வியாழன், 27 மே, 2010

இந்த கதைக்கு இதுதான் தலைப்பு -IV




சுற்றும் முற்றும்  திரும்பி பார்த்தோம் ....அப்துலை காண வில்லை ...
"டே...அங்க பார்ரா .." ஜோசப் கை காட்டிய திசையில் பார்த்தேன் ..
அப்துல் அலைகளோடு  விளையாடி கொண்டிருந்தான் ...ஜோசப் அவனை நோக்கி நடந்து சென்றான் . 

சரியாக அந்த சமயம் பார்த்து  சங்கர் செல்போன் மணியடித்து .
சங்கர் அதை பார்த்து விட்டு சொன்னான் ...டே வீட்லுல இருந்து கால் ..
சங்கர் செல்போனை காதில் வைத்து கொண்டு  தனியே ஒதுங்கினான்.

நான் தனியாக என்ன செய்வது என்று தெரியாமல் அலைகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன் ..

ஒரிரு நிமிடங்கள் கடந்து இருக்கும்...
ஒரு பேரிரைச்சல்   போல சத்தம் கேட்க்க ஆரம்பித்தது ...

யாரும் கண்டு  கொண்டதாக தெரியவில்லை ...நான் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன் ...  
அடுத்து ஒரு நிமிடம் கடந்து இருக்கும் ....இரைச்சல் அதிகமாக   கேட்க ஆரம்பித்தது ...

அப்போது தான் என்  நினைவுக்கு காலையில் எதோ ஒரு தீவில் பூகம்பம்  என்றும் ...ஆயிரகணக்கான மக்கள் பலி என்ற செய்தி பார்த்தது ஞாபகத்திற்கு வந்தது ....
ஒரு வேலை இது .....
நினைக்கும்    போதே என் உடல் நடுங்க தொடங்கியது..

இரைச்சல் படு பயங்கரமாக கேட்க ஆரம்பித்தது..
அனைவரும் கடலை நோக்கி கண்களில் ஒருவித அச்சத்துடன் பார்த்தனர் .

ஒரு பெண் கண்களை பயத்தில் மூடி கொண்டு தன் கணவனின் தோளில் சாய்வதை பார்த்தேன் ..அந்த பெண்ணை பார்த்தவுடன் என் அம்மாவின் முகம் ஒரு கணம் ஞாபகத்திற்கு வந்து போனது.

சில குழந்தைகள் எதை பற்றியும் கவலை படாமல் கடல் அலை மேல் கால் வைத்து விளையாடி கொண்டிருந்தனர்..

ஒரு சிலர் ஓட ஆரம்பித்தனர்.

சிலர் ஓவென பெருங்குரலெடுத்து கத்த  ஆரம்பித்தனர்.

என் நினைவில் சங்கர்,ஜோசப்,அப்துல் வர சுற்றும் முற்றும் பார்த்தேன் ..

ஒரே கூச்சல் ,அமளி ..யார் எங்கே ....ஒன்றுமே புரியவில்லை ...

மீண்டும் கடலை பார்த்தேன் ...

என் வாழ் நாளிலே பார்த்திராத அதிசய காட்சி அது .....ஒருவேளை நான்  மரண பயம் மட்டும் இல்லாமல் என்னை உணர்ந்த யோகியாய்   இருந்திருந்தால் அந்த காட்சியை ரசித்திருப்பேன்...

ஆனால்  அந்த காட்சியை பார்த்த நொடி என் கால்கள் தரையில் நிற்க முடியாமல் நடுங்கின .கண்கள் வெளிற ஆரம்பித்தன.

வானளாவிய உயர்ந்த அலைகள் பேரிரைச்சலுடன்  கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது ..
அந்த காட்சியை  பார்பதற்கு எதோ 20 ,25  டைடல் பார்க் கட்டிடங்களை ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கி வைத்து வானத்தை  தொட கடல் முயற்சி செய்வது போல இருந்தது .எவனோ அரக்கன் ஒருவன்  பாயை சுருட்டுவது போல கடலை சுருட்டுகிறானோ என்று கூட தோன்றியது.

