வியாழன், 12 ஆகஸ்ட், 2010

தனி காட்டு ராஜா-யுக கோபிகா
பிச்சை கேட்டவனுக்கு
பிச்சைகாரன் என்றொரு பிம்பம்
பிச்சை போட்ட கெளரவ  பிச்சைகாரனுக்கு
மேலதிகாரி என்றொரு பிம்பம்

எதிர்பார்த்த பிம்பம் கிடைத்த போது  'காதல்'
அந்த பிம்பம் உடைந்த போது 'மோதல் '

வியபாரி பிம்பத்திற்கு போட்டியாக
கணவன் என்ற பிம்பம்
மனைவி என்ற பிம்பம்

நல்லவன் என்ற பிம்பம்
கெட்டவன் என்ற பிம்பம்
பிரபலப் பதிவர் பிம்பம்
புதுப்  பதிவர்  பிம்பம்


காதலன்,காமுகன்
காதலி ,கள்ளக் காதலி 
மகாத்மா ,பாவாத்மா
யோகி ,போகி
அமைதியானவன் ,ஆணவக்காரன் 
மனைவி ,விபச்சாரி
உலக அழகி ,உள்ளூர் கெளவி
இளைய தளபதி ,முத்துன தளபதி
வேலாயுதம்,வெத்து ஆயுதம் 
தல ,தறு தல
தனி காட்டு ராஜா,புள்ளி ராஜா
கோபாலன் ,கோழி திருடன்
கிருஷ்ணன்,கிறுக்கன்
நரசிம்ம பிரபு ,நெருப்பு நீல மேகம் 
சங்கர பாண்டியன் ,சரக்கு பாண்டியன் 
சுரேந்திரன்,டி.பி .கஜேந்திரன்
சித்தூர் முருகேசன் ,சிங்காநல்லூர் ஆறுமுகம்
சங்கீதா ,ரீட்டா
ராதை ,பேதை
யுக கோபிகா ,கேரளா கோபிகா
தங்கமணி ,ரங்கமணி 
சுனைனா,நமீதா
சூப்பர் பிகர் ,மொக்கை பிகர்
டி.ராஜேந்திரன் ,காபி கடை ராமச்சந்திரன்
பரிசல் ஒட்டி,பஞ்சு அருணாச்சலம்
ஒயர் மேன் சங்கர், ஒன்னாம் நம்பர் வீட்டு சின்ராசு 
ஈரோடு கதிர்வேலு ,தார்ரோடு  தங்கவேலு
வால் பையன் ,சமர்த்துப்  பையன் 
கேப்டன் ,கேன குப்பன்
சாப்ட்வேர் இஞ்சினியர், சாப்பாட்டு   ராமன்
மளிகைகடைக்காரன் ,மாடமாளிகைகாரன் 
சென்னை வாசி ,கோயமுத்தூர் வாசி
சிங்கப்பூர் சிங்காரம் ,சீவலப்பேரி  பாண்டி 
நாத்திகன் ,ஆத்திகன்
பிராமணன் ,சூத்திரன்
கவுண்டர் ,முதலியார்
தமிழன் ,தெலுங்கன் 
பில் கேட்ஸ்,பீலா கேஸ்
இயேசு ,பாஸு
அல்லா ,பில்லா
சிவன்,சரவண பவன்
பிரமச்சாரி ,நித்தியானந்தன்
போலீஸ் ,திருடன்
ஆசிரியர் ,கொள்ளைக்காரன்
விஞ்ஞானி ,கோமாளி

சமுகத்தில்  எங்கும் பிம்பம்
எதிலும் பிம்பம் 

தன் பிம்பத்தை பார்த்து பயம்
வரும் போது கடவுள் பிம்பம் ஆறுதல் ..

பிம்பத்தை உள்வாங்கி பார்த்தேன்
உண்மை பிம்பத்தில் இல்லை ..
பிம்பம் உண்மை இல்லை ..

மனமே .....
நல்ல  பிம்பங்களில் வாழ   பழகிவிடு ...
உயிரை  உணர வேண்டுமெனில்
பிம்பத்தை  கடந்து போகவும் கற்று விடு ...
முன் பின் முரணான குறிப்பு : 
ஹலோ பாஸ் .....எங்க போறீங்க ......வோட் எல்லாம் போடாதீங்க ....எனக்கு தான் இந்த பிரபல பதிவர் பிம்பம் எல்லாம் பிடிக்காதுன்னு  சொல்லிட்டேனே...

