செவ்வாய், 16 நவம்பர், 2010

கல்யாண விபச்சார கலாசாரம்















கலாசாரம் என்பது வெறும் கல்யாணத்தை அடிப்படையாக கொண்டது போலவும் ....கலாசாரம் அழுகிய தக்காளி போல கெட்டு போய் விட்டாதாகவும் வலையுலகில் சில கலாச்சாரவாதிகள்   குதிக்கின்றனர்.

இந்திய கலாச்சாரம்  என்பது முற்றிலும் வேறானது.நான் கலாச்சாரதிற்கு,ஒழுக்கத்திற்கு   எதிரானவன் அல்ல.
கல்யாணம் ,குடும்பம் என்பது அதில் ஒரு அங்கம் தான்.

கலாசாரம் கெட காரணமாக இருப்பதாக கூறப்படும்     லிவிங் டுகெதர் பற்றி விரிவாக இன்னொரு நாள்  விவாதிக்கலாம்.

கல்யாணம் என்ற விபச்சாரத்தை பற்றி பேசுவோம்.
சரியான விதத்தில் கட்டமைக்க பட்ட விபச்சாரத்தின் மறு பெயர் தான் கல்யாணம்.
விபசாரிக்கு ஒரு நைட் -க்கு விலை பேசினால் அவள் ஒரு குறிப்பிட்ட பணத்தை எதிர்பார்ப்பாள்.
கல்யாணத்தில் மனைவி கணவனின் சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பாள்.
அதே போல் ஆண் கல்யாணம் ,விபச்சாரம் இரண்டிலும் பெண்ணிடம் அழகை முக்கியமாக எதிர் பார்பான்.
இது அடிப்படையான எதிர்பார்ப்பு .இன்னும் etc ..உண்டு .   

கல்யாணம்  என்பது அன்பை அடிப்படையாக கொண்டது அல்ல.வியபாரத்தை அடிப்படையாக கொண்டது.
பொதுவாக கல்யாணம் எப்படி நிர்ணயிக்க படுகிறது?

தற்போது தமிழ் விபச்சார(கல்யாண) மாலை என்று சைட் உள்ளது அனைவருக்கும் தெரியும்.
இதில் ஒரு தரப்பு  விபச்சாரிகள்(மண மகள்)  என்ன எதிர் பார்க்கிரார்கள் என்றால்....விபசாரன்(மண மகன்)  USA ,UK -வில்  இருக்க வேண்டும் என்றும்...அப்புறம் அவர்கள் குலம்,மலம் சரியாக பொருந்தி வர வேண்டும் என்று பார்க்கிரார்கள் .இது போல பல தரப்பு எதிர்பார்ப்புகள் உண்டு ....!!!

அமெரிக்காவிற்கும் அன்புக்கும் என்னய்யா  சம்பந்தம் ....?
அடிப்படையில் அன்பால் யாரும் பிணைக்க படவில்லை,கல்யாணத்திலும் சரி ...விபச்சாரதிலும் சரி... அதனால் தான் விவாகரத்து அதிகரித்து விட்டது...

எனக்கு கல்யாணத்தின் மீதும் மரியாதை இல்லை ... விபச்சாரத்தின் மீதும் மரியாதை இல்லை ....எதாக இருப்பினும் அன்பினால் உறவுகள் பிணைக்க பட்டால் மதிக்கிறேன்.

கல்யாணம் ,விபச்சாரம் இரண்டுமே சொறி நாய் சாதி தான் ....இதில் எதை அடித்து விரட்டுவது ?எதை அணைத்து கொள்வது ...? பாவம் நாய்கள் .....வைத்தியம் தான் பார்க்க வேண்டும் ....!!!

நாம சொன்னா எந்த நாய் கேக்க போகுது ? இரண்டு சொறி நாய்களும் லொள் ,லொள்லு  மாத்தி மாத்தி குரைக்க தான் போகுது.
குரைக்கும் நேரம் போக மற்ற நேரங்களில்  எனக்கு நாய்களை பிடிக்கவே செய்கிறது.