அந்த கடல் பேரலை முன்னே நான் எங்கோ எறும்பாக இருப்பது   போல இருந்தது .
அப்போது தான் என் ஞாபகத்துக்கு வந்தது ...நான் காலையில்  பாத்ரூம் -ல் உயிர்  வாழ்ந்த  லட்சகணக்கான எறும்புகளை  வாளி நிறைய நீர்   எடுத்து ஊற்றி கொன்றதை .
"அந்த எறும்புகளுக்கு வாளி நீர்  கடல் நீர் போல் அல்லவா இருந்திருக்கும் .."
"ஐய்யோ ....அந்த எறும்புகளும் நான் நெஞ்சம் பதைபதைப்பது போல் அல்லவா துடி துடித்திருக்கும் .."

 அடுத்த நொடி .. யார் இறந்தாலும் சரி நான்  எப்படியும் தப்பி  விடுவேன் என்று என் மனசு நினைத்தது.

"குஞ்சரமடை வெத்துவேட்டு"  ஜோசியக்காரன்  " நீ புண்ணியம் செய்தவன் .உனக்கு ஆயுசு 75"  என்று ஒரு முறை சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.


 அடுத்த நொடி.... பேரலை எனக்கு  முன்னே  பத்து அடிக்கு அருகில் வரும் போது தான்  ..என் நெற்றி பொட்டில் அறைந்தது போல உண்மை நிதர்சனம் புரிய ஆரம்பித்தது ..பிரபஞ்சத்தின் முன் நானும் எறும்பும் ஒன்று தானோ  என்று ஒரு கணம் தோன்றியது .
பிரபஞ்சத்தின் முன்னே நான் ஆண்மை அற்று போனவனாய் அந்த நொடி அடங்கினேன் ..


அடுத்த நொடி ..






கரையில் பல அடையாளங்களாய் உணரப்பட்ட நான் ...
இப்போது உடல், மனம் அற்ற நிலையில் ...எல்லா அடையாளங்களும் மூழ்கி போய்...
வெற்று மொளனமாய்  .. சாட்சியாய் ..ஆழ்கடல் அமைதியாய்...வெறும் நான் நானாய் ....

4 கருத்துகள்:

  1. பெயரில்லா6:22 PM, மே 27, 2010

    //அடுத்த நொடி .. யார் இறந்தாலும் சரி நான் எப்படியும் தப்பி விடுவேன் என்று என் மனசு நினைத்தது.//

    நினைப்புத்தான் பொழப்ப கெடுக்கும்.. பாத்து சாக்கிரதயா நடந்துக்கப்பா..

    //"குஞ்சரமடை வெத்துவேட்டு" ஜோசியக்காரன் " நீ புண்ணியம் செய்தவன் .உனக்கு ஆயுசு 75"//

    அந்த ஆளு அட்ரஸக்குடு.. அவன நா பாத்தே ஆகணும்...

    பதிலளிநீக்கு
  2. //நினைப்புத்தான் பொழப்ப கெடுக்கும்.. பாத்து சாக்கிரதயா நடந்துக்கப்பா..//


    உலகத்துல எத்தனையோ பேர் ப்ளாக் நால்லா எழுதுனாலும் ....நீங்க உங்க ப்ளாக் -கை மக்கள் வந்து படிப்பாங்கனு நினைக்கிறீங்களே ...அது மாதிரி தான் -னா இதுவும் ....




    //அந்த ஆளு அட்ரஸக்குடு.. அவன நா பாத்தே ஆகணும்... //

    MR S. வெத்துவேட்டு ,
    00/33, வேகாத ஆப்-பாயில் தெரு ,
    வாத்து மடையன் ரோடு ,
    வந்தால் உதை கொடுக்கும் பாளையம் ,(P .O )
    வாராமல் இருப்பது நல்லது (தாலுக்கா),
    குஞ்சரமடை
    ஈரோடு.

    கைபேசி : 0000000001 landline: 0424-1000000

    நீங்க பாக்கறதா இருந்தா அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டு போங்க ...என்னை தெரியும்னு சொன்னிகனா ரெண்டு சேர்த்து கிடைக்கும் ..

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா8:35 PM, ஜூலை 14, 2010

    கதை ரொம்ப நல்லா இருக்கு சகோதரரே. தொடர்ந்து பதியவும். எறும்பு உவமை அருமை.

    பதிலளிநீக்கு