செவ்வாய், 14 செப்டம்பர், 2010

ராதா கிருஷ்ணா காதல்...


















இந்தப் பதிவு கொஞ்சம் வள வள என்று இருக்கும்...பொறுமை இருந்தால் படித்து பார்க்கவும். கொஞ்சம் சீரியசான காமடி பதிவு,நம் வாழ்க்கையை போலவே.பதிவு கோர்வையாக இருக்காது.


மகாபாரதம் புராணகதை...கிருஷ்ணன் என்ற கதா பாத்திரம் என்பதெல்லாம் பொய்...  என்ற நினைப்பிற்கு அப்பாற்பட்டு நான்   புராணகதையை மையப்படுத்தாமல்  உயிரை மையப்படுத்தி எழுதுகிறேன்.மதத்தை  மையமாக  வைத்து இதை  நான் எழுதவில்லை.எனவே மதம் சம்பந்தபட்ட  விவாதத்தை எழுப்பாமல் இருந்தால் நல்லது. விவாதத்தை எழுப்பினால் ரொம்ப நல்லது. இவை அனைத்தும் என் சுய  புரிதல்(புராணம்) மட்டுமே மற்றும் ஓஷோ வின் கருத்துகளை சார்ந்தும் என்னுடைய 12 வயது  அறிவிற்கு தகுந்தவாறும்   இருக்கும்.
   

கிருஷ்ணன் ஒரு சிவ ஞான ராஜ யோகி.[அப்படி என்றால் என்ன என்று தெரிய வில்லையா?].கிருஷ்ணன் சிறு வயதில் இருந்தே சிவ பக்தன் கூட.

ஒரு காலத்தில் ஒரு மனிதன் இருந்தான்.அவன் வாழ்கையின் நிலைய்ற்ற தன்மையை உணர்ந்தான்.அவன் தன் சுய முயற்சியால் போராடி யோக கலை மூலமாக ஞானோதயம் பெறுகிறான்.அவன் தான் சிவன்.சிவன் ஒரு ராஜ யோகி .அவன் தன்னுடைய சிஷ்யர்கள் ஏழு பேருக்கு தீக்ஷை தருகிறான்.அவர்களும் தன் சுய முயற்சியால்  ஞானோதயம் பெறுகின்றனர்.இவ்வாறு தான் யோக கலை பரவுகிறது.எல்லா   யோகிகளுக்கும்  சிவன் தான் குரு.[யோகி என்ற வார்த்தையை கேட்டவுடன் நித்தியானந்தா ஞாபகம் நமக்கு வந்தால் அது நாம் வாழும் காலத்தின் துரதிஷ்டம்.......] பதஞ்சலி  யோக சூத்திரத்தில் கடவுள் பற்றி எங்கேயும்  கூறப்படவில்லை.அதில் மனிதன் -யோகம் பற்றி மட்டுமே கூறப்படுகிறது. பதஞ்சலி  யோக சூத்திரத்தை நான் அறியவில்லை .அதன் சாராம்சம் அறிவேன்.
இந்த பிரபஞ்சத்திற்கு கடவுள் என்று யாரும் இல்லை.இந்த பிரபஞ்சத்திற்கு  மையம் என்று எதுவும் இல்லை. அப்படி மையம் என்று எடுத்து கொண்டால் ஒவ்வொரு அணுவும் மையம் தான்.
சிவன் நம்மை  போலவே பிறந்தான்.ஆனால்  அவனின் தேடல் உயிர் தன்மையின் உச்சதிற்கு அவனை எடுத்து சென்றது.அடிப்படை உண்மை இவ்வாறு தான் இருந்திருக்க  வேண்டும்.

 இங்கே யோகம் என்பது எல்லாவற்றையும்  இணைக்கும் முயற்சி .உதாரணத்துக்கு  அம்மா தன் குழந்தை மீது உள்ள அன்பின் மூலம் தானும் தன் மகனும் ஓன்று என்பது போலவே உணர்வாள். அன்னை தெரசா போன்றவர்கள் தன்னை தன் அன்பின் மூலம் பல உயிர்களுடன் இணைத்து கொள்கிரார்கள்.

