திங்கள், 24 மே, 2010

இந்த கதைக்கு இதுதான் தலைப்பு ..




 காலையில் பத்து மணிக்கு விழிப்பு வந்த போது  மூன்று நாள்களுக்கு முன்னாடியே   நானும் ஜோசப்மும் முடிவு செய்த விஷயம் முதலில் ஞாபகத்துக்கு வந்தது .

அது வேறு ஒன்றுமில்லை ...இந்த சனி கிழமை மாலையில் சங்கருடன் சேர்ந்து கொண்டு நானும் ஜோசப்மும்  மூன்று பேராக மெரீனா பீச்சுக்கு செல்லலாம் என்பதுதான்.

கடந்த ஆறு மாத காலத்தில் மெரீனா பீச்சை சுத்தமாக மறந்து இருந்ததால்  நான் தான் இதை ரெக்கமென்ட் செய்திருந்தேன்.
படுக்கையை விட்டு எழுந்து வெளியே வந்த போது ஜோசப்  பாத்ரூமுக்கு அருகில் நின்று கொண்டு எதோ தனக்கு தானே புலம்பி கொண்டிருந்தான்.


"என்னடா காலங்காத்தால ஜபம்  சொல்லிட்டு இருக்கிறாய்"  -இது நான்.

 "டே, பத்து மணி உங்க ஊர்ல காலங்காத்தாலயா ?" -இது ஜோசப்

"சரிஅத விடு ...விசயத்த சொல்லு .."

"நேத்து மாதிரியே இன்னைக்கும் பாத்ரூம் புல்லா எறும்பா ஊறுதடா" 

"நேத்து மாதிரியே   வாளி நெறைய தண்ணியா மொண்டு ஊத்த வேண்டியது தானே..."

"அத்தன எறும்ப கொல்லறதுக்கு பாவமா இருக்குடா .."

"அநியாத்துக்கு நல்லவனா இருக்கயேடா....நாம தாண்ட பாத்ரூம்க்கும் சேர்த்து வாடகைய இந்த owner  பயலுக்கு அழுவரம்.....எறும்பா தருது ?"

சரி தண்ணிய மொண்டு வா ...மத்தத நான் பார்த்துகறேன் ..

பாத்ரும் முழுவதுமாக தண்ணிய ஊற்றி விட்டு ,அன்றைய நாளை ஒரு நல்ல காரியம் செய்த திருப்தியுடன்  தொடங்கினேன்.

 ஒரு பனிரெண்டு மணி இருக்கும் .
"டே,அப்படியே சங்கர் ரூம்க்கு போயிட்டு  அவனோட பீச்சுக்கு போலாமா" -இது நான்

"நீ மெரீனா பீச்சுகு போலாமுன்னு   தாண்டா மூணு  நாளுக்கு முன்னாடி சொன்ன ....இப்ப  என்னடானா   அவனோட பீச்சுக்கு போலாமானு கேக்கற .." -இது ஜோசப்

"டே ,இப்ப நான் மனுஷனா இருக்கறது   என் கையல இல்ல ...உன் வாயில தான் இருக்கு ...கொஞ்சம் பார்த்து ...."

"சரி விடு ....சங்கர் கிட்ட கேட்டாயா ...அவன் இன்னைக்கு பிரீயானு ....."

"அந்த வெட்டி பய சனி கிழமையானா...நெட்டுல உக்கார்ந்து நமீதா,அனுஷ்கா படத்த பார்த்து ஜொள்ளு விட்டுகிட்டு தான் இருக்கும்.
நாம நேரா அவன் ரூமுக்கே போலாம் வா  "  .

ஆதம்பாக்கத்திலிருந்து  என் பைக்கில் இருவரும் கிளம்பினோம் .வழியில்  திருப்பம் இல்லாவிடில் கூட பைக்கை நிறைய இடங்களில் திருப்பினேன்.
[கதையில் ஒரு திருப்பமும் இல்லை  என யாராவது  கேட்டால்...நான் தான் பைக்கை நிறைய இடங்களில் திருப்பினேனே  என்று சொல்ல தான்] .
"இவன் எல்லாம் ஏன் தான் பைக் ஓட்டுறேன் பேர்வழி  என்று ரோட்டுல போறவன் வர்றவன் உயிரை எடுக்கிறானோ" என்பன போன்ற கமண்ட்டுகள் காதில் விழுந்தாலும் அதை எல்லாம் சட்டை செய்யாமல் வேளச்சேரி விஜயா நகருக்கு அருகில் இருந்த சங்கர்  ரூமுக்கு வந்து சேர்ந்தோம் .
                                                                                                                      -பயணம் தொடரும் ...

2 கருத்துகள்:

  1. பெயரில்லா3:15 PM, மே 24, 2010

    நல்ல வேள... அந்த திருப்பத்தில நா இல்ல... என்னம்மா திடீர்னு கதயெல்லாம்.. கவிதய கை கழுவிட்டியா...

    பதிலளிநீக்கு
  2. "குஞ்சரமடை வெத்துவேட்டு " சோசியகாரன் கிட்ட என் ஜாதகத்த காட்டுனேன் ....
    அவன் சொன்னான் ...இன்னும் மூணு மாசத்துக்கு உனக்கு நேரம் சரியில்லை ...
    அதனால ப்ளாக்ல கவிதை எழுதாத ..பலமா அடி வாங்கற கெரக நெலை உனக்கு இருக்கு ..
    கதை எழுது...உன்ன பிடிச்சிருகற தோஷமெல்லாம் ..உன் கதையை படிக்கறவங்களதான் பாதிக்கும் ...நீ தப்பிச்சுகலாம் -னு சொன்னான் அதுதான் ..னா .

    பதிலளிநீக்கு