வெள்ளி, 7 மே, 2010

கடவுளை பற்றி தர்க்கம் செய்யும் முன் ஒரு வேண்டுகோள் ....தர்க்கம் என்ற கத்தியை வைத்து கொண்டுள்ள மூடர்களே,குருட்டு நம்பிக்கை மட்டுமே ஆயுதமாக கொண்டுள்ள மூடர்களே,


கடவுளை பற்றி தர்க்கம் செய்யும் முன் ஒரு வேண்டுகோள் .........


இதுவரை எவன் ஒருவனாவது "சுமார் 20 ஆண்டுகள் என் சுய தேடல் மூலம் நான் அறிந்த எல்லா வழிகலிலும் முயன்று பார்த்து விட்டேன் .....கடவுளை என்னால் உணர முடியவில்லை .....கடவுள் என்ற கோட்பாடு பொய்யாகதான் இருக்க வேண்டும் " என்று கருத்து சொல்லி உள்ளானா??


தர்க்க அறிவு கொண்ட முட்டாள்கள் ,பிழைப்புக்காக எதாவது வேலை செய்ய வேண்டியது ....மற்ற நேரங்களில் நெறைய புத்தகங்களை உருட்ட வேண்டியது .........மண்ட கணம் அதிகம் ஆன மாதிரி தெரியும் போது...blog –இல் பதிவு போட ஆரம்பிக்க வேண்டியது ...........


குருட்டு நம்பிக்கை கொண்ட முட்டாள்கள் பற்றி என்னை விட தர்க்க அறிவு கொண்ட முட்டாள்களுக்கு தான் அவரிகளின் மூட தனங்கள் பற்றி அதிகமாக தெரியும் ............
தாயன்பு பற்றி தர்க்கம் செய்து உணர முயற்சி செய்யும் மூடர்களே ...........


தாயை தர்க்கம் என்ற கத்தியால் குத்தி கிழித்து பார்த்து பின் ,இது வெறும் சதை ,தாய் என்ற ஒன்றே இல்லை என தர்க்கம் செய்யும் மூடர்களே,

No No …. அந்த இசம் இந்த இசம் பக்கத்து வீட்டு ஆன்டி இசம் என இசம் கொண்ட மூடர்களே ........

"வெங்காயம் மிக பெரியது" என தினமும் 5 முறை சொல்லி கொள்ளும் குருடர்களே....

கல்லுக்கு அபிசேகம் செய்து அதில் உணர்வை தேடும் கல் நெஞ்சர்களே....
தனக்கு மட்டும் தான் .....உள்ளது என சொல்லி கொள்ளும் ஆணவகாரர்களே ...

கூட்டத்தை தவிர்த்து சுய தேடல் என்றால் என்ன என்று உங்கள் யாருக்கும் தெரியாதா ..........????


முக்கிய  குறிப்பு :இது படிபவர்களை,மத உணர்வாளர்களை புண் படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது ...அப்படி புண் படவில்லை எனில் ..எங்காவது சுவரில் உங்கள் கால்களை இடித்து புண் படுத்தி கொள்ளவும் ....

10 கருத்துகள்:

 1. ஏன் இந்த கொலைவெறி..ஏன் இவ்வளவு கடுமை? யார் மேல் இந்தக் கோபம்?

  பதிலளிநீக்கு
 2. ராதை,

  சிலர் தங்கள் மத கடவுள் மீது வெறியாக உள்ளார்கள் .........சிலர் கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு வெறியாக உள்ளார்கள் ..........

  கடவுள் மீது தர்க்கம் பேசுபவர்கள் தான் இந்த மாதிரி உள்ளார்கள் .........தன்னை(கடவுளை) உணர சுய தேடலில் உள்ளவர்கள் யாரும் தர்க்கம் வீண் என உணர்ந்து உள்ளார்கள் ............

  ஏதோ சமூக முடதனத்தின் மீது உள்ள கோபத்தில் என் சுய ஆறுதலுக்காக எழுதியது ...........

  மத்தபடி இதனால் யாரும் திருந்த போவதில்லை ......வேண்டுமானால் நான் திருந்தி பதிவு போடாமல் இருந்து கொள்ள வேண்டியதுதான் ...