அப்புறம் ஒரு நாளைக்கு இந்த கவிதை(!?) எல்லாம் சரித்திரத்தில வரும் ....எனக்கு சிலை வைப்பாங்க .....இதெல்லாம் எனக்கு பிடிக்காது ...ஆமா சொல்லிபுட்டேன் .....

வலை யுலக பெருங்குடி மக்களே ...உங்களுக்கு ஒரு முக்கியமில்லாத அறிவிப்பு  :

 பெரும் மதிப்புக்கும்,மரியாதைக்கும்  உரிய   தனி காட்டு ராஜா(தம்பி ...நீ எந்த காட்டுக்கு ராஜா என்பன  போன்ற கேள்விகள்  கேப்போர் மீது குட்டி சாத்தான்  ஏவி விடப்படும் -எச்சரிக்கை )  அவர்கள் யுக கோபிகா -வின் எண்ணங்கள் என்ற பெயரில் ஒரு ப்ளாக் எழுதினார் (அட ....பொறுக்கி பயலே .. என முனு முனுப்பவர் களுக்கு  வேலாயுதம் பட டிக்கெட் இலவசமாக அனுப்பி வைக்கப்படும் )....

நீங்கள் ஏன் இந்த மாதிரி  ஒரு பெண் பெயரில் ஒரு ப்ளாக் எழுத ஆரம்பித்தீர்கள்  என்று அவரை யாருமே  கேக்காத காரணத்தால் அவராகவே  பின் வருமாறு  உளறுகிறார் ....

தனி காட்டு ராஜா அவர்கள் முதலில் ப்ளாக் -கில் கவிதை என்ற பெயரில் கிறுக்கி கொண்டு இருந்தார் .ஒரு பின்னுட்டம் கூட வராததால் விஜய் படம் பார்த்து விட்டு  தியேட்டரய் விட்டு வெளியே  வரும் போது ஒரு விவரிக்க முடியாத உணர்வு வருமே ...அது போன்ற ஒரு உணர்வை அடைந்தார்....


ஒரு பெண் அவர்கள்  மூன்று  வரியில்  'முரண்'  என்று கவிதை எழுதி இருந்தார்கள் [தம்பி ....அவுங்க கவிதை நல்லா இருந்திருக்கும்  என்று சொல்லுபவர்கள் கடத்தி வரப்பட்டு ...ஒரு நாள் முழுவதும்  T.V  இல் விளம்பரம் மட்டும்  பார்க்குமாறு செய்து  சொன்னதை வாபஸ் பெருமாறு  வற்புறுத்த படுவர் .............எனக்கு தமிழ் -ல  புடிக்காத வார்த்தை உண்மை.....] 
அட.... அதற்கு 20  பின்னுட்டம்......

தனி காட்டு ராஜா   அரசவையை  கூட்டினார்(என்ன ....துடப்பத்துலையா தம்பி? ).சிப்பாய்களுடன்  ஆலோசனை செய்தார்.சோதனை முயற்சியாக கோபிகா உருவானாள்...........

கோபிகா-விற்கு நல்ல வரவேற்பு  தனி காட்டு ராஜா  எதிர் பார்த்தது போலவே......

சமுகத்தில்  எங்கும் பிம்பம்
எதிலும் பிம்பம்  

என்ற உண்மையை உணர்ந்தார் ......தெளிந்தார் ............அந்தப்புரத்தில்   ஞானோதயம் பெற்றார் .......


ஒரு முக்கிய அறிவிப்பு ....சொல்லுபவர் முக்கிய மில்லாத  தனி காட்டு ராஜா

யுக கோபிகாவை  பின்வருமாறு விமர்சனம் செய்து பின்னுட்டம் இட்ட அண்ணன்  "அகம் புறம் " சுரேந்தரன்  அவர்கள் வாழ் வாங்கு  வாழுமாறு  வாழ்த்தி .....இனிமேல் பஸ் -இல் செல்லும் போது டிக்கெட் எடுத்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்  கொள்ளு மாறு வேண்டி  விரும்பி கேட்டு கொள்ளப் படுகிறார்கள் ......

