வெள்ளி, 22 ஏப்ரல், 2011

அம்மணக் கலாச்சாரம்


ஒரு ஊரில் ஒரு பிரபல  தையல் கடைக்காரன் இருந்தான்..அவன் மக்களின் போலி தனத்தை கண்டு பிடிக்க விரும்பினான்.

அரசனிடம் சென்று அரசே இதுவரை யாருமே தைக்காத ஒரு சிறந்த ஆடையை தங்களுக்கு தைத்து தர விரும்புகிறேன் என்றான் .அரசனும் சரி என்றான்.

பத்து நாள் கழித்து வந்தான்.இதோ என் கையில் உள்ள ஆடை யார் யார் உண்மை பேசுகிரார்களோ அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றான்.

அரசனை உடை மாற்றும் அறைக்கு   கூட்டி   சென்று ...சும்மா வெறும் கையை  வைத்து கொண்டு அவருக்கு உடையை மாட்டி விடுவது போல பாவனை செய்தான்.

அரசனோ ..உடை கண்ணுக்கு தெரியா விட்டாலும்..உடை தெரியவில்லையே   என்று சொன்னால் தான் பொய்யன் என்று உலகம் சொல்லி விடுமே என்று ...ஹி ..ஹி அருமையான உடை ...எவ்வளவு விலை என்று கேட்டு வைத்தான்.


அறையை விட்டு வெளியே வந்தார் அரசர். அவரை பார்த்த சக தர்மினியும் ஆடை என் சேலைக்கு மேட்ச் ஆக உள்ளது என்றாள்.
நெறைய கணவர்கள் பொண்டாட்டி பொய் சொல்ல மாட்டாள் என்று நம்புவது   போல இவரும் நம்பி விட்டார். நம் கண்ணுக்கு தான் ஆடை தெரியவில்லை போல என்று.    
அரசர் நகர் வலம் புறப்பட்டார். எல்லா மக்களும் அரசரின் ஆடை அருமை என்று பேசி கொண்டனர். அட அப்படி சொல்ல வில்லை என்றால் தான் நாம்  பொய் சொல்லுபவன் ஆகி விடுவோமே என்பதால்.   

நகர் வலம் தொடர்ந்தது.


அந்த வழியாக விளையாடி கொண்டு இருந்த சில சிறுவர்கள் இதை பார்த்தனர்.
அய்....அரசர் அம்மணமாக நகர்வலம் வருகிறார் என்று கத்தி கொண்டு ஓடினர்.
அரசருக்கு அப்போது தான் புத்தியில் உரைத்தது.

இந்த கதை சாரு நிவேதிதாவின் சினிமா சினிமா என்ற புத்தகத்தில் நான் படித்தது.
இந்த கதையை படித்த போது  எனக்கு நம்முடைய காலாசாரம் தான் ஞாபகத்துக்கு வந்தது.

இந்த கதை கலாசாரத்துக்கு மட்டும் பொருந்துவதில்லை.நம்முடைய   சமுதாய போலித்தனத்துக்கு இதை விட  சிறந்த உதாரணம் காட்ட முடியாது :)

 Also Refer :http://thanikaatturaja.blogspot.com/2010/11/blog-post_8153.html


இது எப்படி இருக்கு....ஹா ..ஹா ..ஹா      

2 கருத்துகள்:

  1. நானும் சாருவின் தளத்தில் படித்திருந்தேன். இதை ஒரு குறிப்பிட்ட நடிகருக்காகத்தான் கூறியிருப்பார். இல்லையா? :-)

    பதிலளிநீக்கு
  2. [co="blue"]ஆமாம் ஜி....நம் உலக்கை நாயகனை பார்த்து தான் கேட்டு இருப்பார்....உலக நாயகனே இதுதான் உன் உலக சினிமாவா என்று..?

    மறுமொழிக்கு நன்றி ஜி...:)[/co]

    பதிலளிநீக்கு