வெள்ளி, 2 ஜூலை, 2010

பதின்ப வயது நினைவுகள்-II..


















கிணத்தை  விட்டு வெளிய வந்தவனை பார்த்து வெங்கட் கேட்டான் .
"ஏண்டா ...கால் ஸ்லிப் ஆச்சு உனக்கு ?".
அடுத்த நாள் headmaster  வகுப்புக்கு வந்து விட்டார்.யாரு எல்லாம் அந்த தோட்டத்துக்கு சாப்ட போறது ...எந்திரிச்சு   நில்லுங்க ...என்றார் .
நானும்  நிற்பதை பார்த்து விட்டு ....ஏன்பா நீயுமா...?[நான் தான் நல்லவனுங்களே... ] என்று கேட்டார்.
இனிமேல் யாரும் அங்கே செல்ல கூடாது என்றார்.அவர் சொன்னதற்கு மதிப்பு கொடுத்து   ஒரு வாரம்  அங்கே செல்லாமல் இருந்தோம்.
பத்தாம் வகுப்புக்குபிறகு  வெங்கட்டும் ,இளங்கோவும்  Third  குரூப்-ல்  சேர்ந்து விட்டாலும் ,அனைவரும் lunch  நேரத்தில் சந்தித்து கொள்வது வழக்கம்.


ஒன்பதாம் வகுப்பில் வந்து அமர்ந்ததும் பார்த்த முதல் நாளே ஒரு பெண்ணை என் மனதிற்கு  பிடித்து போனது .

அவள் அப்படி ஒன்றும் அழகில்லைதான். ஆனால் அவள் தன் பார்வையால்   தான் காணும்  எல்லாவற்றையும்  அழகாக்கி  கொண்டு இருந்தாள்.
அவள் சிரித்து விட்டு போனால் வானத்தில் மின்னும்  சில விண்மீன்கள் மறைந்து விடும். நான் நினைப்பது உண்டு ...அந்த விண் மீன்கள் தான் இவளின் சிரிப்பாக  அவதார மெடுத்தனவோ என்று .

அவள் வெக்கப்பட்டு  வாய் பொத்தி சிரிக்கும் அழகை  கண்டால் ,இந்த பூலோகம் முழுவதும் சுற்றி அதன் அழகை  ரசிக்க முடியாததற்கு  மாற்றாகாதான்  இவள் சிரிக்கிறாளோ என்று தோன்றும்.

கவிதை என்ற பெயர் வழக்கத்தில் இல்லாததால் அவளை கவிதா என்று அழைத்தார்கள்.அவளை  ஒரு பார்வை பார்த்தாலே   கவித(தா)ருவாள்.
 நான் அமர்ந்திருக்கும் பெஞ்சுக்கு நேர் பெஞ்சில் பெண்கள் சைடில் அவள்  அமர்ந்து இருப்பாள்.வகுப்பிற்கு   வாத்தியார் வராத சமயங்களில் அவளை தான் ரசித்து  கொண்டு இருப்பேன்.என்னுடைய நல்ல பையன் என்ற இமேஜ் இதற்கு  பெரிதும் துணையாக இருந்தது

நான் படித்த போது ஒன்பதாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை தாவணி அணிவது பழக்கமாக இருந்தது. ஆனால் பனிரெண்டாம் வகுப்பு வந்த போது பெண்கள் அனைவரும்  யூனிபார்ம்  சுடிதார் அணிய வேண்டும் என மாற்றி விட்டனர்.தாவணியில் கவிதா ரொம்பவே அழகு. நான் அவளை ரசித்து கொண்டு இருப்பதை   இளங்கோ இரண்டு மூன்று முறை பார்த்து விட்டு கேட்டான்."டே ...நீ கவிதாவை சைட் அடிக்கற ....இம் ...இருக்கட்டும் ".

 அவளை பார்த்து கொண்டு இருக்கும்  சமயங்களில் எல்லாம்  அவள் தன் தோழிகளுடன்  அப்படி என்னதான் பேசுவாள் என்று தெரியாது ,சிரித்து சிரித்து பேசிக் கொண்டே இருப்பாள். சில சமயம் தாவணி லேசாக விலகி இருப்பது கூட தெரியாமல் பேசிக் கொண்டே இருபாள்.நான் கலைக்கண் பார்வையோடு ரசித்தேன் என்று இந்த தொடருக்காககவோ ...அல்லது இமேஜ் காகவோ பொய் சொல்ல விரும்பவில்லை.

 [காமமும் காதலும் ஒன்றுடன் ஓன்று இரண்டற கலந்தது என்று நான் நினைத்தாலும்,சமுதாயத்தால்  காமம்  என்று சொல்லப்படும் சில நினைவுகளை நான் பதிவுக்கு கொண்டு வரவில்லை . இதோடு தொடர்புடைய யாரவது படிக்க நேர்ந்தால் அவர்களுக்கு  ஏற்று கொள்ளும் மன பக்குவம் எந்த அளவு இருக்கும் என்று தெரியாததுதான் இதற்கு காரணம்.].