////ரசித்தேன்.. சில கவிதைகள் புரட்சிகரமான சிந்தனைகைளை தாங்கிவந்ததால் இன்று முதல் நீங்கள் புரட்சி தலைவி என்றழைக்கப்படுவீர்கள். இந்த பட்டத்தில் வேறு யாராவது இருப்பாராயின் நீங்கள் இளைய புரட்சி தலைவி என்றழைக்கபடுவீர்கள்... (ஆட்டோவெல்லாம் வேண்டாங்க.. நீங்க யுவகிருஷ்ணாவை அனுப்பிச்சாலே போதும்...)////


யுக கோபிகா -வின் எண்ணங்கள்   -இல் followers  எல்லாம்  பெண்மையை மதிப்பவர்கள் என்று எடுத்து கொள்ளப் படுகிறது......

 எல்லா பதிவிலும் பின்னுட்டமிட்டு  ஊக்குவித்த  LK அவர்கள் பெண்ணியம் போற்றுபவர் என்று பாராட்ட படுகிறார் ....
[தல , அநியாத்துக்கு நல்லவனா இருந்து தனி காட்டு   ராஜா வோட இரண்டு  பதிவ remove  பண்ண வச்சுடிங்கலே......]

 கிண்டி கத்திபார சந்திப்பில்   நேரு சிலைக்கு அருகில்  தனி காட்டு ராஜா -வுக்கு  சிலை  ஒன்று  சிரசாசன நிலையில்(பெண்மையை போற்றி  வழிபடுபவர்  என்பதால் )  வைக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப் படுகிறது ...... ......


சரி அதெல்லாம் விடுங்க ........இந்தமாதிரி வேஷம் போட்ட தனி காட்டு ராஜாவுக்கு  உங்கள் கடுமையான  கண்டனங்கள்.....அல்லது லேசான கண்டனங்கள்  அல்லது மிக லேசான கண்டனங்களை  தெரிவித்து விடுங்கள்.....

கடுமையான கண்டனம் போதாது ...தண்டனை தந்தே ஆக வேண்டும்  என்று விரும்புவோர்  கிழ்க்கண்ட தண்டனைகளில்  ஒன்றை பரிந்துரை  செய்யலாம் ...


1.தன்னை தானே  தனி காட்டு ராஜா  என்று கூறி கொல்வதால்  காட்டுக்கு சென்று  தனி காட்டு ராணி யான  பெண் சிங்கத்தை "கிச்சு கிச்சு " மூட்டி சிரிக்குமாறு  செய்ய வேண்டும் .

2. காட்டில் புலியை  பார்த்து  அதன் முகத்துக்கு  நேராக  முகம் பார்க்கும் கண்ணாடியை  காட்டி  "புலிக்கு   பிறந்தது  பூனையாகுமா? " என்று ஒரு கேள்வியை  கேக்க வேண்டும் .

3.சிம்பு -வின்  அனைத்து பஞ்ச் டைலாக் -கையும்  ஜெர்மன்  மொழியில்   மொழி பெயர்த்து  கண்டனம் தெரிவிக்கும்  வலை பதிவர்களுக்கு  அனுப்பி வைக்க வேண்டும் .

4.கொசு ஒன்றை உயிருடன்  பிடித்து  அதன் காதில்  " நான் ஒரு பிரபலமில்லாத வலை பதிவர் ...எனது பெயர் அரை குறை விகடனில்  வந்துள்ளது " என்று 1008  முறை  கூற வேண்டும் ....ஒரு வேலை கொசு இறந்து விட்டால்  மீண்டும்   வேறு ஒரு கொசுவை   உயிருடன்  பிடித்து முதலில்  இருந்து  சொல்ல வேண்டும் .

5.கேபிள் சுதாகர் என்ற பிரபலமில்லாத  வலை பதிவரின் கேபிளை  திருடி வந்து வீட்டில் ஒளித்து வைத்து கொள்ள வேண்டும் .அவர் விவரம் தெரிந்துகேட்டால் கூட கேபிளை கொடுத்து விட கூடாது .

6.தமிழ்  வலையுலக குடும்பத்தின் பாமிலி சாங்  ஒன்றை தாயார் செய்து  அதை அனைத்து தமிழ் வலை யுலக குடும்பத்துக்கு  அனுப்பி வைக்க வேண்டும் . இதன் மூலாம் ஏர்போர்ட் ,ரயில்வே ஸ்டேஷன்  போன்றவற்றில்  நீங்கள்  பாமிலி சாங் பாடுவதன் மூலம் அனைவரும்  ஓன்று சேர்ந்து கொள்ளலாம் .

