திங்கள், 24 மே, 2010

மின்னல் தாக்கி வாலிபர் பலி .
சென்னை ,மே -24 -கடந்த ஒரு வாரமாக தமிழ் நாடு முழுவதும்  மழை பரவலாக  பெய்து வருவது அனைவரும் அறிந்ததே .நேற்று (மே 23 ) சென்னை-யில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்  கூடிய பலத்த மழை பெய்தது . ராமபுரம் பகுதியில் வசித்து வரும் வாலிபர்  ராஜா (எ) ராஜேந்திரன் வயது (21 ),டி.எல் .எப்  ஐ .டி   பார்க்கையும்  ,எஸ்.ஆர். எம்  யுனிவர்சிட்டியையும் இணைக்கும் சாலையில் இரவு பத்து மணி வாக்கில்  மயங்கி கிடந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் மழை ஓய்ந்து இருந்ததாக  தெரிகிறது. அந்த வழியாக சென்ற சிலர் பெரு முயற்சி செய்து அவருடைய மயக்கத்தை தெளிவித்தனர்.மயக்கம் தெளிந்தவுடன் என்ன நடந்தது என்று அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள்   விசாரித்தனர் . அவர் மழை ஓய்ந்த வேலையில் சாலையில் நடந்து வரும் போது அவர் எதிரே ஒரு இளம் பெண் நடந்து வந்ததாக கூறினார் .அந்த பெண்ணின் கண்களை நேருக்கு நேர் பார்த்ததாகவும் ..அப்போது அந்த கண்களில் இருந்த  மின்னல் ஒளி பட்டவுடன் அந்த வாலிபர் மயங்கி
விழுந்ததாக கூறினார்.அந்த நொடி முதல் அந்த வாலிபர் கண் ஒளி மின்னல் பட்டு காதலில் பலி யானதாக தெரிகிறது .இது தொடர்பாக ராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 'கண் ஒளி மின்னல் ' பெண்ணை தேடி வருகின்றனர் .மேலும் இவ்வழக்கு பற்றி சென்னை உதவி கமிசனர்  கூறுகையில் இச் சம்பவத்திற்கு காரணமான பெண் பிடிபடும் வரையில் அழகாக தென்படும் சந்தேகத்திற்கு இடமான  பெண்களின் கண்களை வாலிபர்கள் பார்க்க வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார்.இச்சம்பவம் ராமபுரம் பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 கருத்துகள்:

  1. இந்த செய்தியை படித்த வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே தற்கொலைசெய்துகொண்டார் என்பது கூடுதல் செய்தி...

    பதிலளிநீக்கு