செவ்வாய், 5 அக்டோபர், 2010

மௌனம் எனது தாய்மொழி...வண்டி வண்டியாய் கனவுகள் ....

சில கனவுகள் என்றும்  நிறைவேராதவை ...    
அவைகள் என்னை பார்த்து சிரித்தன ....

சில கனவுகள் லட்சிய கனவுகள்
அவைகள் என்னை  தாகத்தோடு பார்த்தன ....

சில கனவுகள் பேராசை கனவுகள்
அவைகள் என்னை தவிப்போடு பார்த்தன ...

ஒவ்வொரு கனவையும் பிரித்து அவரவர் ஊருக்கு 
அனுப்பி வைத்தேன் ...

சில கனவுகள் என்னை விட்டு பிரிய மறுத்து அழுதன ...
"உங்களை ராஜ கம்பளம் விரித்து வரவேற்க
நெறைய பேர் காத்து கொண்டு உள்ளார்கள்.. "
போய் வாருங்கள் என்றேன் ...
எனக்கு விடை கொடுத்தன..

கனவுகளை விட்டுவிட்டு புத்தியிடம்
அடைக்கலம் கேட்டேன் ...

என்னை புன்னகைத்தபடி வரவேற்றான் ...
பயணம் நன்றாகவே இருந்தது ...

கொஞ்ச நாட்களில் புரிந்தது ...
புத்திக்கு நெறைய எதிரிகள் என ...

எனக்கு புத்தியை  பிடித்துதான்  இருந்தது...
புத்தி சுகமாக வாழ வைத்தான் ....

ஆனால் தன்னை சுற்றி எங்கும் வறட்சி 
என்றதை  நம்ப மறுத்தான் ....

நீ கொஞ்ச நேரம் உறங்கு என்று  சொன்னேன் ...
நான் உறங்கி விட்டால் உனக்கு ஏது பாதுகாப்பு
என்று புத்திசாலிதனமாக  கேட்டான்.....

என்னால் என்னை பாதுகாத்து கொள்ள முடியும் என்றேன் ...
நான் இல்லாவிட்டால் நீ ரொம்ப கஷ்டபடுவாய்
என்று சொல்லி உறங்க சென்றான் .....

மனம் என்ற கனவு விழி ...
புத்தி என்ற நனவு விழி ...
இரண்டும் மூட.....
பிரபஞ்சம் என்ற
தாயின் கருவறையில்.....
உறங்கச் சென்றேன் ...
மௌனம்  எனது தாய் மொழி ஆயிற்று........

12 கருத்துகள்:

 1. நண்பா ... கலக்கிட்ட போ... எளிய கவிதை..ஆழமான உணர்வுகள்.. நல்ல சிந்தனை... மெருகு ஏறுது எழுத்தில்... இதை இழந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்கவும் ( இழக்கும் வாய்ப்பு மிக அதிகம் )

  பதிலளிநீக்கு
 2. //நன்றாக இருக்கு நண்பா... //

  நன்றி சரவணா ...

  பதிலளிநீக்கு
 3. //இதை இழந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்கவும் ( இழக்கும் வாய்ப்பு மிக அதிகம் ) //

  ஆமாம் தல ..இழக்கும் வாய்ப்பு மிக அதிகம் தான் ...
  மௌன நினைவை படுக்கைக்கு கொண்டு சென்றால் மோன நிலை ...
  சுனைனா -நினைவை படுக்கைக்கு கொண்டு சென்றால் முக்தி நிலை ....

  பதிலளிநீக்கு
 4. //நல்ல கருத்துக்கள். மிக அருமை.//

  நன்றி-ங்க ஈரோட்டு (சொக்க)தங்கம்...

  பதிலளிநீக்கு
 5. கருத்துடன் சேர்ந்த கவிதை தொகுப்பு அருமை...வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. //கருத்துடன் சேர்ந்த கவிதை தொகுப்பு அருமை...வாழ்த்துகள் //

  நன்றி தல ..

  பதிலளிநீக்கு
 7. நல்ல கவிதை, அருமையான வரிகள், வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. //நல்ல கவிதை, அருமையான வரிகள், வாழ்த்துக்கள்...//

  நன்றி புஷ்பா....

  பதிலளிநீக்கு
 9. கொஞ்ச நாளாவே உங்க கவிதைகளில் தத்துவங்கள் ஒளிந்து கொண்டு இருக்கின்றனவே... ஏன் அப்படி? அதென்ன.. ராஜ யோகி?

  பதிலளிநீக்கு
 10. //கொஞ்ச நாளாவே உங்க கவிதைகளில் தத்துவங்கள் ஒளிந்து கொண்டு இருக்கின்றனவே... ஏன் அப்படி? அதென்ன.. ராஜ யோகி? //

  ஒரு நல்ல கவிஞன் நல்ல தத்துவ வாதியாய் இருப்பதை நீங்கள் பார்க்கலாம் .....உதாரணம் ...கண்ணதாசன் .....தாகூர் [ நல்ல வேளை.....உன்னோட இந்த டயலாக் எல்லாம் கேக்கறதுக்கு அவங்க உயிரோட இல்லை என்று உங்கள் mind voice சொன்னாலும் சொல்லும் ...]

  பக்தி யோகம் -உணர்வின் அடிப்படையில் ....உதாரணத்துக்கு மீரா ...கண்ணன் மிது கொண்ட காதல் ...
  கர்ம யோகம் -செயலின் அடிப்படையில் .....உதாரணத்துக்கு காம ராஜர்
  ஞான யோகம் -அறிவின் அடிப்படையில் ...உதாரணத்துக்கு ஓஷோ ,ரமணர்

  ராஜ யோகம் -ராஜாதி ராஜா ,போக்கிரி ராஜா ,தனி காட்டு ராஜா,எந்திரன் போன்ற ரஜினி படம் பார்ப்பதால் தோன்றும் யோகம் ....... உதாரணத்துக்கு தனி காட்டு ராஜா என்ற வலை பதிவர்

  பதிலளிநீக்கு