புதன், 11 ஆகஸ்ட், 2010

நிர்வாண விளையாட்டு

காதல்கொண்ட காமப் பார்வையில்
நிர்வாணம் விளையாட்டுதான்..
கிருஷ்ணன்களுக்கு

வெற்று காமப் பார்வையில்
நிர்வாணம் வக்கிரம்தான் ..
துரியோதனன்களுக்கு

வக்கிரப் பார்வையில்
நிர்வாணப்படுத்துதல்தான் வெற்றி..
துச்சாதனன்களுக்கு..லட்சியம் 
காதலா ?
லட்சியமா  ?
எது முக்கியம் என்று கேட்டாய்....
நான் லட்சியம் தான் முக்கியம் என்றேன் .....

என்னை பார்த்து  முறைத்து விட்டு சென்றவளே
உன் லட்சியம் என்ன
என்று என்னைக்  கேட்டிருக்கலாம்..
நானும்  சொல்லி இருப்பேன்..  
உன்னைக் காதலித்து கொண்டே இருப்பதுதான்
என்  லட்சியம் என்று .....


பொய்க் காதலன்  நான் ...
'நான்' இருந்த போது
காதல் இல்லை....
காதலில்   இருந்த போது
'நான்' இல்லை .....
'நான் உன்னைக் காதலிக்கிறேன்'  
என்ற பொய் வார்த்தைகளை என்னிடமிருந்து
ஏன் எதிர் பார்க்கிறாய் ?

10 கருத்துகள்:

 1. ////வெற்று காமப் பார்வையில்
  நிர்வாணம் வக்கிரம்தான் .////!

  அருமையான வரிகள்.

  எனக்கு முதல் கவிதைதான் மிகவும் பிடித்து உள்ளது.

  பதிலளிநீக்கு
 2. சில கவிதைகளை படிக்கும்போது நமது உணர்வுகள் வார்த்தைகளில் வடிக்கப்பட்டு இருப்பதை கண்டு மகிழ்வோம் . என்னை மகிழ்வித்த கவிதை

  பதிலளிநீக்கு
 3. //காதலா ?
  லட்சியமா ?
  எது முக்கியம் என்று கேட்டாய்....
  நான் லட்சியம் தான் முக்கியம் என்றேன் .....

  என்னை பார்த்து முறைத்து விட்டு சென்றவளே
  உன் லட்சியம் என்ன
  என்று என்னைக் கேட்டிருக்கலாம்..
  நானும் சொல்லி இருப்பேன்..
  உன்னைக் காதலித்து கொண்டே இருப்பதுதான்
  என் லட்சியம் என்று ..... //

  very Nice.... :)

  பதிலளிநீக்கு