வியாழன், 7 அக்டோபர், 2010

என் ஆசிரியை காதலி ...!!!நீ காதல் பாடம் எடுக்கும் போது எல்லாம்
நீ தான் என் ஆசிரியை ...நானோ  கடைசி வரிசை மாணவன் ..... 

ஒவ்வொரு முறையும் என்னை கேள்விகள் கேட்டு கேட்டே
பார்வையால் பார்த்துப் பார்த்தே ....
காதல் பாடத்தில் என்னை தேர்ச்சி பெறச் செய்தாய் ....

மலையில் யோகம் புரியும் குன்றுகளை
மேகங்கள் தழுவிக்   காதல் சொல்லவதை உணர   கற்று கொடுத்தாய்..

மழை தன் காதலன் கடலுடன்
கலந்து கரைந்து போவதை உணர  கற்று கொடுத்தாய்..

அருவி இடைவிடாது  பாடும் காதல் பாடலை
கேட்டு உணர கற்று கொடுத்தாய்....

இப்பிரபஞ்சத்தில் காதல் அணுக்கள் பரவி இருக்கும்
இடத்தை எல்லாம் உணர   கற்று கொடுத்தாய் ....

காதல் மொழி பேசுவதல்ல ....மௌனம் தான் காதல் மொழி
என்று மௌனமாக உணரக் கற்று கொடுத்தாய் ....

உயிர்கள் அனைத்திலும் காதல் என்ற விதை உள்ளது ....
எனக்கோ நீ தான் நீர் ஊற்றி வளர வைத்தாய் .... 

என் விழிகளுக்கு காதல் பார்வை தந்தாய்.....
என் பார்வையில் நீ காதலி   இல்லை ....
காதல் என்பதே நீ தான் ......

கண்ணாடியில் உன் உருவத்தைக் காட்டினேன் ...
அது காதலைப்  பிரதிபலித்தது .......

18 கருத்துகள்:

 1. தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம் .ஆங்கில வழி கல்வி படித்தால் வந்த வினை......
  மனதுக்குள் ரொம்ப வருத்த படுவேன் இந்த மாதிரி கவிதை எழுத முடிவதில்லை என்று ..............
  எனக்கு புரிந்த வரையில் நல்ல இருக்கு கவிதை

  பதிலளிநீக்கு
 2. நானும்தான் அங்கிலவழி கல்வி கற்றேன். என்ன செய்ய?? எனக்கு தமிழும் வரமாட்டேங்குது, அங்கிலமும் சுத்தம்...

  எல்லாம் படிக்கிற வயசுல நல்லா படிக்கனும். அதைவிட்டு ஆசிரியை சைட் அடித்தால், இப்படிதான்...

  நான் பொதுவா சொன்னேன் நண்பா...சரி, நம்ம கவிதைக்கு வருவோம்..

  அது எப்படி நண்பா..

  ///மலையில் யோகம் புரியும் குன்றுகளை
  மேகங்கள் தழுவிக் காதல் சொல்லவதை உணர கற்று கொடுத்தாய்.. ///

  இப்படிலாம் யோசிக்க முடியுது???.. சூப்பர்.

  பதிலளிநீக்கு
 3. //தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம் .ஆங்கில வழி கல்வி படித்தால் வந்த வினை......//

  ஆங்கில வழி(லி) கல்வி கற்பது தான் நல்லது தல .....
  தமிழ் வலி கல்வி கற்று விட்டு இன்ஜினியரிங் காலேஜ் சேர்ந்த புதிதில் நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும்....
  அதுவும் கிராமத்தில் தமிழ் வலி கல்வி கற்று விட்டு வரும் மாணவர்கள் பலரின் நிலை அது தான் ....
  எனக்கு சுனைனாவே ஆசிரியையாய் வந்து ஆங்கிலம் சொல்லி கொடுத்தாலும் என்னால் தேர்ச்சி பெற முடியாது ....
  அதனால் தான் தமிழில் எழுதி கொண்டு உள்ளேன் .....
  தமிழ் செம்மொழி ,செவிட்டு மொழி என்று சொல்லும் வேஷ தாரிகளை நம்பாதிர்கள் தல....
  நம் உணர்வுகளை சொல்ல ஆங்கிலத்தை விட தமிழ் ஒரு நல்ல கருவி ...அவ்வளவே........

