திங்கள், 2 ஆகஸ்ட், 2010

நாக ராஜ சோழன் M.A, 


பழனிச்சாமி  வயலில் வேலை செய்யும்
நேரம் போக மற்ற நேரங்களில்
கோட்டு,சூட்டு   டை-யுடன்  தான்
தென்படுகிறாராம் இப்பொதெல்லாம் ....

கலைஞர்  சாம்பிராணி  என்பவரின்
பேரக் குழந்தைகள்  கூட
தமிழ் வழி கல்வி தான் படிகிரனவாம்....
தமிழில் படித்தால் தான்   வேலை வாய்ப்பாம்
இலச்ச கணக்கில் சம்பளமாம் இப்பொதெல்லாம்....

நகரங்களில் இருந்த  எல்லா மக்களும்
கிராமங்களுக்கு வருவதால்
கிராமங்களில்  இட நெருக்கடி 
ஏற்பட்டு உள்ளதாம் இப்பொதெல்லாம் ....

விவசாய புரட்சி ஏற்பட்டதில்  இருந்து
விவசாயம் பார்க்கும் பையன்களை
தான் கல்யாணம் செய்து கொள்வேன்..... 
என்று  பெண்கள் தூங்காமலே
கனவு கான்கிரார்களாம் இப்போதெலாம்...

+2  படிக்கும் போதே  மாணவர்கள்
ஜாவா கற்று விடுவதால்
கணிப்பொறி வல்லுனர்கள் என்று பீலா விட்டவர்கலுக்கு 
பொறி கடலை விற்பவர்களை விட
மரியாதை குறைவு தானம் சமூகத்தில் இப்போதெலாம் ....   

மருதுவக் கல்லூரி பொறியியல் கல்லூரி
முதல்வர்களே மாணவர் வீ ட்டுக்கே வந்து
எங்கள் கல்லூரியில் வந்து சேருங்கள்..
என்று அழைப்பு விடுகிரார்களாம் இப்போதெலாம்....  

தனியார்  மருத்துவ மனைகளை விட
அரசாங்க மருத்துவ மனை களின்  வசதி
பல மடங்கு உயர்ந்து விட்டதாம்...
அரசாங்க மருத்துவர்களை  மக்கள் 
தெய்வத்தை விட மேலாகா மதிக்கிறார்களாம் இப்போதெல்லாம் ...

கைக்குட்டை ,துண்டு போட்டு
யாரும் பஸ்சில் சீட்டு பிடிப்பதில்லையாம்
எல்லோரும் Q -வில்  நின்று
ஏறுவதை பார்த்து எறும்பு கூட
அதிசயபடுகிறதாம்   இப்போதெல்லாம்...


USA ,சிங்கப்பூர் போன்ற நாடுகளில்
இருந்து  படிக்க,வேலை வாய்ப்பு தேடி
வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து
வருவதால் இதை குறைக்க என்ன வழி
என்று  முடிவெடுக்க முடியாமல்  
திணறிக்கொண்டு இருக்கிறதாம்  அரசு இப்போதெல்லாம்..  

சென்னை யில் டைடல் பார்க்கை
வாய் திறந்து பார்த்த காலம் போய்
கிராமங்கள் தோறும் "டைட்டானிக் பார்க்"
IT  பார்க்குகள்  மாட்டு கொட்டகை போல் பெருகி
விட்டதாம் இப்போதெல்லாம் ....  

 பள்ளிகளுக்கு  நோட்டு புத்தகம் வாங்கி தந்து
"சிறு உதவி"  என்று தன்னடக்கமாக கூறும்
தர்மவான்களுக்கு மதிப்பில்லையாம் ....
 ஏழை என்று  யாரும் இல்லையாம் இப்போதெல்லாம் ..


வேலாயுதம் பட போஸ்டர்  பாத்து எனக்கு பிடித்த
பைத்தியம் தெளிய 10 வருடம் ஆகிவிட்டது ....
அதற்குள் இத்தனை மாற்றங்களா ?

இதை எல்லாம் பார்த்தவுடன் மறுபடியும்  பைத்தியம்
பிடித்து விடுமோ என்று  அச்சத்தில்
இந்த மாற்றத்திற்கு எல்லாம் யார் காரணம்  என்று
பக்கத்து தெரு பஞ்சவர்ணத்திடம்  கேட்டான் ..........
நம் நாட்டின் தற்போதைய  தலைவர் 
"நாக ராஜ சோழன்   M.A," -வும்
அவரது துணைவியார்   "வல்லரசு"  -வும்  தான்  என்றாள்......