7.கடவுள் இருக்கிரார இல்லையா  என்று எதாவது ஒரு மன நல காப்பாகத்துக்கு சென்று விவாதம் செய்ய வேண்டும் .விவாதத்தில்  வெற்றி பெற்றால்  முடிவான விளக்கத்தை  அனைத்து வலை பதிவர் மற்றும் கடவுளுக்கு அனுப்பி வைக்கவும் . தோற்று விட்டால்  மன நல காப்பாகத்தில் தானும் ஒரு அங்கமாக சேர்ந்து விடவும் .....


-தனி காட்டு ராஜா (எ) கோபி

34 கருத்துகள்:

 1. என்னமோப்பா, என்னன்னவோ சொல்றீக ஒன்னியும் பிரியல...

  பதிலளிநீக்கு
 2. //என்னமோப்பா, என்னன்னவோ சொல்றீக ஒன்னியும் பிரியல... //

  அது தானே நமக்கு வேணும் ....

  பதிலளிநீக்கு
 3. உண்மைத்தமிழனுக்கு போட்டியா பதிவு எழுதிய தம்பி தனிக்காட்டு ராஜா வாழ்க...

  தம்பி பதிவ சுருக்கமா எழுதுங்க....

  பதிலளிநீக்கு
 4. உங்கள் நையாண்டியை ரசித்தேன்.குறிப்பாக
  கொசு ஒன்றை உயிருடன் பிடித்து அதன் காதில் " நான் ஒரு பிரபலமில்லாத வலை பதிவர் ...எனது பெயர் அரை குறை விகடனில் வந்துள்ளது " என்று 1008 முறை கூற வேண்டும் ....ஒரு வேலை கொசு இறந்து விட்டால் மீண்டும் வேறு ஒரு கொசுவை உயிருடன் பிடித்து முதலில் இருந்து சொல்ல வேண்டும் >>
  நல்ல சட்டயர் காமெடி.பின்னூட்டம் அதிகம் வர்லைனா பன ரீதியான பாதிப்பு வரும் ,உண்மைதான் ,இது அவசர உலகம்.1008 வேலை இருக்கும்.எல்லாருக்கும்.விட்டுத்தள்ளுங்க

  பதிலளிநீக்கு
 5. //உங்கள் நையாண்டியை ரசித்தேன்.//

  நன்றி தல ....

  பதிலளிநீக்கு
 6. தனிக்காட்டு ராஜா / கூட்டமா தூக்கிற கூஜா.
  இதை சேர்க்கலியே,
  இப்படிக்கு பி. பா. (நீங்க வேறயா, பி. பா. = பிரபலமில்லாத பதிவர்) மார்கண்டேயன்.

  பதிலளிநீக்கு
 7. தனி காட்டு ராஜா/புள்ளி ராஜா
  தனிக்காட்டு ராஜா / கூட்டமா தூக்கிற கூஜா

  கூட்டமா தூக்கிற கூஜா -வை choice -இல் விட்டாச்சு .....

  நன்றி தல ...

  பதிலளிநீக்கு
 8. நல்லவேலை யுக கோபிகாவுக்கு நான் பின்னுட்டம் எதுவும் எழுதவில்லை. தல... என்ன ஒரு வில்லத்தனம்.!!!

  /****யுக கோபிகா -வின் எண்ணங்கள் -இல் followers எல்லாம் பெண்மையை மதிப்பவர்கள் என்று எடுத்து கொள்ளப் படுகிறது.***/ சூப்பர் பாஸ்...

  தல, என்னை மாதிரி நல்ல பையன்கள் இந்த ப்ளாக்கில் யாருமே இல்ல போல.

  பதிலளிநீக்கு
 9. // /****யுக கோபிகா -வின் எண்ணங்கள் -இல் followers எல்லாம் பெண்மையை மதிப்பவர்கள் என்று எடுத்து கொள்ளப் படுகிறது.***/ சூப்பர் பாஸ்... //

  மேடை பேச்சு போல தான் (மாய) வலை யுலகமும் ...

