புதன், 2 மார்ச், 2011

ராத்திரி நேரத்து கலாச்சாரம்..


சிவா என்ற சொல்லுக்கு  இல்லாத ஒன்று அல்லது எது இல்லையோ அது என்று பொருள் .அதாவது வெற்றிடம்  அல்லது ஆகாயம் என்பது பொருள்.
 புத்தரும் இதையே தான் சொன்னார் .நீங்கள் யார் என்று கேட்டபோது ...நான் அனாத்மா.அதாவது நான் என்று எதுவுமில்லை.அதாவது ஆத்மா என்று கூட எதுவுமில்லை.

சிவராத்திரி என்பது  இந்து மதம் மட்டும் கொண்டாடும் விழாவாக உள்ளது .இது சரியானது அல்ல .
மதத்துக்கு இங்கு வேலையே இல்லை .
சிந்து சமவெளியை ஒட்டி தோன்றிய  கலாசாரம்தான்  இந்திய கலாசாரம்.
இந்திய தேசத்தவர் அனைவரும் இந்துக்களே.  
உண்மையில் இந்திய கலாசாரத்தில் உள்ள அனைவரும் தன் விழிப்புணர்வை மேம்படுத்தி கொள்ள இந்த நாள் ஒரு நல்ல வாய்ப்பு.


நீங்கள் மண்ணுக்கு அடையாளம் கொடுக்கலாம் .வரையறை செய்யலாம்.  (நிலம் ,தேசம் ,என் வீடு ,என் உடல் )

மண்(உடல் ) அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் விலங்கு.

வெறும் நீர் (மனம் ) அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர் ..மனிதன் .

காற்றின்
அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர் ..லட்சிய வாதி , ..சாதனையாளன்,விஞ்ஞானி...etc

நெருப்பின்
அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர்... விஜயகாந்த்  :)) [பொதுநல வாதி,தியாகி]

ஆகாயத்தை  அடையாளமாக கொண்டு வாழமுடியாது ..ஆகாயத்தை அடிமை படுத்த முடியாது ...
 வேண்டுமானால்   தன்னை  ஆகாயத்தோடு (ஆதாயத்தோடு அல்ல :)   ..அடையாள படுத்தி கொள்பவனை யோகி எனலாம்.

எல்லோருக்கும் ஒரே ஆகாயம்  தான் ....

இந்த பிரபஞ்சத்தில் நெறைய சூரியன் இருக்கலாம் ....பூமி போல நெறைய உயிர் வாழும் கிரகங்கள் இருக்கலாம் ...
ஆனால் ஒரே
ஆகாயம் தான் ...இதை ஒன்று என்று கூட சொல்ல முடியாது  .மற்ற ஒன்று இருந்தால்  தான் ஒன்று என்று வேறு படுத்த கூட  முடியும் .

இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் .கடவுள் ஒரு குறிபிட்டவர்களுக்கு (மதம் ) மட்டும் சொந்தகாரர் இல்லை என்று .


இதை தான் இல்லாத ஒன்று ...சிவா என்று சொன்னார்கள் நம் இந்திய காலாச்சாரத்தில்..[ நமக்கு தெரிந்த கலாசாரம்....ராத்திரி நேரத்து கலாச்சாரம் ....I mean ஒருவனுக்கு ஒருத்தி ] 

சிவராத்திரி அன்று சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்துக்கு நேர் 7ம்   வீட்டிலும்(கும்பம் ) ,சந்திரன்  தன் சொந்த வீடான கடகத்தில் இருந்து நேர் 7 ம் வீட்டிலும்(மகரம் ) இருக்கும்.[நன்றி :ஸ்வாமி ஓம்கார்]

மனம் (சந்திரன்) மெதுவாக நகர்ந்து ஆத்மா (சூரியனிடம் ) ஒடுங்குகிறது இந்த இரவு .
சிவராத்திரிக்கு அடுத்த நாள் அம்மாவாசை .
இது இந்த வருடம் 3-03-2011 இரவு நடக்கிறது . 


இந்த இரவு நாம் தளர்வாக உடலை வைத்து கொண்டு மனதை கவனித்தபடி விழிப்புடன் இருந்தால் நல்லது.

கோவிலுக்கு செல்வது ஒரு விதத்தில் நல்லது .செல்லாமல் இருப்பது மிக நல்லது .
இதை நாம் காலியான இடம் ,மொட்டை மாடி போன்ற காற்றோட்டமான இடத்தில செய்வது மிக மிக  நல்லது. 

நாமும் விழிப்புணர்வு பெற ராத்திரி நேரத்து கலாச்சாரத்தை முயற்சிப்போம்  :)

சிவ ராத்திரி தின வாழ்த்துக்கள் ...:) 

4 கருத்துகள்:

  1. To tell the truth, I did not expect this much excellent information from u..

    Great..

    write more..

    பதிலளிநீக்கு
  2. //To tell the truth, I did not expect this much excellent information from u..

    Great..

    write more.. //

    [co="blue"]பாராட்டுக்கு நன்றி தல...:)[/co]

    பதிலளிநீக்கு
  3. நமக்கும் இந்த சாமிக்கும் ரொம்ப தூரம் பாஸ்..

    :(

    பதிலளிநீக்கு
  4. //நமக்கும் இந்த சாமிக்கும் ரொம்ப தூரம் பாஸ்..

    :( //

    [co="blue"]ஹா ஹா ...

    சரவணா ....கடலுக்குள்ள வாழுற மீனுக்கு நாம கடலுக்குள தான் இருக்குரோமுனு தெரியாம ...இன்னொரு பெரிய மீனுகிட்ட கேட்டுச்சாம் ..ஆமா ..கடல் ..கடல் -நு சொல்லுராங்களே அது எங்க இருக்குனு ....அதுக்கும் நமக்கும் எவ்வளவு தூராமுன்னு ?

    So Don't bother about God...whatever we think God or Namithaa ...Nothing is matter.....Because We are already God ... :)))[/co]

    பதிலளிநீக்கு