ஓடி போய் காலண்டரை பார்த்தேன்
1-04-2020  என்று காட்டியது .........
காலண்டரில் இருந்த பழனி மலை முருகன்
கோவணத்துடன் என்னை பார்த்து சிரித்தார் ........
பின் குறிப்பு :ங்..கொய்யால ...சுனைனா படத்துக்கும்  உன் கவிதைக்கும் என்னடா சம்பந்தம் -நு  கேக்க தோணுதா ?
அது வேற ஒன்னுமில்லங்க ....இந்தியா வல்லரசு ஆனா உன்ன நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்   அந்த பொண்ணு சொல்லுச்சு ...அது தான் .....

[பாஸ் ....மௌச(mouse )  உருவாதீங்க .... ....அடிக்கறதா இருந்தா  பிளாட்டினத்தால   என் ப்ளாக்-க   அடிங்க .....ஏன்னா....நாம வல்லரசு இந்தியனு காட்ட வேண்டாமா ...]

33 கருத்துகள்:

 1. //வேலாயுதம் பட போஸ்டர் பாத்து எனக்கு பிடித்த
  பைத்தியம் தெளிய 10 வருடம் ஆகிவிட்டது ....
  அதற்குள் இத்தனை மாற்றங்களா ?//

  வர வர உன் அழிசாட்டியம் தாங்க முடியல.. இரு இரு.. டிஆர் அண்ணங்கிட்ட சொல்லி சிம்புவ வச்சு ஒரு படம் எடுக்கச்சொல்லுறேன்.. அப்ப நீ என்ன செய்யறேன்னு பாக்கறேன்...

  பதிலளிநீக்கு
 2. //வர வர உன் அழிசாட்டியம் தாங்க முடியல.. இரு இரு.. டிஆர் அண்ணங்கிட்ட சொல்லி சிம்புவ வச்சு ஒரு படம் எடுக்கச்சொல்லுறேன்.. அப்ப நீ என்ன செய்யறேன்னு பாக்கறேன்... //

  அசுக்கு...புசுக்கு.....நான் தமிழ் நாட்ட விட்டு வேற எங்கயாவது போய் ஒளிஞ்சுக்குவேனே ....இப்ப என்ன பன்னுவீ ங்க....

  பதிலளிநீக்கு
 3. ///ஓடி போய் காலண்டரை பார்த்தேன்
  1-04-2020 என்று காட்டியது .........///

  இந்த தேதி வந்தவுடனே, இதயே மீள்பதிவா போட்டு தேதிய மட்டும் 1-04-2030 ஆ மாத்திரு.. ராசா, ஒவ்வொரு 10 வருசத்துக்கும் போடுரதுக்கு ஒரு பதிவை இப்பயே ரெடியாக்கிட்டேயா, உம்மை பாத்தா பொறாமையா இருக்கு...

  பதிலளிநீக்கு
 4. //இந்த தேதி வந்தவுடனே, இதயே மீள்பதிவா போட்டு தேதிய மட்டும் 1-04-2030 ஆ மாத்திரு.. ராசா,//

  கண்டிப்பா தல ....மீள்பதிவை எதிர் பார்க்கலாம்...

  பதிலளிநீக்கு
 5. "நாக ராஜ சோழன் M.A," - இவரு சம்-ஆ இல்ல PM -ஆ ???

  பதிலளிநீக்கு
 6. காலண்டரில் இருந்த பழனி மலை முருகன்
  கோவணத்துடன் என்னை பார்த்து சிரித்தார் ........


  ::)))

  பதிலளிநீக்கு
 7. நல்ல பதிவு.....வாழ்த்துகள் ராஜா

  பதிலளிநீக்கு
 8. // ::))) //

  நன்றி sakthi ....

  ///நல்ல பதிவு.....வாழ்த்துகள் ராஜா//

  நன்றி rk guru.......

  பதிலளிநீக்கு
 9. கவிதைக்கு 80 மார்க் என்றால் கடைசியில் அடித்த நக்கலுக்கு 100 மார்க்.அடி பின்னீட்டீங்க.

  பதிலளிநீக்கு
 10. நல்ல திர்க்க தரிசனமான பதிவு சாகோதரா வாழ்த்துக்கள். ஒரு பெரிய அறிவளிகள் வட்டத்தில் இணைந்ததையிட்டு நான் பெருமைப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 11. ராசா, கலக்கு ராசா, என்ன ராசா இத்தோட நிருத்திபுட்டீக, அடுத்தது எப்ப ராசா . . .