  //மனதுக்குள் ரொம்ப வருத்த படுவேன் இந்த மாதிரி கவிதை எழுத முடிவதில்லை என்று .........//

  இதில் வருத்த பட ஒன்றும் இல்லை தல ...உங்கள் தளத்தை படித்தேன் ....டெரராக எழுதி கலக்குகீரிர்களே.....

  //எனக்கு புரிந்த வரையில் நல்ல இருக்கு கவிதை//

  நன்றி தல ....

  பதிலளிநீக்கு
 4. //எனக்கு தமிழும் வரமாட்டேங்குது, அங்கிலமும் சுத்தம்...//

  உனக்கு தன்னடக்கம் ஜாஸ்தி சரவணா ....

  //இப்படிலாம் யோசிக்க முடியுது???.. சூப்பர். //

  நன்றி சரவணா ....

  பதிலளிநீக்கு
 5. எனக்கும் டமில் சரியா தெரியாது.. இருந்தாலும் ரசிக்க முடிந்தது

  பதிலளிநீக்கு
 6. //எனக்கும் டமில் சரியா தெரியாது.. இருந்தாலும் ரசிக்க முடிந்தது //

  நன்றி தல ..

  பதிலளிநீக்கு
 7. ம்ம்...

  - அவளின்றி ஓர் அணுவும் அசையாது -

  ரொம்ப நல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு
 8. ////ம்ம்...

  - அவளின்றி ஓர் அணுவும் அசையாது -////

  ம்ம்.... அதே ...


  ////ரொம்ப நல்லா இருக்கு.. ////

  நன்றி-ங்க கவிப்புயல் கமலேஷ் ..

  பதிலளிநீக்கு
 9. //கவிதை நல்லா இருக்குங்க.. :) //

  நன்றிங்க Ananthi..

  பதிலளிநீக்கு
 10. சூப்பரா இருக்குப்பா கவிதை வோட்டு போட்டுட்டேன் தமிழ்மணத்துல இண்ட்லியில..

  பதிலளிநீக்கு
 11. //சூப்பரா இருக்குப்பா கவிதை வோட்டு போட்டுட்டேன் தமிழ்மணத்துல இண்ட்லியில.. //

  நன்றி தல...

  பதிலளிநீக்கு
 12. ஃஃஃஃஃஇப்பிரபஞ்சத்தில் காதல் அணுக்கள் பரவி இருக்கும்
  இடத்தை எல்லாம் உணர கற்று கொடுத்தாய் ....ஃஃஃஃ
  அந்தளவு ஆழமானதா... அருமையாக உள்ளது...

  பதிலளிநீக்கு
 13. //ஃஃஃஃஃஇப்பிரபஞ்சத்தில் காதல் அணுக்கள் பரவி இருக்கும்
  இடத்தை எல்லாம் உணர கற்று கொடுத்தாய் ....ஃஃஃஃ
  அந்தளவு ஆழமானதா... அருமையாக உள்ளது... //

  நன்றி சகோதரா ...

  பதிலளிநீக்கு
 14. காதல் அணுக்கள் உடம்பில் மொத்தம் எத்தனை.. நியூட்ரான் எலெக்ட்ரான் உன் இடக் கண்ணில் மொத்தம் எத்தனை.. ம்ம்ம் :-)

  பதிலளிநீக்கு
 15. // காதல் அணுக்கள் உடம்பில் மொத்தம் எத்தனை.. நியூட்ரான் எலெக்ட்ரான் உன் இடக் கண்ணில் மொத்தம் எத்தனை.. ம்ம்ம் :-) //

  சந்தேக புத்தி என்னைக்குமே இருக்க கூடாதுங்க.......இருக்கவே கூடாது....
  நான் பணத்துக்கு கவிதை எழுதறவன் இல்லைங்க ...என் இலக்கிய தாகத்தை தீர்த்து கொள்ள கவிதை எழுதுகிறேன் :))

  பதிலளிநீக்கு