ஆத்திகர்கள் தன் கடவுள் கொள்கை  மூலம்  ஒரு குறிப்பிட்ட குழுவுடன் இணைந்து கொண்டு மற்றவற்றில் இருந்து பிரிகிறார்கள்.இவர்கள்   யோகத்திற்கு  எதிரானவர்கள் .
நாத்திகர்களும்  தன் கொள்கை மூலம்  ஒரு குறிப்பிட்ட குழுவுடன் இணைந்து கொண்டு மற்றவற்றில் இருந்து பிரிகிறார்கள்.இவர்களும் யோகத்திற்கு  எதிரானவர்கள்.
ஆத்திகர்கள் மூடத்தனம் அதிகம் கொண்டவர்களாகவும் ..நாத்திகர்கள் வெறுப்புணர்வு அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பதை பார்க்கலாம்.
அன்பு,புரிதல் அதிகம் உள்ளவர்கள் யோகதன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்  என்பது என் புரிதல்.

பின் கடவுள் என்பது எவ்வாறு உருவானது.?
சுய சிந்தனை ,தேடல் அற்ற  சின்ன பசங்க சிவனுக்கு பக்க வாத்தியம் ஊத ஆரம்பித்து விட்டனர்.இவர்கள் ஆத்திகர்கள்.
சுய சிந்தனை ,தேடல் அற்ற வேறு வகையான  சின்ன பசங்க   சிவனையும் ,சிவனுக்கு  பக்க வாத்தியம் ஊதுபவர்களை தீட்டி தீர்க்க ஆரம்பித்தனர்.கடவுளை காட்டு,உப்புமாவை  காட்டு என்று விவாதம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.இவர்கள் நாத்திகர்கள்.
இந்த இரு வகையான சின்ன பசங்க  ஒரு போதும் உயிர் தன்மையின் உச்சத்தை தொடுவதில்லை.

சிவன் , கிருஷ்ணன் இருவரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்று நான் பார்க்கவில்லை.அவர்கள் இருவரும் இந்திய நாட்டில் பிறந்த அதி முக்கியமான யோகிகள்.
சிவன் முதல் யோகி. கிருஷ்ணன் சிவ வம்சத்தில் வந்த மிக முக்கியமான யோகி.
அவர்கள் இருவருமே சமுகத்தால் கடவுளாக உயர்த்த பட்டனர்.

 இந்த பிரபஞ்சத்தில் யாரையும் நான்  அவதார புருஷனாகவோ....அண்டர்வேர் புருஷனாகவோ  நினைக்கவில்லை.
ஆனால் இந்திய நாட்டில் சிவன், கிருஷ்ணன் இருவரும் குறிபிடதக்கவர்கள் . .எந்த காலத்திலும் நான் சிவனுக்கு மட்டுமே தலை வணங்குவேன்.[இருந்துட்டுப் போ ...இப்ப அதுக்கு என்ன ?].சிவனே என் குரு.[ம்...இது சிவனுக்கு தெரியுமா?]

எவ்வளவு பெரிய மகான் என்றாலும் என்னை பொறுத்த வரை மாக்கானே, ஞானோதயம் அடையாதவரை. [இதை நான் ஈகோ- வால் சொல்ல வில்லை .என் உயிரில்  இருந்து சொல்லுகிறேன்."நான் யாருடைய    ஈகோ-வுக்கும் தலை வணங்க மாட்டேன் .ஆனால் ஒவ்வொரு உயிரையும் உயிராக பார்க்கிறேன்" என்ற அர்த்தத்தில் சொல்ல வருகிறேன் ]

