புதன், 26 மே, 2010

இந்த கதைக்கு இதுதான் தலைப்பு -III





"என்னடா மாப்ள ...வீடு 'கதவை தொற..காற்று வரட்டும்' கணக்கா தொறந்து கிடக்குது .."

"அப்துல் வந்து இருப்பான்டா.."

"அது தானே பார்த்தேன் ...உன் ரூம்ம தொறந்து போட்டுருந்தா கூட ஒரு நாயும்  வராதே.."

"அது எனக்கும் தெரியும் மச்சான் .."

"மாப்ள... evening எங்கயாவது போலாமாடா..மெரினா பீச்.."

"வானம்  மேக மூட்டமா  இருக்கேடா..மாயாஜால் போலாமா.."

"மாப்ள.. மாயாஜால் போனா  250  ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கனுமடா .."

"சரி ..அப்ப பீச்சுக்கே போலாம் .."

அப்துல் தூங்கி கொண்டு இருந்தான் ...நாங்கள் மூவரும்   ஒரு குட்டி தூக்கம்   போட்டோம் .
 நாலு மணிக்கு கெளம்ப ஆயத்தம் ஆனபோது அப்துலும் எங்களோடு சேர்ந்து கொண்டான்.



மெரினா பீச் வந்து சேர்ந்த போது மாலை ஐந்து மணி.

"என்னடா  சனிக்கிழமை கூட எறும்பு கூட்டம் மாதிரி இவ்வளவு கூட்டம் மொஞ்சுது..இத்தனைக்கும்  வானம் மழை வர்ற மாதிரி இருந்தும் .." இது ஜோசப்.

"நான் வரணு யாருக்கும்  சொல்லாமையே இவ்வளவு  கூட்டமா .."-இது சங்கர்

 எம். ஜி.ஆர்   சமாதி யில் சிலர் இன்னமும் அவர் கட்டியிருந்த வாட்ச் ஒடுவதாக சொல்லி காது வைத்து கேட்டு கொண்டிருந்தனர் .
அதை பார்த்து விட்டு சொன்னேன் .."இவனுக எல்லாம் எப்படா    திருந்துவாணுக..."

"நீ தூங்கறப்ப எப்ப குறட்டை  போடறதை  நிறுத்தரையோ அப்பா இவங்களும் திருந்தீருவாக .."  -இது ஜோசப்
"டே..ஜோசப் இன்னா வரைக்கும் அமைதியா தானே வந்தே ....நான் கடனா வாங்கிட்டு உனக்கு குடுக்காத 30 ரூபாய் கீது உன் ஞாபகத்துக்கு வந்துட்டுச்சா ..." 
"5  ரூபாய் கொடுத்தா கூட அது உன்கிட்ட இருந்து  திரும்ப வராதுன்னு எனக்கு தெரியும் ....."

கொஞ்ச தூரம் பேசிக்கொண்டே நடந்த போது..

"டே..அங்க பார்றா ... மோகன சிலை மாதிரி அவ  நடந்து வர்ற அழகை .."-இது கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில்  நான்.

சங்கர் நான் கை காட்டிய திசையில் பார்த்துகொண்டு  பின்னந்தலையில் ஒரு அடி வைத்து   கேட்டான் .

"டே மச்சா ..இப்ப ஒரு கவிதை மாதிரி ஒரு வோர்ட் சொன்னயே  அதை திரும்ப சொல் "

"நான் சாதாரணமா தானே சொன்னேன்.. "

"அதை தான் சொல் .."

"மோகன சிலை மாதிரி..."

"கொய்யால...எங்கடா இதை படிச்ச.."

"எப்பவோ எங்கயோ படிச்ச ஞாபகம் .."

"ஆமா எதோ  ப்ளாக் ஒன்னு கிரியேட் பண்ணிட்டு  கவிதை கற பேர்ல எல்லாரையும்  டார்சர் பண்ணறயாமே?"

"யார் சொன்னா.."

"ஜோசப் தான் .."

"சரி வேற என்ன சொன்னான்? "

 "உன் தொல்லை தாங்காம அதை படிச்சு பார்த்தானாம் .எதோ பிச்சகாரி பழைய சிக்கன் பிரியாணி சாப்பிட்டு  சேராம வாந்தி எடுத்தது   மாதிரி இருந்ததாமே .."

"இம் .."         ' ம்.. control  urself' -இது என் உள் மனம்.

 "ஆமா ..உன் ப்ளாக் பேர் என்னடா மச்சா .. "

"தனி காட்டு ராஜா"

"கொய்யால ...எந்த காட்டுகட  நீ ராஜா ...ராஜா காலமெலாம் போயி 150 வருஷம் ஆச்சு தெரியுமா? "

'ம்.. control  urself' -இது என் உள் மனம்.

