செவ்வாய், 25 மே, 2010

இந்த கதைக்கு இதுதான் தலைப்பு -II
நான் எதிர் பார்த்தது போல் அல்லாமல்  சங்கர்  சிஸ்டத்தில்  எதோ pdf டாகுமென்ட் படித்துக் கொண்டிருந்தான் . என்னை பார்த்தவுடன்   கேட்டான் .

"என்னடா மச்சான் இந்த பக்கம் ..." -இது சங்கர்.

"சும்மா என் கேர்ள் பிரன்ட்ட பார்க்க இந்த பக்கமா வந்தேன் மாப்ள ,அப்படியே உன்னையும் பார்த்துட்டு போலாமுனு வந்தேன்."-இது நான்.

"மச்சான் சொல்லேறேனு  கொவுசுச்காத...உனக்கு   வெக்கமே கிடையாதாட ?"

"என்னடா இப்படி கேக்கற ..?"

"நீ colleage  படிக்கறப்பவே இரண்டு ,மூணு பொண்ணுககிட்ட வழிஞ்சு பார்த்த ...எவளுமே உன்ன மதிக்கல ...இப்ப மட்டும் எப்படி ?"

"அது வந்து..."

"சரி..உன் கேர்ள் ப்ரண்ட   பார்க்க ஜோசப் எதுக்கு ..?"

"அது வந்து..."

"சரி விடு.. மச்சா...சைடுல வேற  வேலை ஏதும் பார்க்கலையே ..?"

 "என்ன மாப்ள.. ரூம்ல நீ மட்டும் இருக்கற ...அப்துல் எங்க?"

"அவன் கடைக்கு போயிருக்கான். "

"உன் ரூம்ல மீசைய   ஒழுங்கா  ட்ரிம் பண்ண தெரியாத   சண்டியன் ஒருத்தன் இருப்பானே மாப்ள..அவன் எங்க..?"

"அவன் இப்ப மீசைய எடுத்துட்டாண்டா.."

"அவன மீசையோட பார்த்தாவே   சகிக்காதேடா...எதுக்கும் வண்டலூர் பக்கமா போக வேண்டாமுன்னு நான் சொன்னதா சொல்லு ..ஆமா ஏன் மீசைய எடுத்தான் ..."

"அவனோட  lover -க்கு மீச பிடிக்காதாமா..."

"சரி அவளுக்கு பிடிக்கலனா  ...அவளோட மீசைய எடுத்துக்க சொல்ல வேண்டியது தானே ..."

"புரியுதாட மச்சான் ...உனக்கு  ஒரு லவ்வர்    இல்லன்னு கடுப்பலதானே   இப்படி சொல்லற ..."

"பொதுவா சொன்னேன் ..."

"சரி மச்சான் ...சாப்பட போலாமா ...."

"எங்கடா மாப்ள  ...அஞ்சப்பருக்கா ...."

"சரி நீ pay  பன்றதா இருந்தா சொல்லு ...அங்கேயே போலாம் ..."

"அங்க A /C  மட்டும் தான் கூலா இருக்கும் மாப்ள ...ஆந்தரா மெஸ்-க்கு போலாம் வா ...."

"எனக்கு தெரியுமடா  மச்சான் ...நீ பர்சுல 100 ரூபாய்க்கு  மேல வச்சு இருக்க மாட்டேனு ....."

வீட்டை லாக் செய்து விட்டு  அருகில் இருந்த ஆந்தரா மெஸ்ஸை நோக்கி மூவரும் நடந்தோம் .

50 ரூபாய்க்கு ஒரு unlimited meals   -யை  ஒரு கட்டு கட்டிவிட்டு   வீ ட்டுக்கு -க்கு  மூவரும் பேசிக்கொண்டே நடை போட்டோம் .
வீடு திறந்து கிடந்தது....
                                                                                                                     -பயணம் தொடரும் ..

2 கருத்துகள்:

 1. ஆஹா... இப்படி எல்லாம் suspense வெச்சா நல்லா இல்ல சொல்லிட்டேன்....சீக்கரம் சொல்லுங்க...

  பதிலளிநீக்கு
 2. //ஆஹா... இப்படி எல்லாம் suspense வெச்சா நல்லா இல்ல சொல்லிட்டேன்..//

  பைக்க திருப்பின மாதிரி ..கதைய திருப்பு திருப்பு -னு திருப்பலாமுனு இருக்கேன் ..
  நீங்க நெசமாலுமே அப்பாவி- யா ? இல்ல அப்"பாவி" யா ??
  தங்கள் வருகைக்கு நன்றி ........

  பதிலளிநீக்கு