வெள்ளி, 1 அக்டோபர், 2010

நான் கடல் ...நீ அலை ...


நித்தம் நித்தம் ஆர்ப்பரிப்பு ...
மோனத்தில் இருந்து தான் பிறந்தேன் ...
எங்கே இருந்து  தோன்றுகிறது இத்தனை ஆர்ப்பரிப்பு ..
பேரலையாய் எழுந்த என்னுளே ...
நித்தம் நித்தம்  எத்தனை எத்தனை சிற்றலைகள் ...

சந்தோஷ அலை ,துக்க அலை ...
காதல் அலை ,காம அலை ..
ஆசை அலை ,பொறாமை அலை.. 
நட்பு அலை ,எதிர்ப்பு  அலை.. 
பாச  அலை ,வெறுப்பு அலை... 

ல்லா வித ஆர்ப்பரிப்புக்கும்  கரையில்
மரணம் என்று உணர்ந்தபோது  நடுங்கினேன் ....
கரையில் நான் காணமல் தான் போய் விட்டேன் 
என நினைத்து இருந்தேன்....

ஒரு கணத்தில் ...

அலை என்ற ஒன்று கடலின் தோற்றமே என உணர்ந்தேன்...
அலை பிறக்கவும் இல்லை ...இறக்கவும் இல்லை ...
நித்தம் பல கோடி அலைகள் என்னுளே ....
கடல் நித்திய யவ்வனம்...அலை  கணநேர யவ்வனம்...
நான் கடல் ..மனமே நீ அலை ..அலை..அலை..

20 கருத்துகள்:

 1. //எல்லா வித ஆர்ப்பரிப்புக்கும் கரையில்மரணம் என்று உணர்ந்தபோது நடுங்கினேன் ...//

  சூப்பர்....

  உங்கள் கவிதை வாழ்வியல் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு.

  பதிலளிநீக்கு
 2. //சூப்பர்....

  உங்கள் கவிதை வாழ்வியல் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு.//

  நன்றி தல ...

  பதிலளிநீக்கு
 3. //அலை என்ற ஒன்று கடலின் தோற்றமே என உணர்ந்தேன்...
  அலை பிறக்கவும் இல்லை ...இறக்கவும் இல்லை ...
  நித்தம் பல கோடி அலைகள் என்னுளே ....
  கடல் நித்திய யவ்வனம்...அலை கணநேர யவ்வனம்...
  நான் கடல் ..மனமே நீ அலை ..அலை..அலை..
  //

  மிக அருமையாக பொழிந்திருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 4. //மிக அருமையாக பொழிந்திருக்கிறீர்கள் //

  நன்றி தல ...
  இதெல்லாம் ஓஷோ ,விவேகானந்தர் சொன்னது தான் தல ...

  பதிலளிநீக்கு
 5. கலக்கல் பதிவு....வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. என்ன அலைகளுக்கு தோற்றமேது, முடிவேது

  பதிலளிநீக்கு
 7. //கலக்கல் பதிவு....வாழ்த்துகள் //

  நன்றி தல...

  பதிலளிநீக்கு
 8. //என்ன அலைகளுக்கு தோற்றமேது, முடிவேது//
  சரி தான் நண்பா .....அலைகளுக்கு தோற்றமும் இல்லை ...முடிவும் இல்லை ....நம் மன எண்ண அலை போலவே ...
  நம்மால் அலையை கட்டுபடுத்த முடியாது ....தூக்கதில் எப்படி எண்ண அலை இல்லாமல் போகிறதோ அது போலவே நம் உணர்வை அலையை விடுத்தது கடல் நோக்கி திருப்புவது தான் இதன் சாராம்சம் ......

  பதிலளிநீக்கு
 9. //good one....!! //

  நன்றி Kousalya ....நான் எதிர்பாராத பின்னுட்டம்.....!!!

  பதிலளிநீக்கு
 10. நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள்.

  அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

  பதிலளிநீக்கு
 11. //எல்லா வித ஆர்ப்பரிப்புக்கும் கரையில்
  மரணம் என்று உணர்ந்தபோது நடுங்கினேன் ....
  கரையில் நான் காணமல் தான் போய் விட்டேன்
  என நினைத்து இருந்தேன்....//

  நல்லா கிளப்புற பீதிய...

  பதிலளிநீக்கு
 12. //நல்லா கிளப்புற பீதிய... //

  அண்ணா..... நீங்க தான் இதுக்கு எல்லாம் பயப்படுற ஆள் கிடையாதே ...
  கடல்ல யாராச்சும் நீச்சல் அடிச்சா ...அதை பார்த்த அடுத்த நிமிசமே கரையில அதுபோலவே நீச்சல் அடிச்சு காட்டுவீங்களே...
  நீங்க யாரு ....உங்க திறமை என்ன ...உங்களுக்கு போய் பீதியா..

  பதிலளிநீக்கு
 13. புதிய பதிவு எதுவும் காணோம் ஏன் என்னாச்சு....

  பதிலளிநீக்கு
 14. //புதிய பதிவு எதுவும் காணோம் ஏன் என்னாச்சு.... //

  மெதுவா புது பதிவு போடுவோம் தல .....

  பதிலளிநீக்கு
 15. அருமையானக் கவிதை... எங்கிருந்து சுட்டீங்க? எனக்கும் கொஞ்சம் லிங்க் கொடுத்து ஹெல்ப் பண்ணுங்க ;D

  பதிலளிநீக்கு
 16. //அருமையானக் கவிதை... எங்கிருந்து சுட்டீங்க? எனக்கும் கொஞ்சம் லிங்க் கொடுத்து ஹெல்ப் பண்ணுங்க ;D //

  நாங்க எல்லாம் கவரி மான் இனத்தை சேர்ந்தவங்க ........சுட்டு போட்டாலும் ஒரு கவிதையை சுட வேண்டும் என்று தோன்றாதுங்க ....
  எதோ போனா போகுதேனு என் அயராத உழைப்பு மற்றும் கடமைகளுக்கு மத்தியில் இலக்கிய சேவை செய்ய வந்தால் ஒரு மனுசன இப்படியா அவமானப்படுத்தறது ?

  பதிலளிநீக்கு