புதன், 5 மே, 2010

காதல் யோகம் ....

 

கடற்கரை மணலில் விளையாடி கொண்டிருந்த 
காதலர்களை பார்த்து கொண்டே நான் சொன்னேன் .... 
அந்த காதலி தன் காதலனிடம் காதலை வெளிபடுத்தும்  
அழகினை பார் என்று ...
நீ கேட்டாய்....
நான் மௌனமாக காதலை வெளிபடுத்துவதை
நீ உணரவில்லையா என்று............


ஷாஜகான் தன் காதலியின்  நினைவாக  தாஜ்மஹால் எழுப்பினான் ....
அவன்தான் மிக சிறந்த காதலன் என்றேன்....
நீ சொன்னாய்....
நினைவை விட்டு பிரிந்தால் தானே நினைவு சின்னம் எழுப்ப முடியும்......
உன் நினைவே நானாக  வைத்திருக்கும்
நீ தான் மிக சிறந்த காதலன் என்று .........


நாம் இருவரும் வேறு வேறு சாதி ஆயிற்றே என்று
ஒரு நாள் புலம்பிய போது..
நீ சொன்னாய்....
காதலில் கரைந்தவர்களும்  பிரம்மத்தில்   கரைந்தவர்களும்
மட்டுமே பிராமணர்கள் ....மற்ற அனைவருமே வைசியர்கள்..
நாம் இருவருமே பிராமணர்கள் என்று......


நான் இதுவரை எந்த பரிசுமே உனக்கு தந்ததிலையே
என்று ஒரு நாள் வருத்தபட்ட   போது..
நீ சொன்னாய்....
காதலின் முன் எந்த பரிசும் அற்பம் தானே
காதலே நீ தந்த பரிசு ...
என் செல்ல முட்டாள்  காதலா என்று......


நீ பாதி நான் பாதி 
என்று ஒரு நாள் நான் அரற்றிய போது ....
நீ கேட்டாய்....
நானும் நீயும் இரண்டற கலந்த பின் ....
நானும் நீயும் வேறல்லாத பொழுது
நீ பாதி நான் பாதி  என்று எப்படி சொல்ல முடியும் என்று  ...


பக்தி யோகம்,கர்ம  யோகம்,ஞான யோகம்,ராஜ யோகம்
என நால்வகை யோகங்களை பற்றி சொன்னபோது ....
நீ சொன்னாய் .........
நாம் இருவரும் காதல் யோகத்தையும்  இதனோடு
இணைத்து கொள்ள யோகிகளிடம்  சிபாரிசு செய்வோம் என்று.......

நாம் இருவரும் அடுத்த ஜென்மத்திலும் காதலர்களாக
சேர வேண்டும் என்றேன்......
நீ சொன்னாய் .........
நானும் நீயும் இந்த ஜென்மத்தில் ஒன்றாக 
சேர்ந்த  பின் ஜென்மம் ,காலம் அனைத்தும் மறைந்து போனதை
நீ உணரவில்லையா என்று............

மரணம் என்ற ஒன்றை வாழும் போதே உணர்ந்தால்  
எப்படி  இருக்கும் என்றேன்........
நீ சொன்னாய் .........
காதலில் விழுந்த பின் சுய அடையாளம் கரைதல் எனும்
மரணம் நிகழ்வதை நீ உணரவில்லையா என்று ........


கிருஷ்ணனும் ராதையும் தான் 
மிக சிறந்த காதலர்கள்   என்றேன் ........
நீ கேட்டாய்  ........
காதலில் வாழும் எல்லோருமே   
கிருஷ்ணனும் ராதையும் தான்  ...
இதில் யாரை  மிக சிறந்தவர்கள்   என்கிறாய் என்று .......


இந்த மாதிரி ஒரு காதலி கிடைத்த
நான் கொடுத்து வைத்தவன் தான் என்றேன் ...........
சிறிது புன்முறுவல் செய்து விட்டு
நீ சொன்னாய் ...........
காதலில் கரைந்த அனைவருமே கொடுத்து வைத்தவர்கள்தான்.....
நாம் இருவருமே காதல் யோகிகள் தான் ................. 

4 கருத்துகள்:

 1. அப்பப்பா, காதல் சொட்ட சொட்ட ஒவ்வொரு வரிகளும் நல்லா இருக்கு.
  ஊரையாடலே கவிதையாகி இருப்பது சூப்பர்.

  பதிலளிநீக்கு
 2. //அப்பப்பா, காதல் சொட்ட சொட்ட ஒவ்வொரு வரிகளும் நல்லா இருக்கு.
  ஊரையாடலே கவிதையாகி இருப்பது சூப்பர்.//

  ரொம்ப சந்தோசங்க ....நன்றி Priya

  பதிலளிநீக்கு