வியாழன், 21 அக்டோபர், 2010

அதென்ன.. ராஜ யோகம்?



















நாம் கொசுவிடமும் ,சிங்கத்திடமும்  ஒரே மாதிரி நடந்து கொள்கிறோமா என்றால் இல்லை என்பது தான் பதில்.
கொசு ஒரு வித உந்து சக்தியுடன் செயல் படுகிறது .சிங்கமும் ஒரு வித சக்தியுடன் செயல் படுகிறது.
கொசு -வின்   சக்தி ரொம்ப குறைவாக இருப்பதால் நாம் ஈசி யாக  நசுக்கி போட்டு விடுவோம் .
ஆனால் சிங்கத்தை பார்த்தால்......அப்புறம் எந்திரனில் வில்லன் ரோபோ ஒரு டயலாக் விடுவாரே  "ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ....வசி....ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ " அந்த நிலைமை தான்.

இந்த பிரபஞ்சமே மிகப் பெரிய ஆற்றல் கோளமாக இருந்தது என்றும் ,பின் வெடித்து சிதறியதாக Big bang தியரி சொல்லுகிறது .ஆற்றல் அழிவதில்லை ...ஒரு ஆற்றல் பிறிதொரு ஆற்றலாக  மாறுகிறது என்று  நம்ம ஐன்ஸ்டின்   கொள்ளு தாத்தா கூட சொல்லி உள்ளார்.

நம்ம பாரதி தாத்தா கூட "எங்கு எங்கு காணினும் சக்தியடா " என்று சொல்லி உள்ளார்.

சக்தி என்பது பல்வேறு நிலைகளில் செயல் படுவதை நாம் காணலாம்.கொசு இயங்க தேவையான ஆற்றல்,மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ,பூமி இயங்க தேவையான ஆற்றல் ,சூரியன் ,நச்சத்திர, பிரபஞ்ச ஆற்றல் என்று ஆற்றல் பல்வேறு ரூபங்களில் செயல் படுகிறது .

இந்த ஆற்றல் வெறும் ஆற்றலாக     மட்டும் செயல் புரிவதில்லை .சூரியன் என்ற வெப்பம் பூமியை உமிழ்ந்தது .பின் பூமி என்ற வெப்ப ஆற்றல் ...குளிர்ந்து பலவேறு ஆற்றலாக மாற்றம் அடைந்து ....பல்வேறு நிலை மாற்றம் பெற்று இன்று உள்ள பூமி ,வலை தளம் என்ற நிலைக்கு நாம் வந்து உள்ளோம்.

பூமிக்குள் இருந்த ஆற்றல் பல்வேறு நிலை மாற்றத்தின் பின் நாம் உருவானோம்...  அப்படி என்றால் பூமி தான் நாமா?
சரி ...பூமி   சூரியனில் இருந்து உருவானது ..அப்படி எனில் நம் முன்னோர் சூரியனா ? சூரியன் எங்கிருந்து வந்தது ...பிரபஞ்சம் என்றால் ...பிரபஞ்ச ஆற்றல் நாமா ?

பூமிக்கு சிந்திக்கும் சக்தி கிடையாது என்றால் ....மண்ணில் இருந்து பிறந்த நாம் எப்படி சிந்திக்கிரோம்....???

இந்து மதத்தில் பூமியை  குறிக்கும் கடவுளாக வினாயகரை சொல்லுவதும் ....அவருடைய வயிறு தான் பூமி என்று சொல்லுவதாக சுகி.சிவம்  புத்தகத்தில் படித்து உள்ளேன் .அர்த்தம் உள்ளதாகவே தோன்றுகிறது.

ஆற்றல் வெறும் ஆற்றலாக மட்டும் செயல் படாமல் .....மிக ஆழ்ந்த உள் உணர்வுடன் செயல் படுவதாக தோன்றுகிறது.

பிரபஞ்சம் சக்தியாக செயல் படுகிறது ....சக்தியால் அடிப்படையில் இணைக்கப்பட்டு உள்ளது .உடலால் ,மனத்தால் ,புத்தியால் ,மத வேறுபாட்டால் ,இன ,மொழி என எத்தனயோ பிரிப்பதாக இருந்தாலும் ....உண்மையில் பிரிவினைக்கு அப்பார்பட்ட இணைப்பு உள்ளது.

அதை நாம் சரியாக விழிப்புணர்வுடன் புரியாமல் .........

