புதன், 13 அக்டோபர், 2010

என் சுவாசக் காற்றே ...



















உன் சுவாச காற்றை 
நான் சுவாசித்ததில் என்னுள்ளே
காதல் உணர்வுகள் தீ பற்ற தொடங்கின ...

அந்த காதல் தீ  என்
உயிரை   விழிக்கச்  செய்தது ...

தீ யின் ரௌத்ரம்  என் எண்ணங்களை எரித்து  
மனம் என்ற ஒன்றை சாம்பல் ஆக்கியது...

உன்  அணைப்பில்
என் உணர்வும் உன் உணர்வும் இரண்டற
கலந்த காதல்  ஈரத்தில் தீ  அணைந்தது....

நம் இருவரை சுற்றிலும்
காதல் கானம் இசைத்தது....

அந்த நாதம்  நான் நீ
நீ நான் என்று  உணரவைக்க....

பிரபஞ்சம் நான் ஆயிற்று ....

18 கருத்துகள்:

  1. நன்றி நாக ராஜா....
    நாக ராஜா ..உனக்கு அல்வா கொடுக்கறது ,அரசியல் தான் தெரியும் என்று நினைத்து இருந்தேன் ..
    கவிதையை ரசிக்கவும் தெரியும் போல இருக்கே.....

    பதிலளிநீக்கு
  2. காற்றிலிருந்து ஆற்றல் எழுந்து ஆற்றலுடன் கலந்து, நீர் வெளிப்பட்டு பிரபஞ்சம் பிறந்தது ...

    முதல் உயிர் தோன்றிய காற்றைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன் நண்பா . . .

    அதற்குள் டார்வின் வேறு ஏதோ ஒன்றைச் சொல்லிவிட்டார் ...

    உங்கள் கூற்று உண்மையானால், பிரபஞ்சத்தின் பிறப்பு அறிவோம்

    பதிலளிநீக்கு
  3. //காற்றிலிருந்து ஆற்றல் எழுந்து ஆற்றலுடன் கலந்து, நீர் வெளிப்பட்டு பிரபஞ்சம் பிறந்தது ...
    முதல் உயிர் தோன்றிய காற்றைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன் நண்பா . . .
    அதற்குள் டார்வின் வேறு ஏதோ ஒன்றைச் சொல்லிவிட்டார் ...
    உங்கள் கூற்று உண்மையானால், பிரபஞ்சத்தின் பிறப்பு அறிவோம் //

    நீங்க அறிவாளி நண்பா ..நான் சொல்ல வந்தத கண்டு பிடித்து விட்டிர்..
    இந்த கவிதை தந்தராயோகம்(காதலன்+காதலி=கடவுள்) பற்றி எழுதியது ..

    மூலாதரம் -ஆற்றல்
    சுவாதிஷ்டினம்- உயிர்
    மணிப்பூரகம்-மனம்
    அனாகதம் -காதல் உணர்வு
    விஷுத்தி -காதல் கானம்
    ஆக்ஞா -நீ நான் நான் நீ
    சகஸ்காரா -நீ பிரபஞ்சம்

    பதிலளிநீக்கு
  4. சூப்பர். ரொம்ப நல்ல கவிதை .... ! இதுபோல நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. நண்பரே, நேரமிருக்கும் பொழுது நீங்கள் சொன்ன விஷயங்களை பதிவிடுகின்றேன்

    பதிலளிநீக்கு
  6. //சூப்பர். ரொம்ப நல்ல கவிதை .... ! இதுபோல நிறைய எழுதுங்கள்.//

    எழுதிட்டா போச்சு .......
    நன்றி ஈரோட்டு தங்கம் ....

    பதிலளிநீக்கு
  7. //நண்பரே, நேரமிருக்கும் பொழுது நீங்கள் சொன்ன விஷயங்களை பதிவிடுகின்றேன் //

    நண்பேன்டா ............

    பதிலளிநீக்கு
  8. சகஸ்காரா -நீ பிரபஞ்சம்

    அது யாருப்பா சர்கஸ்காரன்!!!!!

    பதிலளிநீக்கு
  9. //அது யாருப்பா சர்கஸ்காரன்!!!!!//

    ஹி...ஹி ....

    சரவணா ,இந்த பிரபஞ்சம் தான் சர்கஸ்காரன்......
    கொஞ்ச நாளைக்கு முன்னாடி சுனாமி வித்தையை சர்கஸ்காரன் நடத்தி காட்டுனான்...ஞாபகம் இருக்கா ......
    இந்த மாதிரி வித்தையை சர்கஸ்காரன் வெவ்வேற இடத்துல நடத்தி கொண்டு தான் உள்ளான்......

    அப்புறம் எந்திரன் படத்துல நம்ம வில்லன் சிட்டி ரோபோ கிட்ட வசிகரன் மாட்டிக்கும் போது.......வில்லன் ரோபோ ஒரு நக்கல் டெலிவரி ஒன்னு கொடுப்பாரே ...."மே...மே..." -நு பலி ஆடு மாதிரி ...[நான் இந்த காட்சியை ரொம்ப ரசித்தேன் ...]
    அந்த மாதிரி தான் சர்கஸ்காரனோட வித்தைக்கு நாம் பலிகடா ஆகி விட்டால்......

    சரி ..சரி...சின்ன பையன் நீ ...நான் சொன்ன பூச்சாண்டி வித்தைக்கு எல்லாம் பயந்து விடாதே......

    பதிலளிநீக்கு
  10. //சரி ..சரி...சின்ன பையன் நீ ...நான் சொன்ன பூச்சாண்டி வித்தைக்கு எல்லாம் பயந்து விடாதே...... //

    ஒத்துக்றேன் நீ எழுதினது கவிததான். இத்தோட நிறுத்திக்குவோம்.

    பதிலளிநீக்கு
  11. //ஒத்துக்றேன் நீ எழுதினது கவிததான். இத்தோட நிறுத்திக்குவோம். //

    ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ....ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ
    முடியாது ...முடியவே முடியாது ....

    பதிலளிநீக்கு
  12. இதுவும் ஓஷோ புத்தகத்தின் வெளிப்பாடு தானோ? கலக்குறீங்களே.. கவிதை மன்னன்

    பதிலளிநீக்கு
  13. //இதுவும் ஓஷோ புத்தகத்தின் வெளிப்பாடு தானோ? கலக்குறீங்களே.. கவிதை மன்னன் //

    என்னது ...கவிதை மன்னனா???

    இப்படி சொன்னாதானே.....இதை படிக்கற ஆறு பேர் ...இவன் எழுதரதெல்லாம் கவிதை -னா ...அப்புறம் உண்மைலுமே கவிதை எழுதறவங்கள என்ன சொல்லறதுன்னு நெனைப்பாங்க...

    என்ன ஒரு உள் குத்து! :)

    பதிலளிநீக்கு
  14. //என்ன ஒரு உள் குத்து! :)//

    //:-) //

    சிரிங்க ....சிரிங்க ...

    பதிலளிநீக்கு