செவ்வாய், 7 செப்டம்பர், 2010

பதிவுலகில் நான்..















பதிவுலகில் நான் என்ற தொடர் பதிவிற்கு அழைத்த வலையுலக  நண்பர் மார்கண்டேயன் -க்கு  .. நன்றி.....நன்றி.....

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

தனி காட்டு ராஜா

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

பெயர் என்பதே பொய் தானே ....உண்மை பெயர் என்று ஏதாவது உண்டா ?

சரி ....விடுங்க ...மகான்,மாக்கன் என   யாருடைய கொள்கை,புண்ணாக்கு எதையும் ஏற்றுக்  கொள்ளாதவன் ,சுய புத்தியின் வழியே செல்பவன்  என்ற அடிப்படையிலும்  என்னுடைய பெயரின் முதல் எழுத்து "கோ" என்பதால்  கோ என்றால் அரசன் அல்லது  ராஜா என்ற பொருளில் எனக்கு நானே  தனி காட்டு ராஜா என பெயரிட்டு கொண்டேன்.

3 .நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

தமிழ் வலைப்பதிவு சென்று ஒரு முறை காலடி எடுத்து  வைத்து பார்த்தேன்."எவன்டா  அறிவு கெட்ட பயல் ...
மானிட்டர் மேல கால வைக்கிறது என்று அலுவலகத்தில் கத்தினார்கள் ...."அது முதல்   தமிழ் வலை பதிவில் காலடி எடுத்து வைப்பதில்லை. 

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?
தினமும் காலை ஆறு மணிக்கு ஒவ்வொரு தெருவாக சென்று  "வலைப்பதிவு படிக்கலையா ....வலைப்பதிவு ....தனி காட்டு ராஜா  வலைபதிவு....சூடான ..சுவையான செய்திகளுக்கு......தமிழகத்தின் நம்பர் 1  வலைப்பதிவு " என்று கூவுவேன் .

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சொந்த விஷயம் என்றால் என் பதின்ப வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.
ஏன் என்றால் நம்ம வலைபதிவு அண்ணன் சுரேந்திரன் எழுதுமாறு  கேட்டு கொண்டார்.
விளைவு என்றால் எனக்கு ஒன்றும் இல்லை ...வேண்டுமானால் பதிவை படித்தவர்களுக்கு தலை வலி வந்து
இருக்கலாம். 

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகத் தான் இதை ஆரம்பித்தேன்.   பதிவின் மூலம் சம்பாதித்து இந்தியாவின்  கடனை அடைத்து  நம் நாட்டை வல்லரசு ஆக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம்.இது தான் என் பொழுது போக்கு.     

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?
இரண்டு. இரண்டுமே தமிழ் தான் .நான் எல்லாம் இங்கிலீஷ் -ல எழுத ஆரம்பிச்சா நாடு தாங்காது.
தனி காட்டு ராஜா
யுக கோபிகாவின் எண்ணங்கள்

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன் ?

இயல்பாகவே சமுகத்தின் மீது  இருக்கும் கோபம் தான் சில பதிவுகளில்  பின்னுட்டமாக வெளி படும்.
மற்ற படி தனி பட்ட கோபம் ,பொறாமை என்று  எதுவும் கிடையாது.
முக்கியமாக பெண்கள் பதிவு என்றால் ஓடிப்  போய் பின்னூட்டம் இடும் வலை பதிவர்களை கண்டு ஆரம்பத்தில் எரிச்சல் பட்ட துண்டு.
சிலர் அருமை என்று பின்னுட்டம் போட்டு விட்டு தான் பதிவையே படிப்பார்களோ என்று சந்தேகம் கூட   உள்ளது. [இது யுக கோபிகா என்னிடம் சொன்னது ]
இதே ஆண்கள் புதுப் பதிவு ஆரம்பித்தால் ....இம்....ஒரு பின்னுட்டம் கூட தேறாது. 
 
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

அகம் புறம் வலை பதிவர் சுரேந்திரன் அவர்கள்.
அவரைப் பற்றி- நல்லவரு ,வல்லவரு ,நாலுந் தெரிஞ்சவர் ......[5,6 தெரியாதவர்] 
அந்த பாராட்டை பற்றி -தெரியாத்தனமா  பாராட்டிவிட்டார் என்று நெனைக்கிறேன். 

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

என்னை பத்தியா....?
ம்.....வல்லவனுக்கு வல்லவன்  ...முரட்டு காளை...போக்கிரி ராஜா ...
ம்..... நான் ரொம்ப சீரியசான ஆளு .....ரொம்ப கண்டிப்பானவன் .....
ம் ...அப்புறம் ....நான்  Straight forward.... backward....left...right..reverse.....
மேல சொன்னதெல்லாம் வில்லன் களுக்கு .....
மற்ற படி நான் "நாட்டுக்கு ஒரு  நல்லவன்" குழந்தை மற்றும் பெண்களுக்கு!!!