இப்படி தான் இணைகிரோம்.....
நாங்க மதுரைகாரங்க , தமிழ் சினிமாவையே நாங்க தான் தாங்கி பிடிக்கிறோம் என்பார்  ஒருவர்.
உடனே இன்னொருத்தார் நான் ஈரோட்டு காரன் என்பார் . நாங்க எல்லாம் பகுத்தறிவு சிங்கமப்பா என்பார்.
உடனே தம்பி உங்க ரெண்டு பெற விட அல்வா குடுப்பதில் எங்கள மிஞ்ச முடியாது என்பார் திருநெல்வேலி காரார்.
[எத்தனை நாளைக்கு தான் இருட்டு கடையில் அல்வா செய்விர்கள் திருநெல்வேலி  ராசாக்களே.....இனிமே வெளிச்ச கடையில் அல்வா கிண்டுங்கள் ...]

இடத்தால் ஏற்படும் பிரிவினை சாதாரணமானது தான் .ஆனால் சாதி ,மதம்   போன்ற வற்றால் ஏற்படும் பிரிவினை பற்றி  சொல்ல தேவை இல்லை.

சக்தி நிலையில் மிக சாதாரண நிலை ஓன்று இருக்கும் எனில் ...மிக உச்ச நிலையில் செயல் படும் சக்தி கண்டிப்பாக இருக்க வேண்டும்.
கோவம்,அதிகாரம் ,பண பல சக்தி,ஆள் பல சக்தி, ஆணவ சக்தி  என்று எத்தனயோ சக்திகள் நம் உள்ளே உள்ளது. 

காதல் ஒரு அற்புதமான  சக்தி. காதலால் பிரபஞ்சத்தோடு ஒன்ற முடியும்.

பிரிவினைக்கு அப்பாற்பட்டு சக்தியால் ஒன்றும் யோகம் தான் ராஜ யோகம்.

19 கருத்துகள்:

  1. அருமையான பதிவு ..வாழ்த்துக்கள்..
    தொடர்ந்து எழுதுங்கள்..

    பதிலளிநீக்கு
  2. ஒருவேளை இதுக்கு பேரு தான் கோயம்புத்தூர் குசும்பு என்பதோ ......

    பதிலளிநீக்கு
  3. "காதலால் பிரபஞ்சத்தோடு ஒன்ற முடியும்."

    உங்களைத்தான் தேடிக்கிட்டு இருந்தோம்.. எங்க அணிக்கு புதுசா ஓர் ஆள் கிடைச்சாச்சு..
    பிரபஞ்சத்தோட ஒன்றணும் அவ்வளவுதானே... அதுக்கு உடனடி வழி ஒண்ணு இருக்கு.. காதல் கீதல் ஒண்ணும் வேணாம்..
    சென்னை வந்தால் என்னை தொடர்பு கொண்டு , ஜோதியில் ஐக்கியமாகுங்கள் :-)

    பதிலளிநீக்கு
  4. ஜோதியா????? அப்ப நானும்.....

    ///அருமையான பதிவு ..வாழ்த்துக்கள்..
    தொடர்ந்து எழுதுங்கள்.. ///

    எதற்கு இந்த பில்டப் சார்???.... :)

    இந்த பதிவை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை என்றாவது ஒருநாள் புரியலாம், அப்பொழுது இதைப்பற்ற நாம் தெளிவாக பேசுவோம் போபி...

    :)

    பதிலளிநீக்கு
  5. bharathiyai thatha endru kooriyadai vanmayaaga kandikkiren. 39 vayadil uyirneettha thudippu mikka ilaingar allava avar?

    பதிலளிநீக்கு
  6. //சென்னை வந்தால் என்னை தொடர்பு கொண்டு , ஜோதியில் ஐக்கியமாகுங்கள் :-)//

    சென்னை -லதான் கடந்த 5 வருஷம் இருந்தேன் .....அப்பவே நான் (பரங்கி மலை) ஜோதி -ல ஐக்கியமானா ஆளு தான் .....
    மறுபடியும் சென்னை வருவேன் ....இனிமே ஜோதி எல்லாம் வேண்டாம் ....சரியா தல? :))

    பதிலளிநீக்கு
  7. //ஜோதியா????? அப்ப நானும்.....//

    I am a complan boy.........வளர்ந்துட்டேன் ......ஆனா சரவணா... நீயும் Complan boy ஆக இருந்தால்தான் சேர்த்துக்குவோம் ........ சரியா ?

    //இந்த பதிவை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை என்றாவது ஒருநாள் புரியலாம், அப்பொழுது இதைப்பற்ற நாம் தெளிவாக பேசுவோம் போபி...//

    சரவணா,மனிதர்கள் புரிந்து கொள்ள இது மனித காதல் (யோகம்) அல்ல ...அல்ல...:)

    பதிலளிநீக்கு
  8. // bharathiyai thatha endru kooriyadai vanmayaaga kandikkiren. 39 vayadil uyirneettha thudippu mikka ilaingar allava avar?//

    நான் பாசத்துல தாத்தா என்று சொன்னேன் ...தப்பா ??????
    அவர் எனக்கு தூரத்து சொந்தம் :))

    பதிலளிநீக்கு
  9. //எதற்கு இந்த பில்டப் சார்???.... :)//

    ஊர்ல எவன் எவனோ பில்டப் கொடுக்கராணுக ......நான் கொடுக்க கூடாதா சரவணா ???