Also refer:

http://thanikaatturaja.blogspot.com/2010/07/blog-post_09.html

25 கருத்துகள்:

  1. :)

    ரொம்ப கோபமா எழுதியிருக்கீங்க போல..

    ஒரு நட்புக்கு கூட நம்மால் விலை பேச முடியும்தான் அப்படி பார்த்தால்..

    நட்பு கூட நம் தேவை கருதியே தேர்ந்ட்தெடுக்கலாம்..

    ஆனால் எல்லா நட்பும் அப்படியா அமையுது?. இல்லையே..?

    ஆக நீங்க சொல்கிற அழுக்குகள் நம் கலாச்சார திருமண முறையில் இல்லாமலில்லை.. ஆனால் அது தோல்வி என்று சொல்ல முடியாது..

    இரு மனம் இணைந்தே உள்லது பல திருமணங்களில்..

    நல்ல பக்கத்தையும் பார்ப்போமே.

    பதிலளிநீக்கு
  2. //நல்ல பக்கத்தையும் பார்ப்போமே. //

    [co="blue"]நீங்கள் சொல்லுவதும் உண்மை தான்... நல்ல விஷயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை :-)[/co]

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா6:39 PM, நவம்பர் 17, 2010

    உங்க போஸ்ட்-அ படிச்சிட்டு ரொம்ப வருத்தப் பட்டேன். கருத்து வேற்றுமைகள் நிறைய இருந்தன.

    ஒரு விஷயம் என்னன்னா, பொதுவாக எல்லாரையும் இப்படிச் சொல்வதைத் தவிர்த்து, ‘சிலர்’ என்றோ ‘பலர்’ என்றோ குறிப்பிட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. //உங்க போஸ்ட்-அ படிச்சிட்டு ரொம்ப வருத்தப் பட்டேன். கருத்து வேற்றுமைகள் நிறைய இருந்தன. //

    [co="blue"]உங்க ஊர் பக்கம் வந்து கொசு வத்தி கேட்டால் .....கொசு வத்தி சுருளை எடுத்து தருவார்கள் ....
    ஆனால் கோவை ,ஈரோடு பக்கம் வந்து நீங்க கொசு வத்தி கேட்டால் ....கொசுவை வத்திபெட்டி( தீப்பெட்டி)யில் போட்டு தந்து விடுவார்கள்......:-))))
    ஏன் என்றால் நாங்கள் எல்லாம் எதையுமே மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து பழக்க பட்டவர்கள் :-))

    இப்படி தான் இடத்துக்கு இடம் கலாசாரம் ,கருத்து எல்லாம் வேறுபடும்....புரிதல் வேண்டும் :)

    கருத்து வேற்றுமைக்கு நன்றி தோழி :)[/co]

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா5:25 PM, நவம்பர் 18, 2010

    அன்பு என்றால் என்ன?

    அன்பில்லாமல் எல்லாமே விபச்சாரம் என்று போட்டுவிட்டீர்கள்.

    அன்பு என்றால் என்ன?

    ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அன்பே பிரதானம் என்கிறீர்கள். அப்படிப்பட்ட அன்பு என்றால் என்ன?

    ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்வது எதற்காக என்று நினைக்கிறீர்கள்?

    அன்புக்காகவா/

    அப்படி உங்களுக்கு யார் சொன்னாரகள்?

    ஆண் பெண்ணின் உடம்பிற்காக என்கிறீர்கள்!

    பெண் ?

    ஏன் வெறும் உடம்புதான் கலியாணத்தில் என்றால், கலியாணம் நடந்த நாள் முதல் உடலில் சூடு தணியும் வரையில் -அது எத்தனையோ வருடங்கள் கழித்து! - இரவு,பகல் என்னேரமும்...!

    பண்ணலாமே?

    பசிக்கிறதா?

    வேலைக்க்போய் சமாத்தித்துவிட்டு பணத்தைவைத்து ஆக்கிச்சாப்பிட்டுவிட்டு, பண்ணிக்கொண்டேயிருக்க்லாமே?