சரி இனி கதையின் நாயகி-நாயகன்  ராதா-கிருஷ்ணன் இருவருக்கு வருவோம்.
கிருஷ்ணனை  ஆண்மையின் உச்சம் என்று சொல்லலாம் .ராதை-யை  பெண்மையின் உச்சம் என்று சொல்லாம்.இயல்பாகவே  கிருஷ்ணனும் ராதை-யும்  காதலில் விழுகின்றனர் . தங்கள் உயிரின் முழுமை தன்மையை  பரி பூரணமாக   உணர்கின்றனர்.
அங்கே  கிருஷ்ணன்   என்ற ஆண் அடையாளமும் ராதை  என்ற பெண் அடையாளமும் முழுமை(சிவம்) யில்  கரைந்து விடுகிறது.  கிருஷ்ணன்  ராதையிடம் பிருந்தாவனத்தில்   ராஜ லீலா-வின் போது  உணர்ந்த முழுமையை தன்னுடைய பனிரெண்டாவது   வயதில் கோவர்த்தன மலை மீது பரிபூரனமாக பெறுகிறான் .இதன் பெயர் தான் தன்னை உணர்தல்.ஞானோதயம்.
[இதெல்லாம் உனக்கு எப்படி தெரியுமா ?-கோவை வட்ட செயலாளர் வண்டு முருகன் என்னிடம் சொன்னார் ]

கிருஷ்ணன் ஒரு காமுகன்,etc என்று ஒரு சிறு பயல் [என்னை விட ] வோர்ட் பிரஸ் தளத்தில் எழுதி இருந்ததை  படித்தேன்.
அவன் கோபியர்களின் ஆடைகளை எடுத்து  ஒளித்து வைத்து கொள்வானாம் .அதனால் காமுகன் என்று அந்த சிறுவர் சொல்லி இருந்தார்.
  கிருஷ்ணன் ரொம்ப ரசனை  உடையவன் .பெண்களுக்கு அவன் மேல் கோவம் இருந்து இருந்தால் அவனை அங்கேயே  அடித்து துவைத்து இருப்பார்கள்.அவனும் அடுத்த முறை அது போல் விளையாடி இருக்க   மாட்டான் .
அவன் தான் அவ்வாரு செய்வான் என்று தெரியுமே.ஏன் கோபியர்கள் ஆடைகளை குள கரையில் போட்டு செல்ல வேண்டும்.? கோபியர்கள் கிருஷ்ணனின் விளையாட்டை விரும்பி இருக்க வேண்டும்.
கிருஷ்ணனோ தன் சிறு வயதில் தான் அவ்வாரு செய்தான்.
ஒவ்வொரு வயதிலும் வெவ்வேறு  விளையாட்டு(வில்லன்களை கொள்ளுதல், நிறைய கல்யாணம் , குருசேத்தரம்  போர்,பகவத் கீதை etc ] செய்தான் .அவன் வெறும் காமுகனாக மட்டும் இருந்தால் எப்படி இத்தனை விளையாட்டுகளை செய்ய முடியும்.

நிர்வாணத்தின் தன்மை பற்றி அவன் வெகுவாக உணர்ந்து இருந்தான் .அதனால் தான் அவன்  பாஞ்சாலி துகிலுரிய  பட்ட போது உதவுகிறான் .[அப்போதே சுடிதார்,etc கண்டுபிடித்து இருந்தால் ...பாரத போரே வந்து  இருக்காது .பகவத் கீதை வந்து இருக்காது...நீங்களும் இந்த மொக்கை பதிவை படிக்க வேண்டி இருந்து இருக்காது..ஒரு வேலை இதன்  பெயர் தான் விதியோ ?]
 
கிருஷ்ணனை பெண்கள் மட்டும் இல்லை அனைத்து தரப்பினரும் [கொள்கை  வாதி என்ற உயிர்  கொலை செய்யும் சிறு பயல்களை தவிர ] விரும்பினர்.
கிருஷ்ணன் ஈகோ  அட்றவன்.அவனால் முழுமையாக எல்லோரிடமும் இருக்க முடிந்தது . நாம் தான் அப்படி இல்லயே. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மதிப்பீடு வைத்து கொண்டு அலைகிறோம்.