  பதிலளிநீக்கு
 12. //ராசா, கலக்கு ராசா, என்ன ராசா இத்தோட நிருத்திபுட்டீக, அடுத்தது எப்ப ராசா . . . //

  இப்படி உசுபேத்தி உசுபேத்தியே உடம்ப ரணகள படுத்தறீங்களே தலைவா ......

  பதிலளிநீக்கு
 13. //இப்படி உசுபேத்தி உசுபேத்தியே உடம்ப ரணகள படுத்தறீங்களே தலைவா ...... //

  ஏதோ, நம்மளால முடிஞ்சது, ஹி, ஹி, ரொம்ப புகழாதீங்க வெக்கமா இருக்கில்ல . . .

  பதிலளிநீக்கு
 14. //ஏதோ, நம்மளால முடிஞ்சது, ஹி, ஹி, ரொம்ப புகழாதீங்க வெக்கமா இருக்கில்ல . . .//

  ஆஹா......கெளம்பிட்டாங்கையா .....கெளம்பிட்டாங்க......

  பதிலளிநீக்கு
 15. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

  பதிலளிநீக்கு
 16. யோவ், ரொம்பத்தான் முத்திப்போயி திரியுறீர்! ஏதும் லவ்வு,கிவ்வு ஓடுதா?

  பதிலளிநீக்கு
 17. //யோவ், ரொம்பத்தான் முத்திப்போயி திரியுறீர்! ஏதும் லவ்வு,கிவ்வு ஓடுதா? //

  பொறாமைய பாரு....

  பதிலளிநீக்கு
 18. //ஜாவா கற்று விடுவதால்
  கணிப்பொறி வல்லுனர்கள் என்று பீலா...
  ஏன்யா இந்த கொலைவெறி?

  பதிலளிநீக்கு
 19. கொலை வெறி கிடையாது தல ,
  பாச வெறி ...நம்ம இனத்த நாம திட்டாம வேற யாரு தீட்டுவா ?

  பதிலளிநீக்கு
 20. எலே மக்கா நீயும் நம்ம இனம்தானா. நான் தல கிடயாது பல்லி வால்.

  பதிலளிநீக்கு
 21. //எலே மக்கா நீயும் நம்ம இனம்தானா. நான் தல கிடயாது பல்லி வால்.//

  மக்கா... தல-னு ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன் .....எதோ தல -நு சொன்னதால அஜித் -நு கனவு கண்டுகிட்டு கோடம்பாக்கம் சைடு போய் தமிழ் படத்துல நடிக்க வாய்ப்பு எல்லாம் கேக்க கூடாது .....நீங்க "பல்லி வால்" போலவே இருங்க...அது தான் தமிழ் திரை யுலகுக்கு நல்லது .....

  பதிலளிநீக்கு
 22. நம் நாட்டின் தற்போதைய தலைவர்
  "நாக ராஜ சோழன் M.A,"
  ///
  ராஜா, நீங்க முக்காலமும் உணர்ந்த ஞானி. அப்படியே வர்ற தேர்தல்ல நான் வெற்றி பெறுவேனா என்பதையும் சொல்லிடுங்க.

  பதிலளிநீக்கு
 23. //அப்படியே வர்ற தேர்தல்ல நான் வெற்றி பெறுவேனா என்பதையும் சொல்லிடுங்க.//

  நாக ராஜா .....எதிர்காலம் உன் (உங்களை) மாதிரி ஆளுங்க கையில தான் .....
  நீ (ங்க) சும்மா பூந்து விளையாடு ராஜா ......நீ(ங்க) வெற்றி பெறவில்லை என்றால் வேறு யார் தான் வெற்றி பெற முடியும் !!?
  உன் பின்னுட்டத்தில் கூட தனித்தன்மை உள்ளது ....

  பதிலளிநீக்கு
 24. முருகா ஞானபண்டிதா முடியலப்பா எனக்கும் ஒரு வழிய காட்டுப்பா....... சாமி.......

  பதிலளிநீக்கு
 25. //முருகா ஞானபண்டிதா முடியலப்பா எனக்கும் ஒரு வழிய காட்டுப்பா....... சாமி....... //

  முருகன் எங்கேங்க வழிய காட்டுறான் ......நான் கூட சுனைனா வேணும் ...பாவனா வேணும்னு கேட்டா...போடா லூசு...உனக்கு எல்லாம் சென்னிமலையிலோ ...இல்லை பெருந்துறை-யில் இருந்து தான் ஏதாவது மொக்கை பிகர் தான் கிடைக்கும் -நு சொல்லறான் ....
  முருகன நம்பாதீங்க ....

  நன்றி தினேஷ் ...

  பதிலளிநீக்கு