  பதிலளிநீக்கு
 3. //மத்தபடி இதனால் யாரும் திருந்த போவதில்லை ......வேண்டுமானால் நான் திருந்தி பதிவு போடாமல் இருந்து கொள்ள வேண்டியதுதான் ...//

  தேன்வந்து பாயுது காதினிலே.. இந்த நல்லது எப்போ நடக்கும்...

  பதிலளிநீக்கு
 4. //தேன்வந்து பாயுது காதினிலே.. இந்த நல்லது எப்போ நடக்கும்... //

  நாற்காலிக்கு கால் இருக்குதுன்னு அத நடக்க சொன்னா அது நடக்குமா ??
  அந்தமாதிரி தான் நான் திருந்துவது ஒரு காலும் நடக்காது -னா ..............

  பதிலளிநீக்கு
 5. கடவுள் உங்க பக்கத்துவீட்டுகாரரா!?
  இம்புட்டு கோவம் வருது?

  எல்லாம் வல்ல கடவுளை வந்து அதே கத்தியால எங்களை குத்தி கிழிக்கட்டுமே!
  அதை செய்யாம அவர் எந்த ஆண்டியிஷத்தோட கும்மிடடிச்சிகிட்டு இருக்காரு!?

  பதிலளிநீக்கு
 6. //எல்லாம் வல்ல கடவுளை வந்து அதே கத்தியால எங்களை குத்தி கிழிக்கட்டுமே!
  அதை செய்யாம அவர் எந்த ஆண்டியிஷத்தோட கும்மிடடிச்சிகிட்டு இருக்காரு!? //

  கடவுள் என்ற வார்த்தையை விடுங்கள் ....நீங்கள் தர்க்கம் செய்து போதுமான அளவுக்கு damage செய்து விட்டிர்கள்....
  படைப்பு என்று வைத்து கொள்வோம் ....
  நான் ஒரு படைப்பு ...நீங்களும் தான் ....
  நானும் ஒரு பெண்ணும் (மனைவி யாக கூட இருக்கலாம்) சேர்ந்து ஒரு குழந்தையை படைக்க முடிகிறது ..
  அப்படியானால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் படைப்பு தன்மை உள்ளது .....அதை உணர முற்படுவோமே ....
  சுய தேடல் இருந்தால் தர்க்கம் இல்லை ...
  படைப்பு பற்றிய மூடதனத்தை அல்லது படைப்பு இல்லை என்று எதிர்க்க தர்க்கம் தேவை ...

  நான் படைப்பை உணர சுய தேடல் உள்ளவனாக இருக்கலாம் ....நீங்கள் படைப்பு இல்லை என்று தர்க்கம் புரிபவராக இருக்கலாம் ........
  தர்க்கம் செய்ய நான் தயாரில்லை .....
  சுய தேடல் புரிய நீங்கள் தயாரில்லை என்று நினைகிறேன்....

  பதிலளிநீக்கு
 7. சுயதேடல்னு தேடி தேடி காணாம போயிராதிங்க! கண் முன் உலகம் விரிந்து கிடக்கிறது, கடக்க வேண்டிய தொலைவும் அதிகம்!

  பதிலளிநீக்கு
 8. //சுயதேடல்னு தேடி தேடி காணாம போயிராதிங்க! கண் முன் உலகம் விரிந்து கிடக்கிறது, கடக்க வேண்டிய தொலைவும் அதிகம்! //

  இதையும் நான் mind -ல வச்சுகறேன்.............

  பதிலளிநீக்கு
 9. //கல்லுக்கு அபிசேகம் செய்து அதில் உணர்வை தேடும் கல் நெஞ்சர்களே...//
  கல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் அதில் உணர்வு இருக்கிறது என்று பாவித்தால் உணர்வு சத்தியமாய் இருக்கிறது.பின்னர் கல்லும் இல்லை. கல் நெஞ்சமும் இல்லை.

  எதேச்சையாக இங்கே வர நேரிட்டது. கடந்த ஒன்றரை மணி நேரமாக உங்கள் பதிவுகளை படித்து சிரித்து கொண்டிருந்தேன்.
  மிக்க நன்றி. :-)
  ~
  ராதாமோகன்

  பதிலளிநீக்கு
 10. நன்றிங்க ராதாமோகன் ...
  அவ்வளவு சிரிப்பாவ இருக்கு என் எழுத்து ???????

  பதிலளிநீக்கு