கிருஷ்ணன் முழுமையானவன்.என்றும் அவன் காதலில் இருந்தான்.[நம் தமிழ் சினிமாவில்  காட்டப்படும் மொக்கை காதலுக்கும்  கிருஷ்ணனின் காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .] 
ராதை முழுமையானவள்.
கிருஷ்ணன் ராதை -யை  தன்னுடைய 12  வயதில் பிரிந்து செல்கிறான்.ராஜ லீலா -வின் போது ராதை கிருஷ்ண-னின் புல்லாங்குழலை  வாசித்தபடி ஆழ்ந்த நடனத்தில் இருக்கிறாள்.அப்போது அவளை விட்டு பிரிந்து செல்கிறான்.[இதே தமிழ் சினிமாவாக இருந்தால் இந்நேரம் ஒரு ஒப்பாரி சாங் போட்டு விடுவார்கள்]  அதன் பின் அவளை பார்பதற்கு ஒரு முறை கூட அவன் வரவில்லை.அதன் பின்  ஒரு முறை கூட புல்லாங்குழலை  கிருஷ்ணன் வாசிக்கவே இல்லை .[நீ என்ன பின்னாடி இருந்து பார்த்தாயா ?]   
ராதை -யும் கிருஷ்ணனை தேடி செல்ல வில்லை.வேறு ஒருவரை மணந்து கொண்டாள்.[இங்கே தான் நெறைய கொள்கை வாத சிறு பயல்கள்   ராதையை ஒழுக்கமற்றவள் என்று திட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.தினம் தினம் எத்தனையோ பேர்கிட்ட ஏத்து வாங்கற பயலுக  இப்படி தானே திட்டி தீர்த்துக்க முடியும்.]
கிருஷ்ணன் -ராதையின் காதல் வடிவம் கடந்து இருந்தது.
கிருஷ்ணனை பல மணம் செய்து கொண்டவன் என்று யேசுவோர் பலர். [ அமையற ஒன்னும் டார்சர் கேஸ் -சா இருந்தா  வேற என்ன பாராட்டவா முடியும் ?]

கிருஷ்ணனால் பெண்மையை  வடிவம் கடந்து உணர முடிந்தது.அதனால்  எல்லா பெண்களிடமும் காதலோடு வாழ முடிந்தது.

கணவன் மனைவி என்ற பெயரில் நாம் என்ன காதலா செய்கிறோம் .வியாபாரம் தானே செய்து கொண்டு இருக்கிறோம். முதலில் இந்த சாதி வெறி பிடித்த சிறு பயல்களை  எல்லாம் பிடித்து மாட்டு வண்டியில் ஏற்றி  ஒஸாமா பின்லேடனிடம் அனுப்பி வைக்க வேண்டும். கல்யாணத்தில் சாதி மட்டுமா வருகிறது,பணம்,பதவி ,வீடு,etc....இதன் அடிப்படையில் செய்யும் கல்யாணத்தில் காதல் எங்கே வரும்?ஒரு வேலை மனைவி அருகில் இல்லாத நேரத்தில் தான் காதலே வரும் என்று நெனைக்கிறேன்.
 [இதெல்லாம் தனி காட்டு ராஜாவுக்கு நடக்காதுனு  நெனைக்கிறேன் ...ஆனால்  நடந்துருமோனு பயமா இருக்குது...USA -வுல பொறந்து இருக்கனும்.....தெரியாத்தனமா போயும்போயும் ஈரோடு மாதிரி ஒரு மொக்கை ஊருலயா  பிறக்கணும் ?பெங்களூர் ok.சென்னை ஈரோடு மாதிரி மொக்கை யான ஊர். சமீபத்தில் பீச் -ல கூட இந்த  காவல் துறை நண்பர்கள் தொல்லை சாஸ்தீயாம் ..வருங்காலத்தில் Living together லைப் தான் சக்கை போடு போடும் என நெனைக்கிறேன்.இதற்கு நான்  முழு ஆதரவு   தருகிறேன்.]


ராமன் ஒரு தட்டையான One dimensional மனிதன்.பாதுகாப்பான வியாபார சிந்தனை அதிகம் உள்ள பெண்கள் ராமன் போன்ற ஆணை விரும்புவர்.
கிருஷ்ணன் Multi dimensional மனிதன்.காதல் உணர்வு நிரம்பிய பெண்கள் கிருஷ்ணன் போன்ற ஆணை விரும்புவர்.
நான் அறிந்த வரையில் ஆண்களில் 99% பேர் ஆழ் மனதில் கிருஷ்ணன்.மேல் மனதில்(சமுகத்தில்)  ராமன்.