"அது ஒன்னு மில்லடா மாப்ள ...எங்க சொந்த ஊருல  ஒரு மூணு சென்ட் இடம் (காடு) நான் வாங்கினேன் ...அத என் பேருல நான் register பண்ணிட்டேன்.அதுல இருந்து நான் "தனி காட்டு ராஜா".

"இத சொல்ல உனக்கு வெக்கமா இல்ல .."

"வெக்கபட்டு என்ன ஆக போவுது சொல்லு .."

"சரி ..நீ உலகம் புரிஞ்சவன்  தான் ...ஒத்துகறேன் .."

"சரி எவனாவது உன் போஸ்ட்டுக்கு   கமெண்ட் போடறானா..."

"அட நீ வேற ...ஒரு பயலும் மதிக்க கூட மாட்டேன்கறாணுக மாப்ள  .."

"சரி அப்ப ப்ளாக்க  close  பண்ணீற வேண்டியது தானே மச்சான் .."

'ம்.. control  urself' -இது என் உள் மனம்.

"எனக்கு கமென்ட் போடாட்டியும் பரவாயில்லை ....பொண்ணுக பேர்ல ப்ளாக் நேம்  பார்த்துட்டா   போதும் ...முதல் போஸ்ட்டுக்கே  கமென்ட் போட ஆரம்பித்து விடறாணுக..அத தான் மாப்ள  என்னால தாங்கிக்க முடியல .."

"அவுங்க நல்லா எழுதி இருப்பாங்க  மச்சா ..உன்னை மாதிரி இல்லை .." 

'ம்.. control  urself' -இது என் உள் மனம்.

"நீயும் எதாவது பொண்ணு  பேர்ல ப்ளாக் ஆரம்பிக்க    வேண்டியது தானே மச்சா.."

"நான் ஆம்பள சிங்கம்டா .."

"இப்ப எந்த   ஜூ -ல மச்சா  உன்னை வச்சு இருக்காக..."

'ம்.. control  urself' -இது என் உள் மனம்.

"சரி காதல் கவிதை எல்லாம் எழுத தபு சங்கர் மாதிரி அருமையான கவிஞர்கள் இருக்காகளே ..நீ ஏன் மச்சா ரிஸ்க் எடுத்துகறே.. "

"அவருடைய பசிக்கு அவர் சாப்பிடறார் ....என் பசிக்கு நான் சாப்பிட வேணாமா ."

"பரவாயில்லைடா மச்சா  ..சமாளிக்கற ...."

இப்படியாக பேச்சு போய்கொண்டிருந்த போது..எங்கள் பேச்சை கேட்டு கொண்டிருந்த ஜோசப் கேட்டான் ..

"டே ..அப்துல் எங்கடா ..."

                                                                                                                                              -தொடரும்

2 கருத்துகள்:

  1. பெயரில்லா6:26 PM, மே 27, 2010

    //"எனக்கு கமென்ட் போடாட்டியும் பரவாயில்லை ....பொண்ணுக பேர்ல ப்ளாக் நேம் பார்த்துட்டா போதும் ...முதல் போஸ்ட்டுக்கே கமென்ட் போட ஆரம்பித்து விடறாணுக..அத தான் மாப்ள என்னால தாங்கிக்க முடியல .."//

    ம்.. அழுகய நிறுத்து... வாய மூடு.. ம்...
    உன் பொலம்பல தாங்க முடியலயே..

    பதிலளிநீக்கு
  2. பொண்ணுக தாக்களி சட்டினி செய்வது எப்படி -னு பதிவு போட்டா ..அதுக்கு 30 கமென்ட் போடறாங்கலே அவுங்கள நிறுத்த சொல்லுங்க ...நான் என் புலம்பல நிறுத்தறேன் ....

    ஒரு பொண்ணு முரண் -னு மூணு வரில கவிதை எழுதுனா அதுக்கு 20 கமென்ட் போடறாங்கலே அவுங்கள நிறுத்த சொல்லுங்க ...நான் என் புலம்பல நிறுத்தறேன் ....

    பஸ் பிரேக் சரியா வேலை செய்யலைனா...அது பாயிண்ட் டு பாயிண்ட் -னு சொல்லி பஸ் ஓட்ரானுகலே ....அவுங்கள நிறுத்த சொல்லுங்க ...நான் என் புலம்பல நிறுத்தறேன் ....

    முரண் குறிப்பு :
    முரண் கவிதை எழுதி குறுகிய காலத்தில் பிரபலம் ஆன பிரபல வலி மன்னிக்கவும் வலை பதிவர் ஒரு வேளை இதை படிக்க நேர்ந்தால் வருத்த பட வேண்டாம் என கேட்டு கொள்ள படுகிறார்..

    பதிலளிநீக்கு