9 கருத்துகள்:

  1. அழைப்பினை ஏற்று, தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி தனி காட்டு ராஜா,

    //முக்கியமாக பெண்கள் பதிவு என்றால் ஓடிப் போய் பின்னூட்டம் இடும் வலை பதிவர்களை கண்டு ஆரம்பத்தில் எரிச்சல் பட்ட துண்டு.
    சிலர் அருமை என்று பின்னுட்டம் போட்டு விட்டு தான் பதிவையே படிப்பார்களோ என்று சந்தேகம் கூட உள்ளது. [இது யுக கோபிகா என்னிடம் சொன்னது ]
    இதே ஆண்கள் புதுப் பதிவு ஆரம்பித்தால் ....இம்....ஒரு பின்னுட்டம் கூட தேறாது.//

    இந்த விஷயத்த யுக கோபிகா மூலம் நிரூபிச்சதுக்கு நன்றி, ரொம்ப நல்லாருக்கு,

    நேரம் அமையும் போது உங்களின் தனித் தன்மையுடன் பதிவாளுங்கள் ராசா,

    என் அழைப்பினை ஏற்று, தொடர்ந்தவர்களின் வலைப்பதிவும் என் பதிவில் கொடுத்துள்ளேன்

    பதிலளிநீக்கு
  2. //நேரம் அமையும் போது உங்களின் தனித் தன்மையுடன் பதிவாளுங்கள் ராசா,//

    நாம் அனைவருமே இந்நாட்டு மன்னர்கள்(ராஜாக்கள்) தான் நண்பா .....
    நாம் ஒவ்வொருமே தனி தன்மை உடையவர்கள் தான் நண்பா .......
    மீன் நீரில் தனித்தன்மை கொண்டது .....கழுகு காற்றில் தனித்தன்மை கொண்டது .....
    எதோ பிரபல பதிவர்கள் மட்டும் தான் தனி தன்மை உடையவர்கள் என்பது நம் தவறான புரிதல் ....
    நண்பா உங்கள் தளத்தில் உள்ள ஒவ்வொரு கவிதையும் அருமையாக உள்ளது ......தொடர்ந்து எழுதுங்கள் ......


    //என் அழைப்பினை ஏற்று, தொடர்ந்தவர்களின் வலைப்பதிவும் என் பதிவில் கொடுத்துள்ளேன் //

    படிக்கிறேன் நண்பா .....

    //அப்பாடா, முதல் பின்னூட்டம், //

    நண்பா.....இப்படி ஒரு சந்தோசாமா?

    பதிலளிநீக்கு
  3. //ஏதோ பிரபல பதிவர்கள் மட்டும் தான் தனி தன்மை உடையவர்கள் என்பது நம் தவறான புரிதல் .... //

    உங்களுடன் உடன்படுகின்றேன்,

    நான் பிப/மூப (பிரபல பதிவர் / மூத்த பதிவர்) போன்ற முகமூடி அணிந்து கொள்ள விரும்புவதில்லை . . .

    எந்த முன் முடிவும் இல்லாமல் விரும்பும் பதிவுகளை படிக்கின்றேன், கருத்துக்களை பதிக்கின்றேன், அவ்வளவே,

    //நண்பா.....இப்படி ஒரு சந்தோசாமா?//

    அப்படியில்லை நண்பரே,

    மொத வெட்டு,
    மீ த பஸ்ட்,
    வட எனக்கு தான்,
    அடடா வட போச்சே,

    போன்ற சொற்றொடர்களை மிக அதிகமாக காண முடிகிறது,

    இதில் என்ன கொடுமை என்றால், சில வருத்தமான் பதிவிலும் இது உண்டு,

    அதை விட கொடுமை,

    'மீ தி பஸ்ட்', அதை தொடரும் பின்னூட்டம், 'பதிவ படிச்சிட்டு எழுதுறேன்',
    அதன் பாதிப்பு தான்

    :)

    பதிலளிநீக்கு
  4. //மொத வெட்டு,
    மீ த பஸ்ட்,
    வட எனக்கு தான்,
    அடடா வட போச்சே,//

    இவைகள் தான் வலையுலகின் Terror காமெடிகள்.....
    நண்பா .....காமடிய ரசிக்க வேண்டியதுதானே .....ஆராய்ச்சி எல்லாம் பண்ண கூடாது...

    //'மீ தி பஸ்ட்', அதை தொடரும் பின்னூட்டம், 'பதிவ படிச்சிட்டு எழுதுறேன்',//

    நண்பா....இந்த மாதிரி காமடி எல்லாம் "பந்திக்கு முந்து ...படைக்கு பிந்து[எங்க ஊர்ல சொல்லற பழமொழி] " வகையை சார்ந்தவை ... :)))

    பதிலளிநீக்கு
  5. உங்க பதிவ படிச்ச கொஞ்ச நேரத்தில சந்தோஷமா இருந்தேன். இன்னும் உங்களுக்குள்ள இருக்கும் டெரர்ரான விசயங்களை ஜாலியாக எழுதுங்கள். காமெடிக்கு என்னிக்கும் ரெட் கார்பெட்.
    //எவண்டா மானிட்டர்ல கால வக்கிறது?..
    அய்யய்ய்யய்யோ!... புல்லரிக்குதுண்ணே...

    பதிலளிநீக்கு
  6. //உங்க பதிவ படிச்ச கொஞ்ச நேரத்தில சந்தோஷமா இருந்தேன்.//

    நம்ப முடிய வில்லை ...இல்லை ....இல்லை .....

    நன்றி ராஜ் ....

    பதிலளிநீக்கு
  7. //எதோ பிரபல பதிவர்கள் மட்டும் தான் தனி தன்மை உடையவர்கள் என்பது நம் தவறான புரிதல் ....//

    பத்த வச்சுட்டயே பரட்ட..

    பதிலளிநீக்கு
  8. //பத்த வச்சுட்டயே பரட்ட..//

    இது எப்டி இருக்கு.... ஹ ஹ ஹா ...

    பதிலளிநீக்கு