    அதாவது சாப்பாடு, செக்ஸ் - இரண்டுதானே?

    செய்யலாமே?

    அதுதானே உங்கள் கலியாணம் என்கிறீர்கள்?

    உண்மையாங்க?

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நல்லா வரவேண்டிய கட்டுரை...அவர்களை போலவே உணர்ச்சி வசப்பட்டு எழுதி காலிபண்ணீட்டிங்க....

    பதிலளிநீக்கு
  7. [co="blue"]பெயரில்லா நண்பா ,

    நீங்களே சொல்லுங்கள் ......இன்று கல்யாணம் (கலாச்சாரம்) என்ற பெயரில் சமுகத்தில் என்ன நடந்து கொண்டு உள்ளது ....???

    எங்கு எல்லாம் புரோக்கர் இடையில் வருகிரார்களோ....அங்கே வியாபாரம் தான் வரும் ...அன்பு எப்படி வரும் ?
    நம் சமுகத்தில் காதல் திருமணம் என்பதற்கு இன்று வரை கூட எதிர்ப்பு இருந்து வருகிறது ....இது எதை காட்டுகிறது?
    அன்புக்கு கலாச்சாரம் எதிரி .....வியாபாரத்துக்கு ஆதரவு என்பதை தானே ??

    நீங்கள் கணவன் மனைவி இருவரையும் கவனித்து பாருங்கள் ......

    வெறும் வெளி தோற்றத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு இணைபவர்களின் கல்யாண ஆயள் ஒரு அதிகபட்சம் 10 வருடம் இருக்கும் . வெளி தோற்றம் விரைவில் மாறி விடும் .

    மனம் மொத்த தம்பதிகள்,ஒரே அலை வரிசை என்று சொல்லுபவர்களின் கல்யாண ஆயள் ஒரு 10 to 20 வருடம் இருக்கும்.ஏன் என்றால் மனம் சலிப்பு தன்மை கொண்டது.விரைவில் மாற்றத்தை விரும்பும். நீங்கள் உங்கள் மனதை கவனித்து பாருங்கள் புரியும் .

    மனம் ஒத்து பின் உணர்வால் இணைபவர்கள் வாழ் நாள் முழுவதும் சேர்ந்து வாழ வாய்ப்பு அதிகம்.

    உணர்வு மற்றும் சக்தி நிலையால் இணையும் உறவுகள் ஜென்மங்கள் தோறும் கூட தொடரலாம் ...இது தான் உண்மையான இந்திய யோக கலாசாரம் என்பது ...:)

    எதோ ஊருக்கு கலாசாரம் ,குடும்பம் என்ற பெயரில் விவாகரத்து பெறுவதற்கு விரும்பாமல் ,பெயருக்கு கணவன் மனைவியாக வாழ்பவர்கள் நெறைய பேர் உண்டு ...

    நான் கல்யாணம் ,விபசாரம்,லிவிங் டுகெதர் எதற்கும் எதிரி அல்ல .....அடிப்படையில் அன்பு இருந்தால் .......

    நான் சொல்ல வருவது இதை தான் ....நீங்கள் கல்யாணம் என்ற பெயரில் வியாபாரம் செய்து கொண்டு .....மேற்கத்திய கலாச்சாரம்,விபசாரம் போன்ற வற்றை கேவலம் என்றும் .....நீங்கள் எதோ புனிதர் போலவும் வேஷம் போட்டு கொண்டு இருக்காதிர்கள் என்பதை தான் ....

    நீ முதுகில் அழுக்கை வைத்து கொண்டு ...மற்றவன் முன்புற அழுக்கை பார்த்து விட்டு ,உன் எச்சிலை நிலத்தில் துப்பி விட்டு செல்லாதே என்பது தான் ...[/co]

    பதிலளிநீக்கு
  8. //ரொம்ப நல்லா வரவேண்டிய கட்டுரை...அவர்களை போலவே உணர்ச்சி வசப்பட்டு எழுதி காலிபண்ணீட்டிங்க....//

    [co="blue"]உணமைதான் ராஜா...[அட ...என்ன மாதிரியே ஒரு ராஜா]

    உண்மையில் இந்த மாதிரி கட்டுரை எழுதும் எண்ணம் ஏதும் எனக்கு இல்லை..[/co]

    [co="red"]ஒரு பதிவர் லிவிங் டுகெதர் கலாச்சாரம் - இதுதாண்டி விபச்சாரம் என்று எழுதி இருந்தார்..

