blue"]விளையாட்டு தானே ....அட ...சும்மா வாங்க தல...[/co]

  பதிலளிநீக்கு
 3. ஆஹா சரிதான் நீங்க ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல

  பதிலளிநீக்கு
 4. //ஆஹா சரிதான் நீங்க ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல //

  [co="blue"]COOL...[/co]
  [im]http://www.cindybarry.com/smileys/super/scarf_chips.gif[/im]

  பதிலளிநீக்கு
 5. ///பதிவு எழுதுவதை நிறுத்தி விடலாமா என்று யோசித்து கொண்டு உள்ளேன்........///PUNNIYAMAAP POOKUM!PLEASE?STOP THIS NONSENCE!!!!(JUST JOKE!CONTINUE YOUR SELF)

  பதிலளிநீக்கு
 6. //ஊர்ல மரியாதை இருந்தா நான் ஏன் இங்க பதிவு எழுத வரேன்.....நேர்ல நெறைய பேரு என் கழுத்துல துண்ட போட்டு கேவலமா பேசி இருக்கராங்களே ...அதெல்லாம் உங்களுக்கு தெரியவா போகுது....எங்க ஊருல 1000 பேருக்கு மேல நான் hits வாங்கி இருப்பேன்.....ஆனா அந்த hits எல்லாம் என்னமா வலிக்கும் தெரியுமா...?


  //

  செம காமெடி சார் !! சந்தானம் தோற்றுடுவார் போல இருக்கே !!! ஹஹஹா ...

  பதிலளிநீக்கு
 7. //super...kadaisiithu unmaiyaana pathilaa....//

  //PUNNIYAMAAP POOKUM!PLEASE?STOP THIS NONSENCE!!!!(JUST JOKE!CONTINUE YOUR SELF)//

  [co="blue"]உங்கள் விருப்பம் அடுத்த ஒரு திகில் பதிவுடன் நிறைவேற்றப்படும்..[/co]

  [im]http://www.cindybarry.com/smileys/super/sad2.gif[/im]

  பதிலளிநீக்கு
 8. //செம காமெடி சார் !! சந்தானம் தோற்றுடுவார் போல இருக்கே !!! ஹஹஹா ... //

  [co="blue"]நன்றி தலைவரே.. [/co]
  [im]http://www.cindybarry.com/smileys/hammock_beach2.gif[/im]

  பதிலளிநீக்கு