ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

காதல் என்ற கன்றாவி



காதல் என்பதில் பொய் இருக்கலாம். ஆனால் காமத்தில் பொய் ஏதும் இல்லை. பசி போல அது ஒரு இயற்கையான உணர்வு. அது அழகானதுதான்... புரியும் விதத்தில் புரிந்து  அனுபவிக்கும் விதத்தில் அனுபவித்தால். ..
தன் காதல் புனிதமானது என்று உளரும் சில அசடுகளை பற்றி ஆராய்வோம்.
ஆரம்ப கால சினிமாவில் காதல் என்பது எதோ புனிதம் போலவும், காமத்தை பற்றி பேசினாலே அவன் கெட்டவன், வில்லன் என்பது போல காட்டுவார்கள்.
பெண்ணை கற்பழிக்க வருபவன் வில்லன். காப்பாற்ற வருபவன் ஹீரோ.
தற்கால சினிமாவில் ஹீரோயின் அறிமுகத்தை பார்க்க வேண்டுமே. எதோ இவள் தான் தேவதை போலவும்...ஹீரோ இதுவரை பெண்களையே பார்த்து இராதவன் போலவும் ...அவளை பார்ப்பான். உடனே காதல் வந்து விடும்.

ஏன் ஹீரோயின் toilet -இல்  உக்கார்ந்து கொண்டு  motion  வராத சில நேரங்களில் முக்கி கொண்டு இருந்திருப்பாளே...அதை காட்ட வேண்டியது தானே...?

சரி இந்த ஹீரோ என்ன பெரிய யோகியா  என்று யோசித்து பார்த்தால்...

எந்த ஒரு மனிதனுக்கும் 15-30  வரை காமம் அதிகமாக இருக்கும். யோகியாலேயே அடக்க முடியாத  காமத்தை இந்த அசட்டு ஹீரோ அடக்கி கொண்டு இருப்பாரம்.
உண்மையில்  இந்த ஹீரோ சுய இன்பம் செய்பவனாக தான் இருக்க வேண்டும். காமத்தை அடக்கி கொண்டு இவர் காதல் மட்டும் செய்து கொண்டே இருப்பாராம். இது நடக்க கூடிய காரியமா?
   
[பாக்கியராஜ் போன்ற சிலர் தான் பாரட்ட தக்கவர்கள் . உண்மையை ஓரளவேனும் சொல்ல முன் வந்தவர்கள்.]

"காமங்கள் வந்து என் காதல் அல்ல
கண்டேனே உன்னை தாயாக"

இந்த பாடல் வரியை எந்த முட்டாள் எழுதினான் என்று தெரியவில்லை.
இது எல்லாம் கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும்.

காமத்தை அனுபவித்த பின் வேண்டுமானால் பெண்   தாயாக  தெரியலாம்.
 என் காதல் புனித காதல்...இதுவரை நான் எந்த பெண்ணையும் மனதால்  நினைத்தது இல்லை.பெண்ணை நினைத்து சுய இன்பம் கண்டது இல்லை என்று மனசாட்சியை  தொட்டு  சொல்லட்டும் .நான் இந்த பதிவை அழித்து விடுகிறேன்.

 காதலி என்ற பெயரில் சில அசடுகள் செய்யும் அலம்பல் இருக்கே...இவளுக மனதில் என்ன நினைத்து கொள்ளுவாள்கள் என்று தெரிய வில்லை.சப்பை பிகர்களை கூட நம்ம ஆள்கள் விட்டு வைப்பதில்லை.

காதல் என்ற பெயரில் அவளுக்கு  செல்போன் recharge  செய்வது,நாய் நாக்கை தொங்க போட்டு கொண்டு காத்து இருப்பதை போல காதலிக்காக பீச் -இல் காத்து கொண்டு இருப்பது.

ஏய்..யா    காதலிப்பதாக சொல்லும் காதல் மன்னனே....இதே உன் மேல் பாசம் வைத்திருக்கும் பாட்டிக்காக நீ வெத்தலை பாக்கு வாங்கி தந்து இருப்பாய...கொஞ்சம் யோசித்து பார்....

இதெல்லாம் காதல் இல்லை.... காமம் படுத்தும் பாடு.....

எனக்கு காமத்தை அனுபவித்த பின் தான் காதலே வருகிறது..

காமத்தில் பேதம் மறைகிறது....அதன் பின் நீங்கள் இயல்பாகவே அன்பானவராக இருந்தால் காதல் வரலாம்.
காமத்தை அனுபவித்த பின் காதல் வரவில்லை என்றால்....அதன் முன்னும் காதல் இல்லை என்று தான் அர்த்தம்.
 காதல் என்ற பெயரில் சில அசடுகளின் களின்
கவிதையை படித்தால் ....தலையை கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மிது முட்டி கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
 
உண்மையில் இருவர் பிரிந்து இருக்கும் போது தான் காதல்  வலுவாக உள்ளது போல தோன்றும்.

இருவர் காதலிகிரார்கள் என்று சொன்னால் அவர்களை தயவு செய்து  உடனே சேர்த்து வைத்து விடுங்கள் . ஆறு மாதத்தில்  அவர்களாகவே பிரிந்து விடுவார்க்ள. :)
 தற்காலத்தில் காதல் என்று சொல்லப்படுவது  வெங்காயம் மாதிரி தான். எதோ பெரியதாக தெரியும். உறிக்க உறிக்க ஒன்றும் இருக்காது.

என் புரிதல் படி 
உண்மையில் காதல் என்பது எதிர் பார்ப்பு அற்றது ...
 காதல் என்பது நம்மிடம் ஏற்கனவே நிறைந்து இருக்கும் உணர்வு.....
காதல் என்பது கொடுக்கல் வாங்கல் உறவு அல்ல ....ஆனால் அவ்வாறு நாம் புரிந்து வாழ்ந்து கொண்டிருப்பது நம் துரதிஷ்டம் ...
இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களிடமும் நாம் காதலாக  வாழ முடியும்..


இது எப்படி இருக்கு....ஹா ..ஹா ..ஹா     

2 கருத்துகள்:

  1. காமத்தை அனுபவித்த பின் காதல் வரவில்லை என்றால்....அதன் முன்னும் காதல் இல்லை என்று தான் அர்த்தம்.


    உண்மையை இதைவிட விளக்கமாக யாராலும் கூற முடியாது....

    நானும் இது போன்ற உண்மையை சமிபத்தில் தான் தெளிவாக தெரிந்து கொண்டேன் இன்னும் அதிகமாக தெரிய வைத்து விட்ட்டீர்கள்.

    நன்றி

    கோட்டைமுத்து

    பதிலளிநீக்கு