    "தமிழ் கலாச்சாரத்தை மதிக்காதவர்கள் இந்தியாவில் பிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையில் பிறக்காதவர்களாய் இருக்க கூடும்....என்று எழுதி இருந்தார் ..."

    இது மிக தரம் தாழ்ந்த எழுத்து நிலை ...[/co]

    [co="blue"]இதில் உணர்ச்சி வசப்பட்டு குறுகிய நேரத்தில் எழுதிய பதிவு தான் இது....
    நல்ல வேலை தோழி (!?) ஒருவர் chat -ல் வந்தார் ...கூல் ஆனதால் ....உணர்ச்சி வசப்பட்டதில் பாதியை குறைத்து கொண்டேன் ....:)

    இல்லைனா ...நீ சிவ பெருமான் மாதிரி நெற்றி கண்ணை திறந்து விடுவாயா என்று கேக்க கூடாது :-)))) [/co]

    பதிலளிநீக்கு
  9. எங்கு எல்லாம் புரோக்கர் இடையில் வருகிரார்களோ....அங்கே வியாபாரம் தான் வரும் ...அன்பு எப்படி வரும் ?
    நம் சமுகத்தில் காதல் திருமணம் என்பதற்கு இன்று வரை கூட எதிர்ப்பு இருந்து வருகிறது ....இது எதை காட்டுகிறது?
    அன்புக்கு கலாச்சாரம் எதிரி .....வியாபாரத்துக்கு ஆதரவு என்பதை தானே ??///

    அன்பரே! நல்ல தீம் இன்னும் செழுமையாக அடிச்சி இழுத்து கொண்டு வந்திருக்கலாம், ஆனந்த விக்க்கிடன்ல கொண்டு வார ரேஞ்சிற்கு... ஆனா, இருக்கிற நிலமைய வைச்சு கொஞ்சம் ச்சூடா இறக்கிட்டீங்க சரக்கை. :-)

    பதிலளிநீக்கு
  10. ஒரு சூடான விவாத்தை கிளப்பி விட்டிருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  11. //அன்பரே! நல்ல தீம் இன்னும் செழுமையாக அடிச்சி இழுத்து கொண்டு வந்திருக்கலாம், ஆனந்த விக்க்கிடன்ல கொண்டு வார ரேஞ்சிற்கு... ஆனா, இருக்கிற நிலமைய வைச்சு கொஞ்சம் ச்சூடா இறக்கிட்டீங்க சரக்கை. :-)//

    [co="blue"]உண்மை தான் அன்பரே!ஆனந்த விகடன்ல வாரட்டி என்ன .....உங்களைப் போன்ற அன்பர்களின் ஆதரவு ..எனக்கு மகிழ்ச்சி அளிக்கவே செய்கிறது....நன்றி தெகா:)[/co]

    பதிலளிநீக்கு
  12. //ஒரு சூடான விவாத்தை கிளப்பி விட்டிருக்கிறீர்கள்..//

    [co="blue"]அதெல்லாம் ஒன்றும் இல்லை கவிதை காதலன் அவர்களே .....நானும் சுனைனாவை .... இச்சே.....கவிதையை காதலித்து கொண்டு இருந்தவன் தான் .....சும்மா ..வலைத்தளத்தில் நடக்கும் இந்த கலாசார விவாதத்தை வேடிக்கை பார்க்க சென்றவன் தான் ....சிலரின் முட்டாள் தனமான கருத்தை பார்த்து நானும் இது பற்றி என் கருத்துகளை பதிவு செய்தேன்...அவ்வளவு தான் :)[/co]

    பதிலளிநீக்கு
  13. சூடோ சூடு உடனடி சூடு. ஏன் இவ்வளவு கோபம் அந்த விஷயத்தில்

    பதிலளிநீக்கு
  14. யார் மேலோ இருக்கும் கோபத்தை இங்கு காட்டி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  15. மிக நல்ல பதிவு... வாழ்த்துக்கள்...!

