திங்கள், 19 ஜூலை, 2010

நான் ஏன் கடவுளானேன்.......























சுண்டெலி என் மூலாதாரத்தை 
கடித்ததில் குண்டலினி
ஆக்னா சக்கரத்தை வந்தடைந்தது.....
என்  கார் சக்கரத்தோடு ஆக்னா சக்கரத்தை
நெற்றி பொட்டில் வைத்து பஞ்ச பூதத்தையும்
கடந்தேன் .... அணுவில் நான் இருந்தேன்
என்னில்  'அணு'  இருந்தாள்.....
சர்வமும் நான் ஆக நான் கடவுளாளேன்.......

ஒருநாள் கொட்டாவி விடும் போது
சுண்டெலி எலி பொரிக்கு மாட்டாமல்
ஆக்னாவை கடித்ததில் குண்டலினி
மீண்டும் மூலாதாரத்தில் விழுந்தது ..
ரஞ்சித  மலரை முகர்ந்தால் தவறா ...?
'தந்திர' ஆராய்ச்சி செய்தால் தவறா...?  
இல்லை.....கேமராவை பார்க்காமல்
விட்டதுதான் தவறு என உணர்ந்தேன்...

 
சிறையில் சுண்டெலி என் மூலாதாரத்தை  
கடித்ததில் குண்டலினி
மீண்டும் ஆக்னா சக்கரத்தை வந்தடைந்தது....
நான் கடவுளாளேன்.....


நான் யார் ?














பூ ஆத்திகம்
தலை நாத்திகம்
நாணயம் நான்


காதல் மனைவி .....















விழி அம்புகளால்
காதல் வேல் வீச்சால்
நளினத்தால் கொன்றாள்  அன்று ....
சொல் அம்புகளால்
பூரிகட்டை வீச்சால்
நச்சரிப்புகளால்  கொல்கிறாள் இன்று...
 

வலது இடது























வலது புறம் வங்கக்கடல்
இடது புறம் அரபிக்கடல்
வரை படத்தை பார்த்து சொன்னார் ஆசிரியர் ....
பூமி உருண்டை மீது ஏறி
நின்று பார்த்தேன்.....
வலது இடது எதுவும் இன்றி
பூமி சுற்ற கிழே விழுந்தேன்..
வரை படத்தின் வலது புறமாய்...

பேரிளம் பெண்மை 






















மரணத்தை ஏற்று கொள்வது
ஆண்மை
மரணத்தை புன்னகையுடன் வரவேற்பது
பேராண்மை
அன்புடன் இருந்தால் 
பெண்மை 
அன்பாகவே இருந்தால்
பேரிளம் பெண்மை ...

20 கருத்துகள்:

  1. பெயரில்லா3:52 PM, ஜூலை 19, 2010

    சூப்பரோ சூப்பர்

    பதிலளிநீக்கு
  2. நன்றி பெயரில்லா.....
    நன்றி நியோ .....

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா4:23 PM, ஜூலை 19, 2010

    //சிறையில் சுண்டெலி என் மூலாதாரத்தை
    கடித்ததில் குண்டலினி
    மீண்டும் ஆக்னா சக்கரத்தை வந்தடைந்தது....
    நான் கடவுளாளேன்.....//

    கலக்குங்க.....சூப்பர்.

    பதிலளிநீக்கு
  4. //கலக்குங்க.....சூப்பர். //

    நன்றி ஜூனியர் தருமி ...

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா5:15 PM, ஜூலை 19, 2010

    //பூ ஆத்திகம்
    தலை நாத்திகம்
    நாணயம் நான்//

    தலையில பூ வைக்கலாம்
    ஆனா காதுல பூ வைக்கிறீயே ராசா...

    பதிலளிநீக்கு
  6. முதல் கவிதை புரியலிங்க....
    காதல் மனைவி கவிதை நல்லாயிருக்கு.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. //தலையில பூ வைக்கலாம்
    ஆனா காதுல பூ வைக்கிறீயே ராசா... //

    தலையில பூ
    காதுல பூ
    பூக்கூடை நான்

    பதிலளிநீக்கு
  8. //முதல் கவிதை புரியலிங்க.... //

    அய்யய்யோ ....நீங்க இவ்வளவு அப்பாவியா ? சிறையில் இருந்து ஞானம் பெற்று திரும்பிய நம்(?) நித்தியை பற்றி எழுதியது .....

    //காதல் மனைவி கவிதை நல்லாயிருக்கு.//

    அனுபவமோ ?

    //பாராட்டுக்கள்//

    நன்றி சி. கருணாகரசு

    பதிலளிநீக்கு
  9. கலக்குறீங்க தம்பி.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  10. கலக்கலா இருக்கு நண்பரே. கவித கவித ... ராசா ... உனக்குள்ள இம்புட்டு தெறமயா ?
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. //கலக்குறீங்க தம்பி.. பாராட்டுக்கள்.//

    நன்றி -னா.........

    //கலக்கலா இருக்கு நண்பரே. கவித கவித ... ராசா ... உனக்குள்ள இம்புட்டு தெறமயா ?
    வாழ்த்துக்கள்! //

    நன்றி Karthick ...

    பதிலளிநீக்கு
  12. எல்லம் எளிமையான, பொட்டில் அறகிரமாதிரியான கவிதைகள். பூரிக்கட்டை கவிதை ... ஹி ஹி சூப்பர்:)

    பதிலளிநீக்கு