  //நல்லவேலை யுக கோபிகாவுக்கு நான் பின்னுட்டம் எதுவும் எழுதவில்லை.தல... என்ன ஒரு வில்லத்தனம்.!!!//

  பாத்து சூதானமா நடந்துக்கணும் சரவணா....
  யுக கோபிகா - தளத்தில் ஒப்புக்கு சப்பாணியாக தான் எழுதினேன் (ஆனால் உண்மையான உணர்வுகள் தான் அவை ----நம்புங்க ).....நான் எதிர் பார்த்ததை விட அதிக பின்னுட்டம்.....
  உங்கள் தளத்தில் வந்து பின்னுட்டம் இடலாம் என்று தான் ஒரு முறை யோசித்தேன் .....பின் மறந்து விட்டேன் .....
  நான் பின்னுட்டம் இட்டு இருந்தால் .....ஒரு வேலை நீங்களும் பின்னுட்டம் இட்டு இருக்கலாம் ...


  ஊரப் புரிஞ்சு கிட்டேன் .....உலகம் தெரிஞ்சு கிட்டேன் ...என் யுக கோபிகா..என் யுக கோபிகா

  பதிலளிநீக்கு
 10. //உங்கள் தளத்தில் வந்து பின்னுட்டம் இடலாம் என்று தான் ஒரு முறை யோசித்தேன் .....பின் மறந்து விட்டேன் .////

  என்ன ஒரு கொலைவெறி நண்பா.. சரி, அப்படியாவது ஒரு பெண் பெயரில் பின்னுட்டம் வந்தால் சரி...

  இந்த வலையுகத்தில் ஒரு பொதுவான பழக்கம் எப்பொழுதும் இருக்கிறது. நமக்கு யாராவது பின்னுடம் எழுதினால், அவருடைய வலைப்பதிவுக்கு நாம் பின்னுடம் எழுதுவது. "சூப்பர், அருமை, எருமை" இவை எல்லாம் இந்த ரகம் தான். இதில் தவறு ஒன்றும் இல்லை. ஒருவரின் எழுத்தை ஊக்கவிப்பது என்றுகூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால், பெண்களின் பதிவுகளுக்கு மட்டும் "ஆகா ஓகோ" என்று தொடர்ந்து பின்னுடம் எழுதுவதுதான் ஒருவித வெறுப்பை தருகிறது. அந்த வெறுப்பு இந்த பதிவில் நன்றாக தெரிகிறது. என்னதான் நகைச்சுவை சேர்த்து எழுதினாலும் அந்த வெறுப்பு ஏதோ ஒரு வார்த்தையில் கண்டிப்பாக வெளிப்பட்டுவிடும்.

  பதிலளிநீக்கு
 11. //அப்படியாவது ஒரு பெண் பெயரில் பின்னுட்டம் வந்தால் சரி...//

  அதுக்கெல்லாம் நீங்க பெண்ணியம் போற்ற தெரிய வேண்டும் .....
  அல்லது பெண்கள் "போடா லூசு பயலே ..." என்று சொல்லும் பதிவில் கூட "ஹி ...ஹி ...சரியா சொன்னிங்க .." என்று பின்னுட்டம் இட தெரிந்து இருக்க வேண்டும் ......

  மேற் சொன்ன இரண்டு கருத்து களும் சென்னை ,பெங்களூர் ரூட் போல வேறு வேறு என்றாலும் இரண்டு கருத்துகளும் திருப்பத்தூரில் சந்தித்துக் கொள்வது விவாதத்துக்கு திருப்பு முனை என்று கருதப்படவில்லை ......

  //ஆனால், பெண்களின் பதிவுகளுக்கு மட்டும் "ஆகா ஓகோ" என்று தொடர்ந்து பின்னுடம் எழுதுவதுதான் ஒருவித வெறுப்பை தருகிறது.//

  உலகம் அப்படி .....நாம என்ன சரவணா செய்ய ..
  இந்தமாதிரி எல்லாம் தப்பு தப்பா உண்மைய பேசுனா ....அப்புறம் பதிவுலகில் பிஸ்கோத்து விருந்து கிடைக்காது ....ஆமாம் ......

  பதிலளிநீக்கு
 12. //உக்கார்ந்து யோசிப்பாய்ங்களோ //

  இதுல யோசிக்க எதுவே இல்ல தல .....