    தயவு செய்து என்னக்கு போன் செய்யாதிங்க .....! ப்ளீஸ் .....
    http://erodethangadurai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  16. இன்னாபா நல்லாதானே போய்கினு இருந்திச்சி...
    கல்யாணம்ன்றே.. விபச்சாரம்ன்றே.. அபச்சாராம்ன்றே.. ஒண்ணும் நம்பளுக்கு பிரியல.. இன்னா கோபம் உனக்கு.. அல்லாத்தையும் உடு... சாயங்காலம் பீச்சுபக்கம் வா... சரக்கடிச்சுட்டு பேசி தீத்துக்கலாம்...

    பதிலளிநீக்கு
  17. தலைவா.. என்ன, ரொம்ப நாட்களாக உங்களை பார்க்க முடியல???

    பதிலளிநீக்கு
  18. //தலைவா.. என்ன, ரொம்ப நாட்களாக உங்களை பார்க்க முடியல??? //

    [co="blue"]இப்ப எல்லாம் ஆபீஸ்ல வேலை பார்க்க சொல்லராங்க சரவணா ....இது ஒரு காரணம் ...

    அப்புறம்...
    கவிதை என்ற பெயரில் நான் செய்த காமடி போதும் என்ற மனநிலை வந்து விட்டது..
    எனக்கு இலக்கியம் படிப்பதில் மட்டுமே ஆர்வம் ....எழுதுவதில் ஆர்வம் இல்லை..
    அப்புறம் அரசியல்,நாத்திகம் , ஆத்திகம் ,பகுத்தறிவு .சமுக விழிப்புணர்வு என விமர்சனம் செய்யலாம் என்றால் ....எதுக்கு தேவை இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு மனதை,உடம்பை கெடுத்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது ..:))
    அப்புறம் சினிமா விமர்சனம் செய்யலாம் என்றால்....இதற்காகவே வலையுலகில் நெறைய ராமராஜன்கள் உள்ளனர் ...நாமும் ஏன் அவர்கள் வரிசையில் சென்று இணைய வேண்டும் என்று தோன்றுகிறது :))
    அப்புறம் ஆன்மிகம் பற்றி எழுதலாம் என்று நினைத்தால் நான் சொல்ல நினைப்பதை விட எல்லாம் பல மடங்கு உணர்ந்து அருமையாக ஓஷோ,JK போன்றோர் சொல்லி சென்று விட்டார்கள்...
    சரி அஜால் குஜாலாக எழுதலாம் என்று பார்த்தால் .....அதற்கு நம்ம தல சித்தூர் முருகேசன் இருக்காரு.....:))
    பதிவுலகில் புரட்சி செய்யலாம் என்று யோசித்து பார்த்ததில் ....பதிவுலகில் நான் எழுதாமல் இருப்பது தான் புரட்சி என்று தோன்றியது ....எனவே கடையை மூடிவிட்டேன்...:))

    பதிவுலகில் நான் பார்வையாளனாய் இருக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்..[நம்ம அண்ணன் சுரேந்திரன் முகத்துல சிரிப்பை பாரு ...அண்ணே நீங்க தகிரியமா எழுதுங்க :)) ]

    பதிவுலகில் எனக்கு ஆதரவு(!) அளித்த அனைவருக்கும் என் நன்றிகள் பல ....
    சரி சரவணா....உன்னோட பதிவுலக இலக்கிய சேவை தொடரட்டும் ...வாழ்த்துக்கள் :)
    [/co]

    பதிலளிநீக்கு
  19. //எதாக இருப்பினும் அன்பினால் உறவுகள் பிணைக்க பட்டால் மதிக்கிறேன்.//

    அன்பும் ஒரு விதமான விபச்சாரம் தான் என்பது என் கருத்து...