உதாரணதுக்கு ஆண்களில் உள்ள கிருஷ்ணன் % [என் கண்டுபிடிப்பு .....ஹி..ஹி.. ]

ரஜினி  98 %
கமல்   97 %
அஜித்   99 %
தனி காட்டு ராஜா 99.99% [ 100 % போட்டுக்கிட்டு தற்பெருமை பேசிட்டு திரியறவன்  நான் கிடையாது..அதுக்கு வேற ஆள பாருங்க ....] 
விஜய் 80 %
வெண்ணிற ஆடை மூர்த்தி 5 %

ராம ராஜன்   -மைனஸ் 20 %
விஜய  டி.ராஜேந்திரன் - மைனஸ் 90 % [என்னை பொறுத்த வரையில்] .........ஆனால பெண்கள்  மத்தியில் 98 % [ தலைவரின்  தங்கச்சி சென்டிமெண்டில் மயங்காத பெண்களே கிடையாதாமே   தமிழ் நாட்டில் .........
அது என்ன இவரு ஹீரோயின தொடவே மாட்டாராமே .......எனக்கொரு  சந்தேகம் ...கேட்டா  கோவிச்சுக்க கூடாது.....சிம்பு -வ பத்திதான் .....]  
ஒவ்வொரு பெண்ணும் ராதை தான் .என்ன % தான் பெண்ணுக்கு பெண் மாறு படும். 

சீதை கூட ராதை போன்றவள் தான் காதல் உணர்வில் .ராமன் மேல் தான் எனக்கு சந்தேகமாக உள்ளது.அவன்  ஆழ் மனதில் சந்தேகப் பேர்வழி -யாக  இருந்திருப்பான் என்று தோன்றுகிறது. 

பெண்களில் உள்ள ராதை (அன்பு உணர்வு,பெண்மை ,etc) % கண்டுபிடிப்பு ....[ஹி ..ஹி ..இதுவும் என் கண்டு பிடிப்பு தான் ]

 ஒவ்வொருவருக்கும் அவர்கள் அம்மா -100 % [அன்புணர்வில் ராதை ...]

கீழ்க்கண்டவர்களில்  முதல்  ஆறு பேர்    என்னிடம் காதலை  சொன்னார்கள் ...அவர்கள் என்னிடம் நடந்து கொண்ட விதத்தை வைத்து என் கண்டு பிடிப்பு....

என் அருமை பெருமை பற்றி யார் சொன்னார்களோ  தெரியவில்லை ?தினம் தினம் போன் மேல போன் ..

[கீழ் கண்டவர்கள்  அழகில் மட்டும்  ராதைகள்....  ]

சுனைனா [99 .99 %]
பாவனா [99 .98 %]
அனுஷ்கா[99 .97%]
அசின் [99 .96 %]
தமன்னா[99 .95 %]
நமீதா [ 99 % ]

கோவை சரளா [50 % ]
சொர்ணாக்கா -மைனஸ் 75 %
     

என்னை பொறுத்தவரை ஒழுக்கம்  உயிரில் இருந்து வர வேண்டும் .பிற உயிர்   சார்ந்து இருக்க  வேண்டும். செத்து போன  கொள்கைகளில் இருந்து வர கூடாது.சில சமயம் புரிதல் அதிகம் உள்ளவனை கொள்கை வாதி என  நினைத்து கொள்கிறார்கள்.[தனி காட்டு ராஜாவுக்கும் கொள்கைக்கும் உள்ள சம்பந்தம் சூப்பர் ஸ்டார்க்கும் டான்ஸ்-க்கும்  உள்ள சம்பந்தம் போல வெகு தூரம் .]