    காசா ,பணமா....பில்டப் தானே .....கொடுத்துப் பார்ப்போம்........

    பதிலளிநீக்கு
  10. //அருமையான பதிவு ..வாழ்த்துக்கள்..
    தொடர்ந்து எழுதுங்கள்.. //

    தன் கையே தனக்குதவி என்ற தன்னிகரில்லா கொள்கையை தாங்கிப் பிடித்திருக்கும் 'தனி காட்டு ராஜாவுக்கு' தானே கை கொடுத்துக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்,

    யாரோ ஒருத்தர் கமென்ட் போடுறதக் காட்டிலும் நாமளே போட்டுகிட்டோம்னா, அது ஒரு சுய பரிசோதனையா இருக்கும்,

    எனினும், இம்முயற்ச்சியை முதலில் செயல் படுத்திய வகையில் நீங்கள் பதிவுலகின் வரலாற்றில் (??!!!??) இடம் பெறுகிறீர்கள்,

    மிக்க மகிழிச்சி, தொடருங்கள் உங்கள் தனித் தன்மையுடன் . . .

    பதிலளிநீக்கு
  11. //யாரோ ஒருத்தர் கமென்ட் போடுறதக் காட்டிலும் நாமளே போட்டுகிட்டோம்னா, அது ஒரு சுய பரிசோதனையா இருக்கும்,//

    ஆமாம் நண்பா .....நாம எல்லாம் யாரு .....எலிக்கு டவுசர் போட்டு ,கோழிக்கு கோமணம் கட்டி பரிசோதனை பண்ணுற ஆளுக ...சுய பரிசோதனை பண்ண மாட்டோமா என்ன !!:))

    //எனினும், இம்முயற்ச்சியை முதலில் செயல் படுத்திய வகையில் நீங்கள் பதிவுலகின் வரலாற்றில் (??!!!??) இடம் பெறுகிறீர்கள்,//

    வைகை ஆறு ,காவிரி ஆற்றில் குளிப்பது பிடிக்கும் நண்பா ...... வரலாறு என்பது வெறும் வறண்ட ஆறு ...அதில் குளிக்க முடியாது ...அது எல்லாம் நமக்கு வேண்டாம் நண்பா....

    பதிலளிநீக்கு
  12. இனிமே ஜோதி எல்லாம் வேண்டாம் ....சரியா தல? :))

    ”ஜோதியா????? அப்ப நானும்..”

    ”வரலாறு என்பது வெறும் வறண்ட ஆறு ”

    ஜோதியின் கிளுகிளுப்பு , வறண்டு போகாத ஆற்றின் சுறுசுறுப்பு , இரண்டும் கலந்த ஒரு பொன்னுலகம் சென்னையில் உங்களுக்காக காத்து இருக்கு..

    அண்ணன் அழைக்கிறேன்..
    அலைகடல் என ஆர்ப்பரித்து வாரீர்

    பதிலளிநீக்கு
  13. ஜோதியா????? அப்ப நானும்.....”

    உங்க ஆர்வம் புரியுது.. பொதுக்கூட்டத்துக்கு ஐடியா செஞ்சா அது மாநாடுல முடிஞ்சுடும் போல இருக்கே..

    பதிலளிநீக்கு
  14. //அண்ணன் அழைக்கிறேன்..
    அலைகடல் என ஆர்ப்பரித்து வாரீர் //

    அண்ணன் எதுக்கு அழைக்கரீங்க.....எங்க கிட்ட இருக்கற பணத்த பிடிங்கிகிட்டு...அத வச்சு இன்னொரு TV ஸ்டேஷன் ஆரம்பிக்கருக்கா :))

    //ஜோதியின் கிளுகிளுப்பு , வறண்டு போகாத ஆற்றின் சுறுசுறுப்பு , இரண்டும் கலந்த ஒரு பொன்னுலகம் சென்னையில் உங்களுக்காக காத்து இருக்கு..//

    காத்து இருக்கட்டும்..இருக்கட்டும்..வருகிறேன்:))

    பதிலளிநீக்கு
  15. //நம்ம பாரதி தாத்தா கூட "எங்கு எங்கு காணினும் சக்தியடா " என்று சொல்லி உள்ளார்//

    அடக் கொடுமையே.. ’பாரதி’ய தாத்தானு கூப்பிட்ட முதல் ஆளு நீங்க தான் சாமி..