    பதிலளிநீக்கு
  20. என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க?? உங்களையே மலை போல் நம்பிக்கொண்டு இருக்கும் எங்களை போன்ற பல லட்ச வாசக ரசிகர்களின் நிலைமை என்னாவது??... :)

    ஏதாவது எழுதுங்க பாஸ்...

    நீங்கள் மீண்டும் கடையை திறக்கிறீங்க, மீண்டும் வியாபாரம் பண்றீங்க (இல்ல) பண்றோம்.

    //ஆபீஸ்ல வேலை பார்க்க சொல்லராங்க// என்ன தைரியம் இருந்தா அப்படி சொல்வாங்க. அதுவும் நம்ம சங்கத்து உறுப்பினரை பார்த்து. யாரு சொல்லுங்க தூக்கிடலாம்.

    பதிலளிநீக்கு
  21. //அன்பும் ஒரு விதமான விபச்சாரம் தான் என்பது என் கருத்து...//

    [co="blue"]உண்மைதான் சீனு....இன்று சமுதாயத்தில் அன்பு ,காதல் என்று சொல்லபடுவது எல்லாம் ஒருகோணத்தில் பார்த்தால் விபச்சாரம் தான்..

    ஆனால் நான் இங்கே அன்பு என்று சொன்னது அந்த அர்த்தத்தில் அல்ல..
    உண்மையில் அன்பு என்பது எதிர் பார்ப்பு அற்றது ...
    உண்மையில் அன்பு என்பது நம்மிடம் ஏற்கனவே நிறைந்து இருக்கும் உணர்வு.....
    அன்பு என்பது கொடுக்கல் வாங்கல் உறவு அல்ல ....ஆனால் அவ்வாறு நாம் புரிந்து வாழ்ந்து கொண்டிருப்பது நம் துரதிஷ்டம் ...
    இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களிடமும் நாம் அன்பாக வாழ முடியும்....:) [/co]

    பதிலளிநீக்கு
  22. //என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க?? உங்களையே மலை போல் நம்பிக்கொண்டு இருக்கும் எங்களை போன்ற பல லட்ச வாசக ரசிகர்களின் நிலைமை என்னாவது??... :) //

    [co="blue"]
    என்ன செய்வது...... பதிவுலக சூப்பர் ஸ்டார் [:-)) ] தனி காட்டு ராஜா....ஞானோதயத்தை தேடி பரங்கி மலை ....அட ச்சே.....இமய மலை செல்லலாம் என்று முடிவு செய்து விட்டார் ...

    பிரபஞ்ச தளபதி [:-))] தனி காட்டு ராஜா ஒரு தடவ முடிவு பண்ணிட்டாருணா ...அவரு பேச்ச அவரே கேக்க மாட்டாரு...[/co]

    //நீங்கள் மீண்டும் கடையை திறக்கிறீங்க, மீண்டும் வியாபாரம் பண்றீங்க (இல்ல) பண்றோம்.//

    [co="blue"]ஒருபுறமோ பரங்கி மலை என்னை அழைக்கிறது....
    இன்னொரு புறமோ இமய மலை என்னை அழைக்கிறது ....

    நான் என்ன செய்வேன் ....?
    இரண்டு மனம் வேண்டும் என இறைவனிடம் கேட்பதா .....:))

    நிர்வாண உண்மைகள் என்று மற்றொரு தளம் உள்ளதே .....நம்ம தல சித்தூர் முருகேசன் அவர்களின் தளம் ....நானும் டீம் மெம்பெர் ஆக உள்ளேன் .....எழுதியே ஆக வேண்டும் எனில் அதில் எழுதுவேன் சரவணா ....:)[/co]

    பதிலளிநீக்கு
  23. இந்த பதிவை சிரிசிகிட்டே தான் படிச்சேன்:) நல்ல இருக்கு.... உண்மையான அன்ப பத்தி கொஞ்சம் விளக்குவீர்களா? :)

    பதிலளிநீக்கு