வியாழன், 23 செப்டம்பர், 2010

உயிரியல் WEDS காதலியல் ...III


















நான் புதிதாக காட்டிய பூவை 
பார்த்து என்ன பூ என்று கேட்கிறாய்...
நானோ காதல் பூ என்கிறேன் ....
எங்கே பூத்தது என்று கேட்கிறாய்...
என்  இதயத்தில் என்கிறேன்  ....
எப்படி வளர்த்தாய் என்று கேட்கிறாய்...
நம் காதல் நினைவுகள் நீராய் ஊற்றி என்கிறேன் ....
இது காதல் பூவா இல்லை
காதுல பூவா என்று கேட்கிறாய்..
உன் கூந்தலில் சூடிப் பார் ....
அது சொல்லும் ..
"இது உன் காதலனின்  பூ என்று" என்கிறேன் .....

சிவனை பூவால் அர்ச்சனை செய்தால்
அது சிவ யோகத்தை தரும் என்பது
நெறைய பேருக்கு தெரியும் ...
நீ கூந்தலில்  சூடும் ஒவ்வொரு  பூவும்    
காதல் யோகத்தை பெறுவது எனக்கு மட்டுமே தெரியும் ...

என் காதல் நோய்க்கு
மயக்க மருந்து
உன் முத்தம் ...
நிரந்தர தீர்வு
நீ  என்னைக்  காதலித்து
கொண்டே இருப்பதுதான்...

உன் அருகில்  இருக்கும் 
ஒவ்வொரு ஷணமும்
நான் காதல்வாதி என்ற
பெயரில் உயிர் பெறுகிறேன்...
உன்னை பிரியும் ஒவ்வொரு ஷணமும்
எதார்த்தவாதி என்ற பெயரில்
வெற்று ஆசைகளில் உயிர் இழக்கிறேன்...

நீ பேசும் வார்த்தைகளுக்கிடையே
தொடர்ந்து வரும் மௌனம்
கூட நம் காதலையே  பேசுகிறது ..... 

17 கருத்துகள்:

  1. நல்ல அருமையான கவிதை பதிவு.......வாழ்த்துகள் தோழரே

    பதிலளிநீக்கு
  2. //நல்ல அருமையான கவிதை பதிவு.......வாழ்த்துகள் தோழரே //

    நன்றி தல ...[தோழரே என்று அழைத்து பழக்கமில்லை ...தல என்றே அழைக்கிறேன்... ]

    //கவிதை அருமை //

    நன்றி யாதவன்...

    பதிலளிநீக்கு
  3. ///...இது காதல் பூவா இல்லை
    காதுல பூவா என்று கேட்கிறாய்...///
    இரண்டும் ஒன்ற தானே சகோதரா..???
    சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
    ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
    http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

    பதிலளிநீக்கு
  4. கவிதை அருமை...
    உணர்வு பூர்வமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  5. காதலியலில் படித்து விரைவில் பட்டம் பெற வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  6. வந்தேன்... படித்தேன்.... கண்ணிர் வடித்தேன்... துடித்தேன்... கிளம்பிட்டேன் சாமிமிமி!!

    பதிலளிநீக்கு
  7. //...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!//

    துரதிஷ்ட வசமான ஒரு சம்பவம் தான் ....

    பதிலளிநீக்கு
  8. //கவிதை அருமை...
    உணர்வு பூர்வமாக இருக்கிறது...//

    நன்றி தல ...

    பதிலளிநீக்கு
  9. //காதலியலில் படித்து விரைவில் பட்டம் பெற வாழ்த்துகிறேன் //
    வாழ்த்துக்கு நன்றி நண்பா ....

    பதிலளிநீக்கு
  10. //நீங்கள் நடத்துங்க தல...

    :) //

    நன்றி சரவணா ...

    பதிலளிநீக்கு
  11. ////வந்தேன்... படித்தேன்.... கண்ணிர் வடித்தேன்... துடித்தேன்... கிளம்பிட்டேன் சாமிமிமி!!////

    அச்சச்சோ ......ஒரு TERROR -யோட மனசே துடித்து விட்டதா ......
    அப்புறம் ... தீப்பொறி திருமுகம் ....நெருப்பு நீல மேகம் எல்லாம் உங்க மாம மச்சான் உறவுகளா தல .....

    பதிலளிநீக்கு
  12. to be frank, பொதுவா காதல் கவிதை படிக்கவே கொஞ்சம் அலுப்பாத்தான் இருக்கு... இன்னும் ஒண்ணா அப்டீன்னு...

    //இது காதல் பூவா இல்லை
    காதுல பூவா என்று கேட்கிறாய்..//

    ரசிச்சேன்!

    பதிலளிநீக்கு
  13. //to be frank, பொதுவா காதல் கவிதை படிக்கவே கொஞ்சம் அலுப்பாத்தான் இருக்கு... இன்னும் ஒண்ணா அப்டீன்னு...//

    To be Nakkal,அஞ்சால் அலுப்பு மருந்து போட்டுட்டு படிங்க நண்பா ....இப்படி அலுத்துகிட்டா எப்படி நண்பா?
    அப்புறம் நாம எல்லாம் தானே தமிழ் இலக்கியத்த வளர்க்கணும் நண்பா ......
    இப்போது தமிழ் இலக்கியம் 8 அடி உள்ளது...நீங்க தமிழ் இலக்கியதொட தலை-ய பிடிச்சுகுங்க...நான் கால பிடிச்சுகிறேன்.....ரெண்டு பேரும் இழு இழு-னு இழுத்து ஒரு 10 அடிக்கு வளர்த்து விடுவோம் ...
    என்ன நண்பா ..நான் சரியா பேசுறனா...?

    பதிலளிநீக்கு
  14. //நீ பேசும் வார்த்தைகளுக்கிடையே
    தொடர்ந்து வரும் மௌனம்
    கூட நம் காதலையே பேசுகிறது ....//

    :)

    பதிலளிநீக்கு