செவ்வாய், 21 செப்டம்பர், 2010

உயிரியல் WEDS காதலியல் ...
















உன் கண்களிலோ உயிரை வழிய விடுகிறாய் ..
அதை உள்வாங்கும் என் கண்களோ..
உயிரை காதலாக்கி இதயத்தில் நிரப்புகிறது ..
என் இதயமோ ஒவ்வொரு சுவாசத்திற்கும்
நம் காதலை சொல்லி சொல்லியே துடிக்கிறது...  


உயிர்களுக்கு உயிர் தரும் உன் கண்களிலா ?
கனிகளுக்கு சுவை தரும் உன் உதட்டிலா ?
பூக்களுக்கு வாசம் தரும் உன் கூந்தலிலா ?
நிலவுக்கு வெளிச்சம் தரும் உன் புன்னகையிலா ?
எங்கே தான் நம் காதலை வைத்து உள்ளாய் என்று
கேட்டால் ..   உயிரில் என்கிறாய் ....
சரி..உன் உயிரை எங்கே வைத்து உள்ளாய் என்று
கேட்டால்..  அது தான் உன் உயிரில்  கலந்து விட்டதே என்கிறாய் .....


என்னை விட்டுவிட்டு என் மனம்
உன் பின்னாலேயே  வருகிறதே ....
நான் சொன்னால் தான் கேட்க மாட்டேன்கிறது ...
நீ யாவது அடித்து விரட்ட கூடாதா என்று கேட்டால்..
நீ இல்லாத நேரங்களில் அது தானே என் துணை...
என் துணையை  நான் எப்படி விரட்ட முடியும் என்கிறாய் ....   



நீ நட்டு வளர்க்கும் மல்லிகை செடி ...
நீ நித்தம்  குளிக்கும் நீரோடை ...
நீ  தினம் தினம் வணங்கும் கடவுள் ..
அனைவருமே எனக்கு போட்டியாக
உன்னிடம் காதலை சொல்ல துடிக்கிறார்களாம்..!!
நீ என் காதலியா.. இல்லை..
காதல் என்பதே நீ தானோ ?   



வெக்கம் கலந்த உன் முத்தம்
என் காதல் ஞானத்திற்கான
திக்' ஷை' .....  


4 கருத்துகள்:

  1. இது காதல் காலம் போல!!!!!..

    "//அனைவருமே எனக்கு போட்டியாக
    உன்னிடம் காதலை சொல்ல துடிக்கிறார்களாம்..!!//""""

    சொந்த அனுபவமா பாஸ்???..

    கவிதை அருமை...கலக்குங்க தலைவா....

    பதிலளிநீக்கு
  2. //வெக்கம் கலந்த உன் முத்தம்
    என் காதல் ஞானத்திற்கான
    திக்' ஷை' .....

    // நீ யாவது அடித்து விரட்ட கூடாதா என்று கேட்டால்..
    நீ இல்லாத நேரங்களில் அது தானே என் துணை...
    என் துணையை நான் எப்படி விரட்ட முடியும் என்கிறாய் ...

    I liked these lines... good poetic feel... keepitup... Krish...

    பதிலளிநீக்கு
  3. //I liked these lines... good poetic feel... keepitup... Krish... //

    நன்றி பிரபா(கரன்:-)

    பதிலளிநீக்கு
  4. //சொந்த அனுபவமா பாஸ்???..//

    கொஞ்ச காலத்திற்கு முன்பு தபு சங்கர் கவிதைகளை வாசித்ததின் தாக்கம் சரவணா ....
    ஓஷோவின் தாக்கம் என் சிந்தனைகளில் (???) இருக்கும்....
    தபு சங்கர் -தாக்கம் என் கவிதைகளில்(!!!) இருக்கும்.....
    மற்றும் சில பல அனுபவங்கள் மற்றும் சில சூழ்நிலைகள் என் கவிதை உணர்வை தூண்டி விடும் சரவணா ....

    பதிலளிநீக்கு