வெள்ளி, 14 மே, 2010

படைப்பாளி (எ) படைவியாதிகள்.............




















நெறைய பேர் படைப்பாளி ,படைப்பாளி என்று சொல்லி கொள்(ல்)கிறார்களே ,அப்படி என்ன இவர்கள் படைக்கிறார்கள்??

ஒருவேளை இவர்களுக்கு உடலில் படை வியாதி
இருக்குமோ? அதனால் தான் அப்படி சொல்லி
கொள்கிறார்களோ?

சில இலக்கிய எழுத்து வியாதிகள்,
சினிமா இயக்குனர்கள் ,கவிஞர்கள் இவர்கள்
தங்களை படைபாளிகள் என்று கூவி கொள்கிறார்கள்...
உண்மையில் எழுத்து வியாதிகள்,சினிமா இயக்குனர்கள் ,
கவிஞர்கள் இவர்கள் வாழ்க்கை நிகழ்வுகளை
பதிவு செய்கிறார்கள் ...என்ன.. கொஞ்சம் அறிவுபூர்வமாக,உணர்வுபூர்வமாக
பதிவு செய்பவர்கள் பிரபலம் அடைகிறார்கள் ..


இந்த எழுத்து வியாதிகளுக்கு பேனா,பேப்பர் உருவாக்க தெரியுமா? இல்லை எதையாவது புதிதாக கண்டு பிடித்தார்களா ?

இந்த சினிமா இயக்குனர்கள் ,நிகழ்வுகளை பதிவு செய்ய முக்கியமாக இருக்கும்
காமரா -வை இவர்கள் கண்டு பிடித்தார்களா ?

இவர்கள் மற்றவர்களின் உருவாக்கத்தை பயன்படுத்தி
நிகழ்வுகளை பதிவு செய்கிறார்கள் ,அவ்வளவுதான்.......


யோசித்து பார்த்தால் நாம் அனைவருமே படைப்பாளி தான் ...
குப்பனும் ஒரு பெண்ணும் (மனைவி யாக கூட இருக்கலாம்) சேர்ந்து ஒரு குழந்தையை படைக்கிறார்கள்...

சாதாரண குப்பன்,சுப்பன், கோபாலன்
அனைவருமே படைப்பாளி தான்.
அப்படி பார்த்தால் ஒரு எறும்பு கூட படைபாளிதான்..
ராக்கெட் டெக்னாலஜி -ய கண்டு புடிச்சவன் கூட
தன்னை படைப்பாளி என்று சொல்லி கொள்வதாக தெரியவில்லை ........

அப்புறம் இந்த வெண்ணைகள் மட்டும் தன்னை படைப்பாளி என்று கூவி கொள்வதேன்??
கலை படைப்பாளி என்று சொல்லி கொண்டு மாதம் ஒரு பாராட்டு விழா வேறு!!!
இலக்கிய படைப்பாளி என்று சொல்லி கொண்டு ,இவங்கலுக்கு ஒரு பாராட்டு விழா வேறு!!!


இயல்பாகவே உள்ள படைப்பை கூர்ந்து பாருங்கள் .....
எவ்வளவு உயிர் தன்மையுடன் உள்ளது ...
ஆனால் நம்முடைய (மனிதனுடைய) உருவாக்கத்தை பாருங்கள்... உயரமான கட்டிடத்தை பாருங்கள் ....எங்கே ஜீவன் உள்ளது??

உண்மையான உயிர் தன்மையுடன் உங்களால் படைக்க (குழந்தை உருவாக்கத்தை தவிர) முடிந்தால் மட்டுமே உங்களை படைப்பாளி என்று சொல்லி கொள்ளுங்கள் ............


எதை சொன்னாலும் ஒரு கதை சொல்லி முடிக்கணும்னு எங்க ஊர்ல உள்ள பெரியவங்க (வயசுல மட்டும் ) சொல்லி இருக்காக ..........
அப்பதான் அதை கேக்கறவங்க உருப்படாம போவாங்க -நு சொன்னாங்க ...


ஒரு ஊர்ல பணக்காரன் ஒருத்தன் நாய் வாங்கினானம் வளர்த்தரதுக்கு .
அதுக்கு "இராணுவ வீரன் " -நு பேரு வெச்சானாம் ....


ஆனா அந்த நாய் செத்து போச்சாம்...










ஏன்? அது ஏன்?












































நீதி: நாயுக்கு பேரு முக்கியம் இல்ல ...சோறு தான் முக்கியம் .... புரிஞ்சா சரி ...புரியலனா சாரி ....

8 கருத்துகள்:

  1. believe it or not i too have written an article with topic as "titles" in that i too have used the same story....i know u used it first ;-)

    endrum anbudan,
    N.Parthiban

    http://parthichezhian.blogspot.com/2010/06/paanji-paayura-pattampattaya-kelapura.html

    பதிலளிநீக்கு
  2. உங்கள் இடுகையை படித்தேன் .....என் கருத்தை சொல்லி உள்ளேன் ...
    நன்றி ...

    பதிலளிநீக்கு
  3. நன்றாகச் சொன்னீர்கள் தனிக்காட்டு ராஜா
    ஏதோ ஆபாசமாகவும், அருவருப்பாகவும் கிறுக்கி விட்டும் படம் எடுத்துவிட்டும் தங்களை படைப்பாளிகள் என்று பீற்றிக்கொள்பவர்களுக்கு சரியான செருப்படி உங்களது பதிவு..

    பதிலளிநீக்கு
  4. திரு தனிக்காட்டு ராஜா
    உங்களது பதிவு படித்தேன்..சிறப்பாக உள்ளது..
    தங்களது follower ஆவது எப்படி?

    பதிலளிநீக்கு
  5. தங்கள் கருத்துக்கு நன்றி மர்மயோகி அவர்களே ...

    //தங்களது follower ஆவது எப்படி? //

    என்னுடைய blog template -இல் followers option work ஆக மாட்டேன்கிறது ...
    எனவே ..
    உங்களுடைய Dashboard -இல் under Reading List ->Blogs I'm Following -இல் என்னுடைய ப்ளாக் முகவரியை (http://thanikaatturaja.blogspot.com) add button click செய்வதன் மூலம் இணைத்து கொள்ளவும் .

    பதிலளிநீக்கு
  6. ///இவர்கள் மற்றவர்களின் உருவாக்கத்தை பயன்படுத்தி
    நிகழ்வுகளை பதிவு செய்கிறார்கள் ,அவ்வளவுதான்....... ///


    தன்னை படைப்பாளி என்று சொல்லிகொள்பவர்கள் எல்லாம்....நிஜத்தை தவிர்த்து நிழலுக்கு வர்ணம் பூசுகிறார்கள்...

    அருமை பதிவு...தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. சகோதரா இவற்றைப்பார்த்தால் பிரம்மா குழம்பப் போகிறார். அவரும் படைப்பாளி தானே

    பதிலளிநீக்கு