  பதிலளிநீக்கு
 13. //கடவுள் இருக்கிரார இல்லையா என்று எதாவது ஒரு மன நல காப்பாகத்துக்கு சென்று விவாதம் செய்ய வேண்டும் .விவாதத்தில் வெற்றி பெற்றால் முடிவான விளக்கத்தை அனைத்து வலை பதிவர் மற்றும் கடவுளுக்கு அனுப்பி வைக்கவும் . தோற்று விட்டால் மன நல காப்பாகத்தில் தானும் ஒரு அங்கமாக சேர்ந்து விடவும் ..... //


  நான் சிரிச்சது இதுக்கு, உங்க சண்டையில என்னை இழுக்காதிங்க தல!

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்கள் தனிக்காட்டு ராஜாவே.... கலக்குங்க..கலக்குங்க... வயித்தை கலக்கினா மட்டும் தான் காடு போவிங்க போல நம்மளையும் கூட்டிப் போங்க..

  பதிலளிநீக்கு
 15. //கலக்குங்க..கலக்குங்க... வயித்தை கலக்கினா மட்டும் தான் காடு போவிங்க போல நம்மளையும் கூட்டிப் போங்க..//
  கலக்குங்க..வுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா ...ஆஹா......

  பதிலளிநீக்கு
 16. உன் அட்டகாசம் தாங்க முடியல... இந்தா புட்ச்சிக்க.. இன்னியிலிருந்து நீதான் ‘புரட்ச்சி தளபதி’... அப்பயாவது அத்துமீறாம அடங்கிறியான்னு பாக்கறேன்.. (ஒரு ரெண்டு வாரம் ஊர்ல இல்லன்னா பயபுள்ள என்னவெல்லாம் பண்ணிப்புடுது... உஸ்...)

  பதிலளிநீக்கு
 17. //இந்தா புட்ச்சிக்க.. இன்னியிலிருந்து நீதான் ‘புரட்ச்சி தளபதி’... அப்பயாவது அத்துமீறாம அடங்கிறியான்னு பாக்கறேன்.//

  இப்படி ‘புரட்ச்சி தளபதி’-நு கெட்ட வார்த்தையால திட்டினாலும் நாங்க அத்துமீருவோம் ......பக்கத்து தோட்டத்து கொய்யாவ பறிப்போம் ...

  பதிலளிநீக்கு
 18. "நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை" தான் நியாபகம் வருது.

  சரி விஷயத்துக்கு வாங்க.. நான் கவிதை எழுதுனது தப்பா? அல்லது என் கவிதைக்குப் பின்னூட்டம் இட்டாங்களே.. அது தப்பா?

  "தனி காட்டு ராஜா அவர்கள் முதலில் ப்ளாக் -கில் கவிதை என்ற பெயரில் கிறுக்கி கொண்டு இருந்தார்" னு நீங்களே சொல்லிடீங்க.. அது கவிதை இல்ல.. கிறுக்கல்னு. அப்புறம் ஏன் பின்னூட்டம் வரலன்னு கவலைப் படுறீங்க?

  உங்களோட எல்லாப் பதிவுகளையும் (தனி காட்டு ராஜா மற்றும் யுக கோபிகா முழுவதும்) நான் படித்திருக்கிறேன். நிறைய ரசித்திருக்கிறேன். நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. பெண்ணினம் மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம்?

  சரி விடுங்க..

  நீங்க செஞ்சிருக்கிறத நினச்சு எனக்கு இன்னும் சிரிப்பு தான் வருது.

  பி.கு.: //ஒரு பெண் அவர்கள் மூன்று வரியில் 'முரண்' என்று கவிதை எழுதி இருந்தார்கள் [தம்பி ....அவுங்க கவிதை நல்லா இருந்திருக்கும் என்று சொல்லுபவர்கள் கடத்தி வரப்பட்டு ...ஒரு நாள் முழுவதும் T.V இல் விளம்பரம் மட்டும் பார்க்குமாறு செய்து சொன்னதை வாபஸ் பெருமாறு வற்புறுத்த படுவர் .............எனக்கு தமிழ் -ல புடிக்காத வார்த்தை உண்மை.....]
  அட.... அதற்கு 20 பின்னுட்டம்......//
  பத்து பேர் பின்னூட்டம் எழுதுனாங்கனா, நான் பத்து நன்றி சொல்லியிருப்பேன். அது தான் 20 பின்னூட்டங்கள். அவளோ தான். ஆள விடுங்க சாமி..

  பதிலளிநீக்கு
 19. //சரி விஷயத்துக்கு வாங்க.. நான் கவிதை எழுதுனது தப்பா? அல்லது என் கவிதைக்குப் பின்னூட்டம் இட்டாங்களே.. அது தப்பா?//

  நான் தப்பு-ன்னு சொல்லவே இல்லை-ங்களே ராதை...