    பதிலளிநீக்கு
  16. //உடனே தம்பி உங்க ரெண்டு பெற விட அல்வா குடுப்பதில் எங்கள மிஞ்ச முடியாது என்பார் திருநெல்வேலி காரார்.
    [எத்தனை நாளைக்கு தான் இருட்டு கடையில் அல்வா செய்விர்கள் திருநெல்வேலி ராசாக்களே.....இனிமே வெளிச்ச கடையில் அல்வா கிண்டுங்கள் ...]//

    அல்வா வேணும்னா வாய்விட்டுக் கேளுங்க. ராஜ யோகத்துக்கும் திருநெல்வேலி அல்வாவுக்கும் என்ன சம்பந்தம்?

    இருட்டுக்கடை சாயங்காலம் 6 மணிக்கு ஆரம்பிச்சு 2 மணி நேரத்துல எல்லாம் காலியா போயிரும். என்னைக்குப் போனாலும் அதே கூட்டம் இருக்கும். திருநெல்வேலி பக்கம் வந்தா நெல்லையப்பர் கோயிலுக்குப் போயிட்டு அப்படியே பக்கத்துல இருட்டுக் கடைக்கும் போய் அல்வா சாப்பிடுங்க. அப்ப தான் என்ன மாதிரி அறிவா இருப்பீங்க. :-)

    பதிலளிநீக்கு
  17. //அடக் கொடுமையே.. ’பாரதி’ய தாத்தானு கூப்பிட்ட முதல் ஆளு நீங்க தான் சாமி..//

    எதுக்குமே ஒரு தொடக்கம் வேணுமே ......நான் தொடங்கி வைத்து உள்ளேன் .....வருங்கால தலைமுறைகள் இனிமேல் கூப்பிடட்டுமே....

    உங்களுக்கு ஒன்னு தெரியுமா.....பாரதியை அவர் சம காலத்தினர் கிறுக்கன் என்று தான் அழைத்தார்களாம் ......
    இயேசு ,கலிலியோ,சாக்ரடீஸ் போன்றோரை கூட கிறுக்கன் என்று தான் அவர்கள் சம காலத்தினர் அழைத்தார்களாம்.....
    சமுதாயம் எப்பவுமே இப்படிதான் ...ஒருவன் வாழும் காலத்தில் மதிக்க மாட்டார்கள் .....அவன் செத்து போன பின் ...அவன் பெருமை பேசுவார்கள் .....
    நாங்க எல்லாம் எந்த காலத்திலும் ....எல்லோரையும் மதிப்போம் .......வாழும் போது ஏசி விட்டு ....செத்த பிறகு புரட்சி கவி என்று பட்டம் கொடுக்க மாட்டோம்....

    பதிலளிநீக்கு
  18. //அல்வா வேணும்னா வாய்விட்டுக் கேளுங்க. ராஜ யோகத்துக்கும் திருநெல்வேலி அல்வாவுக்கும் என்ன சம்பந்தம்? //

    எங்களுக்கு எல்லாம் அல்வா கேட்டு பழக்கம் இல்லை ...குடுத்து தான் பழக்கம்....ஹ ..ஹா :))

    //திருநெல்வேலி பக்கம் வந்தா நெல்லையப்பர் கோயிலுக்குப் போயிட்டு அப்படியே பக்கத்துல இருட்டுக் கடைக்கும் போய் அல்வா சாப்பிடுங்க. அப்ப தான் என்ன மாதிரி அறிவா இருப்பீங்க. :-) //

    அல்வாவுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இருக்குனு கண்டு புடிச்ச முதல் ஆள் நீங்க தான் .....
    ஒருவேளை அல்வா சாப்பிட்டு சாப்பிட்டு தான் வானத்துல பறக்கும் தட்ட கண்டுபிடிசீங்களோ ?? :)

    பதிலளிநீக்கு
  19. //எங்களுக்கு எல்லாம் அல்வா கேட்டு பழக்கம் இல்லை ...குடுத்து தான் பழக்கம்....ஹ ..ஹா :))//

    அல்வா போச்சே...!!!

    //ஒருவேளை அல்வா சாப்பிட்டு சாப்பிட்டு தான் வானத்துல பறக்கும் தட்ட கண்டுபிடிசீங்களோ ?? :)//

    ஆமா. அல்வா சாப்பிடுறதுக்குத் தட்டு இல்லாம தவிச்சிட்டு இருந்தப்போ பறந்து வந்ததைப் பிடிச்சு வச்சிக்கிட்டேன்.

    பதிலளிநீக்கு