காதல் என்பது வடிவம் கடந்தது.காதல்  ராதை-கிருஷ்ணன் போல முழுமை பெற்றது.
என்னை கேட்டால்[அது தான் யாருமே கேக்கறதில்லையே] ...கிருஷ்ண ஜெயந்தியை காதலர் தினமாக கொண்டாடலாம் என்று சொல்லுவேன்.
எதோ இளவயதில் தான் காதல் வரும் என்பது போல ஒரு மாயை தற்போது நிலவி வருகிறது.
அமீபா  முதல்   டினோசார் வரை எல்லா உயிருக்கும் எல்லா வயதிலும் காதல் நிலவும் என்று தோன்றுகிறது.உங்களுக்கு என்ன தோன்றுகிறது.[ வேற வேலை நெறைய இருக்கு என்றா ?] 

ஓஷோவின் -கிருஷ்ணா-கிருஷ்ணா - (ஐந்து பாகங்கள்)  புத்தகங்களை  படித்து பாருங்கள் .நன்றாக இருக்கும்....

 
 

        

16 கருத்துகள்:

  1. Office-ல அரைத் தூக்கத்தில் உட்கார்ந்து ஓஷோ புக்க படிச்சீங்களோ??

    பதிலளிநீக்கு
  2. // Office-ல அரைத் தூக்கத்தில் உட்கார்ந்து ஓஷோ புக்க படிச்சீங்களோ?? //


    இந்த அவமானம் உனக்கு தேவையா தனி காட்டு ராஜா?


    Office-ல இல்லைங்க .....ஒவ்வொரு முறையும் ஈரோடுக்கு வந்துட்டு சென்னை போகும் போது மதியம் கோவை எக்ஸ்பிரஸ் -ல எக்ஸ்பிரஸ் வேகத்துல்ல நெறைய ஓஷோ புத்தகம் படிச்சிருக்கேன்...

    ட்ரைன் -ல நான் புத்தகம் படிகரத பாக்குற நெறைய பேர் எதோ அரை லூச பாக்குற மாதிரி ஒரு பார்வை பார்பாங்க .........நான் யாரு ..?நானும் பதிலுக்கு அவுங்கள முழு லூசு கணக்கா ஒரு பார்வை பார்த்துட்டு படிப்ப தொடர ஆரம்பிச்சிடுவேன் ...

    இதில் நெறைய என்னுடைய புரிதல் தான்.........ஓஷோவின் சிந்தனைகள் மிக மிக குறைவு .....

    பதிலளிநீக்கு
  3. நல்லாயிருக்குங்க

    தத்துவார்த்தமா இருக்கும் பகுதி ரொம்ப அருமை

    காமடியாக இருக்கும் பகுதி இன்னும் அருமை

    இரண்டும் தனிதனியாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இந்து பின்னனி கட்சி சார்பில் இந்த பதிவை முழுமையாக கண்டிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. //இந்து பின்னனி கட்சி சார்பில் இந்த பதிவை முழுமையாக கண்டிக்கிறேன். //

    சரவணா .....
    நானும் கூட தனி காட்டு ராஜா சைடு அணி சார்பில் இந்த பதிவில் முதல் இரண்டு வார்த்தைகளை கண்டிக்கிறேன்....

    நாத்திகம் பேசுனா ஆத்திகர்கள் கண்டிப்பார்கள் .....ஆத்திகம் பேசுனா நாத்திகர்கள் கண்டிப்பார்கள் ....
    நான் என்ன தான் பேசுறேனு தெரியாததால...என்னை யாருமே கண்டிக்க வில்லை.....
    எப்படியோ நீங்களாவது கண்டிச்சீங்களே.......இப்பதான் நாத்திகம்,ஆத்திகம் இரண்டயும் திட்டி எழுதுனதுக்கு கொஞ்சம் சந்தோசமா இருக்கு......

    பதிலளிநீக்கு
  6. //நான் என்ன தான் பேசுறேனு தெரியாததால...//

    உண்மையிலேயே, நீங்க என்ன பேசுறீங்கன்னு (எழுதிர்க்கீங்கன்னு) தெரியலயே ராசா . . .

    என்னைக்காவது ஒரு நாலு புரியாமலா போயிரும்,

    எனிவே, இந்த மாதிரி விஷயத்த விவாதிக்கிறதுக்கு தில்லு வேணும் . . . அந்த வகையில ஹாட்ஸ் ஹாப் . . .