  //"தனி காட்டு ராஜா அவர்கள் முதலில் ப்ளாக் -கில் கவிதை என்ற பெயரில் கிறுக்கி கொண்டு இருந்தார்" னு நீங்களே சொல்லிடீங்க.. அது கவிதை இல்ல.. கிறுக்கல்னு. அப்புறம் ஏன் பின்னூட்டம் வரலன்னு கவலைப் படுறீங்க?//

  பார்த்திபன் கூட "கிறுக்கல்கள்" -நு பேர்ல ஒரு கவிதை புத்தகமே வெளியிட்டு இருக்கறார் ....
  "அது கவிதை இல்ல.. கிறுக்கல்" கிடையாதுங்க... " கவிதை என்ற பெயரில் என் கிறுக்கல்கள்"-ங்க... ....[எப்படியோ சமாளிச்சாச்சு ..இப்படி எல்லாம் கேள்வி கேட்டா ....நான் அழுதுடுவேன் .....]

  //பெண்ணினம் மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம்?//

  அட ...வன்மம் எல்லாம் ஒன்னும் இல்லைங்க....நான் என் அம்மாவை கூட கிண்டல் செய்வது உண்டு ....கோபம் வந்தால் திட்ட கூட செய்வது உண்டு ........அதற்காக என் அம்மாவின் மேல் எனக்கு வன்மம் என்று அர்த்தங்களா ??
  எனக்கு பிடித்தமானவர்களை தான் நான் கிண்டல் ,நையாண்டி செய்கிறேன் .....ஆனால் அது அவர்களின் ஈகோ -வை
  hurt -செய்து விடுவதால் தப்பாக தோன்றுகிறது .....

  //நீங்க செஞ்சிருக்கிறத நினச்சு எனக்கு இன்னும் சிரிப்பு தான் வருது.//

  நானும் கூட சிரிப்பு -க்காக தான் இந்த மாதிரி செய்தேன் .....நீங்க என்ன நான் எதோ சீரியசா பதிவு போட்டு
  இருக்காணு நெனச்சிடீங்களா....அய்யோ... அய்யோ...

  பதிலளிநீக்கு
 20. //நானும் கூட சிரிப்பு -க்காக தான் இந்த மாதிரி செய்தேன் .....நீங்க என்ன நான் எதோ சீரியசா பதிவு போட்டு
  இருக்காணு நெனச்சிடீங்களா....அய்யோ... அய்யோ... //

  என்னமா சமாளிக்குது பயபுள்ள...

  பதிலளிநீக்கு
 21. //என்னமா சமாளிக்குது பயபுள்ள...//

  ஆஹா.....நீங்க எங்க இந்த பக்கம் ...
  தம்பி -க்கு ஆதரவு தருவீங்கன்னு உங்களை நம்புனா .....யாராச்சும் அடிச்சா "கையால அடிக்காதீங்க ,கால use
  பன்னுங்க-னு" சொல்லுவீங்க போல இருக்கே.....

  பதிலளிநீக்கு
 22. நல்ல பதிவு......வாழ்த்துகள் ராஜா...என்றும் நீங்கள் எங்கள் ராஜா...!

  பதிலளிநீக்கு
 23. //என்றும் நீங்கள் எங்கள் ராஜா...!//
  தல ....என்னை திட்டும் போது கூட நான் கொஞ்சமா தான் கவலை படுவேன் ...
  இப்படி எல்லாம் பாராட்டாதீங்க ....எனக்கு கூச்சமாக உள்ளது .....

  AnyWay,தங்கள் பாராட்டுக்கு நன்றி தல .....

  பதிலளிநீக்கு
 24. தல ,அடுத்த பதிவு ஓஷோவின் சிந்தனையை ஒட்டி தான் ...
  விரைவில் உங்கள் அபிமான வலைப் பதிவில்...முன் பதிவு இலவசம் .....

  பதிலளிநீக்கு
 25. அடப் பாவீங்களா. எது ஒரிஜினல் எது டூப்லிகேட்னே விளங்கல. எல்லாம் மாயை.

  பதிலளிநீக்கு
 26. //எல்லாம் மாயை. //

  ஆமாம் ...நமிதாவை தவிர ....

  பதிலளிநீக்கு