எங்கள் வகுப்பில் சிவரஞ்சனி என்று ஒரு அழகான பெண்.எல்லோருக்கும் [நான் உட்பட]  அவள் மீது ஒரு கண் இருக்கும்.ஆனால் இளங்கோ -வுக்கோ  இரண்டு கண்ணும் அவள் மீது தான் இருக்கும்.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஜெயந்தி என்ற ஒரு பேரழகி எங்கள் வகுப்புக்கு வந்தாள். அவள் பேரழகி மட்டும் அல்ல ...படிப்பிலும் படு சுட்டி(எங்கள் வகுப்பிலிருந்து medical colleage சென்ற ஒரே பெண் ).இப்போது ஜெயந்தி,வித்யா என்று இரண்டு போட்டிகள்.இது மட்டும் அல்லாமல் தனபாலும்  நன்றாக படிப்பான்.பத்தாம் வகுப்பின் இறுதி தேர்வில் ஜெயந்தி முதல் மதிப்'பெண்'.நான் இரண்டாவது.     

அப்போதெல்லாம் என்னை 'நினைத்தேன் வந்தாய் ' விஜய் என்றும் ரம்பா,தேவயானி  போல வித்யாவையும் ,ஜெயந்தியையும்  வைத்து வெங்கட்டும்,பிரபுவும்  கலாய்ப்பது  உண்டு.

தனபால் ஜெயந்தியை காதலித்தும் அதற்கு அவள் No சொன்னதும் தனி கதை .கொங்கு குணா கூட ஜெயந்திக்கு ரூட் விட்டு பார்த்தது கூடுதல் சிறப்புச்  செய்தி.

பதினோராம் வகுப்பில் சேர்ந்த போது வித்யா,ஜெயந்தி,தனபால் மூவரும் Maths+biology தேர்வு செய்தார்கள்.நான் Maths+computerscience தேர்வு செய்தேன்,கவிதாவும் கூட அதையே தான் தேர்வு செய்து இருந்தாள். எல்லோரும் ஒரே வகுப்பில் இருந்தாலும்  Biology/Computerscience  period  மட்டுமே மாறும்.

பதினோராம்  வகுப்பில் இனிமேல் நமக்கு போட்டி கிடையாது ...நாம் தனி காட்டு ராஜா தான் என்று நினைத்துக் கொண்டு இருந்த போது  சாரதா மணி என்ற ஒரு பெண் வந்து சேர்ந்தாள் .இவளிடமும் அழகான அம்சம் எதோ ஓன்று இருந்தது.நன்றாக படிக்கவும் செய்வாள் .இவளும்  என் மனதிற்கு பிடித்த பெண்.

மேனகா என்ற ஒரு தகிரியமான பெண். நன்றாக படிக்கவும் செய்வாள்.இளங்கோ வணிகவியல் குருப்பில் படித்தாலும் , 'மேனகா  ஒரு நல்ல பெண்' என்று சொல்லிக் கொண்டு இருப்பான்.

மைனாவதி என்று ஒரு அழகான பெண்.மைனாவுக்கு நெறைய பேர் வலை விரித்து பார்த்தார்கள் . மோகனுக்கு மைனா மீது ஒரு கண்.கடைசியாக  அவனே சொன்ன தகவல் படி, மைனா  வேறு யாரோ ஒருவருடைய கூட்டில்  சிக்கிக் கொண்டது என்று.  

 
"ஒவ்வொரு பெண்ணும் ஓர் அழகு....அந்த பெண்ணுக்குள்ளே  நூறு அழகு"  என்று ஒரு பாடல் வரி வரும் ...அது உண்மை என்று தான் எனக்கும் தோன்றுகிறது.

அம்மா வாக ஒரு பெண் ஓர் அழகு ...
சகோதரியாக ஒரு  பெண் ஓர் அழகு ...
தோழியாக ஒரு  பெண் ஓர் அழகு ...
அனுஷ்காவிடம் உள்ள பேரழகு  ஓர் அழகு..
நமீதாவிடம் உள்ள மலைக்க வைக்கும் இரண்டழகு ஓர் அழகு ..
பார்த்து கொண்டே இருக்கலாம் என்று தோன்றும் சுனைனா  ஓர் அழகு..
என்னைக் காதலிக்க விட்டாலும் ...எல்லா அம்சமும் கொண்ட 'பெண் என்றால் இவள் தான் பெண்' என சொல்ல வைக்கும் பாவனா ஓர் அழகு ..

கவிதா அழகுக்கு எல்லாம் அழகு...வெட்கப்பட்டு  சிரிக்கும்   கணத்தில்.... 
 
அழகாய் தோன்றும்  அனைத்துப் பெண்களையும் ரசித்தாலும் [இதெல்லாம் ஒரு பொழப்பா-னு என் நண்பன் ஒருவன் அடிக்கடி கேட்ப்பான் ],என் மனதின் மையத்தில்  தாமரை மலர் போல  மலர்ந்து இருந்தாள் கவிதா என் பதின்ப வயது கால கட்டத்தில்....  
                                                                            -நினைவுகள் தொடரும்..  

4 கருத்துகள்:

  1. வாலிப வயசு... ம்ம்ம்ம்....

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. ம்.. தொடருங்கள்... நிறைய விசயங்களை எதிர்பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
  3. //நிறைய விசயங்களை எதிர்பார்க்கிறேன்.. //
    உங்க எதிர்பார்ப்பு புரியுது....இருந்தாலும் சித்தூர்.எஸ்.முருகேசன் அளவுக்கு உண்மையா எழுதலாமுனு நெனைச்சா..... என்னை எழுத சொன்ன சுரேந்தரன் அண்ணன் கோவிச்சுகுவாரு தோணுது.....

    நன்றி கே.ஆர்.பி.செந்தில்

    பதிலளிநீக்கு