    பதிலளிநீக்கு
  7. //உண்மையிலேயே, நீங்க என்ன பேசுறீங்கன்னு (எழுதிர்க்கீங்கன்னு) தெரியலயே ராசா . . //

    12 வயசு பையன் நானே இவ்வளவு வெவராம எழுதி இருக்கேன்.....21 வயசு பையன் நீங்க புரியலன்னு சொல்லறது நம்புற மாதிரி இல்லையே ..
    உண்மைய சொல்லுங்க நண்பா ....கீழ நான் சொல்லி இருக்கர ஒரு விஷயம் புரிஞ்சாவே போதுமே நண்பா....

    ///////சுனைனா [99 .99 %]
    பாவனா [99 .98 %]
    அனுஷ்கா[99 .97%]
    அசின் [99 .96 %]
    தமன்னா[99 .95 %]
    நமீதா [ 99 % ]

    கோவை சரளா [50 % ]
    சொர்ணாக்கா -மைனஸ் 75 % ///////

    எனி வே ....Tank U நண்பா ......

    பதிலளிநீக்கு
  8. சுனைனா - 30.28.30%
    அனுஷ்கா - 32.30.32%
    தமன்னா - 30.26.30%

    ஒருவேளை இப்படி எழுதி இருந்தால் புரிந்திருக்குமோ???

    பதிலளிநீக்கு
  9. பதிவு நல்ல இருக்கு வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  10. //பதிவு நல்ல இருக்கு வாழ்த்துகள்.... //

    நன்றி தல ...

    தல ..உங்க பதிவு ஒவ்வொன்னும் கலக்கல் ...எனக்கு ரொம்பவே பிடிச்சு இருக்கு.....

    பதிலளிநீக்கு
  11. //சுனைனா - 30.28.30%
    அனுஷ்கா - 32.30.32%
    தமன்னா - 30.26.30%//

    நமீதா % எவ்வளவு சரவணா ?

    இன்னைக்கு வீட்ட விட்டு ஸ்கூல் -க்கு கெளம்புறப்பவே எங்க அம்மா சொல்லுச்சு ...."டே..செல்லம் ...நல்ல பசங்களோட மட்டும் பழகுடா.....என்று "

    இப்படி பேசுனா .....இனிமே உன் கூட டூ .....

    பதிலளிநீக்கு
  12. ///////சுனைனா [99 .99 %]
    பாவனா [99 .98 %]
    அனுஷ்கா[99 .97%]
    அசின் [99 .96 %]
    தமன்னா[99 .95 %]
    நமீதா [ 99 % ]

    கோவை சரளா [50 % ]
    சொர்ணாக்கா -மைனஸ் 75 % ///////

    இவ்வளவு தான் மேட்டரா . . . அட, தெரியாம போச்சே, சரி அதுக்கு ஏன், இம்புட்டு பெரிய பதிவு . . .

    இத ரொம்ப எளிமையா சொல்லிர்க்கலாமே ?!!!

    பதிலளிநீக்கு
  13. //சுவாரசியமா இருந்தது. //

    நன்றி தல ...

    பதிலளிநீக்கு
  14. //இவ்வளவு தான் மேட்டரா . . . அட, தெரியாம போச்சே, சரி அதுக்கு ஏன், இம்புட்டு பெரிய பதிவு . . .

    இத ரொம்ப எளிமையா சொல்லிர்க்கலாமே ?!!! ///

    நண்பா ..இப்ப தமிழ் படத்தையே எடுத்து கொள்ளுங்கள் ....
    நமக்கே தெரியும் ....ஹீரோ ஹீரோயின் லவ் பண்ணுவார்கள் ...இடையில் பிரச்சினை வரும் ....
    எப்படியும் கடைசியில் சேர்ந்து விடுவார்கள் ......2 நிமிட கதையை 2 மணி நேரதிற்கு இழுப்பார்கள்...
    இடையில் எத்தனை build-up நம்ம ஹீரோஸ் கொடுப்பாணுக.....
    இதெல்லாம் ஒரு டெக்னிக் நண்பா ....

    பதிலளிநீக்கு